Wednesday, August 31, 2016

மகான்கள் வழிபட்ட மகத்தான திருக்கோயில் 

மகான்களாலும் , ரிஷிகளாலும் , மாபெரும் சித்த புருஷர்களாலும் வணங்கப்பெற்ற லிங்கத்திருமேனிகள் நமக்கு 
கிடைக்குமாயின் அதை விட நாம் பெரும்  பாக்கியம் வேறென்ன உள்ளது? 

அன்பர்களே, அப்படி வாராது வந்த மாமணி போல் நமக்கு  , நாம் உய்வதற்கு கிடைத்த பொக்கிஷமாக 
வந்தவர்தான் திருவாரூர் ----மன்னார்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள கமலாபுரம் என்னும் இடத்தில் 
கோயில் கொண்டருளும் தியான லிங்கேஸ்வர பெருமான் ....

கம்பீரமாக கோயில் கொண்டு நம் மனதை கொள்ளை கொள்கிறார் .....

இப்பெருமானுக்கு  மேற்கூரை வேயப்பட்டுள்ளது ......

அருகில் உள்ள அன்பர்களால் பிரதோஷ பூசையும் நடைபெறுகிறது ......

விரைவில் அவன் அருளாலே அவன் திருக்கோயில் அமைய வேண்டும் .....
என்பதே ஆன்மீக அன்பர்களின் எதிர்ப்பார்ப்பு ....

சிவாய நம .....


Sunday, August 28, 2016

அர்ஜுனன் மங்கலம் ----அச்சுதமங்கலம் 

தொலைந்த பொருட்களை மீட்க -----இழந்த செல்வங்களை திரும்ப  பெற ....

வழிபட வேண்டிய  விஸ்வநாதர் திருக்கோயில் ....


அச்சுதமங்கலம் கோயில்கள்
1.காசி விஸ்வநாதர் கோயில்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் காசி விஸ்வநாதரை வழிபட, வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
அர்ச்சுனன் தங்கி இருந்து வழிபட்டதால் "அர்ஜுன மங்கலம்" என்பது நாளடைவில் அச்சுதமங்கலம் என மருவி உள்ளது.


சென்று தரிசனம் செய்யுங்கள்.....பலன் பெறுங்கள்...

காண்டக்ட்: R .மோகன் 9524348725
 





Wednesday, August 24, 2016

எல்லாமே இரண்டு..........
 
அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர்- 600 019. திருவள்ளூர் மாவட்டம்.

திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது.

சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது.
 
ஊழி காலத்திலும் அழியாமல் இருக்கும் தலம்  இது ஒன்றேயாகும்......

தொண்டை மண்டல தலங்களில்  இங்கு மட்டுமே அதிகமான லிங்கத்திருமேனிகள் அமைந்துள்ளன.


நட்சத்திர லிங்கத்திருமேனிகள் :  27 நட்சத்திர காரர்களுக்கும் உரிய சிவலிங்க திருமேனிகள் இங்கு அமைந்துள்ளது ...அவரவர் நட்சத்திரம்  அன்று இங்கு வந்து அதற்குரிய லிங்கத்திருமேனிக்கு அர்ச்சனை செய்து கொள்கிறார்கள்.  


Sunday, August 21, 2016

வேதங்கள் வழிபட்ட வேத நாயகன்.....
மறைநூல் வல்லோர்கள்  போற்றும் திருமறைச்சேரி (மாறச்சேரி )

வேதங்கள் மட்டுமல்ல தேவாதி தேவர்கள்  வழிபட்ட தலம் .... குறிப்பாக சூரியன் வணங்கி பேரு பெற்ற தலம் ...
ராகு வணங்கிய தலம்  என்று ஏராளமான பெருமைகளை உடைய இத்தலம் இருக்குமிடம் ......நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள  மணலி என்னும் இடத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமறைச்சேரி என்னும் கிராமமாகும் ....
மணலியிலிருந்து ஆட்டோ வசதி உண்டு.....

வேத நாயகன், வேதியர் நாயகன் நாகநாதன் என்னும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளான் ...
அன்னை சுந்தர நாயகி ...பெயருக்கு ஏற்றாற்போல் கொள்ளை அழகு .......மனதை கொள்ளை கொள்ளும் அழகு ..

