Monday, March 28, 2016

குறும்பலா நாதரின் அருள் பெற வாருங்கள்!!!!!


➨நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருக்க வேண்டாம். மிகுந்த பொருட் செலவு இல்லை.
➨முக்கியமாக *ஜருகண்டி * இல்லவே இல்லை.
➨விஸ்ராந்தியாக இறைவனை எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யும் வசதி உள்ளது.
➨திரு குற்றாலம் சென்று வழிபட இயலாதவர்கள், இங்கு நமக்காக எழுந்தருளியுள்ள குழல்வாய்மொழியம்மை
உடனாய குறும்பலா நாதரை வழிபடலாம்.
➨மிக அருகில், மேல்மணம்மேடு என்னும் இடத்தில் (பூந்தமல்லி --- திருவள்ளூர் ரோடு) கோவில் கொண்டுள்ளார்
இவர்.

பயன் படுத்திக்கொள்ளுங்கள் அன்பர்களே!!! குறும்பலா நாதரின் அருள் பெற வாருங்கள்!!!!!



Sunday, March 27, 2016

பலன்  தரும்  பரிகார தலம் -குரங்கணில் முட்டம் 

சிவ பக்தனான வாலி (குரங்கு) வழிபட்டதால் வாலீஸ்வரர் என்பது இறைவன் திருநாமம்...
அணில் மற்றும் எமன் காக்கை (முட்டம்) வடிவில்  வழிபட்டு சாப விமோசனம்  பெற்றதாக  தல வரலாறு சொல்கிறது ...
எனவே குரங்கணில் முட்டம் என வழங்கலாயிற்று..

தீர்த்தம் :காக்கைமடு தீர்த்தம் ....

காஞ்சிபுரம் --வந்தவாசி  சாலையில்  தூசி அடுத்து இரண்டு கிலோ மீட்டரில் இத்திருகோயில் உள்ளது ...பேருந்து வசதி குறைவு ..
எனவே ஆட்டோவில் செல்வது நலம் ...

தேவார  பாடல் பெற்ற தலம் ..இறைவி இறையார் வளையம்மை...
சித்திரை  மாதத்தில் ஆதவன் குறிப்பிட்ட  நாட்களில்  இறைவனை  வழிபடுகிறான் .....

இங்கு வந்து  வழிபட , கல்வி கேள்விகளில்  ஞானம் பெறலாம் ....
முக்தி ஸ்தலம் .....இறைவிக்கு வளையல் வாங்கி  கொடுத்து  நேர்த்திகடன் செலுத்துகின்றனர் ...அவ்வாறு செய்தால்  சுக பிரசவம் ஆகும் ...மழலை பேரு கிட்டும் ...

அடியார்கள்  அவசியம்  வணங்க  வேண்டிய திருகோயில் ....


பரிதாப  நிலையில்  பாலையூர்  திருகோயில் ......

அன்பர்களே!!! வழிபாடு நடைபெறாத , பூசைகள் நித்யானுஷ்டங்கள் அறவே  நின்று  போன  திருகோயில்கள் சிலவற்றை   என்னால் முடிந்த அளவிற்கு உங்கள்  கவனத்திற்கு கொண்டு வருவதே என்னுடைய  நோக்கம் ....

உங்கள்  பார்வைக்கு  வரும் இத்தகைய  திருகோயில்களுக்கு விளக்கேற்ற சிறிதளவவேனும்  எண்ணெய் வங்கி  தந்து, உதவுங்கள் ....
இந்த கைங்கர்யம் உங்கள் குடும்பத்தை கவசம் போல் பாதுகாக்கும் .

அப்படிப்பட்ட,  காலத்தின் கோலத்தால் நலிவடைந்த   ஒரு கோயில் தான்  பாலையூர் ....எங்குள்ளது?
குடந்தை -காரைக்கால் சாலையில் S.புதூர்  தாண்டியதும், வளையும் பிரதான சாலையிலேயே நீங்கள் இத்திருக்கோயிலை பார்த்திருக்கலாம் ..
மிஞ்சியிருப்பது  வெறும் இடிபடுகளே ....அம்மன் சந்நிதி இடிபாடுகளில் சிக்கியுள்ளது ...ஆக்கிரமிப்பும் உள்ளது .....
இறைவனை மட்டும் ஒரு அஸ்பெஸ்டாஸ் கூரையில் தற்போது வைத்துள்ளார்கள் ..

வழிபாடுகள்  நடைபெறுகிறதா ? என்பது தெரியவில்லை !அது அந்த இறைவனுக்கு தான் வெளிச்சம் .....



Saturday, March 26, 2016

எமை ஆளும்  ஈசன் --அரசவனங்காட்டில் 

கைலாசநாதர்  என்னும்  பெயர்  தாங்கி அருள்கிறான் ......
மிக பழமையான திருகோயில் .......புராதமானதும் கூட ..
எனவே  திருப்பணி  செய்யும் கட்டாயத்தில்  உள்ளது ...
முதலில்  சீர் செய்ய  வேண்டியது எதிரே  உள்ள  திருக்குளத்தை தான் ...
மிக பெரிய  குளம் புதர் மண்டி  இன்று  சிறிய  குட்டை போல் காட்சியளிக்கிறது .
சென்ற  சிவராத்திரி அன்று  தீபாராதனை  ஒளியில்  கைலாசநாதர் ஒளிரும்  காட்சி ..

எங்கே  உள்ளது ?

குடந்தை ---திருவாரூர்  பாதையில் பிரதான சாலையில் இத்திருகோயில் அமைந்திருக்கிறது.குடவாசல்  வட்டம் ...பிரசித்தி  பெற்ற  என்கண்  அருகாமையில் உள்ளது .....சிறிதும் பெரிதுமாக  அருகில்  பல  திருகோயில்கள் உள்ளன ....




Thursday, March 24, 2016

நகரேஷு காஞ்சி 

பங்குனி உத்திர திருநாள் அன்று பெருமான் ஏகாம்பரேஸ்வரர்......அன்னை காமாக்ஷியுடன் அருள்பாலித்த அற்புத காட்சி உங்கள் பார்வைக்கு:
அன்பர்களே இத்தனை கம்பீரமான தங்க ரிஷப வாகன சேவை காண்பது அரிது ...வேறெங்கும் காண கிடைக்காதது ...
தவிர ,இது போன்று அன்னை காமாக்ஷியின் பின்னல் ஜடை அலங்காரம் வேறெங்குமே காண முடியாது .....
கண்டு களியுங்கள் .....
போட்டோவின்  மீது கிளிக்  செய்து பாருங்கள் ......அகன்ற  காட்சிக்கு 







சின்னாபின்னமாகிபோன  ஓடாச்சேரி திருகோயில் 

அன்பர்களே  ஒரு கிராமத்தின்  செழிப்பை  அங்கு  உள்ள திருகோயிலின்  நிலைமையை  வைத்து  சொல்லிவிடலாம் .....

திருகோயில்கள்  இல்லாத ஊர்  சுடுகாட்டிற்கு சமானம்...
எனவே தான் இதை  நன்கு  உணர்ந்த  முன்னோர்களால்  பல  திருகோயில்கள் நிர்மாணிக்கப்பட்டது ....

அவற்றிற்கு  ஏராளமான சொத்துக்கள் , பராமரிப்பிற்கென ஒதுக்கப்பட்டது ...

ஆனால்  நமது  மதியீனம் ,பேராசை மற்றும் பொறுப்பின்மையால்  நாம்  அவற்றை  இழந்து வருகிறோம் ....
அன்பர்களே ........திருவாரூர்  மாவட்டம் அதிகமான  திருகோயில்களை கொண்ட  பெருமை  உடையது .....அங்கு  பிறந்தாலே முக்தி  கிட்டும் ....
அதன்  அருகே உள்ள   ஓடாச்சேரி கிராமத்தின் திருகோயிலின்  நிலை தான்  இது .....
பல்லாண்டுகளாக  இறைவனின்  வாசம்  இந்த  கொட்டகையில்தான்.....
இறைவன்  பெயர் வேதபுரீஸ்வரர் , இறைவி அகிலாண்டேஸ்வரி 
மற்றும்  பரிவார மூர்த்திகள் அனைவரும்  இந்த  கொட்டகையிலேயே  அருள்பாலித்து வருகின்றனர் ... அருகிலேயே  குருக்கள்  அகம்  உள்ளது ...
இறைவனுக்கும் , இறைவிக்கும்  திருகோயில்  நிறுவ  அஸ்திவாரம்  போடப்பட்டுள்ளது ...ஆனால்  அதன்  பிறகு  முன்னேற்றமில்லை ....

இத்திருகோயிலின்  நிலை  முன்னரே 2004 லில் குமுதம்  பக்தி  இதழில்  வந்துள்ளது ...
ஆண்டுகள்  பல கடந்தும் அஸ்திவாரத்துடனேயே  கோயில்  நிறுத்தப்பட்டிருப்பது  மிகுந்த  வேதனை  அளிப்பதாக  உள்ளது ....

அவன் அருளாலே தான் அவன்  திருகோயில்  எழும்ப வேண்டும் ......
சிவாய  நம ......

தொடர்புக்கு :  சண்முகம்  குருக்கள் .N
ஓடாச்சேரி , சூரனூர் அஞ்சல் திருவாரூர்  மாவட்டம் 

செல்: 9865360547

Wednesday, March 23, 2016

அழிவின்  கோர  பிடியில்  அன்னுகுடி  ஆலயம் .......

அன்பர்களே ...
மிகச்சிறிய  கிராமத்தில்  கூட  எவ்வாளவு  அற்புதமான  ஆலயங்கள் நமது  முன்னோர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது ....

நாம் தான் அவற்றின் அருமை பெருமைகள் தெரியாமல், தரிசிக்க  கூட  நேரமில்லாமல்   காலத்தை  வீணே  கடத்திகொண்டிருக்கிறோம் .....

அன்னுகுடி  தஞ்சை -குடந்தை  மார்க்கத்தில்  பாபநாசம்  வட்டத்தில் உள்ள 
ஒரு சிற்றூர் .

ஜெகன்னாத பரமேஸ்வரர் --இறைவன்  திருப்பெயர் ...திருமாலின் பெயரை தாங்கிய  இத்தகைய  பெயர்  மிக அரிது ......இறைவி  அபிராமி .....
இறைவன்  மேற்கு  நோக்கியும்  இறைவி  கிழக்கு  நோக்கியும் உள்ள தலங்கள் 
வெகு குறைவு ...அபூர்வம் .......
அதில் அன்னுகுடியும்  ஒன்று..ஜெகன்னாத பரமேஸ்வரர் --இறைவன்  திருப்பெயர் ...திருமாலின் பெயரை தாங்கிய  இத்தகைய  பெயர்  மிக அரிது ......இறைவி  அபிராமி .....
இறைவன்  மேற்கு  நோக்கியும்  இறைவி  கிழக்கு  நோக்கியும் உள்ள தலங்கள் 
வெகு குறைவு ...அபூர்வம் .....இத்தகைய  திருகோயில்கள் மிகசிறந்த பரிகார தலங்கள்  ஆகும் ...

