நடந்து சென்று திருச்சேவை செய்த நமிநந்தி அடிகள் ......
திருநெய்ப்பேர் ......திருவாரூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்திருத்தலத்திலிருந்து திருவாரூருக்கு தினசரி நடந்து சென்று அடியார் நமி நந்தி அடிகள் விளக்கேற்றி சேவை செய்துள்ளார் ....
அவர் இங்கு வாழ்ந்த இல்லம் இன்று கோவிலாகவே மாற்றப்பட்டுள்ளது ....
இத்தனை வாகன வசதிகள் இருந்தே நாம் தினசரி திருக்கோயிலுக்கு செல்ல சிரம படுகிறோம் .....
அன்னாரது ஆன்ம பலம் தான் என்னே ?
திருநெய்ப்பேர் .தேவார பெயர் ஏமப்பேரூர் ...இங்குள்ள வான்மீக நாதர் கோவில் நுழை வாசலிலேயே , நமிநந்தி அடிகள் .உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது .....
அன்னை உமா மகேஸ்வரி ....
நமிநந்தி அடிகள் முக்தி அடைந்த தலமும் இதுவே....அடிகள் கோயில் என்று இவர் பெயராலேயே இத்திருக்கோயில் அழைக்கப்படுகிறது ....
திருவாரூர் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் அடிகள் கோயில் பேருந்து நிறுத்தம். கோயில் எதிரிலேயே இறங்கி கொள்ளலாம் .....
பெருமான் ஒளி பொருந்திய திருமேனியரை காட்சி தரும் அழகு ....இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்'
அடியார் பெருமக்கள் அவசியம் கண்டு தரிசிக்க வேண்டிய திருக்கோயில் இது .....
அர்ச்சகர் இல்லம் அருகிலேயே உள்ளது .....
No comments:
Post a Comment