ஜாதக ரீதியாக சூரியன் பலம் குன்றி இருப்பவர்கள் இங்கு வந்து தோஷ பரிகாரம் செய்து  கொள்ளலாம் ....அது மட்டுமல்ல நாக தோஷம் நீக்கும் சிறந்த பரிகார தலமும் இதுவாகும்....
ஆனால் இத்திருக்கோயிலின் இன்றைய நிலை கண்ணில் நீரை வரவழைப்பதாக உள்ளது .....
இந்நிலை கண்டு பொறுக்காத கிராம மக்கள் , ஆன்மீக அன்பர்கள் இத்திருக்கோயிலை ஏற்பாடு பட்டாவது 
புனரைமைக்க முயற்சித்து வருகின்றனர் .....பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இத்திருக்கோயிலை பற்றி விரிவாக சக்தி விகடன் பத்திரிகையிலும் வந்துள்ளது ....

பெறற்கரிய பொக்கிஷமான இத்திருக்கோயிலை நீங்கள் வந்து வணங்க வேண்டாமா? 

திருப்பணியில் உங்கள் பங்கும் இருக்க வேண்டாமா?

இத்திருக்கோயிலை நீங்கள் தரிசிக்க விரும்பினால் , திருப்பணியில் பங்கு பெற விரும்பினால் கீழ் கண்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் ..
7708240152 & 9840063124






Saturday, August 20, 2016

பாரிவாக்கம் பெருமானுக்கு வழி பிறக்குமா? 

நல்லதோர் வீணை செய்தே அதை நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ ?

இப்படித்தான் தோன்றியது பெருமான் புதர் மண்டிய  ம(மா)க்கள்  இயற்கை உபாதைகள் கழிக்கும் ஒரு இடத்தில் நான் பார்த்தபோது !!!!!

எண்ணில் பாவிகள் எந்தை ஈசனின் நண்ணல் அறியாமல் நழுவுகின்றார்களே !!!!!

இடம்: பாரிவாக்கம் ....திருவள்ளூர் மாவட்டம் ...பட்டாபிராம் ரயில் நிலையத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள ஓர் சிற்றூர்  பாரிவாக்கம் ....
இங்கு பிரதான சாலையின் ஓரம்  ஒரு டெலிபோன்  ஆண்டெனா பின்புறம் உள்ள வெட்ட வெளியில் வீற்றிருக்கிறார் இவர்....

இங்கு  ஒரு சிவஸ்தலமும் , மற்றும் சிறிது சிறிதாக நிறைய ஆலயங்களும் உள்ளன.....
ஆனால் இப்பெருமானை கவனிப்பதற்கு தான் ஆள் இல்லை .....

சென்னையை சேர்ந்த கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபையினர் மூலம் இவர் தன்னை வெளிப்படுத்தி கொண்டார்....

பல காலமாக இவர் நிலை இப்படித்தான் உள்ளது ....
பெருமான் நல்ல உயர்ந்த திருமேனியராய் சேவை சாதிக்கிறார்.

அருகில் உள்ள திருக்கோயில்களில் இவர் பிரதிஷ்டை செய்து வழிபாட்டிற்கு கொண்டு வர ஏன் நல்ல உள்ளங்கள் முயற்சி செய்ய கூடாது ?



Thursday, August 18, 2016

.குடமுழுக்கில் கலந்துகொள்ள திரளாக வாருங்கள் அன்பர்களே....

அரிய சக்தி வாய்ந்த அற்புத திருக்கோயில் ....


1. மண்ணியாற்றங்கரையில் சுயம்புவாய் வீற்றிருக்கும் பெருமான் .
2. பைரவர் ஆராதனை (தேய்பிறை அஷ்டமி ) இங்கு தான் முதன் முதலில் தோன்றியது ...
3. அன்னை பார்வதி மானுட பிறவி எடுத்து இறைவனை தேடி அலைந்த தலம்  இது...
அப்படி தேடும்போது பொன் நகைகளை அடையாளத்திற்காக விட்டு சென்று பின் அதனை பின்பற்றி போனதால் இத்தலம் பொன்பற்றி மருவி பொன்பேத்தி என்று அழைக்கப்படுகிறது இன்று.

4. புகழ் பெற்ற தேன்  உறிஞ்சும் விநாயகர் எழுந்தருளி அருள்பாலிக்கும் தேவார பாடல் பெற்ற திருபுறம்புயம் திருத்தலத்திற்கு வெகு அருகாமையில் 1 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது பொன்பேத்தி ஸ்ரீ அகிலாடேஸ்வரி சமேத பவானீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் ...

