Monday, August 15, 2016

மனைவியின்  தங்கையை மனைவியாக்க முயன்றவனை தடுத்தருளிய ஈசன் .........
அவள் தான் இவள் என்று சாட்சி கூறிய சாட்சிநாத பெருமான் ......
பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்று.
குடந்தை , வலங்கைமான் வட்டம் அவளிவநல்லூர் திருக்கோயில் தான் அது ....

சம்பந்தரால் பாடல் பெற்ற இத்திருக்கோயிலில் பணியாற்றிய குருக்களுக்கு இரு பெண்கள் ....
மூத்தவளை மணந்த ஒருவன்... தல யாத்திரைக்கு கிளம்பினான் ....
சில ஆண்டுகள் கழித்து திரும்பிய அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது ......அம்மை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மனைவிக்கு கண்கள் பாதிக்கப்பட்டு தழும்புகள் நிறைந்த முகத்துடன் அழகிழந்து காணப்பட்டாள் ...

நேர்மாறாக மனைவியின் தங்கையோ மிகுந்த வசீகரத்துடன் இருந்தாள் .....

மனைவியின் தங்கை தான் தன் மனைவி என்றும் , தன்னை அனைவரும் ஏமாற்ற முயற்சிப்பதாகவும் குறை கூறிய அவன் தன் மனைவியை ஏற்க மறுத்தான் .....மனம் வெறுத்த அவன் மனைவி ஈசனிடம் தன்னை காப்பாற்றுமாறு கதறினாள் .....

மனம் இறங்கிய பெருமான் திருக்கோயிலின் குளத்தில் மூழ்கி எழுமாறு பணிக்க , அவ்வாறே அப்பெண்ணும் குளத்தில் மூழ்கி எழுந்தாள்...  என்ன ஆச்சர்யம்?!.....  தழும்புகள் மறைந்து முன்னைவிட பேரழகுடன் மாறிய அவளை நோக்கி இவளே உன் மனைவி .....அவளே இவள் என்று ஈசன் சுட்டி காட்டி மறைந்தார்.

அன்றிலிருந்து இத்தலம் அவளிவநல்லூர் என்றும் இறைவன் சாட்சிநாதர் என்றும் அழைக்கப்டுகிறார் ....

இத்தலத்தில் வழிபடுவதால் கண் பார்வை குறைபாடுகள் நீங்கும் .... தோல் நோய்கள் நீங்கும் .....

அம்மாபேட்டை அருகில் அமைந்துள்ள இத்தலம் ஆவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .


No comments:

Post a Comment