Thursday, August 29, 2019

அற்புத பலன் தரும் அரிய திருக்கோயில் 

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வாலி வழிபட்டு தன் ப்ரஹ்மஹத்தி தோஷம் நீக்கி கொண்ட தலம் . 

யாரெல்லாம் வழிபடலாம் ..?

⇝ நாக தோஷம்,காலசர்ப்ப தோஷம் , அதனால் திருமண தடை , மழலை         பாக்கியம் தடைபடுதல் .
⇝ வாஸ்து குறைபாடு , வீடு கட்டுவதில் இழுபறி ....
⇝ கலைத்துறையில் (சினிமா , டிராமா , நடனம் , மெல்லிசை) பிரகாசிக்க முடியாமல் முன்னேற்றம்  தடைபடுதல் 
⇝வியாபாரத்தில் எதிரிகளால் தொல்லை 
⇝கல்வியில் மந்த நிலை 
⇝ களத்திர தோஷம் அதனால் இல்லவாழ்க்கையில் நிம்மதியின்மை 

உங்கள் துன்பம் எதுவாயினும் வாருங்கள் காரியசித்தி கணபதி, .ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை திருவாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு ....

இவருக்கு செய்யப்படும் பாலபிஷேகம் கருநீல நிறமாக மாறுவது பேரதிசயம் ...
காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இப்பாலை பருகினால் தோஷத்திலிருந்து முற்றிலும் விடுபடுவர்.

எங்குள்ளது ...?

திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரி வட்டம் , பஞ்சட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 1/2 கிலோமீட்டர் தூரத்தில் நத்தம் என்று தற்போது அழைக்கப்படும் கிராமத்தில் வீற்றிருந்து அருள்பலிக்கிறார் வாலி வழிபட்ட வாலீஸ்வர் பெருமான் ....
புராண பெயர் இகணன் பாக்கம் ....(இகணன் , ப்ரம்மா வின் பெயர் )
ப்ரம்மா நாரதரின் ஆலோசனைப்படி இங்குள்ள காரிய சித்தி கணபதியை வழிபட்டு இழந்த தன் படைப்பு தொழில் ஆற்றலை பெற்றார் ...

இவரை வழிபடுவதால் நடக்கவே நடக்காது என்று நம்பப்படும் காரியங்களும் விரைவில் ஈடேறுவது கலியுக அதிசயமாகும் .

இங்குள்ள மற்றோர் அதிசயம் உமா சகித பிரதோஷமூர்த்தி .....
வேறெங்கும் காண இயலாத வகையில் இவர் உமையாளை தன ஒருகையால் அணைத்தவாறு உள்ளார் ....


பிரதோஷ தினத்தில் இப்பெருமானை வழிபடுவோர் இல்லற வாழ்க்கையில் பிணக்குகளின்றி வாழ்வர் 

சிவாலயமாக இருப்பினும் , இக்கணபதியே இங்கு பிரதான தெய்வமாக வழிபட படுகிறார் ......

அன்பர்களே .....

முறையான பேருந்து வசதியின்மையால் தங்கள் சொந்த வாகனத்தில் வருவது சால சிறந்தது .செங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து , கும்மிடிப்பூண்டி , பழவேற்காடு ,பொன்னேரி செல்லும் பேருந்துகளில் 
ஏறி பஞ்சட்டியில் இறங்கி கொள்ளலாம் ...

அர்ச்சகர் அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ...

மிக சிறந்த பரிகார தலம் ஆதலால் அவரிடம் முன்கூட்டியே தெரிவித்து விட்டு செல்லலாம் ...இங்குள்ள தீர்த்தமும் வாலியால் உருவாக்கப்பட்டதே ......இது வாலி தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது .
இத்தீர்த்தத்தில் நீராடுவது கங்கை யில் நீராடுவதற்கு சமமாகும் ....

இத்தீர்த்தத்தில் நீராடி இப்பெருமானை வழிபடுவதால் சகல தோஷங்களை நீக்குவதோடு , சுருட்டப்பள்ளி திருத்தலத்தை நீங்கள் 3 முறை வழிபடுவதின் பலனை பெறலாம் ...

அருகில் உள்ள பஞ்சேஷ்டி  அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலும் மிக சிறந்த பரிகார தலமே .......

இத்துணை பெருமைகள் மிக்க பரிகார தலம் வெளிச்சத்திற்கு வராமலேயே உள்ளது ....

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் ?

அன்பர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் ...அர்ச்சனை பொருட்களை கையோடு எடுத்து செல்லுங்கள் ..

