Tuesday, September 1, 2015

நூற்றியெட்டு சிவாலயங்கள் ----- ஒரே கிராமம் 

அன்பர்களே, சிவ நேய செல்வர்களே, ஒரு சிறிய கிராமத்தில் , நம் திருவள்ளூர் மாவட்டத்தில் கொப்பூர் எனப்படும் இடத்தில் ஒரு காலத்தில் நூற்றியெட்டு சிவஸ்தலங்கள் இருந்தது என்றால் நம்புவீர்களா?
ஆம் அது உண்மைதான் !!!ஆனால் கால வெள்ளத்தில் அனைத்தும் சிதைந்து இன்று ஒரு சில திருமேனிகளே நமக்கு கிடைத்துள்ளது.
அரும்பாடு பட்டு உருவாக்கிய சிவ சக்தீஸ்வரர் திருகோயில் இது.
இன்னும் பல லிங்க திருமேனிகள் வழிபடு அற்று , வானமே கூரையாக, அங்கும் இங்கும் காணப்படுகிறது
கொப்பூர் செல்ல திருவள்ளூர் பூந்தமல்லி வழித்தடத்தில் அரண்வா யில் குப்பம் என்னும் இடத்தில் இறங்கி
2 KM செல்ல வேண்டும் . ஷேர் ஆட்டோ வசதி உண்டு.


No comments:

Post a Comment