5. ஸ்வர்ண ஆரண்யம் , ஸ்வர்ண பூமி , ஸ்வர்ண காடு  என்றெல்லாம் சிறப்பு பெயரால் அழைக்கப்படும் இடம்..
பிதுர் தர்ப்பணம் செய்ய காசிக்கு இணையான தலம் இது ....

6. இங்கு அஷ்டமி அன்று பைரவ தரிசனம் செய்ய நம்மை சூழ்ந்திருக்கும்  அனைத்து ஆபத்துகளும் நீங்கும் ....
இவரிடம் சமர்ப்பித்து அன்பர்கள் பொன் வெள்ளி அல்லது தாமிரத்தினால் ஆன நாய்க்காசுகளை கயிற்றில் கோர்த்து கையிலோ இடுப்பிலோ ஆண் , பெண் இருபாலாரும் அணிந்து கொள்ள, மகத்தான காப்பு சக்தியாக விளங்கி காப்பாற்றும் ....

இத்தலத்தை பற்றியும் அன்பர் திரு குருமூர்த்தி அவர்களை  பற்றியும் அன்பர்களே ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன் ...
அத்தகைய கிடைத்தற்கரிய  இந்த திருக்கோயிலை இவர்  கிராம மக்கள் மற்றும் திருப்பணி செம்மல் சென்னை திரு மஹாலக்ஷ்மி சுப்ரமணியன் அவர்களின் பேருதவியோடு செப்பனிட்டு வரும் ஆவணி திங்கள் 19 ஆம் நாள் அதாவது 4/09/2016 ஞாயிறு அன்று மஹா  கும்பாபிஷேகம் நடத்த உள்ளார் ....

அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்... மற்றும் குடமுழுக்கு மற்றும் எஞ்சிய திருப்பணிகளை முடிக்க 4 லட்சம் வரை உதவி தேவைப்படுகிறது ,,,,,,

அன்பர்கள்  நன்கொடை வரவேற்கப்படுகிறது .....

தொடர்பு எண்கள் : 97900 76726, 9585152811
வழித்தடம் : குடந்தை ---திருப்புறம்பியம் பேருந்து எண்  6,18,65,69







காசிக்கு வீசம் அதிகமான கங்கை வராக நதீஸ்வ்ரர் திருக்கோயில் , திருக்காஞ்சி , புதுச்சேரி 

அன்பர்களே, வேத விற்பன்னரான அந்தணர் ஒருவர் தன் தந்தையின் அஸ்தியினை கரைப்பதற்காக சீடன் ஒருவனுடன் காசியை நோக்கி பயணப்பட்டார் .....வழியில் இத்தலத்தை அடைந்தபோது , சீடனிடம் அஸ்தி அடங்கிய கலசத்தை கொடுத்து விட்டு நித்யானுஷ்டானங்களை அனுஷ்டிக்க சென்றார் ...

கலசத்தினுள் என்ன உள்ளது என்று அறிந்து கொள்ள முற்பட்ட சீடன் அதனை திறந்து பார்க்க கலசத்தில் பூக்கள் இருப்பதை பார்த்தான்....

பூக்களை எடுத்துக்கொண்டு  ஏன் அவ்வளவு தூரம் பயணிக்கிறார் குருநாதர் ? அதை அவரிடமே கேட்க அதிர்ச்சியடைந்த அவர் கலசத்தை திறந்து பார்த்தார்....பூக்களே நிரம்பியிருந்தன ....

அதிசயித்த அவர் இத்திருத்தலத்தின் பெருமையை உணர்ந்து அங்கேயே தன் தந்தையின் கடன்களை முடித்து கொண்டு திரும்பினர்....

வரலாற்று பெருமையும் , புராதன சிறப்பும் ஒருங்கே வாய்ந்த இத்தகைய அரிய தலம் தான் , புதுச்சேரி மாநிலத்தின் புகழ் மிக்க தலங்களுள் ஒன்றான கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோயில் ஆகும்.....

மூலவர் மிகப்பெரிய 16 பட்டைகள் கொண்ட ஷோடச லிங்கம் ஆகும்.....

பல்வேறு காலா கட்டங்களில் பல்வேறு மன்னர்களால் திருப்பணி  செய்யப்பட்ட இத்திருக்கோயில் காலமாற்றங்களினால் சீர்குலைந்தது .....

தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது இத்திருக்கோயில் ....