திருக்கோயில் அர்ச்சகர்கள் :

சுவாமிநாத குருக்கள் , நத்தம் , அலைபேசி எண் :94440 53356

சுரேஷ்பாபு குருக்கள் , நத்தம் , அலைபேசி எண் :94440 91441






Wednesday, August 7, 2019

குழந்தையும் ......தெய்வமும் 

அன்பர்களே......
குழல் இனிது ....யாழ் இனிது ...என்பார்கள் 
மழலை செல்வம் இல்லாதவர்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது ...
சமூகத்தாலும் , உறவுகளாலும் ஏச்சு பேச்சுகளுக்கு உள்ளாகி சொல்லொணா துயருக்கு உள்ளாவார்கள் .....    ஆனால் இனி இல்லை இத்தொல்லை ........

வாருங்கள் ......சந்தான சுந்தரேஸ்வர பெருமான் மீனாட்சியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கொத்தங்குடி திருத்தலம் நோக்கி .......உளமார வணங்குங்கள் ....அர்ச்சகர் பரிகார பூசை குறித்து விளக்குவார் ...நம்பிக்கையுடன் செய்யுங்கள் ....மழலை செல்வம் நிச்சயம் .....

இன்று இங்கு வந்தோர் பலர் இல்லங்களில் தொட்டில்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன ...பலன் அடைந்தோர் பலர் .....

அன்பர்களே ....

இன்று பொலிவுடன் விளங்கும் இத்திருக்கோயில் , முன்பு அருகில் செல்லவே அஞ்சும் வண்ணம் முட்புதர்கள் மண்டி சிதிலமடைந்து காணப்பட்டது ...ஆம் !  பல்லாண்டுகளாக !!  இந்நிலை கண்டு வருந்திய இப்பகுதியை சேர்ந்த அன்பர்கள் அரும்பாடு பட்டு , அம்மையார் திருப்பணி செம்மல் திருமதி மகாலக்ஷ்மி சுப்பிரமணியன் அவர்கள் உதவியுடன் இத்திருக்கோயிலை சீரமைத்து நாம் அனைவரும் பயன் பெரும் வண்ணம் தந்துள்ளார்கள். 

இத்தலம் தன்னிகரில்லா சிறப்புகள் பல வாய்ந்தது ...

⧭ திருஞானசம்பந்தர் போற்றிய வைப்பு தலம் 
⧭பஞ்ச பாண்டவர்களில் பீமன் பூசித்த தலம் 
⧭சந்தான பாக்கியம் அருளும் ஒப்பற்ற தலம் 
⧭மானசீக பூசையே உயர்ந்தது என உணர்த்திய தலம் 
⧭நம் மனக்குறைகளை செவிமடுக்கும் விதமாக இறைவன் சற்றே தலை சாய்ந்து இருக்கும் தலம் 
⧭1300 வருடங்கள் பழமையான தலம் ...
⧭ இறைவன் திருமேனி சதுரஸ்வரம் விரத்தம் என்ற அரிய வடிவம் கொண்ட தலம் .
⧭பீமேஸ்வரம் என்று வழங்கப்படும் தலம் 

எங்குள்ளது கொத்தங்குடி ?

நம் தஞ்சை தரணியில் , கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயிலுக்கு 2 கிலோமீட்டர் கிழக்காக அரிசிலாற்றுக்கும் திருமலைராஜன் ஆற்றுக்கும் இடையே பச்சை பசேல் என வயல்கள் சூழ அமைந்துள்ளது இத்தலம் .....


மற்றொரு தேவார வைப்பு தலமான திரு நல்ல கூரூர் எனப்படும் கூகூர் மிக அருகில் உள்ளது .

பேருந்து நிறுத்துமிடம் : ஆத்துப்பாலம் கொத்தங்குடி 

திருக்கோயில் திறந்திருக்கும் நேரம் :

 காலை 7.00 -------11.00
மாலை 6.00 -----8.30

பரிகாரம் செய்யும் நேரம் 

காலை 9..00---10.30
மாலை 6.30 ----7.30 (சனிக்கிழமை நீங்கலாக)

அர்ச்சகர் அருகிலேயே வசிக்கிறார் ...
அலைபேசி எண் : 8903867919

அன்பர்களே ! மழலை பாக்கியம் மட்டுமே அருள்வார் என்று மற்றோர் வாளாவிருந்துவிட வேண்டாம் .

 கருவறையில்  ஒளி பொருந்திய  பிரமாண்டமான திருமேனியராக வீற்றிருக்கும் சுந்தரேஸ்வர பெருமானை கண்ட  மாத்திரத்தில் நம் துன்பங்கள் யாவும் பகலவனை கண்ட பனிபோல் மறையும் அதிசயத்தை நீங்கள் இங்கு வந்து இப்பெருமானை வணங்கும்போது உணர்வீர்கள் 


இது நிச்சயம் .....

முன்பிருந்த நிலை :







தற்போதைய நிலை :