Wednesday, August 7, 2019

குழந்தையும் ......தெய்வமும் 

அன்பர்களே......
குழல் இனிது ....யாழ் இனிது ...என்பார்கள் 
மழலை செல்வம் இல்லாதவர்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது ...
சமூகத்தாலும் , உறவுகளாலும் ஏச்சு பேச்சுகளுக்கு உள்ளாகி சொல்லொணா துயருக்கு உள்ளாவார்கள் .....    ஆனால் இனி இல்லை இத்தொல்லை ........

வாருங்கள் ......சந்தான சுந்தரேஸ்வர பெருமான் மீனாட்சியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கொத்தங்குடி திருத்தலம் நோக்கி .......உளமார வணங்குங்கள் ....அர்ச்சகர் பரிகார பூசை குறித்து விளக்குவார் ...நம்பிக்கையுடன் செய்யுங்கள் ....மழலை செல்வம் நிச்சயம் .....

இன்று இங்கு வந்தோர் பலர் இல்லங்களில் தொட்டில்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன ...பலன் அடைந்தோர் பலர் .....

அன்பர்களே ....

இன்று பொலிவுடன் விளங்கும் இத்திருக்கோயில் , முன்பு அருகில் செல்லவே அஞ்சும் வண்ணம் முட்புதர்கள் மண்டி சிதிலமடைந்து காணப்பட்டது ...ஆம் !  பல்லாண்டுகளாக !!  இந்நிலை கண்டு வருந்திய இப்பகுதியை சேர்ந்த அன்பர்கள் அரும்பாடு பட்டு , அம்மையார் திருப்பணி செம்மல் திருமதி மகாலக்ஷ்மி சுப்பிரமணியன் அவர்கள் உதவியுடன் இத்திருக்கோயிலை சீரமைத்து நாம் அனைவரும் பயன் பெரும் வண்ணம் தந்துள்ளார்கள். 

இத்தலம் தன்னிகரில்லா சிறப்புகள் பல வாய்ந்தது ...

⧭ திருஞானசம்பந்தர் போற்றிய வைப்பு தலம் 
⧭பஞ்ச பாண்டவர்களில் பீமன் பூசித்த தலம் 
⧭சந்தான பாக்கியம் அருளும் ஒப்பற்ற தலம் 
⧭மானசீக பூசையே உயர்ந்தது என உணர்த்திய தலம் 
⧭நம் மனக்குறைகளை செவிமடுக்கும் விதமாக இறைவன் சற்றே தலை சாய்ந்து இருக்கும் தலம் 
⧭1300 வருடங்கள் பழமையான தலம் ...
⧭ இறைவன் திருமேனி சதுரஸ்வரம் விரத்தம் என்ற அரிய வடிவம் கொண்ட தலம் .
⧭பீமேஸ்வரம் என்று வழங்கப்படும் தலம் 

எங்குள்ளது கொத்தங்குடி ?

நம் தஞ்சை தரணியில் , கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயிலுக்கு 2 கிலோமீட்டர் கிழக்காக அரிசிலாற்றுக்கும் திருமலைராஜன் ஆற்றுக்கும் இடையே பச்சை பசேல் என வயல்கள் சூழ அமைந்துள்ளது இத்தலம் .....


மற்றொரு தேவார வைப்பு தலமான திரு நல்ல கூரூர் எனப்படும் கூகூர் மிக அருகில் உள்ளது .

பேருந்து நிறுத்துமிடம் : ஆத்துப்பாலம் கொத்தங்குடி 

திருக்கோயில் திறந்திருக்கும் நேரம் :

 காலை 7.00 -------11.00
மாலை 6.00 -----8.30

பரிகாரம் செய்யும் நேரம் 

காலை 9..00---10.30
மாலை 6.30 ----7.30 (சனிக்கிழமை நீங்கலாக)

அர்ச்சகர் அருகிலேயே வசிக்கிறார் ...
அலைபேசி எண் : 8903867919

அன்பர்களே ! மழலை பாக்கியம் மட்டுமே அருள்வார் என்று மற்றோர் வாளாவிருந்துவிட வேண்டாம் .

 கருவறையில்  ஒளி பொருந்திய  பிரமாண்டமான திருமேனியராக வீற்றிருக்கும் சுந்தரேஸ்வர பெருமானை கண்ட  மாத்திரத்தில் நம் துன்பங்கள் யாவும் பகலவனை கண்ட பனிபோல் மறையும் அதிசயத்தை நீங்கள் இங்கு வந்து இப்பெருமானை வணங்கும்போது உணர்வீர்கள் 


இது நிச்சயம் .....

முன்பிருந்த நிலை :







தற்போதைய நிலை :







No comments:

Post a Comment