Saturday, April 30, 2016

திட்டை  ராஜகுரு 

குரு  காடாட்ஷம்  பெற  திட்டை  வசிஷ்டேஸ்வரர்  திருகோயிலில்  கோயில்  கொண்டுள்ள ராஜ குருவை  மனதார  வணங்குங்கள் ..

மூலவர்  வசிஷ்டேஸ்வரர்  வசிஷ்டர் முனிவரால்  வணங்கப்பெற்றவர் ..
அக்னி ஸ்வரூபமாக விளங்குபவர் .....எனவே கருவறை  மிக உஷ்ணமாக இருக்கும்  என்பதால்,  இப்பெருமானுக்கு  நேர் மேலாக சூரியகாந்த  கல்லும் சந்திர காந்த  கல்லும்  பதிக்கப்படுள்ளது ....

இந்த  கற்கள் காற்றின் ஈர பதத்தை உறிஞ்சி நீராக  மாற்றி 25 நிமிடங்களுக்கு  ஒருமுறை இறைவன்  மீது  சொரிகிறது .....

இறைவனை  குளிர்ச்சி படுத்தவே  இப்படி  அமைத்துளார்கள்....

இங்கு  உறையும்  இப்பெருமானையும் , ராஜகுருவையும்  வணங்குவதால் 
அனைத்து க்ரஹ தோஷங்களும் விலகும் .....
திருமண தடை நீங்கும் .....மழலை பேரு , செய் தொழிலில் வளர்ச்சி 
மேற்கல்வி அனைத்தும் பெறலாம் .....

திட்டை பிரஹார மஹா லிங்கேஸ்வர பெருமான் (படத்தில்)








Friday, April 29, 2016

எண்கண்  பிரம்மபுரீஸ்வர பெருமான் 

பிரணவத்தின் பொருள் தெரியாததால் முருகனின் சீற்றத்திற்கு உள்ளான பிரம்மன் தன பதவியை இழந்து, இத்தலத்திற்கு வந்து இங்கு உறையும் பிரம்மபுரீஸ்வரரை தன  எட்டு கண்களை பெயர்த்து எடுத்து மலர்களாக இறைவனுக்கு அர்பணித்து வழிபட்டான் ....

தன்  இழந்த பதவியை அடைந்தான் என்பது தல வரலாறு .....
இதனால் தான் எட்டு கண்கள் என பொருள் படும் எண்கண் என இத்தலம் வழங்கபடலாயிற்று.....

ஆனால் இங்கு  முருகனே பிரதான தெய்வமாக  விளங்குகிறார் ...
ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த  கோலம் ...மிக அற்புதமாக வடிக்கப்படிருக்கும் இந்த சிலை முழுதும் மயிலின் இரண்டு கால்கள் மட்டுமே தாங்கி பிடித்திருக்கும்  வகையில் செதுக்கப்பட்டுள்ளது ...

அன்பர்களே  மிகப்பெரிய  கற்றளியான இத்திருகோயில் குடந்தை திருவாரூர் மார்க்கத்தில் சிமிழி அடுத்து உள்ளது ....
பிரதான சாலையிலிருந்து மூன்று  கிலோமீட்டர்  பயணிக்க வேண்டும் 
பேருந்து  வசதி குறைவு ஆதலால் பக்தர்கள் தங்கள் சொந்த  வாகனங்களில் வருவது நல்லது ....
வாழ்வில் ஒருமுறையேனும் இத்தலத்தை தரிசிக்க வேண்டும் ....அன்பர்களே...அத்தனை அற்புதமான , மிக புராதனமான திருகோயில் இது ....

இது தவிர  இங்கு மற்றொரு பிரம்மபுரீஸ்வரர் திருகோயில் மிக சிதிலமடைந்த  நிலையில் உள்ளதாக  அர்ச்சகர் தெரிவித்தார் ...
இரவாகிவிட்டபடியால் என்னால்  தரிசிக்க இயலவில்லை ....



Thursday, April 28, 2016



தொண்டைநாடு திருகோயில்கள் உடைத்து

 என்பது ஆன்றோர் மொழி.இதன் முக்கிய பகுதியான திருவள்ளூர் மாவட்டம் எண்ணற்ற திருகோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது .
 குறுமுனி அகத்தியர் 108 சிவலிங்கப்ப்ரதிஷ்டை
இம்மாவட்டத்தில் செய்து வழிபட்டுள்ளார்.
அவர் 108 ஆவதாக வழிபட்ட நூற்றிஎட்டீஸ்வரர் திருகோயில்
திருவள்ளூர் மாவட்டம் சின்னகாவணம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.


இதன் மற்றொரு சிறப்புஎன்னவென்றால் தலவிருட்ஷமான
எறேழிஞ்சில் மரம். இம்மரத்திலிருந்து சிதறும் விதைகள்
மெல்ல மெல்ல நகர்ந்து சென்று மீண்டும் இம்மரத்தின் மீது ஒட்டிகொள்கிறது.
இது ஜீவாத்மாவாகிய நாம் இறுதியில் பரமாத்மாவாகிய இறைவனை சென்று அடைவதை உணர்த்துகிறது.

இத்திருகோயில் இரண்டு மூலவர்களை பெற்றிருக்கிறது .....சதுர்வேத புரீஸ்வரர் என்பது திருநாமம் ...

பல்வேறு  சிறப்புகள்  பெற்றிருந்தாலும் இத்திருகோயில் பக்தர்கள்  வருகை  இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது .....இது தான்  வேதனையில் ஆழ்த்துகிறது ..

சின்னகாவணம்  பொன்னேரி அருகில் பழவேற்காடு  செல்லும்  வழியில்  உள்ளது ...



Wednesday, April 27, 2016

பழையவலம்  மேவிய  பரமன் -- திருவாரூர் 

சத்தியாதாக்ஷி சமேத  அகஸ்தீஸ்வரர் பெருமான்  திருகோயில் ....


திருவாரூர் பல புராதனமான திருகோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் முக்தி தலமாகும் ...
திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமம்  பழயவலம் ..காலம் சென்ற  என் தகப்பனார் , பெரிய பாட்டனார்கள்  வாழ்ந்த ஊரும் இதுவே ....

இங்குள்ள மிகப்புராதனமானதும் , மிக ப்ரம்மாண்டமானதும், என் பாட்டனார்களால் பல யாகங்களும் ஹோமங்களும் நடத்தபெற்றதும்  ஆன திருகோயில்  தான்  ஸ்ரீ சத்தியாதாக்ஷி உடனுறை அகஸ்தீஸ்வரர் பெருமான்  திருகோயில் ....

மிகப்பெரிய  கற்றளி .....அன்று....
இன்றோ எஞ்சிய  சில  மிச்சங்கள் தான் உள்ளது ...
இருந்தாலும்  கருவறையில் சற்றும் சாநித்தியம் குறையாமல் அற்புதமாக  தரிசனமளிக்கும் பெருமானை கண்டால், நம் உள்ளம் குளிரும் , துன்பங்கள் பறந்தோடும் ....

சத்தியாதாக்ஷியின் கம்பீரமான உருவம் நம் கண் முன்னே இன்றும் நிற்கிறது . அத்தனை  பேரழகு ..

தேவார பாட ல் பெற்ற குருவி ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் பள்ளிமுக்கூடல் தலம் மிக அருகில் உள்ளது ..விற்குடி தலமும்(வீரட்டேஸ்வரர் திருகோயில்) அருகில் தான் உள்ளது .

அது மட்டுமின்றி  கேட்டதை  கேட்டவுடன் நல்கும் , மிகுந்த  வரப்ரசாதியான , துர்கா பரமேஸ்வரி இங்கு  தான் கோயில்  கொண்டுள்ளாள் ....அவள்  இன்று  பிரபலமாக  உள்ள பலருக்கு  குல தெய்வம் ....இத்தலத்தின்  பிரதான காவல்  தெய்வமும்  அவளே .....

அன்பர்களே  தவற விடாதீர்கள் .....



Tuesday, April 26, 2016

வல்லம்  குடைவரை  கோயில்கள்  --செங்கல்பட்டு 

அறியபட்டாத  அபூர்வ  ஆலயம் 

வல்லம்  செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம்..
யாரும் அறியாத வகையில் இங்கு  பல்லவர்கள் காலத்திய குடைவரை கோயில்கள்  உள்ளன .
இங்கு இரண்டு சிவாலயங்களும் ஒரு பெருமாள் கோவிலும் இருக்கிறது .
தற்போது ஒரு சிவாலயத்தில் பெருமான் இல்லை.
ஒன்றில் மட்டுமே வேதாந்தீஸ்வரர் என பெயர் கொண்டு பிரம்மாண்டமான லிங்கத்திருமேனியுடன் சேவை சாதிக்கிறார்.
அம்பாள்  ஞானாம்பிகை...

இங்கு மட்டுமே பஞ்ச மூர்த்திகளான சிவன் அம்பாள் விநாயகர் ,நந்தி சண்டிகேஸ்வரர் ஆகியோரை ஒரே இடத்தில் நின்றபடி காணமுடியும் ...

கிழக்கு  நோக்கிய  இறைவன் மீது  தினமும்  சூரிய கதிர்கள்  படர்வதாக  சொல்கிறார்கள் .

செங்கல்பட்டிலிருந்து இத்திருகோயில் மூன்றே கிலோமீட்டரில் உள்ளது .
1300 ஆண்டுகள்  பழமையான இத்திருகோயிலில் செதுக்கப்பட்டுள்ள   துர்க்கை விநாயகர் வடிவங்கள் பார்த்து  பார்த்து ரசிக்கத்தக்கவை ...
பிரம்மாண்டமானவை ...

ஒருமுறை  சென்று  தான்  தரிசியுங்களேன் ....



Sunday, April 24, 2016

வேதங்கள்  வழிபட்ட  வேதஸ்ரேணி (வேளச்சேரி )

வேதங்கள்  வழிபட்டதால்  இப்பெயர் பெற்றது ....
தன் பக்தனான  மார்க்கண்டனின் ,உயிரை  பற்றிக்க சென்ற  யமனை இறைவன் எட்டி உதைத்ததோடு , அவன் பதவியையும் பறித்தார் .....
பதவியை  இழந்த யமன் இத்தலத்தில் இறைவனை , தீர்த்தம் உருவாக்கி வழிபட்டான் .....
யமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் அளித்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார் .
எனவே  இத்தலத்து இறைவன்  தண்டீஸ்வரர் என பெயர் பெற்றார் ..

இங்கு  வந்து வணங்கினால்  இழந்த  பதவியை  மீண்டும்  பெறலாம் ...
ஆயுள் விருத்தி பெற இங்கு  வந்து  வணங்கலாம் .....
தை  முதல் நாள் இங்கு ஆதவன் இறைவனை வழிபடுகிறான் .....
அம்பாள் கருணாம்பிகை  முன்பு ஸ்ரீ சக்கரம்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

எல்லா  திருகோயில்களிலும்  நின்ற  நிலையில் காணப்படும் வீரபத்திரர் 
இங்கு  மான்  மழு  ஏந்திய வண்ணம் அமர்ந்த நிலையில் உள்ளார் ..

இவரே  இத்தலத்தின் காவல்  தெய்வமாக விளங்குகிறார் ....




Saturday, April 23, 2016

அல்லல்  படுத்தும்  நோய்களுக்கு  மாமருந்து..

வல்வினைகளுக்கு அருமருந்து ......
போகா துயரங்களுக்கு நல்மருந்து ......
நம்  படூர்  மணிகண்டேஸ்வர பெருமான் , அன்னை மரகதவல்லி .....கோயில் கொண்டுள்ள திருகோயில் தான்  அது ...

எங்குள்ளது ?
காஞ்சிபுரம்  மாவட்டம் , திருபோரூர் வட்டம் , கேளம்பாக்கம் அருகில் உள்ளது படூர் கிராமம் ...
பிரதான சாலையிலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ளது திருகோயில் ,
சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக .....
பெருமாள் கோயில்  முற்றுபெற்றுவிட்டது ...மணிகண்டேச்வர பெருமான் கோயில் திருப்பணி  நடைபெற்று வருகிறது ....
நிதி  பற்றாக்குறை  உள்ளது ....எனவே ...

அன்பர்களே,  நீங்களும்  இத்திருப்பணியில் பங்கு கொள்ள  வாருங்கள் ...
கருவறையில்  அற்புதமாக  கம்பீரமாக இறைவன்   குடி கொண்டிருக்கும்  அழகை காண வாருங்கள்..
அன்னையின்  அழகில் மெய்மறந்து விடுவீர்கள் ...அத்தனை  அழகு அவள்...
பெருமாளும்  அப்படியே .....நல்ல கம்பீரம் ....புகைப்படங்கள் தந்துள்ளேன் 
நீங்கள்  தொடர்பு கொள்ள  அலைபேசி எண்ணும் தந்துள்ளேன் ...
இன்னும்  என்ன யோசனை .....உடனே கிளம்புங்கள் ....மணிகண்டேஸ்வரர்  காத்துள்ளார் .......

தொடர்புக்கு :   திரு  பாலாஜி  , 988 4726014







Friday, April 22, 2016

நற்றுனையப்பரை   நம்பி  வாருங்கள் ---புஞ்சை 

அன்பர்களே ,   

பலரும்  கூற  கேட்டிருப்போம்!!!!  
கடினமாக  உழைக்கிறோம் .....ஆனால்  அதற்கேற்ற ஊதியமில்லை ...வருமானமில்லை ..... என்று ...இல்லையா?

அப்படிப்பட்டவர்கள் வாருங்கள் நனிபள்ளி ...அதாவது தேவார பாடல் பெற்ற தலமான புஞ்சை நற்றுணையப்பர் திருகோயில் ..
எங்கே உள்ளது ?

நாகை  மாவட்டம் , மயிலாடுதுறை பூம்புகார் சாலையில், செம்பொனார் கோயில் அருகில் இத்தலம் இருக்கிறது .....

இங்கு  வந்து  இப்பெருமானுக்கு வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து உளமார  வணங்குங்கள் ....

ஸ்திரமான பொருள் வரவு கிடைக்கும் ....தொழில்  சிறக்கும் ....
பொருள்  வரவு கூடும் ..
நம்பிக்கையுடன்  சென்று  வணங்குங்கள் ....நன்மையே தருவார்  நற்றுணையப்பர் ....


Thursday, April 21, 2016

உருக்குலைந்த  நிலையில் உமையொருபாகன் திருகோயில் ---அசூர் -குடந்தை 

அன்பர்களே ......,

குடந்தையிலிருந்து  மூன்று  கிலோமீட்டர் தூரத்தில் நீலத்த நல்லூர் சாலையில் உள்ளது  அசூர் ....
குளங்கள் , நெல் வயல்கள்  நிறைந்த அழகிய  சிற்றூர் ...இங்குள்ள சிதைந்த ,திருகோயில் ஒன்றில் ,இறைவன்  தான்தோன்றீஸ்வரர்  என பெயர்  கொண்டு,  கருவறையில்,நீண்ட  பாணத்துடன் விளங்குகிறார் ..

அம்பாள்  சுமார் 5 அடி  உயரத்துடன்  கம்பீரமாக விளங்குகிறாள் ...
இது  தவிர  பெரிய  லிங்கத்திருமேனி ஒன்று  கோவிலின்  வெளியே காணப்படுகிறது ...
தக்ஷிணாமூர்த்தி சிலை திருடப்பட்டு , மிகுந்த சிரமத்திற்கிடையில் மீண்டும் பெறப்பட்டுள்ளது ...

கோவிலின்  முன்பாக  பெரிய  குளம் உள்ளது ....
மிகவும்  உருக்குலைந்த  நிலையில்  இத்திருக்கோயில் காணப்படுகிறது .
மகாமகத்திற்காக குடந்தை அருகே உள்ள பல கோயில்கள் சீரமைக்கப்பட்டன ...ஆனால்  என்ன காரணத்தினாலோ இத்திரு கோயில் கண்டுகொள்ளப்படவேயில்லை. கோயில் சொத்துக்கள் இருந்தும் அவை ஆக்கிரமிப்பில் உள்ளது ....

அருகில்  ஓய்வு பெற்ற  ஆசிரியர் திரு .ரவி  அவர்களை தொடர்பு கொண்டு விட்டு , நீங்கள்  சென்று  தரிசிக்கலாம் .....
அவர் தொலைபேசி எண் : 0435--2443897

Wednesday, April 20, 2016

பொன்பரப்பி  ஸ்வர்ணபுரீஸ்வரர் --விழுப்புரம்  மாவட்டம் 

நவபாஷணத்திற்கு இணையான சூரியகாந்த கல்லினால்  செய்யப்பட ஐந்தரை அடி  உயர 16 பட்டைகளை  கொண்ட  சோடச லிங்கம் .....
ஆவுடையாரும் பதினாறு  பட்டைகளை கொண்டிருப்பது  சிறப்பு ...

ஆவணி  பௌர்ணமி  மற்றும் பங்குனி உத்திர நாளில்  சூரியன்  நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நுழைந்து  இறைவனை  வழிபடுகிறான் ...

காகபுஜண்டர் இத்திருகோயிலில்  சமாதி  அடைந்துள்ளார் ...

இத்தலம்  பஞ்ச பூத தலத்திற்கு இணையாக  கருதப்படுகிறது .....
கருவறை மிக உஷ்ணமாகவும் , உக்கிரமாகவும் இருக்கும் ...
கருவறை  தீபம், இதன் காரணமாக  துடித்து கொண்டே  இருக்கும் ....

இங்கு  பால்  தேன், தயிர் திரவியங்கள் உட்பட 16 வகையான  அபிஷேக பொருட்களால் இறைவனுக்கு  அபிஷேகம்  செய்யப்படுகிறது ,,,,,,
இவை  துளியும்  பிசராமல் ஒரே நேர்கோட்டில்  ஆவுடையாரின்  அடிப்பாகம் வரை இறங்கி  லிங்க  பீடத்தில்  ஐக்கியமாவதை  காணலாம் ....

