Wednesday, June 29, 2016

5 முறை நிறம் மாறும் ஈக்காடு பஞ்சவர்ணேஸ்வரர் 

அன்பர்களே....

திருவள்ளூர் மாவட்டம் பல அரிய  புராதனமான திருக்கோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது .....
அவற்றுள் பல பக்தர்கள் வருகையின்மையால் வெளிச்சத்திற்கு வராமலே உள்ளன......

அவற்றில் ஒன்று திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் செல்லும் வழியில் உள்ள ஈக்காடு என்னும் கிராமம் ...
இங்குள்ள சிவன் கோவிலில் மூலவரான பெருமான் இன்னதென்று அறிய முடியாத வகையில் தாமரை தண்டு போன்ற பாண வடிவம் கொண்டு  அருள் பாலிக்கிறார்.  

தஞ்சை மாவட்டம் நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் போன்று ,  இவர் நிறம் மாறுவது பேரதிசயம் .....

சிதிலமடைந்து பூசை புனஸ்காரங்கள் நின்று போயிருந்த இத்திருக்கோயிலை, கிராம மக்கள் அரும்பாடு பட்டு புனரமைத்து , தற்போது 2 காலங்கள் நித்திய பூசைகள் நடைபெற்று வருகிறது ....

இங்கு உறையும் பெருமான் தன்னை நாடுவோர்களுக்கு , இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் , அனைத்து நலன்களையும் அள்ளி  தர தயாராக உள்ளார் ....பெற்று வர நீங்கள் தயாரா? 

இங்குள்ள குழந்தை ஈஸ்வரர் சந்நிதியில் வேண்டுபர்களுக்கு மழலை பாக்கியம் சித்திக்கும் ..

எங்கே உள்ளது ?

திருவள்ளூர் ---redhills  சாலையில் ஈக்காடு பேருந்து நிறத்திலிருந்து கூப்பிடு தூரம் தான் ...அல்லது தாமரைப்பக்கம்  கூட்டு ரோட்டிலிருந்து  திருவள்ளூர் செல்லும் சாலையிலும் செல்லலாம் ,,,,







Tuesday, June 28, 2016

கனவில் வந்து கட்டளை இட்டார் மீனாக்ஷி ....சிரமேற்கொண்டர் மாமுனி பரஞ்சோதியார் ..

மீனாக்ஷி அம்மனின் கட்டளை படி திருவிளையாடல் புராணம் எழுதிய பரந்ஜோதிமுனிவர்...  3363 செய்யுளை கொண்டது  இப்புராணம் ...

மதுரையை பற்றிய நான்மாடக்கூடல் புராணம் இயற்றியவரும் இவரே.... 
பிறந்த ஊர் வேதாரண்யம்..

தமிழுக்கும் , ஆன்மீக வளர்ச்சிக்கும் எண்ணற்ற  சேவை  புரிந்த இந்த தவ சித்தர் பற்றி எவ்வளவு பேர் அறிவீர்கள்? இவர் தன் இறுதி காலத்தை திருவாரூர் அடுத்த  சேகல் மடப்புரம் என்னும் கிராமத்தில் கழித்தார்....
இங்கு மடம் ஏற்படுத்தி தொண்டு செய்து வந்தார்.

 திருத்துறைபூண்டிto நாகப்பட்டினம் ECR சாலை பாமணி லிருந்து உம்பளச்சேரி செல்லும் சாலையில் சேகல் மடப்புரம் அமைந்துள்ளது ....

இங்கு அவருக்கு ஜீவ சமாதியும் அமைந்துள்ளது .....அருகிலேயே இவர் வணங்கி வழிபட்ட பரஞ்சோதீஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது ....

சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் வல கண்ணாகவும் இம்மகான் இயற்றிய திருவிளையாடல் புராணம் இட கண்ணாகவும் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம் நெற்றி கண்ணாகவும் சான்றோர் பெருமக்களால்  இன்றளவும் மதிக்கப்படுகிறது ....

இத்துணை பெருமை வாய்ந்த இம்மகானை ,பரஞ்சோதி மாமுனிவர் மீது எல்லையற்ற அன்பு கொண்ட
மடப்புரம் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் மு .பரமசிவம் (9698943397) வியாழன் தோறும் அப்பெருமானுக்கு சிறப்பு பூசைகள் செய்து , அங்குள்ள மக்களை ஒன்றிணைத்து தேவார திருவாசக முற்றோதல் போன்ற பணிகளை செய்து வருகிறார் ...அன்ன  தானமும் உண்டு .....
இத்திருக்கோயிலும் , பரஞ்சோதி முனிவரின் ஜீவ சமாதியும் திருப்பணி செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளது ..அன்பர்களே....

திருப்பணி வேலைகள் நடைபெறுகிறது தங்களை இணைத்து கொள்ள விருப்பம் உள்ள அன்பர்கள் தங்களை இணைத்துகொண்டு முனிவரின் அருள் பெற வேண்டுகிறோம்
சிவபீடம் 9443390589
கோவில் திருப்பணி குழு செல் நம்பர்கள்
99428 70490
96986 52198
96989 43397



முயற்சிக்க சித்தமாயிருக்கும் மக்கள் ....முட்டுக்கட்டை போடும் அரசு ....

அன்பர்களே...

திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி திருக்கோயிலை காப்பாற்ற ஒன்று கூடுங்கள்...

பதற வேண்டாம்....இது  தஞ்சை மாவட்டம் , மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள மகாலிங்க ஸ்வாமி திருக்கோயில் அல்ல. நாகை மாவட்டம் ., திருக்குவளை வட்டம், திருத்துறைப்பூண்டி-நாகை சாலையில் உள்ள  மகாலிங்க ஸ்வாமி திருக்கோயில் ....

3 ஆம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட காலை களஞ்சியம் ,,,,.இன்று சின்னாபின்னமாகி அதன் மொத்த அழகையும் தொலைத்து நிற்கிறது ......பார்ப்பவர் நெஞ்சை பதற வைக்கிறது ...

அன்பர்களே......இத்திருக்கோயிலின் சிறப்புகள் பார்ப்பவர்கள் விழிகளை விரிய வைக்கும் ...
எந்த திருக்கோயிலிலும் அதனை கட்டிய மாமன்னன் சிலை மூலவருக்கு நேரெதிரே கை கூப்பிய நிலையில் காண முடியாது 

இங்கு காணலாம் ...

எந்த திருக்கோயிலிலும் அமர்ந்த நிலையில் உள்ள துர்கை அம்மனை காண முடியாது ..

இங்கு காணலாம் ...

எந்த திருக்கோயிலிலும் சனி பகவான் இரு காக்கை வாகனங்களுடன் காண முடியாது 
இங்கு காணலாம் ...

எந்த திருக்கோயிலிலும் இல்லாத வகையில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்டமான சண்டிகேஸ்வரர் திருமேனி இங்கே உள்ளது ....இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்..

இதன் சிறப்புகளை .....
இவ்வாறு ஏராளமான அற்புதங்களை , சூட்சும ரகசியங்களை உள்ளடக்கிய இத்திருக்கோயிலை கட்டிய குலோத்துங்க சோழன் கண்டால் கதறி அழுது விடுவார் ....
அம்பாள் கேட்டதை வாரி வழங்கும் வள்ளல் ...ஆகையால் இதை  தெரிந்து வைத்துள்ள திரைப்பட துறையினரும் அவ்வப்போது இங்கு வந்து வணங்கி செல்கின்றனராம் ...

அன்பர்களே   இனியாவது காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு இத்திருக்கோயிலுக்கு முறையாக வழங்க வேண்டிய அனுமதியையும் , பொருள் உதவியையும் வழங்கி , மக்களின் உணர்வுகளோடு ஒன்றிய இத்திருக்கோயிலை புனரமைத்து தமிழக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் ......

இது அரசின் தலையாய கடைமை ....

அன்பர்களே.. கிராம வாசிகள் திருப்பணி குழு அமைத்துள்ளனர்..  அதன் விபரங்கள்..
STATE  BANK  OF  INDIA 
திருத்துறைப்பூண்டி கிளை 
SBI  A / C NO : 35074643072
IFSC  CODE  NO  000936  
தொடர்புக்கு :

9486074234, 9787653065, 9626749735, 9843343317
EMAIL :
Srimahalingamswamy@gmail.com



Monday, June 27, 2016

கூழமந்தல் கிராமம், திருவண்ணாமலை 

மாவட்டம், 

செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. முதலாம் ராஜேந்திரனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று, விக்கிரமசோழன். அவனது ஆட்சி காலத்தில் இவ்வூர், விக்கிரமசோழபுரமாக விளங்கியது. ராஜேந்திர சோழன் கங்கை வரை படை எடுத்துச் சென்றபோது இங்கு தங்கி இருந்ததாகவும் இப்பகுதி, இம்மன்னனுக்குப் பிடித்துப்போனதால் இந்த மண்டலத்தில் திருஒற்றியூர், வானவன் மாதேவிபதி, காவாந்தண்டலம், உக்கல் உள்ளிட்ட இடங்களில் கலைக்கோயில்கள் எழுப்பப்பட்டன. பின்னர் இவை அனைத்தும் திருக்கோயில்களாக மாற்றம் பெற்றன.

 இவற்றுள் சிகரமாக விளங்கிய கூழமந்தலில் பல அற்புதமான கோயில்கள் கட்டப்பட்டன. இவைகளில் மேற்கில் அமைந்த பேசும் பெருமாள் திருக்கோயிலும் ஈசான்யத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழீச்சுரமும் அடங்கும். வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூரின் ஈசான்ய மூலையில் அமைக்கப்பட்டு வருகிறது நட்சத்திர திருக்கோயில்! விநாயகரை பிரதானமாகக் கொண்டு அஸ்வினி நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சங்கள் பிரதிஷ்டை செய்யும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.


Friday, June 24, 2016


வறுமையில் வாடுபவர்கள் வணங்க வேண்டிய 

திருக்கோயில் 

1974 லில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட தேவார பாடல் பெற்ற திருத்தலம் கிளியன்னவூர் ....

இன்று நாம் காண இருக்கும் திருத்தலம் இதுதான்.அகத்திய முனிவறால் உருவாக்கப்பட்டது .

சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் "கிளியன்னவூர்' என் அழைக்கப்படும் தலம். காலவ முனிவரும் வழிபட்டுள்ளார் . ஆதிசேஷன் வணங்கி நற்கதி அடைந்துள்ளான்.

வழிபடும் பக்தர்களின் கொடிய நோய்களை விரட்டி, வறுமையை போக்கும் பரிகாரதலமாக 
இத்தலம் விளங்குகிறது.


வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட அவர்கள் நோயிலிருந்து விடுபடுவர் .....
திருமண தடை , மழலை வரம் , கல்வி கேள்விகளில் முதன்மை பெறவும் இங்கு பிரார்த்திக்கலாம் 

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் உள்ளது.



Thursday, June 23, 2016

ஐந்து மூலவர்கள் கொண்ட ஒரே திருக்கோயில் ...

அதுவும் தேவார பாடல் பெற்ற தலம் ...பஞ்ச பாண்டவர்களும் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட தலம் ......

அதிக பட்ஷமாக 2 மூலவர்கள் திருவொற்றியூர், அச்சிறுபாக்கம் போன்ற திருத்தலங்களில் உள்ளனர் ....

ஆனால் 5 மூலவர்கள் ஒரே திருக்கோயிலில் இருப்பது  உலகிலேயே இங்கு தான் ...

அதுவே இலுப்பைப்பட்டு ....மணல் மேடு என்றும் வழங்கப்படுகிறது ..இலுப்பை மரங்கள் அடர்ந்த காடு என்பதால் இப்பெயர்..

தேவார பாடல் பெற்ற தலங்களில் இது 30 ஆவது தலம் இது ..நீலகண்டேஸ்வரர் பிரதான மூலவர் ..இவர் தருமரால் வழிபட பெற்றவர்...இவரை சுற்றி ஏனைய நால்வரும் வணங்கிய பெருமான்கள் லிங்கதிருமேனியராய் தனி தனி சந்நிதிகளில் அருள்புரிகின்றனர்.

அவற்றுள் பீமன் வழிபட்ட இறைவனும் , நகுலன் வழிபட்ட இறைவனும் அளவில் மிகப்பெரிய திருமேனிகள் .
பீமன் வழிபட்ட திருமேனி 16 பட்டைகளை உடைய சோடச லிங்கத்திருமேனியும் கூட .....

பல்வேறு சிறப்புகளை பெற்ற இத்தலம் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது ....
மிகுந்த பொலிவுடன் திகழும் இத்திருக்கோயிலில் புள்ளினங்கள் ,புறாக்கள் மிகுந்த சுதந்திரத்துடன் உலா வருகின்றன பக்தர் வருகை இன்மையால் ....

அவைகளுக்கு தெரிந்துள்ளது ஈசன் அருள் எவ்வளவு பலமானது , அத்தியாவசியமானது என்று ...
மனிதர்களாகிய நாம் எப்போது உணர்ந்துகொள்ளப்போகிறோம் ?

சரி இருப்பிடம் சொல்கிறேன்...

திருப்பனந்தாள் ----சீர்காழி சாலையில் உள்ளது மணல்மேடு ...இங்கிருந்து சரியாக ஒரு கிலோ மீட்டரில் உள்ளது இலுப்பைப்பட்டு  தலம் ...

சீர்காழி , வைத்தீஸ்வரன் கோயில் போன்ற இடங்களில் இருந்தும் வரலாம் ...பந்தநல்லூர் சாலை என்று கேட்டு வர வேண்டும்.  மணல் மேட்டில் இறங்கி கொள்ள வேண்டும் ...
பஸ் வசதி நிறைய உண்டு.



இவை முறையே நகுலன், பீமன் அர்ஜுனன் வழிபட்ட லிங்கங்கள் 





Wednesday, June 22, 2016

தண்டலை நீள்நெறி ----திருவாரூர் திருத்துறைப்பூண்டி 
சாலையில் உள்ள தேவார பாடல் பெற்ற தலம் ..
இறைவன் திருநாமம்  ஸ்திர புத்தீஸ்வாரர் எனப்படும் நீள்நெறியப்பர் .....தன்னை வணங்குபவர்களுக்கு நல்ல ஸ்திரமான நற்குணங்களை அருள்பவர் என்று பொருள்..

அரிவாட்ட நாயனார் செந்நெல் , மாவடு கீரை கொண்டு தினசரி நெய்வேத்தியம் செய்து வழிபட்ட தலம்
கோச்செங்கட்சோழன் நோய் தீர்த்த தலம் .
அம்மன்னன் கட்டிய மாட  கோயில்களுள் இதுவும் ஒன்று 
நூபுர கங்கை எனும் தீர்த்தம் உள்ள தலம் 
ஞானசம்பந்தர் பதிகம் பெற்ற தலம் 
உச்சி கால பூசைக்கு வர முடியாமல் போனதற்காக அரிவாட்ட நாயனார் தன் கழுத்தை தானே அறுத்து கொள்ள முயற்சித்த போது , பூமியிலிருந்து இறைவன் கை நீண்டு ,நாயனாரை தடுத் தாட்கொண்ட தலம்.

இத்தலத்தை பற்றி பாடி ,இறைவன் அருளால் தினசரி ஒரு பொற்காசு , படிக்காசு நாயனார் பெற்ற தலம் 
புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் வணங்கிய தலம் .

இன்னும் ஏராளமான பெருமைகள் இத்தலத்திற்கு உண்டு ...
இத்தலத்தை வணங்கிய முனிவர்களும் ஏராளம் ..அவர்கள் வணங்கிய திருமேனிகள் பிரகாரத்தில் உள்ளன .

விவசாயிகள் தங்கள் நிலத்தை பயிர் செய்வதற்கு முன் இங்கு வந்து பிரார்த்தனை செயகிறார்கள் ..
அவ்வாறு செய்தால் பயிர் நன்கு செழித்து வளரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது ...

குஷ்ட நோய் தீர்க்கும் தலமாகவும் இது விளங்குகிறது .....

இத்தகைய பெருமைகளை பெற்றிருந்தும் , பக்தர்கள் வருகை இன்றி திருக்கோயில் வெறிச்சோடி கிடக்கின்றது ..

நாயனாரும் அவர் மனைவியும் .....


Tuesday, June 21, 2016

நிதி சுமையால் நின்று போன அரசவனங்காடு  அரன் ஆலயம்...

அன்பர்களே  குடந்தை திருவாரூர் சாலையில் அரசவனங்காடு உள்ளது .....
ஒரு காலத்தில் அரச மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்து வந்தது ...இங்கு மிக புராதன மான பக்தர்கள் வருகை அற்ற கைலாசநாதர் திருக்கோயில் இருக்கிறது ...

இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் இடது புறம் திரும்பும் சாலையில் பயணித்தால் தீபன்குடி என்னும் சிற்றூர் வருகிறது ...இங்கு பிரம்மாண்டமான ஜைன ஆலயம் ஒன்று உள்ளது ..இதன் அருகில் பன்னெடும் காலமாக வெட்ட வெளியில் அருள்பாலித்து வந்தார் கைலாசநாதர் .....


சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவர்  இவர் என கணக்கிடப்பட்டுள்ளது .....பெருமான் திருமேனி எங்கும் உளி கொண்டு  செதுக்கியது போன்று  காணப்படுகிறது .....
தற்போது ஓலை கூரையில் வைத்து பூசிக்கப்படுகிறார் ....சுமார் 45 லட்சம் செலவில் திருக்கோயில் அமைக்கப்பட்டு விட்டது ....இன்னமும் 40 லட்ஷம் இத்திருக்கோயிலை பூர்த்தி செய்ய தேவைப்படுகிறது ....
அம்பாள் , மிகுந்த எழில் வாய்ந்த விநாயகர் ,நந்தி ,முருகன் ஆகியோரும் உள்ளனர்.
ஆச்சர்யமான உண்மை என்னவென்றால் இந்த திருப்பணி ஒரே குடும்பத்தினரால் செய்யப்பட்டு வருகிறது .

ஆனால் ஒரே ஒருவரால் இதற்கு மேல் எப்படி செலவிட முடியும் ......அன்பர்களாகிய  நம் பங்களிப்பும் தேவை  அல்லவா?

நீங்கள் இத்திருப்பணியில் பங்கு பெற விரும்பினால் கீழ் கண்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் .இவர் கோயில் அருகிலேயே உள்ளார் ...

திரு பழனி
அலைபேசி எண் :7373205099

தீபங்குடி கைலாசநாதரை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம் ....
இவரை தரிசிப்பதால் நாம் எண்ணிய யாவும் கைகூடும் ...இது அனுபவத்தில் கண்ட உண்மை ..


Saturday, June 18, 2016

செல்லூர் கைலாசநாதர் திருக்கோயில் 


செல்லூர் ...கொரடாச்சேரி வட்டம்.  குடவாசல் தாலூகா ...திருவாரூர் மாவட்டம்..
தேவார பாடல் பெற்ற தலமான திருக்கொள்ளம்பூதூர் செல்லும் வழியில் உள்ளது செல்லூர் ...
திருப்பணி செய்யப்பட்டு மிகவும் நேர்த்தியாக விளங்குகிறது ....

எங்கும் சுத்தமாக ......சுற்றிலும் தோட்டங்கள் .....மலர் செடி கொடிகள் என திருக்கோயில் அழகாக காட்சியளிக்கிறது .....
இது ஒரு தேவார வைப்பு  தலமும் கூட .

இறைவன் கைலாசநாதர் .....

அன்பர்களே ஆனால் பக்தர்கள் வருகை மிகவும் குறைவு தான் ....
தயங்காமல்  எல்லோரும் செல்லுங்கள் .....செல்லூர் ....


Thursday, June 16, 2016

நடந்து சென்று திருச்சேவை செய்த நமிநந்தி அடிகள் ......


திருநெய்ப்பேர் ......திருவாரூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்திருத்தலத்திலிருந்து  திருவாரூருக்கு தினசரி நடந்து  சென்று அடியார் நமி நந்தி அடிகள் விளக்கேற்றி சேவை செய்துள்ளார் ....

அவர் இங்கு வாழ்ந்த இல்லம் இன்று கோவிலாகவே மாற்றப்பட்டுள்ளது ....

இத்தனை வாகன வசதிகள் இருந்தே நாம் தினசரி திருக்கோயிலுக்கு செல்ல சிரம படுகிறோம் .....
அன்னாரது ஆன்ம பலம் தான் என்னே ?

திருநெய்ப்பேர் .தேவார பெயர் ஏமப்பேரூர் ...இங்குள்ள வான்மீக நாதர் கோவில் நுழை வாசலிலேயே , நமிநந்தி அடிகள் .உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது .....

அன்னை உமா மகேஸ்வரி ....
நமிநந்தி அடிகள் முக்தி அடைந்த தலமும்  இதுவே....அடிகள் கோயில் என்று இவர் பெயராலேயே இத்திருக்கோயில் அழைக்கப்படுகிறது ....

திருவாரூர் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் அடிகள் கோயில் பேருந்து நிறுத்தம். கோயில் எதிரிலேயே இறங்கி கொள்ளலாம் .....
பெருமான் ஒளி பொருந்திய திருமேனியரை காட்சி தரும் அழகு ....இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்'

அடியார் பெருமக்கள் அவசியம் கண்டு தரிசிக்க வேண்டிய திருக்கோயில் இது .....
அர்ச்சகர் இல்லம் அருகிலேயே உள்ளது .....




Wednesday, June 15, 2016

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருகோயில், இராமதண்டலம், பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம் 602021

எல்லாம் வல்ல சிவபெருமான் திருவருளால், இத்திருமேனி, சென்னையை சேர்ந்த அடியார் திரு.சிவதில்லை அவர்களால் வெளிகொணரப்பட்டு, 1.1.2014 அன்று சைவத்திரு நா. ஒளியரசு அவர்களால் திருமந்திரங்கள் ஓதி , வேள்வி வழிபாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. 

முனிவர்களாலும் தேவர்களாலும் சித்தர்கள் பலராலும் வணங்கப்பட்ட திருமேனிகள் நமக்கு கிடைக்குமாயின் அதை விட பெறற்கரிய பேரு என்ன உள்ளது ?
அப்படிப்பட்ட ஒருவர் தான் ஏகாம்பரேஸ்வரர் என பெயரிடப்பட்டு ராமதண்டலம் கிராமத்தில் அருள்புரிந்து வருகிறார்.
மிகுந்த பொருட் செலவு செய்து நீண்ட வரிசையில் நின்று தான் இறைவனை வணங்க வேண்டும் என்பது இல்லை ....இத்தகைய தலங்களை வணங்குவதாலும் இறைவன்  அருளை நாம் பெறமுடியும் ...இரட்டிப்பாக ....
ஆம்! எனவே....

அன்பர்கள் அனைவரும் இப்பெருமானை பணிந்து எல்லா வளமும் பெற்று வாழ வேண்டுகிறோம்





Tuesday, June 14, 2016

வரகுணேஸ்வரர் ஆலயத்தின் மிகப் பரிதாபமான 

காட்சி!!.
.திருச்சி மாவட்டம் ஆளுந்தூரில் உள்ளது வரகுணேஸ்வரர் திருக்கோயில். வரங்களை வாரி வழங்குவதாலேயே இத்தலத்து இறைவனுக்கு வரகுணேஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதோ?!
அளுந்தூரில் அருட்கோலம் கொண்டு, பக்தர்களுக்கு வரங்களைத் தப்பாமல் அருளும் வரகுணேஸ்வரர் ஆலயத்தின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? வறண்டு கிடக்கும் வயல்களுக்கு நடுவில், எப்போது விதத்தில் மிகப் பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது. 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை வரகுணபாண்டியன் கட்டியதால், இந்த இறைவனுக்கு வரகுணேஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
. என்ன செய்ய போகிறோம் இப்படி அழிவின் விளிம்பில் உள்ள ஆலயங்களை காக்க ??? சிந்திங்கள் அன்பர்களே.... இதற்க்கு தீர்வு தான் என்ன???


கண் நோய்கள் தீர்க்கும் கண்ணாயிரமுடையார் 

சிறுகமணி, திருச்சி


இத்திருத்தலத்தில் இயற்றப்படும் முறையான வழிபாடுகள் அனைத்தும் ஆயிரம் மடங்காக விருத்தியாகும் 

முறையற்ற காமத்தால் அறிந்தோ,அறியாமலோ தவறு செய்தவர்கள் மனம் திருந்தி,தங்கள் தவறுகளுக்குப் 

பிராயச்சித்தம் பெற உதவும் அற்புதமான திருத்தலம் இதுவே.

தற்காலத்தில் செல்போன்,
கம்ப்யூட்டர் ,தொலைகாட்சி போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் பார்வைக் 

குறைவு, நரம்புத் தளர்ச்சி, உடல் மற்றும் மன பலவீனம் போன்ற துன்பங்கள் மக்களிடையே பெருகி வருகின்றன.

இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் அளிக்க வல்லவரே சிறுகமணி ஆயிரம் கண்ணுடைய மூர்த்தி ஆவார்.



Monday, June 13, 2016


இயற்கையின் கொடை ,ஹிமாச்சல பிரதேசம் 

நாள்தோறும் இறைவனை நீராட்டும் நீர்வீழ்ச்சி....

அஞ்சனை தன் மகனான ஹனுமனை கருவுற்ற தலம் இது .


அந்த சமயம் அஞ்சனை வழிபட்ட இறைவன் இவர்...

இங்குதான் கோயில் கொண்டுள்ளார் அஞ்சனை மகாதேவர் .

இத்தலத்தை ஷோலங் பள்ளத்தாக்கிலிருந்து 20 நிமிட மலையேற்றத்தில் அடையலாம் .இங்கு வசிக்கும் ஏராளமான சாதுக்கள் நம்மை வரவேற்று , சிற்றுண்டி தந்து உபசரிக்கின்றனர்.

இயற்கையின் கொடையான இத்தலம், வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச்செல்கிறது .

மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் கீழ் இங்கே இறைவன் அருள்கிறார் . பனிபொழிவு காலங்களில் , இறைவன் மீது பனி படர்ந்து "அமர்நாத் " போல் இத்தலம் காட்சியளிக்கிறது.


சோலங் பள்ளத்தாக்கு குலு பள்ளத்தாக்கின் ஒரு பகுதி ....
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ளது .....


Sunday, June 12, 2016

பாரிவாக்கம் பெருமானுக்கு எப்போது வழி பிறக்கும்?

பாரிவாக்கம் .....சென்னை பட்டாபிராம் --பூந்தமல்லி மார்க்கத்தில் உள்ளது ....

இங்கு பிரதான சாலையின் ஓரத்தில் அமைந்திருக்கும் தொலைபேசி ஆண்டெனா பின்புறம் சாய்ந்த நிலையில் இருக்கும் அழகான பெரிய லிங்க திருமேனி இவர். 
பூசை புனஸ்காரங்கள் ஏதும் கிடையாது ....

செடி கொடிகள் மண்டி கிடக்கின்றன ...அருகிலேயே காலை கடன்களையும் முடிக்கிறார்கள் ....
இவ்வூரில் மிகப்பழமை வாய்ந்த ஒரு சிவாலயமும் , அம்மன் திருகோயிலும் உள்ளது ..
அங்கேயே இப்பெருமானையும் பிரதிஷ்டை செய்வித்து தினசரி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யலாம் .

அதற்கெல்லாம் நேரம் இல்லாமல் மனிதர்கள் ஓடி கொண்டே இருக்கிறார்கள்.பெருமானின் நிலையும் இவ்வாறே தொடர்கிறது .. 
பேசாமல் இம்மாதிரி தனித்து விடப்பட்ட பெருமான்களுக்கென ஒரு தனி நல வாரியம் அமைத்து விடலாம் . தொடர்புக்கு - 9444352848



Friday, June 10, 2016

இனியில்லை ...சனி பகவான் தொல்லை .....

சனி பகவான் என்றாலே அனைவரது அடிமனதிலும் ஒரு பயம் ஏற்படுகிறது ...அதற்கு காரணம் இல்லாமல் இல்லை ..
ஏனெனில் ஆயுள்காரகன் , மாங்கல்ய காரகன் ,சாதனை காரகன் என்னும் மாபெரும் பொறுப்புகளை சனி பகவான் ஏற்றிருப்பதே ஆகும் .....

ஒருவரது ஆயுளுக்கும் சரி, மாங்கல்ய பலத்திற்கும் சரி , செய்தொழிலில் மந்த நிலை நீங்கி ஒருவர் சாதனை புரிவதற்கும் சரி சனி பகவான் ஒருவரது ஜாதகத்தில் பலம் பொருந்தி ,நற் க்ரஹங்களுடன் சேர்ந்திருப்பது அவசியம் ....

குறிப்பாக ஒருவரை கோடீஸ்வரனாக மாற்றுவதற்கும் , தெரு கோடியில் விட்டு விடுவதற்கும் ..
சனி பவானின் நிலை நம் ஜாதகத்தில் எவ்விதம் சஞ்சரிக்கிறார் என்பதை பொறுத்தே அமையும் .....

அதனால் தான் நாம் திருநள்ளாறு சென்று சனிபகவானை வணங்குகிறோம் ....ஆனால் அன்பர்களே
திருநள்ளாறுக்கும் , திருகொள்ளிகாட்டிற்கும் இடையே சனீச்வர வாசல் என்றொரு அற்புத திருத்தலம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அங்கே உத்தர வாகினியாக காவேரி நதியின் கிளை நதியான , கங்கைக்கு ஒப்பான வெண்ணாறு நதி வடக்கு தெற்காக பாய்கிறது ...திருநள்ளாறு செல்லும் முன் சனி பகவான் இங்கு ஒரு இரவு தங்கி இங்கு உறையும் சங்கர நாராயண பெருமானையும் , நாராயணி அம்மையையும் வணங்கி பேரு பெற்றுள்ளார்..
மங்கள சனீச்வரராக, நேர் எதிரே அஷ்டாங்க யோக பைரவருடன் (காசியை போன்று) இங்கு விளங்குகிறார் ..

இவரை வணங்குவதால் நம் சோதனைகள் யாவும் சாதனைகளாக மாறும் .....ஆயுள் பலம் அதிகரிக்கும் ..மாங்கல்ய பலம் கிட்டும் ...இன்னும் கிடைக்ககூடிய நன்மைகள் ஏராளம்....ஏராளம்..
சற்றே தள்ளி இருப்பதாலும் , பிரசித்தி பெற்ற தலமாக இல்லாததாலும் இத்தகைய அரிய தலங்களை நாம் இழந்து விட கூடாது ....

எனவே தான் திரும்ப திரும்ப சொல்கிறேன் ....எங்கே உள்ளது என்பதையும் கூறி விடுகிறேன் ....

திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகை செல்லும் பேருந்துகள் காரையூர் எனப்படும் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன .....கங்களாஞ்சேரியிலிருந்து ஆட்டோ வசதி உண்டு ..இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் தான் . காரையூர் நிறுத்தத்தில் இறங்கினால் அரை கிலோமீட்டரில் திருகோயில் ..

காரி என்பது சனிபகவானின் பெயர்களுள் ஒன்று ...எனவே தான் காரியூர் என்பது தற்போது காரையூர் எனப்படுகிறது ..கோயில் இருக்குமிடம் ஈஸ்வர வாசல் என தற்போது வழங்கப்படுகிறது ...

அர்ச்சகர் கோயில் அருகிலேயே உள்ளார்..அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ....
தற்போது மெல்ல பிரபலமடைந்து வருகிறது இத்திருகோயில் ..சனி தோறும் ஹோமங்கள் நடைபெறுகிறது
அன்று கோயில் முழுதும் திறந்திருக்கும் ..