கையில்  வெண்ணையை  வைத்துகொண்டு  நெய்க்கு  அலைவது  போல் ,
நமது  பிரச்சினைகளுக்காக எங்கெங்கோ  அலைகிறோம் ....
அன்பர்களே ,  மிகுந்த  ஆக்கிரமிப்பின்  பிடியில்  உள்ள திருகோயில் 
பிரதோஷ தினத்தன்று  நான்  சென்றபோது  பகலவனும்  தன்  பொற்கிரணங்களால்  இறைவனை  வழிபட்டார் ....

நீங்கள்  வழிபடுவது  எப்போது ? காலம் கடந்து விடும் .......முன்னரே சென்ற  
ஸ்ரீ  ஜெகன்னாத பரமேஸ்வரரின் அருளுக்கு பாத்திரமாகுங்கள்....
அவர் திருகோயிலை  சீர் செய்ய  உதவுங்கள் ..... 
(பகலவன்  வழிபடும்  திருக்காட்சி)



Sunday, March 20, 2016


அகிலம்  போற்றும்  ஆத்தூர்  திருகோயில்கள் 


ஆத்தூர் வடபாதி ஆதிசக்தி உடனுறை ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில்"..செங்கல்பட்டு அருகில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் பாலாற்றின் கரையில் அமைந்து உள்ளது.

இத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, சோழர்கள் காலத்தில் சீரும் சிறப்புடனும் விளங்கியுள்ளது. ஆதிலிங்கேஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ள ஈசன் "உடல்நோய் தீர்ப்பார்' என்பது ஐதீகம்.

மேலும் காதல் தம்பதிகள் தங்கள் மனம் போல் மணவாழ்க்கை அமைய ஆத்தூர் வடபாதி சிவாலயம் வந்து பங்குனி உத்திர நன்னாளில் ஈசன் அம்பாள் திருக்கல்யாணம் கண்டால்,மணவாழ்க்கை நலமாய் வளமாய் அமையும்.

இத்தலம் அருகிலேயே ஆத்தூர் அறம்வளர்த்த நாயகி உடனுறை முக்தீஸ்வரர் திருக்கோயில்,சீட்டனாம்சேரி காலீஸ்வரர் திருக்கோயில் ,ஒரக்காட்பேட்டை திரிபுரசுந்தரி உடனுறை குணம் தந்த நாதர் திருக்கோயில்கள்  அமைந்து உள்ளன.

ஆலயதொடர்புக்கு:9445128054.


Saturday, March 19, 2016

அஷ்ட  திக்குகள் --அஷ்ட  லிங்கங்கள் 

திருவேற்காடு தேவார  பாடல் பெற்ற  தொண்டை மண்டல தலமாகும் ....இங்குள்ள வேதபுரீஸ்வர்  திருகோயிலை  சுற்றிலும்  அஷ்ட திக்  பாலகர்கள்  எட்டு லிங்கங்களை  நிறுவி  வழிபட்டுள்ளனர் ...அவை இன்றும்  உள்ளன .
அவற்றை ஒரே நாளில்  வணங்கினால்  நன்மைகள்  பல உண்டு ....

இந்திரன்  வழிபட்ட  இந்திரசேனா பதீஸ்வரர்  திருகோயில்  அவற்றில்  ஒன்று ...திருவேற்காடு  அருகில் வள்ளிகொல்லைமேடு  என்னும் இடத்தில்  உள்ளது ..
சிறிய  கோவில்தான்  என்றாலும்  இறைவன் சிறப்பான பலன்களை  அருளும் வல்லமை  பெற்றவர் .....
கண்டு  வணங்குங்கள் ......இறைவன்  அருள்  உங்களுக்கு  பூரணமாக  உண்டு ..


களப்பாகரம்--வடமட்டம் --குடந்தை

களப்பாகரம்  கைலாசநாதர்  திருகோயில் , குடந்தை-காரைக்கால்  செல்லும் வழியில் வடமட்டம் வட்டம் ,புகழ் பெற்ற  திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம் அருகில்  உள்ள மிக பழமை வாய்ந்த  திருகோயில் ...
தற்போது  திருப்பணி  செய்யப்பட்டு குடமுழுக்கு  கண்டுள்ளது ....

தலவரலாறு  என்று  பெரிதாக  அறியப்படவில்லை ...
எனினும்  கருவறையில்  இறைவன் ஜோதிர்மயமாக காட்சியளிக்கிறார் 
பார்க்க  பார்க்க  இன்பம்  மேலிடுகிறது ..

அன்னை  மிகவும் வித்யாசமான கோலத்தில் , களைப்பாரிய விதமாக  ஒரு காலை  மடித்து ஒருகரத்தை தரையின் மீது  ஊன்றிய  கோலம்  மிக அற்புதமானது ...
வேறெங்கும்  காண கிடைக்காதது ....இங்கும்  அம்பாளுக்கு  கொலுசுகள் அணிவிக்கப்பட்டுள்ளன ...

எனவே தான்  இவ்வூர் களைப்பறிய கரம் ...மருவி  களப்பாகரம் என வழங்குகிறது ..

..




Thursday, March 17, 2016

திருகோயிலா? வௌவால்களின்  சரணாலயமா ?

அன்பர்களே!!!  எப்படி சொல்வது ? என்ன சொல்வது ? என்றே புரியவில்லை .....

குடந்தை ---நன்னிலம் ---குடந்தை நன்னிலம்  வழி நாகை செல்லும் பேருந்துகளில்  செல்லும் போது , செல்லும்  வாய்ப்பு உள்ளவர்கள் பார்த்திருக்கலாம் .....கவனிக்காமலும்  சென்றிருக்கலாம் .....
இந்த  பாழடைந்த  சிவாலயத்தை ....

இந்த சாலையில்  கூஹுர் மேல்நிலை பள்ளி அருகே  இத்திருகோயில் உள்ளது .....

இப்போது  விழுமோ ? எப்போது  விழுமோ ? எனும் நிலையில் சுற்று சுவர் ..எப்போதும்  மூடிய  கதவு ....மரத்தின் வேர்கள் ஊடுருவி சுவர்  எப்போது  வேண்டுமானாலும்  இடிந்து  விழலாம் .....
வௌவால்கள்  மட்டுமே  நிரந்தர பக்தர்கள் .....மற்ற விஷ ஜந்துக்களும் அவ்வப்போது வந்த செல்வது உண்டு .......

குப்பை  கூளங்கள்...செடி கொடிகள்  மண்டி கிடக்கிறது .....
உழவார  பணி மன்றத்தினர்  கண்ணிலும்  படவில்லை இத்திருகோயில் ...

மூடிய  கதவு  இடுக்கு  வழியே  தான் புகைப்படம் எடுத்தோம் ...
இறைவன்  அழகான  திருமேனி .....இந்த  மாகாமகத்திற்காவது இத்திருக்கோயில்  சீரமைக்கப்படும்  என எண்ணியிருந்தேன் ....
யார் கண்ணிலும்  படவில்லை ......மிக வருத்தமாக உள்ளது ....

அன்பர்களே  உங்கள்  கவனத்திற்கு கொண்டு வந்து விட்டேன் ....
இனி நீங்கள் தான் ........



ஆந்தகுடி  என்கின்ற ஆனந்தகுடி --மயிலாடுதுறை 

இங்கு  பல்லவர்  காலம்  முதல்  சோழர்கள்  காலம்  வரை  நன்கு  பராமரிக்கப்பட்டு வந்த  இந்த சிவாலயம்  இன்று  அழிவின்  பிடியில்  சிக்கியுள்ளது ....பெருமானும்  நந்தியும் , அம்பாள்  மட்டுமே உள்ளனர்.
ஒருகாலத்தில்  தேரோடும்  வீதியும் , திருக்குளமும் , மதில் சுவர்களுமாக  விளங்கிய  இந்த திருகோயில், இன்று  கூரையில்  வைத்து  பராமரிக்கும்  நிலையில்  உள்ளது ....

இத்திருகோயில்  இறைவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த  விக்கிரம சோழன் , தனக்கு இன்னல்  ஏற்படும்போதெல்லாம் இந்த இறைவனை வணங்கி , அவற்றை  போக்கி கொண்டுள்ளான்...தன தந்தையின் மனநோய் பீடித்திருந்தபோது , இந்த இறைவனுக்கு  அபிஷேகம்  செய்து நோயிலிருந்து 
மீட்டான் ......
இப்பெருமானுக்கு அபிஷேகம்  செய்த  விபூதியை உடலில்  பூசி வர  
உடல் நோய்  உள்ளத்து  நோய் எதுவாக இருந்தாலும்  நீங்கும் ....
இது  இன்றளவும்  கண்டு  வரும்  உண்மை ...

இந்த ஆலயத்தை  சீரமைக்க  சிவாலய  சேவா சங்கம் , மற்றும்  கிராம வாசிகள் முயற்சி செய்து வருகின்றனர் ...

மூலவர்   ஆனந்தபுரீஸ்வரர்  நன்கு இறுகிய  கரும்பச்சை நிறத்தினை உடையவர்.. சூரிய  ஒளி  படும்  விதத்தில்  கோயில்  அமைந்திருக்கிறார்கள் ...
இங்குள்ள குளத்தில்  மூழ்கி , இறைவனை  48 தொடர்ந்து  வழிபட ,திருமண தடை , வேலையின்மை , மழலை  பாக்கியம் இன்மை நீங்கும் ....

இன்னும் பல  நற்காரியங்கள் ஈடேறும் .......
சுற்றிலும்  பல  திருகோயில்களும் , திரு அன்னியூர் ,நீடூர் போன்ற  தேவார  தலங்களும்  அமைந்துள்ளன. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த  இந்த  திருகோயில் முழுமை  பெற  தங்கள்  உதவியும்  தேவை .....

முகவரி  மற்றும்  தொடர்பு  எண் தந்துள்ளேன் ......விஜயம்  செய்யுங்கள் ...
திருப்பணிக்கு  உதவுங்கள் ......

முகவரி :
சிவாலயா  சேவா சங்கம் ,
ஆனந்த குடி  பாண்டுர்  அஞ்சல் ....
மயிலாடுதுறை  வட்டம் 
நாகை  மாவட்டம் 609203

எம் .பிச்சை பிள்ளை
96555 92303



Tuesday, March 15, 2016

திருமறைசேரி  என்கின்ற  மாரச்சேரி --மணலி  திருத்துறைபூண்டி 
அன்பர்களே....,
ஒரு  காலத்தில்  வேத விற்பன்னர்கள் ,பண்டிதர்கள் நிறைந்த ஊராக  இருந்திருக்கக்கூடும்..மறை  என்றால்  வேதம்  என்று பொருள். 
இங்கு  பன்னெடுங்காலமாக கோயில்  கொண்டுள்ளார்  வேதத்தின்  விழுப்பொருளான  இறைவன் ..திருப்பெயர் நாகநாதர் ....

ஒருகாலத்தில் மிகப்பெரிய  திருகோயிலாக  விளங்கியிருக்கவேண்டும் ...
இன்றோ  சில  இடிபாடுகளே  எஞ்சியுள்ளது ...

இத்தனை  சிதிலங்களுக்கிடையேயும் இறைவன்  சாந்நித்தியம்  சிறிதளவும்  குன்றாமல் பேரழகோடு காண்போர் வியக்கும்  வண்ணம் 
கருவறையில்  வீற்றிருக்கிறார்...

இறைவி சுந்தர  நாயகியோ   அற்புத  அழகோடு  சுமார்  ஐந்தடி  உயரத்தில் கம்பீரமாக  கொலுவிருந்து நம்மை  கொள்ளை கொள்கிறாள் ...
இத்திருகோயிலை  கட்டிய  பேரரசர்கள்  காலத்தில்  எப்படியெல்லாம்  இருந்திருப்பார் ? எத்தனை  விழாக்கள்  கண்டிருப்பார் ? இன்று ......?

அன்பர்களே  இத்திருகோயில்  குடந்தை  ஜோதிமலை இறைபணி  மன்றத்தினரின்  பேருதவியோடு  பாலாலயம்  செய்யப்பட வுள்ளது ..

திருப்பணி  ஆரம்பிக்கப்பட உள்ளது ...இத்திருகோயில்  தன்  பழைய  பொலிவை  பெற  அடியார்  பெருமக்களாகிய  உங்கள்  அனைவரின்  ஒத்துழைப்பும் பங்களிப்பும் தேவை ...
பரமனின்  திருப்பணிக்கு  அனபர்களே ........ஒரு செங்கல்லை  வழங்கினாலே உங்கள்  பல தலைமுறையினர் வாழ்வு  வளம் பெரும் ...
என்பதில்  சந்தேகம்  இல்லை ..

எங்கிருக்கிறது ?.....
இத்தலம்  திருத்துறைபூண்டி --திருவாரூர்  மார்கத்தில் மணலி  என்ற  பேருந்து  நிறுத்தத்திலிருந்து  சுமார்  ஓன்றரை  கிலோ மீட்டர்  தூரத்தில்  உள்ளது ...
தொடர்புக்கு : திரு  வேதையன் 
அலைபேசி  எண் : 904 746 7639 , 7708240152






Monday, March 14, 2016

மாமியார்  மருமகள்  ஒற்றுமைக்கு ஒரு தலம் 

அன்பர்களே,  திருமண தடை, மழலை பாக்கியம் , தொழில் அபிவிருத்தி, ஆயுள் விருத்தி, சகோதரர்  ஓற்றுமை என்று  பலப்பல பரிகாரதலங்களை 
நாம்  அறிந்திருப்போம் ....கண்டிருப்போம் ....

ஆனால்  இன்று  நமது  இல்லங்களில் , ஏறக்குறைய  எல்லா வீடுகளிலும் 
எழும்  மிக முக்கியமான  பிரச்சினை  மாமியார் -மருமகள் ஒற்றுமை  குறைபாடு ...

இதனால்  பலரின்  வாழ்கையே  கேள்விக்குறியாகிவிடும் ....
இதற்கு எதாவது பரிகார தலம்  உள்ளதா?  உண்டு .....
சரி  எங்குள்ளது?  

விழுப்புரம்  மாவட்டம்  செஞ்சி  அருகில்  பெருவள்ளூர் என்ற  கிராமத்தில்
எழுந்தருளி  அருள்பாலிக்கும் கோகிலாம்பாள்  சமேத கோடீஸ்வரர்  திருகோயில் தான்  அந்த பரிகார தலம் ....

அன்பர்களே.... பாதிக்கப்பட்ட (?)  ஆண்களே  இந்த வாய்ப்பை  தவற விடாதீர்கள் ... சமீபத்தில்  இத்திருகோயிலில்  நிகழ்த்த  அற்புத காட்சி .....


ஆண்பனையை பெண் பனையாக மாற்றி 

அருள்பாலித்த திருத்தலம்.


 
இறையன்பர்களே, 

இத்திருத்தலம், தொண்டை மண்டலத்தில் வேதத்தை 
அரங்கேற்றி ஆண்பனையை பெண் பனையாக மாற்றி அருள்பாலித்த திருத்தலம். திருவோத்தூர்(எ) செய்யார் ஆகும் .

இங்கிருந்து ஏழ கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருநல்லூர் இங்குள்ள இறைவன், கல்யாணசுந்தரேஸ்வரர், அம்பாள்,செளந்தரவல்லி ,சுமார், 2000,ஆண்டு முந்தைய திருத்தலம் என்றும் மொகலாயர் படையெடுப்பின் போது சிதலம் அடைந்து புதர் மூண்டி இருந்தது,இத்தலம் பழமையாது மட்டும் இல்லை சுந்தரரும்,சமபந்தரும் பாடிய தலமகும் .சில ஆண்டுகளுக்கு முன் உழவார பணிதொண்டர்களால்,பூஜை தொடங்கிவைத்தார்கள், கடந்த 7 :9 :2014 ஆண்டு திருப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது, தற்போது பணி பொருள் பற்ற குறையினால் பணி தடைபட்டு உள்ளது. ஆகவே அன்பர்களே  தங்களால்  இயன்ற  பொருள் உதவி செய்து  திருப்பணியில்  பங்கேற்குமாறு கேட்டுகொள்கிறேன் .

 இந்தியன் வங்கி, கல்யாணசுந்தரேஸ்வரர் டிரஸ்ட் கணக்கு,எண் 6329907252-ifs கோட் 000V004. இறைப்பணிக்கு உதவிடுங்கள்,கல்யாணசுந்தரர் டிரஸ்ட் என் பெயரில் கோடு இட்ட காசோலையாகவோ (அ)டி,டி யாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும், sதிருஞான சம்பந்தம்.பிளாட் எண் 68,சுபஸ்ரி நகர் விரிவு :2,முகலிவாக்கம் சென்னை, 125


Saturday, March 12, 2016

வையத்தில் ஓர் அரிய தலம் ---வைகல் 

தேவார பாடல்  பெற்ற  274 தலங்களில் காண்பதற்கரிய ஒரு தலம் வைகல் ...
மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிற்கும் பெயர் பெற்றது ....

எனினும்  அனைத்து தலத்திற்கும்  இல்லாத சிறப்பு ஒன்று இத்தலத்திற்கு  உண்டு.

அது  முக்கண் வடிவில் முத்தான மூன்று திருகோயில்கள் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது , அதுவும் முக்கண் அமைப்பிலேயே ....

பிரதானமாக நெற்றி கண்ணாக விளங்குவது வைகல் வைகல்நாதர்  திருகோயில் ....தேவார பாடல் பெற்றது ...

இத்திருகோயிலின் இடது கண்ணாக இடதுபுறம்  விளங்குவது வைகல் பிரம்மபுரீஸ்வரர் திருகோயில் ....

வலப்புறம் வலதுகண்ணாக  காசி விஸ்வநாதர் திருகோயில் விளங்குகிறது ...

இம்மூன்று  திருகோயில்களையும் ஒருங்கே வணங்க வேண்டும் .....
ஆனால்  அன்பர்களே ...பக்தர்கள்  வருகை  மிகவும் குறைவு ....
அதுவும்  கால்நடைகளை  பாதுகாக்கும்  காசி விஸ்வநாதர் திருகோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது ...
இத்திருகோயிலுக்கு  பெருமளவில்  அன்பர்கள்  வருகை தந்து வைகல் நாதரின் , பிரம்ம புரீஸ்வரரின் ,விஸ்வநாதரின் அருளுக்கு  பாத்திரமாக வேண்டும் ...
இதவே  என் விருப்பம் ...
இத்திருக்கோயில்களின் மெய் காவலர்  அருகிலேயே உள்ளார்.


வானளாவிய  கோபுரம் இல்லை கோட்டை கொடிமரம் இல்லை ...
நீண்டு நெடிதுயர்ந்த  மதில்கள் இல்லை .....இல்லை ....

இருந்தாலும்  திரளான மக்கள் சாரி சாரியாய்  வந்து  இவரை வணங்கி  செல்கின்றனர் ...

இங்கு உறையும் ஈசன்  அருள் பெற்று திருப்புகின்றனர்....
இப்படி ஓர்  திருகோயிலா?  
இறைவன்  ஆத்தீஸ்வரரை  பார்த்த மாத்திரத்தில், ஆனந்ததில் மனம்  திளைக்கிறது ....
பரவசம்  நிரம்பி  கண்கள்  நீரை  வார்க்கும்  .....அத்தனை  அதிர்வலைகள் ஈசன் சந்நிதியில் .....கூரை  மட்டுமே வேயபட்டிருக்கிறது ...வன சரகத்திற்கு  உட்பட்ட பகுதி  என்பதால் ....

எங்கே  இருக்கிறது  திருகோயில் ?
செங்கல்பட்டு  மாவட்டம் , மதுராந்தகம்  வட்டம் மேலவலம் பேட்டை  என்னும் கிராமம் ...இங்கிருந்து  சுமார்  அரை  கிலோமீட்டர்  காட்டுக்குள்  பயணிக்க வேண்டும் ....

சரியான முறையான பாதை வசதி கிடையாது ...
அற்புதமான  இயற்கை எழில் கொஞ்சும்  இடத்தில்  கொலுவீற்றிருக்கிறார்
சுமார்  ஐந்தடி  உயரத்தில்  கம்பீரமாக  ஆத்தீஸ்வரர் ..
இறைவி அறங்காத்த நாயகி ...

அன்பர்களே  வாழ்வில்  ஒருமுறையேனும்  நம் புற கண்ணால்  ஆத்தீச்வரரை  காண  வேண்டும் ....கைகளால்  ஒருமுறையேனும்  அவரை  தொழவேண்டும் ....நம்  பிறவி பயன்  அது ...






Friday, March 11, 2016

பழமலைநாதர்-----மலையம்பாக்கம்
பழவினைகள் நீக்கும் பழமலைநாதர் தரிசனம் 
மாங்காடு தலத்திற்கு  அறிமுகம் தேவையில்லை....இங்கு ஒரு காலத்தில்  108 சிவஸ்தலங்கள்  இருந்தன....

ஆனால் இன்று  இங்கு பல திருமேனிகள் தனித்து விடப்பட்டு  பராமரிப்பின்றி இருக்கும்  நிலை துர்அதிர்ஷ்டவசமாக.....

அவற்றில் ஒன்று  மலையம்பாக்கம்   பழமலைநாதர் திருகோயில் ....பலகாலமாக  திருகோயில்  இன்றி  வழிபாடின்றி  இருந்த  திருமேனியை,ஆவுடையார்  சரி செய்யப்பட்டு தற்போது அழகான திருகோயில்  அமைக்கப்பட்டுள்ளது மெய்யன்பர்களால் ...மிகவும் 
மெச்சத்தக்க திருப்பணி ...
இங்கு சிவராத்திரி  மிக விசேஷமாக  கொண்டாடப்பட்டது ...
இறைவன்  பழமலைநாதர் காண்பதற்கரிய , மிகப்பெரிய  திருமேனி ..
மலையம்பாக்கம் .  மாங்காடு வழியாக  குன்றத்தூர்  செல்லும் வழியில் சிக்கராயபுரம் என்னும் இடத்தில  இறங்கி அரை கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் ...

அன்பர்களே  அவசியம் தரிசியுங்கள் ...தரிசித்த மாத்திரத்தில் நம் துன்பங்கள் அனைத்தும் பகலவனை  கண்ட பனி போல்  மறைவதை  காணலாம் ...



Thursday, March 10, 2016

எழுத்தறிவித்தவன்  இன்னம்பூர்  ஈசன் ........

இன்னன்  என்றால் சூரியன் ....பகலவன் வழிபட்டு பேரு பெற்றமையால்  இப்பெயர்...

குடந்தை --சுவாமிமலை பாதையில் 6 கிலோமீட்டரில்  திருப்புறம்புயம் செல்லும் வழியில்  உள்ளது ....

சுற்றிலும்  தேவார தலங்கள்  உள்ளன...

சிறந்த  பேச்சாற்றல்  பெற , கல்வி கேள்விகளில்  முதன்மை  பெற , வாக்கு வன்மை  கிடைக்க , திக்கு வாய்  குறை நீங்க  இங்கே  வழிபாடு செய்யலாம் ...

பள்ளியில் சேர்க்கும் முன்  குழந்தைகளை  இங்கே அழைத்து வந்து  நாக்கில்  நெல்லினால்  எழுதுகிறார்கள்..
இவ்வாறு செய்ததால்  நல்ல புத்தி கூர்மை , பேச்சாற்றல்  வளரும்  என நம்புகிறார்கள் ....

அம்பாள்  சுகந்த குந்தளாம்பிகை ....
தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இது 45 ஆவது  தலம் ...





Wednesday, March 9, 2016

கண்  பார்வை குறைபாடுகள்  நீங்க ...இங்கே வாங்க 




அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்)-609 117 கொண்டத்தூர் போஸ்ட், தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.
கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்த பலன் உண்டு என்பது நம்பிக்கை.
இங்குள்ள அம்மன் சன்னதிக்கு மேல், 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 12 ராசிக்காரர்களும் தங்கள் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டிருந்தால், அம்மன் முருகுவளர்க்கோதை நாயகிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம். திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபடவேண்டிய சிறந்த தலம்.



Tuesday, March 8, 2016

சிவராத்திரி  தரிசனம்  1 .

மூன்று  மூர்த்திகளின்  வடிவாக எழுந்த முக்கண்ணன் ....
நால்  வேத விழுப்பொருளானவன்....
பஞ்ச பூதங்களால்உருவான பிரபஞ்சத்தின்  நாயகன் ...
இயற்கையில்  விரும்பி உறைபவன் ...உளக்கிடக்கை  யாரால் அரிய இயலும்...?

அதனால் தான் தான் விரும்பி உறைய இந்த இடத்தை தேர்ந்தெடுத்தான் போலும்...

செடி கொடிகள் நிறைந்து கிடக்கும் அடர்ந்த கானகம் ...
அங்கே பிரம்மாண்டமாய் விழுதுகளை பரப்பி நிற்கும் மிக பெரிய ஆலமரம் ..
எளிதில் நெருங்க இயலாத அமைதியான இந்த சூழ்நிலையில் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று  திருமேனிகளாய் ,ஏகாந்தமாக  எழுந்தருளியுள்ளான்  ஈசன் ......அருள்  மணம்  பரப்பிகொண்டிருக்கிறான்....சரி..
எங்கே? எப்படி செல்வது..?  யாரை தொடர்பு கொள்வது ? இது தானே உங்கள் கேள்வி?   

திருவாரூர் திருத்துறைபூண்டி  சாலையில் திருத்துறைபூண்டி அருகே உள்ளது  மணலி  பேருந்து நிறுத்தம் .....இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் மாற்று பாதையில் சென்று சற்றே அடர்ந்த  ஒரு காட்டின் நடுவே இம்மூன்று பெருமான்களையும் உளமார வணங்கலாம் .....வித்யாசமான ஒரு இறை அனுபவம் உங்களுக்கு கண்டிப்பாக கிட்டும் ....
அபிஷேக  சாமான்களை  வாங்கி சென்றால்  நீங்களே உங்கள் கையால் பெருமானுக்கு திருமஞ்சனம் செய்விக்கலாம் ...

அருகில் உள்ள அடியார் , அன்பு சகோதரர் திரு வேதையன்..அவர்களை முன்னரே தொடர்பு கொண்டு  செல்வது நல்லது . அவரின் அலைபேசி எண்கள்
+91 7708240152,  904 7467639.....


சொல்ல மறந்துவிட்டேனே ....?
தேவார  பாடல்  பெற்ற திருகாரவாசல், கச்சனம் ....திருகொள்ளிகாடு, திருக்குவளை  தலங்கள் அருகில் உள்ளன .....மறந்து விடாதீர்கள் ...









Monday, March 7, 2016

கிடைத்தற்கரிய தேப்பெருமாநல்லூர் திருகோயில் தரிசனம் 


இப்பூவுலகம் முற்றிலும் அழிந்த  காலத்திலும்  இத்தலம் அழியாமல்  இருந்ததாக புராணம்  கூறுகிறது ...

இத்தலத்தை  தரிசிப்பதால்  மறுபிறவி  கிடையாது என்றும் தல வரலாறு விவரிக்கிறது ...

இப்பூவுலகில்  உள்ள அனைத்து சிவாலயங்களையும் , இத்தலத்தை  தரிசிப்பதால் ஒருங்கே கிட்டும் ....

அகத்தியர்  மற்றும்  தேவார மூவர்களாலும் வணங்கப்பட்ட தலம் ...

குடந்தை அருகில் புகழ் பெற்ற ராகு ஸ்தலம் ,திருநாகேஸ்வரம் அடுத்து உள்ளது ....

இந்திராதி  தேவர்களும்  வழிபட்ட இத்தலத்தை ஒரு கிரகண நாள் அன்று நாகம் ஒன்று  வழிபட்டதை நாடே அறியும் .....

அன்பர்களே ......நீங்கள்  வணங்க வேண்டாமா?  வாருங்கள் ....விஸ்வநாதரின்  அருள் பெற்று செல்லுங்கள்.....




Saturday, March 5, 2016

நினைத்தாலும் ....கண்டாலும் ........தொழுதாலும் 

.......சிவபதம் .....


அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி அஞ்சல், விருதுநகர் மாவட்டம்.

திருச்சுழியல் நினைத்தாலும், பேசினாலும், கண்டாலும் சிவபதம் தரவல்ல தலம். அறிந்தோ, அறியாமலோ, மறந்தோ, மறவாமலோ செய்த பாவம் திருச்சுழியலை அடைந்தால் புயல் காற்றில் அகப்பட்ட பஞ்சு போல் ஆகிவிடும்.

இத்தலத்தில் செய்யும் தானதருமங்கள், வேள்விகள் ஆகியவற்றின் பயன் ஏனைய தலங்களிற் செய்யும் பயனைவிட மிகுதியாகும்.

சிவராத்திரியன்று திருச்சுழியில் உள்ள சிவனை ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் அனைத்துத் தலங்களிலும் உறையும் இறைவனை ஆயிரம் வில்வ இலைகளால் அர்ச்சித்த பயனைத் தரும்.
 




சிவராத்திரி நன்னாளில்  சிறப்பான  திருகோயில் தரிசனம் ...

அன்பர்களே ...பழமையான  திருத்தலங்களின்  பராமரிப்புக்கு  உதவுங்கள் ...
பெறற்கரிய  திருகோயில்களை  பாழடைந்து விட்டது  என ஒதுக்காதீர்கள் ...ஒருவகையில்  அதற்கு  நாமே  காரணம்....

குத்தாலம்  சுந்தரேஸ்வர பெருமான் திருகோயில்...
குத்தாலம் அடுத்த ஷேத்திரபாலபுரம் என்னும் இடத்தில்  உள்ளது ..
சுமார்  ஆயிரம்  ஆண்டுகள்  பழமையானதாக தெரிகிறது ...
தல வரலாறு என்று எதுவும்  அறிந்து கொள்ள இயலவில்லை .....

வரும்  சிவராத்திரி அன்று பழமையான  இத்திருகோயில் தரிசனம் பெறுவோம் ...

இத்திருகோயில்  குடந்தை  மயிலாடுதுறை  பிரதான சாலையின் ஓரத்திலேயே  அமைந்துள்ளது ...
மிக  சிதிலமடைந்த இத்திருகோயிலின் திருப்பணி தற்போது  முழு வீச்சில் நடைபெற்று வருகிறது ....
கருவறையில்  பெருமான்  அற்புத  அழகோடு கம்பீரமாக  வீற்றிருக்கிறார்..

கருவறையின்  பின்புறம் மேலும்  நான்கு  லிங்கத்திருமேனிகளுக்கு  தனி தனியே  சன்னதி அமைந்துள்ளது ....
அவைகள்  முறையே , குபேரன் , வாயு, யமன் மற்றும் நிருதி வழிபட்ட லிங்க திருமேனிகளாகும்..


Friday, March 4, 2016

ஈரோடு  மகிமாலீஸ்வரர் 



இராவணன்  மூதாதையர்களான  மகி , மாலி  என்னும் அசுரர்கள்  சிறந்த சிவ பக்தர்களாக விளங்கினர் ...
அவர்களால்  பிரதிஷ்டை  செய்யப்பட்டு  வணங்கப்பட்டவர் மகிமாலீஸ்வரர் ..

ஈரோடு மாவட்டத்தின்  மிக பழமையான  திருகோயில்களில்  மிக முக்கியமானது இத்திருகோயில் ....

இறைவன்  கருவறையில்  சுமார் ஐந்து  அடி உயரத்தில்  அற்புத சேவை சாதிக்கிறார்...



Thursday, March 3, 2016

சித்தேரிகரை  சிவன் ---திருநின்றவூர் 


ஆனந்தீஸ்வரரின் அற்புத தோற்றம், பாக்கம் அருகில் சித்தேரிகரை கிராமம்.பெரியபாளையம் வழி , திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்.

இவ்வூர்  திருநின்றவூர் வழியாக  பெரியபாளையம்  செல்லும் வழியில் இருக்கிறது 
பாக்கம் என்னும்  ஊரிலிருந்து  வசதியாக  சென்று வர  ஷேர் ஆட்டோ உள்ளது ...

வெட்ட வெளியில் வீற்றிருந்த பெருமானை கிராம மக்கள் உதவியுடன் சீர் செய்து 
திருகோயில்  அமைதுள்ளார்கள் ....

இப்பெருமானை  உளமார  வழிபட  வாழ்வில்  அனைத்து  நலன்களையும் உடனே பெறலாம் ..

தவற விடாதீர்கள்  அன்பர்களே......



Tuesday, March 1, 2016

சென்னிவாய்க்கால்  சிவபெருமான் 

திருச்சி , லால்குடி  வட்டம் ,லால்குடியிலிருந்து  மூன்று  கிலோமீட்டரில்  உள்ளது  சென்னிவாய்க்கால் கிராமம் ...

இங்குள்ள  மிக புராதனமான  சுந்தரேஸ்வர பெருமான்  திருகோயில் 
திருப்பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .....

அழகிய  முழுதும் மரகத  கற்களால் ஆன பச்சை நிற திருமேனி.
காண்பவர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ....

தீபாராதனை செய்யும்போது , அந்த ஒளி  பெருமான் திருமேனியில் பட்டு 
ஒளிரும் காட்சி  அற்புதமானது .....காண கிடைக்காதது ......
இதோ உங்களுக்காக அந்த திருமேனி ...கண்டு களியுங்கள் .....சென்று  வணங்குங்கள் .....