சிவனின்  தலையில்  சூடிய  சந்திர  கலையிலிருந்து  தோன்றியவர்  காகபுஜண்டர்நினைத்த  நேரத்தில்  காக்கை வடிவம் எடுக்க கூடியவர் ..
இவரால்  பிரதிஷ்டை  செய்யப்பட  இப்பெருமானை வணங்குபவர்களுக்கு சந்திர  தோஷம் , சனி தோஷம் எதுவாய் இருந்தாலும் நீங்கும் ...

அம்பாள்  இங்கு மகாலஷ்மி அவதாரமாக  விளங்குவதால் ஸ்வர்ணாம்பிகை
என  வழங்கப்பபடுகிறாள்...
 எங்கே உள்ளது?

சேலம்  மாவட்டம்  ஆத்தூரிலிருந்து  கள்ளகுறிச்சி  செல்லும் வழியில் உள்ள  அம்மையகரம் ....இங்கிருந்து  மேற்கே ஒரு கிலோமீட்டரில் உள்ளது பொன்பரப்பி .....


Sunday, April 17, 2016

மருத்துவர்  கை விட்டாலும் ,கை விடமாட்டார் தொரவி--கைலாசநாதர் 

விழுப்புரம்  மாவட்டம்  விக்கிரவாண்டி வட்டம் தொரவி என்னும்  சிற்றூரில் அமைந்துள்ள  சுமார்  ஆயிரம் ஆண்டுகளுக்கு  முற்பட்ட  கைலாசநாதர்  ஆலயம் , மகா பெரியவா  வேதம்  பயின்ற  காலத்தில் அவரால்  வணங்கப்பட்ட பெருமையை  உடையது .....

காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகர சுவாமிகள் விழுப்புரத்திலிருந்து பகண்டையில் வேதம் படிக்கச் சென்ற போது இக்கிராமத்தில் கேணிகுளம் என்ற இடத்தில் உள்ள குளத்தில் குளித்து அங்குள்ள இரட்டை சிவலிங்கம் மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு சென்றிருக்கிறார்.

பெருமைகள் மிக்க இந்த ஆலயம் நித்யபடி பூஜை இல்லாமல் திருவிளக்கு ஏற்றாமல் பாழடைந்திருந்தது. 

தாயும், தந்தையுமாய் நமக்கு அருள்பாலிக்கும் தொரவி கைலாசநாதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி வாழ் சிவனடியார்கள் ஏனாதிநாத நாயனார் அறக்கட்டளை மூலமாய் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதற்கான பாலஸ்தாபன பூஜையும் நடத்தியுள்ளனர்.

இந்த இறைப் பணிக்குத் தம் பங்கும் அளிக்க விரும்பும்  அன்பர்கள்  9025265394 மற்றும் 9843277290 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.  

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் விழுப்புரம்-விக்கிரவாண்டி இடையே வழுதாவூர்-திருக்கனூர் நெடுஞ்சாலையில் தொரவி கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது. விழுப்புரத்திலிருந்து கிழக்கே 12 கி.மீ. விக்கிரவாண்டி டோல்கேட்டிலிருந்து தென்கிழக்கு  திசையில் 3 கி.மீ. மற்றும் புதுவையிலிருந்து மேற்கே 30 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. 


Saturday, April 16, 2016

திருமால்   வழிபட்ட   ஆதிபிதேசம் --காஞ்சி 

இத்திருகோயில் ஆலடிபிள்ளையார்   கோயிலுக்கு  தெற்கில், கீரைமண்டபம் அருகில் , விளக்கொளி பெருமாள் கோயிலுக்கு  நேர் எதிரில்  அமைந்துள்ளது ..

தன்னை  ஒதுக்கி யாகம் செய்ய முற்பட்ட  தன கணவன் பிரம்மாவின் மீது 
மிகுந்த கோபம் கொண்ட  சரஸ்வதி , வேகவதி  என்ற பெயருடன் மிக வேகமாக, யாகம் நடைபெறும் காஞ்சியை நோக்கி ஓடிவருகிறாள் யாகத்தை தடுக்கும்  நோக்கத்துடன் ....

முற்றிலும்  காஞ்சி  அழிந்துவிடும் பேராபத்தை  உணர்ந்த  திருமால் ,நெடுஞ்சாண்கிடையாக படுத்து சரஸ்வதியை தடுத்து யாகத்தை காப்பாற்றுகிறார் .

அதோடு  விளக்கொளி  அளித்து யாகத்திற்கு துணை புரிகிறார் .....என்பது தல புராணம் .....

அப்போது  சிவ பூஜை  செய்ய விரும்பும் அவர் இப்பெருமானை இங்கு ஸ்தாபிதம் செய்து  வணங்குகிறார் ......
அவரே ஆதிபிதேஸ்வரர் , இப்பகுதி  ஆதிபிதேசம் எனவும்  வழங்கபடுகிறது .

இப்பெருமானை  வணங்குவதால் அஸ்வமேத  யாகம்  செய்த பலன் கிட்டும் ...

இம்மைக்கும்  மறுமைக்கும்  நற்பலன்கள் பெறலாம் .


நிம்மதி  தரும்  சன்னதி -திருபாதிரிபுலியூர் 
கடலூர் ...

இங்கு  வந்து  இறைவனை  தரிசிப்பதால்  மன அமைதி  கிடைக்கிறது ....
அனைத்து விதமான உடல் நோய்கள்  தீர்கிறது ..
மேலும்  மழலை வரம் , ஐஸ்வர்யம் ,இங்கு வந்து உளமார வணங்குபவர்களுக்கு சித்திக்கிறது ...
அனைத்து  வித  பிரச்சினைகளும் இங்கு வந்து தரிசிப்போருக்கு கண்டிப்பாக தீர்கிறது ...
சமய குரவர்கள் நால்வர் வழிபட்ட தலம் ......
அப்பர்  அமர்ந்த  நிலையில் உள்ளது  இங்கு மட்டுமே ..

அன்பர்களே தெருவடைச்சான் தேர்  இங்கு  மிக பிரசித்தம் .....
வைகாசி பெருவிழாவின் பொது ஐந்தாம் நாள் தேர் நிகழ்ச்சி நடைபெற்றும் ..
யாரும் நடக்க முடியாத அளவிற்கு  தெருவை அடைத்துக்கொண்டு பிரம்மாண்டமாய்  தேர்  வலம் வரும் .....

காண கிடைக்காத  அற்புத காட்சி இது ...

கடல்  தீர்த்தவாரி நடக்கும் தலங்களுள்  இதுவும் ஒன்று ....
அன்று இறைவன் தேவனாம்பட்டினம் கடற்கரை எழுந்தருள்வார் ....

இங்கு  வேறொரு அதிசயமும்  உண்டு...
இங்கு  அன்னையே தினம்  பள்ளியறை  எழுந்தருளுகிறாள் ...



Friday, April 15, 2016

பழியஞ்சிய  நல்லூர்  பெருமானுக்கு வழி பிறந்து விட்டது

குடந்தை -காரைக்கால்  வழித்தடத்தில்  குட்டகரை  என்னும் இடத்தில் இறங்கி வைகல்  மாட கோயில்(தேவார பாடல் பெற்ற தலம் )  செல்லும் வழியில் இத்தலத்தை அடையலாம் ....

இங்கு பலகாலம் சிதிலமடைந்த  ஒரு திருகோயிலில் அருள்பாலித்து வந்தார் சொர்ணாம்பிகை  சமேத ரத்னபுரீஸ்வர  பெருமான் ...

நான்கு வருடங்களாக  திருப்பணி தொடங்கப்பட்டு என்ன காரணத்தினாலோ அது பாதியில்  நின்று விட்டது .....
இக்கோவிலில் குடிகொண்டுள்ள பெருமான்  காண்போர் மயங்கும் வசீகர திருமேனி உடையவர் .
ஒருமுறை  பார்த்தால்  நீங்கள்  பலமுறை வருவீர்கள் என்பது உறுதி .

இந்நிலையில்  தற்போது  பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி முழு வீச்சில் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது ...
இது மிகவும் மகிழ்க்சி தர  தக்க  செய்தியாகும் ....
இனி  அவன் அருளாலே திருப்பணி முற்றுபெற்று குடமுழுக்கு  இனிதே நிறைவேறும் நன்னாள்  வெகுதூரத்தில்  இல்லை ...



Wednesday, April 13, 2016

ஏற்காடு  அடிவாரத்தில் ஈசன் ஆலயம் ......

சேலம்  மாவட்டம்  மலைவாசஸ்தலமான ஏற்காடு  மலை ஏற்பவர்கள் கவனிக்க தவறியிருக்க மாட்டார்கள் இந்த  அற்புத  திருகோயிலை .

பஞ்சமுக  விநாயகர் கோயில்  என்றாலும் , எல்லா தெய்வங்களுக்கும்  சிறப்புற  சன்னதி அமைந்துள்ளது ....

மலை ஏறுமுன்  பிரதான  சாலையிலேயே  இத்திருகோயில் உள்ளது ...
இத்திருகோயில் குடிகொண்டுள்ள  ஈசன் கம்பீர  திருமேனி  மெய் சிலிர்க்க  வைக்கிறது .....





Tuesday, April 12, 2016

இடமணல்  ஓதவநேஸ்வரர் --சீர்காழி 

ஆலயம்  எழுப்ப  மணல் எடுத்த இடம் என்பதால் இப்பெயர் .....
சுந்தரர்  இங்கு பத்து  சிவாலயங்களை  கட்டினார் என்கிறது புராணம் ...
விநாயகரின்  ஆணைகிணங்க.......

சுந்தரரும்  அவர் சீடர்களும் காவேரியில் வடபால்  உள்ள ஆலயங்களை  தரிசித்துகொண்டு  வந்த பொது பசியால்  அவதிப்பட்டனர் .அப்போது  அந்தணர்  வேடத்தில் வந்த விநாயகர் அவர்களுக்கு  கட்டமுது அளித்தார்.

வந்தது  வினாயகர்  என்பதை  உணர்ந்த சுந்தரர் ,பெரிதும்  மகிழ்ந்து  இந்த உதவிக்கு  என்ன கைம்மாறு செய்வது? என வினவினார் ...

தன  தந்தைக்கு  இங்கு பத்து  சிவாலயங்கள்  அமைக்குமாறு பணித்தார் பிள்ளையார் ...அதன் படி பத்து  சிவாலயங்களை  அமைத்தார்  சுந்தரர்  அம்மையபனுக்கு ...

அதில்  ஒன்று தான் ஒதவநேஸ்வரர் திருகோயில் .....
மூலவர்  மிகப்பெரிய  சுயம்பு திருமேனி ...

நாளைடைவில்  திருகோயில் புதையுண்டு  போனது ......

தன  உறவினரை  பார்க்க வந்த  ஒரு வயதான தம்பதியர் மூலம் ஈசன் தன்னை, ஒரு  மிகப்பெரிய  அரச மரத்தின் அடியில் ,  வெளிப்படுத்தி கொண்டான் ....பிறகே  திருகோயில்  எழுப்பப்பட்டது .
இறைவி அன்னபூரணி ....

தினமும் ஒருகால பூசை நடைபெறும்  இந்த ஆலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் விமரிசையாக  கொண்டாடபடுகிறது...
இழந்த  பொருட்களை  மீட்க இங்கே  நேர்ந்து  கொள்ளலாம் .

சீர்காழி-திருமுல்லைவாசல்  வழித்தடத்தில் எட்டு கிலோ மீட்டரில்  உள்ளது எடமணல் கிராமம் ......



Monday, April 11, 2016

திருமேற்றளிகை  வேம்புநாத பெருமான் 

மேற்றளிகை  என்பது மேற்கு திசையில் அமைந்த  திருகோயில் என்பது  பொருள் ...பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருகோயில்(துர்க்கை கோயில்) மேற்கு திசையில் அமைந்துள்ளது  பிரம்மபுரீஸ்வரர் திருகோயில் ....இத்திருகோயில் சிதிலமடைந்து திருப்பணியை  எதிர்நோக்கியுள்ளது .....