நீத்தார் கடன் புரிவதற்கு காசிக்கு நிகரான ஒப்பற்ற தலமாகும் திருக்காஞ்சி ......
புதுச்சேரியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்காஞ்சி 
கொடுத்து வைத்தவர்கள் தரிசனம் செய்ய தயாராகுங்கள் ......





Monday, August 15, 2016

மனைவியின்  தங்கையை மனைவியாக்க முயன்றவனை தடுத்தருளிய ஈசன் .........
அவள் தான் இவள் என்று சாட்சி கூறிய சாட்சிநாத பெருமான் ......
பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்று.
குடந்தை , வலங்கைமான் வட்டம் அவளிவநல்லூர் திருக்கோயில் தான் அது ....

சம்பந்தரால் பாடல் பெற்ற இத்திருக்கோயிலில் பணியாற்றிய குருக்களுக்கு இரு பெண்கள் ....
மூத்தவளை மணந்த ஒருவன்... தல யாத்திரைக்கு கிளம்பினான் ....
சில ஆண்டுகள் கழித்து திரும்பிய அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது ......அம்மை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மனைவிக்கு கண்கள் பாதிக்கப்பட்டு தழும்புகள் நிறைந்த முகத்துடன் அழகிழந்து காணப்பட்டாள் ...

நேர்மாறாக மனைவியின் தங்கையோ மிகுந்த வசீகரத்துடன் இருந்தாள் .....

மனைவியின் தங்கை தான் தன் மனைவி என்றும் , தன்னை அனைவரும் ஏமாற்ற முயற்சிப்பதாகவும் குறை கூறிய அவன் தன் மனைவியை ஏற்க மறுத்தான் .....மனம் வெறுத்த அவன் மனைவி ஈசனிடம் தன்னை காப்பாற்றுமாறு கதறினாள் .....

மனம் இறங்கிய பெருமான் திருக்கோயிலின் குளத்தில் மூழ்கி எழுமாறு பணிக்க , அவ்வாறே அப்பெண்ணும் குளத்தில் மூழ்கி எழுந்தாள்...  என்ன ஆச்சர்யம்?!.....  தழும்புகள் மறைந்து முன்னைவிட பேரழகுடன் மாறிய அவளை நோக்கி இவளே உன் மனைவி .....அவளே இவள் என்று ஈசன் சுட்டி காட்டி மறைந்தார்.

அன்றிலிருந்து இத்தலம் அவளிவநல்லூர் என்றும் இறைவன் சாட்சிநாதர் என்றும் அழைக்கப்டுகிறார் ....

இத்தலத்தில் வழிபடுவதால் கண் பார்வை குறைபாடுகள் நீங்கும் .... தோல் நோய்கள் நீங்கும் .....

அம்மாபேட்டை அருகில் அமைந்துள்ள இத்தலம் ஆவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .


Saturday, August 13, 2016

விடம் தீண்டாபதி , கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள தலம் தான் அது ... இத்தலத்தின் பெருமையை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் .......ஆதிசேஷன் வழிபட்டு இத்தலத்தின் எல்லை வரை யாரையும் தீண்டமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளமையால் இன்று வரை யாரும் இத்தலத்தில் பாம்பு தீண்டி இறந்ததில்லையாம் ....

பஞ்ச பாண்டவர்கள் , சப்த முனிவர்கள் , அஷ்டதிக் பாலகர்கள் , மஹா விஷ்ணு முதலான தேவாதி தேவர்கள் 
சிபி சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் , டிண்டி , முண்டி  எனப்படும் துவார பாலகர்கள் போன்ற எண்ணற்றவர்களால் இறைவன் வழிபட பட்டிருக்கிறார் ......

63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் பிறந்த தலம் இதுவே....
முருகப்பெருமான் பிரம்மனை சிறைபிடித்த குற்றத்திற்காக இங்கு தீர்த்தம் உருவாக்கி  வெள்வேல மரத்தடியில் 
தவம் புரிந்து வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றார் .....
இதுவே இத்தலத்தின் தல விருட்ஷம் 

வேலாயுத தீர்த்தம் எனப்படும் இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் அனைத்து விதமான தோல் நோய்களும் நீங்க பெறுவர் ....

இதைவிட வேறென்ன சிறப்பு வேண்டும்..?

அகத்தியருக்கு திருமண காட்சி நல்கிய இடம் ......
தேவார மூவரால் பாடல் பெற்ற  தலம் ......

எல்லாவற்றிக்கும் மேலாக உலக புகழ் பெற்ற கருமாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ள தலம் ..

