Friday, June 10, 2016

இனியில்லை ...சனி பகவான் தொல்லை .....

சனி பகவான் என்றாலே அனைவரது அடிமனதிலும் ஒரு பயம் ஏற்படுகிறது ...அதற்கு காரணம் இல்லாமல் இல்லை ..
ஏனெனில் ஆயுள்காரகன் , மாங்கல்ய காரகன் ,சாதனை காரகன் என்னும் மாபெரும் பொறுப்புகளை சனி பகவான் ஏற்றிருப்பதே ஆகும் .....

ஒருவரது ஆயுளுக்கும் சரி, மாங்கல்ய பலத்திற்கும் சரி , செய்தொழிலில் மந்த நிலை நீங்கி ஒருவர் சாதனை புரிவதற்கும் சரி சனி பகவான் ஒருவரது ஜாதகத்தில் பலம் பொருந்தி ,நற் க்ரஹங்களுடன் சேர்ந்திருப்பது அவசியம் ....

குறிப்பாக ஒருவரை கோடீஸ்வரனாக மாற்றுவதற்கும் , தெரு கோடியில் விட்டு விடுவதற்கும் ..
சனி பவானின் நிலை நம் ஜாதகத்தில் எவ்விதம் சஞ்சரிக்கிறார் என்பதை பொறுத்தே அமையும் .....

அதனால் தான் நாம் திருநள்ளாறு சென்று சனிபகவானை வணங்குகிறோம் ....ஆனால் அன்பர்களே
திருநள்ளாறுக்கும் , திருகொள்ளிகாட்டிற்கும் இடையே சனீச்வர வாசல் என்றொரு அற்புத திருத்தலம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அங்கே உத்தர வாகினியாக காவேரி நதியின் கிளை நதியான , கங்கைக்கு ஒப்பான வெண்ணாறு நதி வடக்கு தெற்காக பாய்கிறது ...திருநள்ளாறு செல்லும் முன் சனி பகவான் இங்கு ஒரு இரவு தங்கி இங்கு உறையும் சங்கர நாராயண பெருமானையும் , நாராயணி அம்மையையும் வணங்கி பேரு பெற்றுள்ளார்..
மங்கள சனீச்வரராக, நேர் எதிரே அஷ்டாங்க யோக பைரவருடன் (காசியை போன்று) இங்கு விளங்குகிறார் ..

இவரை வணங்குவதால் நம் சோதனைகள் யாவும் சாதனைகளாக மாறும் .....ஆயுள் பலம் அதிகரிக்கும் ..மாங்கல்ய பலம் கிட்டும் ...இன்னும் கிடைக்ககூடிய நன்மைகள் ஏராளம்....ஏராளம்..
சற்றே தள்ளி இருப்பதாலும் , பிரசித்தி பெற்ற தலமாக இல்லாததாலும் இத்தகைய அரிய தலங்களை நாம் இழந்து விட கூடாது ....

எனவே தான் திரும்ப திரும்ப சொல்கிறேன் ....எங்கே உள்ளது என்பதையும் கூறி விடுகிறேன் ....

திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகை செல்லும் பேருந்துகள் காரையூர் எனப்படும் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன .....கங்களாஞ்சேரியிலிருந்து ஆட்டோ வசதி உண்டு ..இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் தான் . காரையூர் நிறுத்தத்தில் இறங்கினால் அரை கிலோமீட்டரில் திருகோயில் ..

காரி என்பது சனிபகவானின் பெயர்களுள் ஒன்று ...எனவே தான் காரியூர் என்பது தற்போது காரையூர் எனப்படுகிறது ..கோயில் இருக்குமிடம் ஈஸ்வர வாசல் என தற்போது வழங்கப்படுகிறது ...

அர்ச்சகர் கோயில் அருகிலேயே உள்ளார்..அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ....
தற்போது மெல்ல பிரபலமடைந்து வருகிறது இத்திருகோயில் ..சனி தோறும் ஹோமங்கள் நடைபெறுகிறது
அன்று கோயில் முழுதும் திறந்திருக்கும் ..

A.R. தியாகராஜா குருக்கள்
ஈஸ்வர வாசல் .கரையூர் அஞ்சல் ,கங்களாஞ்சேரி வழி
 திருவாரூர் மாவட்டம் ..
 போன் :04366-272555, 9790676748

திருகோயிலுக்கு செல்பவர்கள் இங்கே  ஓடும் விருத்த கங்கையில் நீராடி(தற்போது நீர் இல்லை ) ,ஈஸ்வரனையும் , அன்னையையும் வணங்கி பின் சனி பகவானுக்கு அர்ச்சனைகள் செய்து , வழிபடலாம் ..
வசதி இருந்தால் ஹோமங்கள் செய்து பிரார்த்தனை செய்யலாம் ...எதுவாக இருந்தாலும் அர்ச்சகரை தொடர்பு கொண்டு பின் செல்லுங்கள் ..
அருகில் திரு விற்குடி , திருசெங்காட்டங்குடி , திருப்பள்ளிமுக்கூடல் போன்ற ஏராளமான தலங்கள் உள்ளன .. அவற்றையும் தரிசித்து வாருங்கள்.




1 comment: