Tuesday, June 7, 2016

திருகோகர்ணம் --புதுகோட்டை 

காணாமல் போனதை மீட்டு தரும் அன்னை அரைகாசு அம்மன் (ப்ரஹதாம்பாள் )
பல்லவர் காலத்திய குடைவரை கோயில் ...விநாயக பெருமானும் ,குரு தஷிணா மூர்த்தியும் ஒரே கருவறையில் அருள்பாலிக்கும் திருத்தலம் .
மூலவர் கோகர்ணேஸ்வரர் கருவறையில் அற்புத மிக பெரிய திருமேனி கொண்டு சேவை சாதிக்கிறார் .

காமதேனு தன காதுகளில் அபிஷேக நீரை கொண்டு வந்து இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வித்த பெருமையை உடைய ஒரே தலம் ...அதனால் கோகர்ணம் என்று வழங்கப்படுகிறது ...கோ என்றால் பசு காமதேனுவை குறிக்கும் ..கர்ணம் என்றால் காது ...

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு நாணயம் தயாரிக்கும் உரிமை வழங்கப்பட்டது.   அவர் தனது இஷ்ட தெய்வமான ப்ரஹதாம்பாள் உருவம் பதித்த அரையணா விற்கு சமமான காசுகளை வெளியிட்டார் .

அதனாலேயே அந்த அம்மனுக்கு அரைகாசு அம்மன் என்று பெயர் ஏற்பட்டது ...

அந்த செப்பு காசை வீட்டில் வைத்து வேண்டிகொண்டால் களவு போன பொருள்கள் திரும்பவும் கிடைக்கும் .
நினைத்து நடக்கும் ...செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது ...
பலரது வாழ்க்கையில் அது உண்மையாக நிறைவேயும் உள்ளது ..

இங்கு நவக்ரகங்கள் சன்னதி கிடையாது ...சூரிய சந்திரர்கள் மட்டுமே அருள்பாலிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment