மகான் ஸ்ரீ பாடகச்சேரி ஸ்வாமிகள்--குடந்தை பாடகச்சேரி, மகான்ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் வாழ்ந்த கிராமம். ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் குடந்தை நாகேஸ்வர சுவாமி கோயிலுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்வித்து அழியா புகழ் பெற்றவர். வேறு பல கோயில்களின் திருப்பணிகளுக்கு காரணமாகயிருந்தவர். தமிழகமெங்கும் பலரையும் பல திருப்பணிகளில் ஈடுபடுத்தியவர். அவரது மகிமைகளையும் பெருமைகளையும் எல்லையற்ற தெய்வீக சக்திகளையும் இன்றும் பலர் பசுமையாக நினைவு கூறுகின்றனர். அவருக்காக ஒரு மடம் அவர் தங்கியிருந்த இடத்தில் கட்டப்பட்டு அவர் சமாதியான ஆடிபூரம், மற்றும் பவுர்ணமி நாட்களில் அன்னதானம் வெகுவிமர்சையாக கொடுக்கப்படுகிறது. சுவாமிகள் எண்ணற்ற வியாதிகளை குணமாக்கியவர். எந்த வசதியும் இல்லாத அந்த காலத்திலேயே ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தவர். அவருடைய ஜீவ சமாதி திருவற்றியூரில் பட்டினத்தார் சமாதிக்கு பக்கத்தில் உள்ளது. அவர் பைரவர் உபாசகர். அவர் அன்னதானம் செய்யும் பொழுது நூற்றுக்கணக்கான நாய்கள் திடீரென்று மனிதர்கள் போல இலைகளில் உணவு அருந்தி நொடியில் எங்கோ சென்றுவிடுமாம். இன்றும் அவருடைய மடங்களில் அந்த அதிசயம் நடைபெறுகிறது. . அவர் வாழ்த்த பாடகச்சேரி கிராமத்தில் பெருமாள் கோயில் ஒன்றும் சிவஸ்தலம் ஒன்றும் உள்ளது. அவர் வணங்கி வழிபட்ட பசுபதீஸ்வரர் திருகோயில் மூலவர் பசுபதீஸ்வரர் தான் நீங்கள் படத்தில் காண்பது . பாடகச்சேரி குடந்தை மன்னாரர்குடி சாலையில் வலங்கைமான் அருகில் உள்ளது. பிரதான சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில இத்திருக்கோயில்களும் ,ஸ்வாமிகள் மடமும் உள்ளது . |
Sunday, September 13, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment