Monday, June 27, 2016

கூழமந்தல் கிராமம், திருவண்ணாமலை 

மாவட்டம், 

செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. முதலாம் ராஜேந்திரனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று, விக்கிரமசோழன். அவனது ஆட்சி காலத்தில் இவ்வூர், விக்கிரமசோழபுரமாக விளங்கியது. ராஜேந்திர சோழன் கங்கை வரை படை எடுத்துச் சென்றபோது இங்கு தங்கி இருந்ததாகவும் இப்பகுதி, இம்மன்னனுக்குப் பிடித்துப்போனதால் இந்த மண்டலத்தில் திருஒற்றியூர், வானவன் மாதேவிபதி, காவாந்தண்டலம், உக்கல் உள்ளிட்ட இடங்களில் கலைக்கோயில்கள் எழுப்பப்பட்டன. பின்னர் இவை அனைத்தும் திருக்கோயில்களாக மாற்றம் பெற்றன.

 இவற்றுள் சிகரமாக விளங்கிய கூழமந்தலில் பல அற்புதமான கோயில்கள் கட்டப்பட்டன. இவைகளில் மேற்கில் அமைந்த பேசும் பெருமாள் திருக்கோயிலும் ஈசான்யத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழீச்சுரமும் அடங்கும். வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூரின் ஈசான்ய மூலையில் அமைக்கப்பட்டு வருகிறது நட்சத்திர திருக்கோயில்! விநாயகரை பிரதானமாகக் கொண்டு அஸ்வினி நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சங்கள் பிரதிஷ்டை செய்யும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.


No comments:

Post a Comment