Thursday, June 23, 2016

ஐந்து மூலவர்கள் கொண்ட ஒரே திருக்கோயில் ...

அதுவும் தேவார பாடல் பெற்ற தலம் ...பஞ்ச பாண்டவர்களும் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட தலம் ......

அதிக பட்ஷமாக 2 மூலவர்கள் திருவொற்றியூர், அச்சிறுபாக்கம் போன்ற திருத்தலங்களில் உள்ளனர் ....

ஆனால் 5 மூலவர்கள் ஒரே திருக்கோயிலில் இருப்பது  உலகிலேயே இங்கு தான் ...

அதுவே இலுப்பைப்பட்டு ....மணல் மேடு என்றும் வழங்கப்படுகிறது ..இலுப்பை மரங்கள் அடர்ந்த காடு என்பதால் இப்பெயர்..

தேவார பாடல் பெற்ற தலங்களில் இது 30 ஆவது தலம் இது ..நீலகண்டேஸ்வரர் பிரதான மூலவர் ..இவர் தருமரால் வழிபட பெற்றவர்...இவரை சுற்றி ஏனைய நால்வரும் வணங்கிய பெருமான்கள் லிங்கதிருமேனியராய் தனி தனி சந்நிதிகளில் அருள்புரிகின்றனர்.

அவற்றுள் பீமன் வழிபட்ட இறைவனும் , நகுலன் வழிபட்ட இறைவனும் அளவில் மிகப்பெரிய திருமேனிகள் .
பீமன் வழிபட்ட திருமேனி 16 பட்டைகளை உடைய சோடச லிங்கத்திருமேனியும் கூட .....

பல்வேறு சிறப்புகளை பெற்ற இத்தலம் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது ....
மிகுந்த பொலிவுடன் திகழும் இத்திருக்கோயிலில் புள்ளினங்கள் ,புறாக்கள் மிகுந்த சுதந்திரத்துடன் உலா வருகின்றன பக்தர் வருகை இன்மையால் ....

அவைகளுக்கு தெரிந்துள்ளது ஈசன் அருள் எவ்வளவு பலமானது , அத்தியாவசியமானது என்று ...
மனிதர்களாகிய நாம் எப்போது உணர்ந்துகொள்ளப்போகிறோம் ?

சரி இருப்பிடம் சொல்கிறேன்...

திருப்பனந்தாள் ----சீர்காழி சாலையில் உள்ளது மணல்மேடு ...இங்கிருந்து சரியாக ஒரு கிலோ மீட்டரில் உள்ளது இலுப்பைப்பட்டு  தலம் ...

சீர்காழி , வைத்தீஸ்வரன் கோயில் போன்ற இடங்களில் இருந்தும் வரலாம் ...பந்தநல்லூர் சாலை என்று கேட்டு வர வேண்டும்.  மணல் மேட்டில் இறங்கி கொள்ள வேண்டும் ...
பஸ் வசதி நிறைய உண்டு.



இவை முறையே நகுலன், பீமன் அர்ஜுனன் வழிபட்ட லிங்கங்கள் 





No comments:

Post a Comment