அதன் அருகிலேயே ஒரு மைல் தூரத்தில் அடர்ந்த  வாழைமர  தோப்பினுள் ஆவுடையாருடன்  உயர்ந்த  ஒரு லிங்கத்திருமேனியும் , பாண  லிங்கமாக ஒரு திருமேனியும் வழிபாடற்ற  நிலையில் உள்ளார்கள் .....

அவ்வப்போது அடியார்கள் வந்து இப்பெருமானை வணங்கி செல்கின்றனர் ..

மற்றபடி இப்பெருமான் பூசை புனஸ்காரங்கள் ஏதுமின்றி வானமே  கூரையாக அருள்பாலித்து வருகிறார்...

இப்பெருமான்  எப்போது  கோயில்  காண்பார்? அந்த கைங்கர்யம் கிடைக்கப்போகும் பாக்கியசாலி யார்?  அந்த  இறைவன்  ஒருவரே அறிவார்.


Saturday, April 9, 2016

ஆயிரம்  மலர்களே  மலருங்கள் ...திருவீழிமிழலை 

மஹா விஷ்ணு  ஆயிரம்  மலர்களால்  அர்ச்சித்து தன்  பிரயோக  சக்கரத்தை அடைந்த இடம் .....
ஆயிரமாவது  மலராக தன்  கண் மலரையே பெயர்த்து அர்ச்சித்த இடம் ..
இறைவன்  காலடியில்  இன்றும்  அந்த கண் மலரை  காணலாம் .....

அப்பரும்  சம்பந்தரும்  வாசி தீரவே காசு  நல்குவீர்  என்று  தேவார பாடல்களால் தினம் ஒரு பொற்காசு  பெற்று  மக்களின் பஞ்சம்  நீக்கிய தலம் ...

இறைவன்  காசி யாத்திரைக்கு  செல்லும் கோலத்தில்  காட்சியளிப்பதால் மாப்பிளை  சாமி  எனப்படுகிறார் ...
மகாமண்டபம்  திருமண  மண்டபம் போல் பந்தகாலுடன்  காட்சியளிப்பது  இங்கு மட்டுமே .....

கொடிமரம்  அருகில்  சிவலிங்கம்  அமைந்திருப்பதும்  இங்கே மட்டுமே.

மிகப்பெரிய  சிற்ப வேலைபாடுகள்  நிறைந்த  வௌவால் நெற்றி  மண்டபம் இங்குள்ள சிறப்பம்சம்  ஆகும் ...

கும்பகோணம் ---பூந்தோட்டம்  சாலையில்  பூந்தோட்டம்  அருகே உள்ள திருவீழிமிழலை திருகோயில்  தான்  இத்தகைய  சிறப்புகள்  ஒருங்கே  அமைந்த  மிகப்பெரிய  மாடகோயில் ஆகும் ....

இங்கு வந்து  வணங்குவதால் ஏழ்மை அகலும் ...பொருள்  வரவு , தன வரவு உண்டாகும் .... திருமணம் ஆகாதவர்களுக்கு  திருமணம் கைகூடும். ....




தேவர்களுக்கருளிய  தண்டந்தோட்டத்து  தாண்டவன் 

இறைவன்  தன அடியார்களுக்காகவும் தேவர்களுக்காகவும்  இங்கே  நடன காட்சி  நல்கியதால்  இவ்வூருக்கு  தாண்டவர் தோட்டம் என் பெயர் வழங் கலாயிற்று ...தற்போது  மருவி தண்டம்தோட்டம் எனப்படுகிறது ...
அம்மன்குடி  அருகே ...முருக்கன்குடி வட்டம் ....
அவ்வாறு  ஆடியபோது  அவர் கால் சலங்கை  மணிகள் சிதறியது....அதனை  விநாயக பெருமான் சேகரித்து மறுபடியும்  தன தந்தை  காலில்  கட்டி விடுகிறார்..
இதனால்  இங்குள்ள  விநாயகருக்கு மணிகட்டிய விநாயகர்  என்ற பெயர் ..தனி கோயில் கொண்டு அருளுகிறார் அவர்..
அன்பர்களே....பொதுவாக  விரித்த சடையுடன் காணப்படும்  நம் நடராஜ  பெருமான்   இங்கே  அள்ளி முடித்த  அழகிய  கோலத்துடன் காணப்படுகிறார்..
இது மிகவும் அரிய காட்சி ...

ஆனால்  அன்பர்களே, நாம் கொடுத்து வைக்கவில்லை ...ஆம் .....அந்த அற்புத சிலை  வெளி நாட்டிற்கு கடத்தப்பட்டு விட்டது ......
மேலும்  அகத்தியருக்கு  இங்கே இறைவன் காட்சி அளித்துள்ளார்..அவர் அகஸ்தீஸ்வரர்  என்ற பெயரில்  தனி கோயில்  ஒன்றில் அருள்கிறார் ..
இறைவன் நடன புரீஸ் வர் காண்போர்  மயங்கும்  அற்புத அழகிய  திருமேனி
சுமார் ஆறடி  உயரம்  கொண்டவர்....கண்  இமையாது  பார்க்கலாம் .....

அருகில்  நடார் , அம்மன்குடி , அய்யாவாடி  போன்ற  தன்னிகரற்ற தலங்கள் உள்ளன.  திருநாகேஸ்வரம் அருகில்  தான்  இத்தலமும்  உள்ளது ...

முருக்கன்குடி  வட்டம் ....குடந்தையிலிருந்து  பேருந்து வசதி உண்டு ....

இத்தனை  பெருமைகள் இருந்தாலும் ...அன்பர்களே நம்மிடம் உள்ள குறை  என்னவென்றால்  நாம்  இருக்கும் இடத்தில் உள்ள ஆலயங்களை  நாம்  பொருட்படுத்துவதேயில்லை ....
அயலூருக்கு  சென்று  அதிக பொருட்செலவில்  வரிசையில்  வெகுநேரம்  நின்று கால் கடுக்க தரிசனம்  செய்வோம் .....
ஆனால் பெறற்கரிய  இத்தகைய  திருகோயில்கள்  நம் கண்ணிற்கு புலப்படவே படாது ...

அன்பர்களே  எதற்கும்  கொடுப்பினை  வேண்டும் ...கொடுத்து வைத்தவர்கள்
மட்டுமே  இத்திருகோயிலில் காலை  எடுத்து  வைக்க முடியும் .....

எனவே  அன்பர்களே  கொடுத்து  வைத்தவர்கள்  செல்லுங்கள் .......


Friday, April 8, 2016

சிறப்பு  மிக்க  சிவனாகரம்  திருகோயில் --வடமட்டம் 

அன்பர்களே , கிராமங்கள்  நம் நாட்டின்  கண்கள்  என்றால், அங்கு உள்ள திருகோயில்கள் ,உயிர்நாடியை போன்றது ......

அதனால்  தான்  கோயில்  இல்லை ஊரில்  குடியிருக்க வேண்டாம் ...என்றும் 
திருகோயில் இல்லாத ஊர்  சுடுகாட்டிற்கு  சமமானது என்றும்  ஆன்றோர்கள்  கூறியுள்ளனர் ...

எந்த  இடத்தில்  திருகோயில்கள்  பராமரிக்கப்படவில்லையோ, வழிபாடு இன்றி புறக்கணிக்கப்பட்ட  நிலையில் உள்ளதோ , அப்பகுதி கண்டிப்பாக  செழுமையான  நிலையில்  இருக்காது .

எனவே தான் நம்  நாட்டில்  ஆயிரக்கணக்கான  திருகோயில்கள்  ஆன்றோர்களால்  நிர்மாணிக்கப்பட்டது ..அவர்கள்  தினசரி  திருகோயில்களுக்கு  செல்வதை  தன்  கடமையாக கொண்டிருந்தனர் ..

அன்பர்களே  இதோ உங்களுக்காக   சிவனாகரம்  திருகோயில் பற்றி  தெரிவிக்கிறேன் .....எங்கிருக்கிறது இந்த கோயில் ?  வடமட்டம்  வட்டத்தில் 
உலக புகழ் பெற்ற  கோனேரி ராஜபுரம் அருகில்  உள்ளது சிவனாகரம் .

இவ்விடத்தை   குடந்தை  காரைக்கால்  மார்க்கமாக  அடையலாம் .....வடமட்டத்திற்கு குடந்தையிலிருந்து  பேருந்து  வசதியும் உண்டு ...

வடமட்டத்திலிருந்து  நடந்தே  சென்று  விடலாம் ....மிக பழமை வாய்ந்த ஆலயம் .. அருகிலேயே  களபாகரம் கைலாசநாதர் கோயில் உள்ளது .
கோனேரிராஜபுரம் திருகோயில் இங்கிருந்து வசதி யாக சென்று  வரலாம் ..

இன்னும்  என்ன யோசனை ? உடனே கிளம்புங்கள் ....கைலாசநாதர்  காத்திருக்கிறார் .....


Wednesday, April 6, 2016

கரவீரம் ----கரவீர நாதர் --திருவாரூர் 

சிவபெருமான்  தேவ  கன்னியரின்  வேண்டுகோளுகிணங்க இங்கு  தானே லிங்கம் அமைத்து  தந்தார் ....

அலரி  தல விருட்ஷம் .....கௌதம  முனிவர்  தான்   இங்கு  தல விருட்ஷமாக  விளங்க வேண்டும்  எண்டு இறைவனை  கேட்டு  பெற்றார் ....

எனவே இங்கு அமாவாசை தினத்தன்று பெண்கள்  இங்குள்ள கௌதம மகரிஷி  ஜீவ சமாதியில் உள்ள தல விருட்ஷத்திற்கு  தண்ணீர்  ஊற்றி  வணங்கிய  பின்னரே , இறைவனை  வழிபடுகின்றனர் .....

அவ்வாறு செய்தால்  அடுத்த அமாவாசைக்குள்  திருமணம்  நிச்சயமாகிவிடும் என்ற நம்பிக்கை  நிலவுகிறது ...

இங்கு  ஒரு இரவு தங்கி   மறுநாள்  இறைவனை  வணங்கினால் , சகல விதமான க்ரஹ தோஷங்களில்  இருந்து  விடுதலை  பெறலாம் ...

பிரம்மபுரீஸ்வரர்  என்றும் இப்பெருமான் அழைக்கப்படுகிறார் ....

மிக  பிரமாண்டமான  வடிவத்தில்  இங்கு  இறைவன்  அருள்கிறார் ....
அன்பர்களே.... தவற விடாதீர்கள் இத்தலத்தை  தரிசிக்க ....
எப்படி செல்வது?

குடந்தை  --திருவாரூர்  மார்க்கத்தில் உள்ளது  கரவீரம்  பேருந்து நிறுத்தம் .
பிரதான  சாலையிலேயே  திருகோயில்  அமைந்துள்ளது .



Tuesday, April 5, 2016

இலவனசூர்கோட்டை குடிகொண்ட இறைவன் 
லிங்கதிருமேனியில் அர்த்தநாரீஸ்வரன் 

அன்பர்களே , பெயருக்கு  ஏற்றாற்போல் மிக பெரிய  அரண்மனை போல் அமைந்துள்ளது  இத்திருகோயில் ...

மிக பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் இத்தலத்தில் அனைத்து  தெய்வ திருமேனிகளுக்கும்  தனி தனியே சன்னதி  அமைந்துள்ளது .....

கோட்டை  கதவுகளை திறந்து  மூடுவதற்கே பிரம்ம  பிரயத்தனம் தேவைப்படும் ....

எங்கே உள்ளது?

விழுப்புரம்  மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகே, சேலம் மாவட்டம் ஆத்தூர்  செல்லும்  சாலையில் இத்திருகோயில் அமைந்துள்ளது ....

கருவறையில்  அர்த்தநாரீஸ்வரர் மிகப்பெரிய  லிங்க திருமேனி கொண்டு சேவை சாதிக்கிறார் ....
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை  போன்று  அல்லாமல்  இவர் லிங்கத்திருமேனி  கொண்டு  விளங்குவது  குறிப்பிட தக்கது ...

இப்பெருமானை  ஏராளமான  ரிஷிகள் , சித்தர்கள் , முனிவர்கள் வணங்கியுள்ளனர் ....

தங்கள்  தவ வலிமையை பெருக்கி கொண்டுள்ளனர்....

அன்பர்களே  வாழ்வில்  ஒருமுறையாவது இங்கு உறையும்  பெருமானை 
வணங்குவது  நம் பிறவி  பயன் ......மறந்துவிடாதீர்கள்.....குடும்பததுடன் செல்லுங்கள் ...குதூகலத்துடன் உங்களை  வாழ வைப்பது  அவன் பொறுப்பு ..


Monday, April 4, 2016

துயர்  தீர்க்கும் திருபுடைமருதூர் 
துன்பங்கள் யாவும்  தவிடு பொடியாகும் பரிகார தலம் ...

தலை  மருது, இடைமருது, கடைமருது  என்பார்கள்
அவை முறையே  ஸ்ரீசைலம் , தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் 
திருநெல்வேலி மாவட்டம்  திருபுடைமருதூர் ஆகும் .....

கருவூர் சித்தருக்காக இறைவன்  தலை சாய்த்து இங்கே அருள்கிறார் ...
அவர்  தரிசனம் செய்ய வந்தபோது தாமிரபரணி  ஆற்றில்  வெள்ளம்  ஏற்பட்டது ..
திகைத்து நின்ற அவர்  அக்கரையிலிருந்தே  நாரும்பூநாதா......என்று  அழைக்க 
இறைவன் தன தலை சாய்த்து செவிமடுத்தான் ...அவன் அருளால்  தாமிரபரணி  ஆறு  வழிவிட  கருவூரார் இறைவனை  தரிசனம்  செய்தார் ..

சுவாமி  மீது  வெட்டுபட்ட தடம் , மற்றும்  மான் மீது  எய்த  அம்பு பட்ட தடம் உள்ளது ....

புடார்ஜுநேஸ்வரர் என்பது இத்தல இறைவன் நாமம் .....

மருத  மரம்  தல விருட்ஷம் ..

தீராத  குடும்ப  கஷ்டங்கள் நீங்க ,  திருமண தடை புத்திர  தோஷம்  நீங்க இங்கே  வந்து  பிரார்த்தனை  செய்து  கொள்ளலாம். அதுமட்டுமல்ல அன்பர்களே...

காசிக்கு  நிகரான  தலம் என்று இறைவன் தன்  திருவாக்கினாலே உணர்த்திய தலம் இது ஒன்று தான் ..

வாருங்கள்...உங்கள் துன்பம் பறந்தோடுவதை  அனுபவத்தில்  உணர்வீர்கள் ..


Sunday, April 3, 2016

அண்டியவர்களுக்கு  உணவளித்த  ஆண்டார்பந்தி கிராமம் 

 திருவீழி மிழலையின் வரலாறோடு  தொடர்புடையது  ஆண்டார்பந்தி வரலாறு. 
அப்பர் பெருமான்  திருவீழிமிழலை வந்த  அடியார்களுக்கு இங்கே  விருந்து அளித்ததால் இப்பெயர்  பெற்றது ...

சமையல்  செய்பவர்கள்  நிறைந்த ஊர் ....

இங்குள்ள இறைவன் உலா திருமேனி கையில் தராசும், அம்பிகை கையில் படியும் கொண்டு விளங்குகிறது. தற்போது பழம் பெருமைகள் மட்டுமே எஞ்சி நிற்க, கோயில் நடமாட்டமே இல்லாமல் புறாக்களின் உரையாடல்களை  மட்டும் கேட்ட வண்ணம் அமர்ந்திருக்கின்றார் இறைவன்.
பக்தர்கள்  வருகை  அறவே இல்லை ..
இறைவன்-கைலாசநாதர் 
இறைவி- காமாட்சி 


எங்கே  உள்ளது ?

திருவாரூர் மாவட்டம் , நன்னிலம்  வட்டம்......பூந்தோட்டம்  செல்லும்  சாலையில்  உள்ளது  ஆண்டார்பந்தி .....பிரதான  சாலையிலிருந்து இடது புரம் ஒரு  கிலோ  மீட்டர் 
பயணிக்க  வேண்டும் ...

அருகே உள்ள ஒரு  வீட்டில்  கோவில்  சாவி  உள்ளது .....தரிசனம் செய்ய  உதவுவார்கள் ..


மலைக்க  வைக்கும் மலையம்பாக்கம் 

அன்பர்களே  மாங்காட்டிற்கு வெகு அருகில் இருக்கும் இடம் மலையம்பாக்கம் 
மாங்காடு --குன்றத்தூர்  சாலையில் உள்ளது சிக்கராயபுரம் 
இங்கிருந்து வலது கை பக்கம் திரும்பி பயணித்தால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மலையம்பாக்கம் ...
ஜல்லிக்காக மலையை  குடைந்து குடைந்து பாதை மிக குறுகலாக  உள்ளதால் கவனத்துடன்  செல்வது  அவசியம்.

இங்கு பலகாலம் பூசைகள் இன்றி வெட்ட வெளியில் வீற்றிருந்த  பெருமானை அன்பர்கள், சிவநேய செல்வர்கள்  பொதுமக்கள்  உதவியுடன் அழகானதொரு திருகோயில் அமைத்து, தற்போது பிரதோஷம் உட்பட அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது ...
பெருமான் மிக அழகிய கம்பீரமான தோற்றம் உடையவர் ....பருத்த திருமேனி ...அன்பர்கள்  வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிக்க வேண்டும் ..அத்தனை அழகு பிரான் ... படத்தில் நீங்கள் காண்பது  சிவராத்திரி  வழிபாடு ....