Sunday, April 17, 2016

மருத்துவர்  கை விட்டாலும் ,கை விடமாட்டார் தொரவி--கைலாசநாதர் 

விழுப்புரம்  மாவட்டம்  விக்கிரவாண்டி வட்டம் தொரவி என்னும்  சிற்றூரில் அமைந்துள்ள  சுமார்  ஆயிரம் ஆண்டுகளுக்கு  முற்பட்ட  கைலாசநாதர்  ஆலயம் , மகா பெரியவா  வேதம்  பயின்ற  காலத்தில் அவரால்  வணங்கப்பட்ட பெருமையை  உடையது .....

காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகர சுவாமிகள் விழுப்புரத்திலிருந்து பகண்டையில் வேதம் படிக்கச் சென்ற போது இக்கிராமத்தில் கேணிகுளம் என்ற இடத்தில் உள்ள குளத்தில் குளித்து அங்குள்ள இரட்டை சிவலிங்கம் மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு சென்றிருக்கிறார்.

பெருமைகள் மிக்க இந்த ஆலயம் நித்யபடி பூஜை இல்லாமல் திருவிளக்கு ஏற்றாமல் பாழடைந்திருந்தது. 

தாயும், தந்தையுமாய் நமக்கு அருள்பாலிக்கும் தொரவி கைலாசநாதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி வாழ் சிவனடியார்கள் ஏனாதிநாத நாயனார் அறக்கட்டளை மூலமாய் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதற்கான பாலஸ்தாபன பூஜையும் நடத்தியுள்ளனர்.

இந்த இறைப் பணிக்குத் தம் பங்கும் அளிக்க விரும்பும்  அன்பர்கள்  9025265394 மற்றும் 9843277290 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.  

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் விழுப்புரம்-விக்கிரவாண்டி இடையே வழுதாவூர்-திருக்கனூர் நெடுஞ்சாலையில் தொரவி கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது. விழுப்புரத்திலிருந்து கிழக்கே 12 கி.மீ. விக்கிரவாண்டி டோல்கேட்டிலிருந்து தென்கிழக்கு  திசையில் 3 கி.மீ. மற்றும் புதுவையிலிருந்து மேற்கே 30 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. 


No comments:

Post a Comment