அன்பர்களே .......என் வேண்டுகோள் என்னவெனில் இத்தலத்தை சுற்றியிருக்கும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட அஷ்ட லிங்கங்களை அன்பர்கள் சென்று வழிபட வேண்டும் என்பதே.....

திருவேற்காடு சென்று தவறாமல் அனைத்து திருக்கோயில்களையும் வழிபட்டு இறையருள் பெற்று வாருங்கள்....





Friday, August 12, 2016

தண்ணீர்குளம் மேவிய தயாபரன் 


சித்தத்தை சிவன் பால் வைத்த அடியார் பெருமக்களுக்கு அன்பு வணக்கங்கள் ........
சில தினங்கள் முன்பு திருவள்ளூர் மாவட்டம் , தொழுவூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள  மங்களாம்பிகை சமேத  ஆபத்சகாயேஸ்வர சுவாமி திருக்கோயில் குறித்து பதிவு செய்திருந்தேன் ......  இப்பெருமான் பலகாலமாக வானமே  கூரையாக வீற்றிருந்தார் ....

அருகில் உள்ள அன்பர் திரு உதயகுமார் அவர்கள் இப்பெருமானுக்கு பூசை புனஸ்காரங்கள் செய்து வருகிறார்.....

பல முறை மேற்கூரை அமைக்கப்பட்டு வந்தது ...ஆயினும் அவை நிரந்தர மாக அமையவில்லை .

தற்போது இப்பெருமானுக்கு மேற்கூரை அமைத்து வருவதோடு அருகில் திருக்கோயில் ஒன்றை அமைப்பதற்கு , அடியார்கள் பெரு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் .....

அதற்கு தங்கள் மேலான ஒத்துழைப்பும் , பங்களிப்பும் தேவை படுவதால் , 
அடியார் பெருமக்களாகிய உங்களை இத்திருப்பணியில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம் ...

இத்திருக்கோயில்  திருநின்றவூர் ---திருவள்ளூர் சாலையில் புட்லூர் என்னும் இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .....

பேருந்து நிறுத்தம் புட்லூர்.
தங்கள் பொருளுதவியை கீழ்கண்ட  வங்கி கணக்கில் செலுத்தலாம் ....
உங்கள் தொடர்புக்கு அலைபேசி எண்களும் தந்துள்ளேன் .....

 உதயகுமார் 9444129438 9940449903 
.
STATE BANK OF INDIA
THIRUNINDRAVUR BRANCH
A/C NO 30330231064
IFSC CODE 10666





Wednesday, August 10, 2016

நித்யகல்யாணி உடனுறை திரு நித்தீஸ்வரர் திருக்கோயில் காரைக்கால் .......

காரைக்கால் செல்பவர்கள் தவறாமல் வணங்க வேண்டிய ஒரு திருக்கோயில் இது.
இத்திருக்கோயில் ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டது .....
 முக்கியமாக திருமண தடை நீக்கும் சிறப்பு திருத்தலம் .....
இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடந்த தலம் என்பதால் விரைந்து திருமணம் நடக்க வேண்டுபவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம் ......

பொருள் வரவு, தான லாபத்திற்கு இத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்த பரிகார தலமாகும் ...

இத்தலத்தின் விசேஷ மூர்த்தியாய் விளங்கும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி தன் மனைவியோடு காட்சியளிக்கிறார் ... தேய் பிறை அஷ்டமி நாளில் இங்கு விசேஷ மஹா யாகம் நடத்தப்படுகிறது .....அன்று யாகத்தில் கலந்து கொண்டு  அன்பர்கள்  பலன் பெறலாம் ......

இங்கு உறையும் பைரவ மூர்த்தியை வணங்குவதால் , வறுமை நிலை நீங்கி , வாழ்வில்  வளம் பெருகும் என்பது நிதர்சனமான உண்மை .......

இத்திருக்கோயில் பிரதான சாலையிலேயே சுந்தர மூர்த்தி விநாயகர் திருக்கோயில் எதிரில் உள்ள சந்தின் கடைசியில்  அமைந்துள்ளது .....

பலரும் இத்திருக்கோயிலின் சாநித்தியத்தை உணராமல் உள்ளனர் .....எனவே அன்பர்களே காரைக்கால் செல்லும் போது , கருவறையில் கம்பீரமாக கொலுவீற்றிருக்கும் நித்ய கல்யாணி உடனுறை நித்தீஸ்வர பெருமானை  தரிசனம் செய்ய மறக்காதீர்கள் .....