Thursday, March 24, 2016

சின்னாபின்னமாகிபோன  ஓடாச்சேரி திருகோயில் 

அன்பர்களே  ஒரு கிராமத்தின்  செழிப்பை  அங்கு  உள்ள திருகோயிலின்  நிலைமையை  வைத்து  சொல்லிவிடலாம் .....

திருகோயில்கள்  இல்லாத ஊர்  சுடுகாட்டிற்கு சமானம்...
எனவே தான் இதை  நன்கு  உணர்ந்த  முன்னோர்களால்  பல  திருகோயில்கள் நிர்மாணிக்கப்பட்டது ....

அவற்றிற்கு  ஏராளமான சொத்துக்கள் , பராமரிப்பிற்கென ஒதுக்கப்பட்டது ...

ஆனால்  நமது  மதியீனம் ,பேராசை மற்றும் பொறுப்பின்மையால்  நாம்  அவற்றை  இழந்து வருகிறோம் ....
அன்பர்களே ........திருவாரூர்  மாவட்டம் அதிகமான  திருகோயில்களை கொண்ட  பெருமை  உடையது .....அங்கு  பிறந்தாலே முக்தி  கிட்டும் ....
அதன்  அருகே உள்ள   ஓடாச்சேரி கிராமத்தின் திருகோயிலின்  நிலை தான்  இது .....
பல்லாண்டுகளாக  இறைவனின்  வாசம்  இந்த  கொட்டகையில்தான்.....
இறைவன்  பெயர் வேதபுரீஸ்வரர் , இறைவி அகிலாண்டேஸ்வரி 
மற்றும்  பரிவார மூர்த்திகள் அனைவரும்  இந்த  கொட்டகையிலேயே  அருள்பாலித்து வருகின்றனர் ... அருகிலேயே  குருக்கள்  அகம்  உள்ளது ...
இறைவனுக்கும் , இறைவிக்கும்  திருகோயில்  நிறுவ  அஸ்திவாரம்  போடப்பட்டுள்ளது ...ஆனால்  அதன்  பிறகு  முன்னேற்றமில்லை ....

இத்திருகோயிலின்  நிலை  முன்னரே 2004 லில் குமுதம்  பக்தி  இதழில்  வந்துள்ளது ...
ஆண்டுகள்  பல கடந்தும் அஸ்திவாரத்துடனேயே  கோயில்  நிறுத்தப்பட்டிருப்பது  மிகுந்த  வேதனை  அளிப்பதாக  உள்ளது ....

அவன் அருளாலே தான் அவன்  திருகோயில்  எழும்ப வேண்டும் ......
சிவாய  நம ......

தொடர்புக்கு :  சண்முகம்  குருக்கள் .N
ஓடாச்சேரி , சூரனூர் அஞ்சல் திருவாரூர்  மாவட்டம் 

செல்: 9865360547

1 comment:

  1. Odachery (திருவாரூர்) sivan koil:

    அ/மி. அகிலாண்டேஸ்வரி ஸமேத வேதபுரீஸ்வரா் கோவில்..

    சிறிது நாட்களுக்கு முன் இந்த பழந்திருக்கோயில் பற்றி போஸ்ட் பண்ணியிருந்தீர்கள்..

    2018 - July 01 - ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடு ஆகி உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்...

    முடிந்தவர்கள் அன்று கோவிலுக்கு சென்று அகிலாண்டேஸ்வரி ஸமேத வேதபுரீஸ்வரா் அருள் பெற வேண்டுகிறேன்

    ReplyDelete