கனவில் தோன்றி கோயில் கட்ட சொன்ன இறைவன் --பதுவஞ்சேரி
சென்னை மாடம்பக்கம் தேனுபுரீஸ்வரர் திருகோயிலில் சேவை செய்து வந்த முதியவர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களது கனவில் சாது ஒருவரின் வடிவில் வந்து இறைவன் தன் இருப்பிடத்தை உணர்த்திய தலம் இது.
அப்போது லிங்கத்துமேடு என்று அழைக்கப்பட அந்த இடத்தை கனவில் வந்த முதியவர் கூறியதின் பேரில், தோண்டியபோது கிடைத்த லிங்கதிருமேனிகள் பின்னர் காஞ்சி முனிவர் ஜெயேந்திரர் அருளாசியின் படி கிராம மக்களாலும் அடியார் பெரு மக்களாலும் திருகோயில் அமைக்கப்பட்டு தற்போது மிக நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகிறது .
எழில் கொஞ்சும் பசுமையான வயல் வெளிகளிடையே திருகோயில் அமைந்திருப்பது மனதிற்கு சாந்தத்தை தருகிறது.
தாம்பரத்தை அடுத்த பதுவன்சேரி என்னும் இடத்தில் தான் கைலாசநாதர் அருளும் இத்தலம் அமைந்துள்ளது. கிழக்கு தாம்பரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது . அகரம் தென் என்னும் இடத்திற்கு அடுத்த பேருந்து நிறுத்தம் .
No comments:
Post a Comment