தொண்டைநாடு திருகோயில்கள் உடைத்து
என்பது ஆன்றோர் மொழி.இதன் முக்கிய பகுதியான திருவள்ளூர் மாவட்டம் எண்ணற்ற திருகோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது .
குறுமுனி அகத்தியர் 108 சிவலிங்கப்ப்ரதிஷ்டை
இம்மாவட்டத்தில் செய்து வழிபட்டுள்ளார்.
அவர் 108 ஆவதாக வழிபட்ட நூற்றிஎட்டீஸ்வரர் திருகோயில்
திருவள்ளூர் மாவட்டம் சின்னகாவணம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
இதன் மற்றொரு சிறப்புஎன்னவென்றால் தலவிருட்ஷமான
எறேழிஞ்சில் மரம். இம்மரத்திலிருந்து சிதறும் விதைகள்
மெல்ல மெல்ல நகர்ந்து சென்று மீண்டும் இம்மரத்தின் மீது ஒட்டிகொள்கிறது.
இது ஜீவாத்மாவாகிய நாம் இறுதியில் பரமாத்மாவாகிய இறைவனை சென்று அடைவதை உணர்த்துகிறது.
இத்திருகோயில் இரண்டு மூலவர்களை பெற்றிருக்கிறது .....சதுர்வேத புரீஸ்வரர் என்பது திருநாமம் ...
பல்வேறு சிறப்புகள் பெற்றிருந்தாலும் இத்திருகோயில் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது .....இது தான் வேதனையில் ஆழ்த்துகிறது ..
சின்னகாவணம் பொன்னேரி அருகில் பழவேற்காடு செல்லும் வழியில் உள்ளது ...
Very good blog indeed ...
ReplyDeleteமிக்க நன்றி
Delete