தடைகளை தகர்த்தெறியும் தன்னிகரற்ற திருத்தலம்---விராலூர் --மயிலாடுதுறை
காலச்சக்கரத்தை மாற்றியமைக்கும் அற்புத தலம் இது.
பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது பூசிக்கப்பட்டவர் ஸ்ரீ அனைவரத நடேசர், அம்பிகை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி .
இங்கு குடிகொண்டுள்ள 16 பட்டைகள் கொண்ட பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பஞ்சவர்னேஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்யப்படும் போது பால் ஐந்து நிறங்களாக மாறும் அதிசயம் தற்போதும் நடக்கிறது .
இங்கு தனி கோயில் கொண்டுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் மடியில் லக்ஷ்மியை அமர்த்தியுள்ளார் . இவர் பல்லவர் காலத்திய சிற்ப கலைக்கு ஓர் உதாரணம் .
மகாபெரியவா விராலூருக்கு விஜயம் செய்து இரு திருகோயில்களையும் தரிசித்து உள்ளார்.
இத்துனை சிறப்புடைய இத்திருகோயில் ஆன்மீக அன்பர்களால் திருப்பணி செய்யப்பட்டு ,குடமுழுக்கு விமரிசையாக நடத்தப்பட்டது .
இருப்பிடம்: மயிலாடுதுறை மணல்மேடு சாலையில் உள்ளது பட்டவர்த்தி .இங்கிருந்து சித்தமல்லி செல்லும்சாலையில் பயணித்தால் விராலூரை அடையலாம்
தொடர்புக்கு v.v. Kumar
99438 99502
No comments:
Post a Comment