A.R. தியாகராஜா குருக்கள்
ஈஸ்வர வாசல் .கரையூர் அஞ்சல் ,கங்களாஞ்சேரி வழி
 திருவாரூர் மாவட்டம் ..
 போன் :04366-272555, 9790676748

திருகோயிலுக்கு செல்பவர்கள் இங்கே  ஓடும் விருத்த கங்கையில் நீராடி(தற்போது நீர் இல்லை ) ,ஈஸ்வரனையும் , அன்னையையும் வணங்கி பின் சனி பகவானுக்கு அர்ச்சனைகள் செய்து , வழிபடலாம் ..
வசதி இருந்தால் ஹோமங்கள் செய்து பிரார்த்தனை செய்யலாம் ...எதுவாக இருந்தாலும் அர்ச்சகரை தொடர்பு கொண்டு பின் செல்லுங்கள் ..
அருகில் திரு விற்குடி , திருசெங்காட்டங்குடி , திருப்பள்ளிமுக்கூடல் போன்ற ஏராளமான தலங்கள் உள்ளன .. அவற்றையும் தரிசித்து வாருங்கள்.




Thursday, June 9, 2016

அடியார் பெருமக்களின் சீரிய கவனத்திற்கு ....


இப்பெருமான் அமைந்திருப்பது பாக்கூர் கிராமத்தில் . ஊருக்கு வெளியில் குளக்கரையில் வெட்ட வெள்ளியில் பூமியில் பாதி புதைந்த நிலையில் தரிசனம் கொடுக்கிறார் .அகஸ்தீஸ்வரர் எம்பது திருநாமம் ..
நந்தியெம்பெருமானும் புதைந்த நிலையிலேயே உள்ளார்.
கிராம மக்களை தொடர்பு கொண்ட பொது இவர் பல நூற்றாண்டுகளாகவே இப்படி காட்சியளிப்பதாக கூறுகின்றனர்.
தற்போது சிறிய அளவில் பிரதோஷ பூசை நடைபெறுகிறது ...கிராம மக்கள் தங்கள் உழைப்பை தர சித்தமாக உள்ளனர் இத்திருகோயிலை சீரமைக்க ....
அவசர தேவையாக ஒரு மேற்கூரை தேவைப்படுகிறது ... பெருமான் வெயிலும் மழையிலும் நனைந்தபடி உள்ளார்.
ஆகவே அன்பு அடியார்பெருமக்களே அருமை ஆன்மீக நண்பர்களே உதவ, உழவாரப்பணி செய்ய விரும்புவோரும் , இறைபணி செய்ய ஆர்வமுள்ளோரும் கீழ்க்காணும் எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்...

தொடர்புக்கு திரு உதயகுமார்-8940648190, திரு பாண்டியன்-9751087258, திரு ராஜேந்திரன்-9894935094..

இக்கிராமம் செய்யூர்- மதுராந்தகம் சாலையில் 7 கி. மி. தொலைவில் உள்ளது. செய்யூரிலிருந்து ஷேர் ஆட்டோ போகிறது.

நற்றுணையாவது நமசிவாயவே !
இயற்கை எழில் கொஞ்சும் சந்நியாசி மலை ...



தன்னன் தனியாக வீற்றிருக்கும் இறைவன் ....சித்தர்கள் இன்றும் 

வழிபடும் அற்புதம்....எங்கே உள்ளது? வாருங்கள் தரிசிக்கலாம் .....


சென்னை பாண்டி இடையே சரியாக நட்ட நடுவில் அதாவது 

சென்னையிலிருந்து 76 கிலோமீட்டர்,   பாண்டியிலிருந்தும் 76 

கிலோமீட்டர் கல்பாக்கம் புதுபட்டினம் தாண்டியதும் வரும் வாயலூர் 

மதுராந்தகம் சாலையில் உள்ளது நெற்குணப்பட்டு கந்தசாமி 

கோவில், சன்யாசி மலை ...


நெற்குணப்பட்டு கந்தசாமி கோவில் – தொண்டை மண்டலத்தில் 

கடற்கரை நகரமாம் கல்பாக்கம் அருகே மலைகள் சூழ இருக்கும் எழில் 

கொஞ்சும் திருத்தலம். சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூருக்கு 

போவதற்கு முன், இத்தலத்து முருகனிடம் உத்தரவு பெற்றுச் 

சென்றாராம். ஒரு பெரிய கல்வெட்டு ஒன்று வெட்டவெளியில் 

கிடக்கிறது.இங்கு சன்யாசி மலை என்று ஒரு குன்று இருக்கிறது. இங்கு 

ஒரு லிங்கம் மலையுச்சியில் உள்ளது. பௌர்ணமிக்கு மலை வலம் 

வருதல் சிற்ப்பு. சித்த்ர்கள் வாழும் மலை.


கல்பாக்கம் – மதுராந்தகம் சாலையில் இத்தலம் உள்ளது. சுமாரான 

கிராமத்து சாலை. பேருந்து உள்ளது...

தற்போது மேற்கூரை அமைத்துள்ளார்கள்.


மக்கள் நடமாற்றம் அற்ற பகுதி என்பதால் ....கவனத்துடன் ஒரு குழுவாக சென்று வருதல் நல்லது ..


Tuesday, June 7, 2016

திருகோகர்ணம் --புதுகோட்டை 

காணாமல் போனதை மீட்டு தரும் அன்னை அரைகாசு அம்மன் (ப்ரஹதாம்பாள் )
பல்லவர் காலத்திய குடைவரை கோயில் ...விநாயக பெருமானும் ,குரு தஷிணா மூர்த்தியும் ஒரே கருவறையில் அருள்பாலிக்கும் திருத்தலம் .
மூலவர் கோகர்ணேஸ்வரர் கருவறையில் அற்புத மிக பெரிய திருமேனி கொண்டு சேவை சாதிக்கிறார் .

காமதேனு தன காதுகளில் அபிஷேக நீரை கொண்டு வந்து இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வித்த பெருமையை உடைய ஒரே தலம் ...அதனால் கோகர்ணம் என்று வழங்கப்படுகிறது ...கோ என்றால் பசு காமதேனுவை குறிக்கும் ..கர்ணம் என்றால் காது ...

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு நாணயம் தயாரிக்கும் உரிமை வழங்கப்பட்டது.   அவர் தனது இஷ்ட தெய்வமான ப்ரஹதாம்பாள் உருவம் பதித்த அரையணா விற்கு சமமான காசுகளை வெளியிட்டார் .

அதனாலேயே அந்த அம்மனுக்கு அரைகாசு அம்மன் என்று பெயர் ஏற்பட்டது ...

அந்த செப்பு காசை வீட்டில் வைத்து வேண்டிகொண்டால் களவு போன பொருள்கள் திரும்பவும் கிடைக்கும் .
நினைத்து நடக்கும் ...செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது ...
பலரது வாழ்க்கையில் அது உண்மையாக நிறைவேயும் உள்ளது ..

இங்கு நவக்ரகங்கள் சன்னதி கிடையாது ...சூரிய சந்திரர்கள் மட்டுமே அருள்பாலிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Monday, June 6, 2016

சித்தத்தை சிவன் பால் வைத்த அடியார் பெருமக்களே !!!!!

நாகை மாவட்டம் , திருத்துறைபூண்டி மற்றும்  அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான சிவலிங்க திருமேனிகள் நித்திய வழிபாடின்றி , வானமே கூரையாக ,உள்ளன .....

இறையன்பர்களால் , அங்குள்ள அடியார் பெருமக்களால் ,அப்பெருமான்களுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டும் , திருப்பணி நிறைவேற்றப்பட்டும் வருகின்றன ....மக்கள் சேவையிலும் அவர்கள் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர் ...

அத்தகைய ஒரு திருகோயில் தான் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா திருத்துறைபூண்டி உம்பளச்சேரி சாலையில் உள்ள சாக்கை கிராமத்தில் சுந்தரரால் பாடல் பெற்ற
முற்றிலும் சிதலமடைந்த சாக்கை சிவன் கோவில் ஆகும் ...

திருப்பணி வேலைகள் விரைவில் முடிந்து இறைவன் கும்பாபிஷேகம் காண, உங்கள் ஒத்துழைப்பும் ,பங்களிப்பும் தேவை .. 

கீழ்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உங்கள் ஒத்துழைப்பை நல்கலாம் ...

சிவபீடம் 9443390589
சிவ ரமேஷ் 8508876533 
சிவ சந்திரசேகரன் 9047219372
http://sivapeedam.org/என்ற வலைத்தளத்திலும் நீங்கள் இவர்களது சேவை குறித்து தெரிந்து கொள்ளலாம் 



Sunday, June 5, 2016

மெய்யன்பர்களே ......

ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் ஒரு மிக பழமை வாய்ந்த, நம் கிராமங்களில் அமைந்துள்ள ,அதிகம் அறியப்படாத திருகோயில்களுக்கு செல்வதை நானும் என் கணவரும் வழக்கமாக வைத்துள்ளோம் ...
அந்த வகையில் சென்ற பிரதோஷத்தின்  போது   நாங்கள் சென்ற திருத்தலம் குடவாசல் வட்டத்தில் ,
குடவாசல் நன்னிலம் சாலையில் அமைந்துள்ள வடவேர் என்னும் கிராமம் .....இங்கு புராதனமான இரண்டு சிவஸ்தலங்கள் உள்ளன...
1. மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருகோயில் .....
2.ஞானாம்பிகா சமேத ஞான சுந்தரேஸ்வரர் திருகோயில் ....

இந்த இரண்டு சிவஸ்தலங்களும் நேர் எதிர் எதிரே பிரதான சாலைக்கு இருபுறமும் அமைந்துள்ளது .

முதலாவது திருகோயில் செப்பனிடப்பட்டு மிக தூய்மையாக பராமரிக்கப்படுகிறது .....
இரண்டாவது மிக பழமை வாய்ந்தது .....திருப்பணி செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது ...

சுற்றிலும் சேங்காலிபுரம் , அருவிழிமங்கலம் , தடுத்தாட்கொண்டபுரம் போன்ற கிராமங்கள் உள்ளன ...
இங்கெல்லாமும் புராதனமான திருகோயில்கள் காணப்படுகின்றன ...

சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் இந்த சிற்றூரில் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டது வெறும் 3 பேர்தான் ..
அம்மன் கோயில் , ஐயனார் கோயில்களும் உள்ளன ....இங்கெல்லாம் விழாக்கள் என்றால் சில நூறு பேராவது 
கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள் ....
ஆனால் பிரதோஷ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்ய ஏன் வருவதில்லை?

என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி ......
பதில் தான் இல்லை ......

அர்ச்சகர் அலைபேசி எண் : 9150189365
சுரேஷ் குருக்கள் ...

இவர் அருகில் உள்ள அருவிழிமங்கலம் என்ற கிராமத்திலிருந்து வருகிறார்,




Saturday, June 4, 2016

 சோழபுரம்  திருகோயில்கள் .....

சென்னை குடந்தை மார்க்கத்தில் உள்ள  சோழபுரம் சோழ மாமன்னர்களால் கட்டப்பட்ட   முத்தான  3 திருகோயில்களை கொண்டது ......

↔   பைரவேஸ்வரர் திருகோயில் 

↔ கைலாசநாதர் திருகோயில் 

↔ காசி விஸ்வநாதர்  திருகோயில் 

இவற்றுள் காசி விஸ்வநாதர் மிகவும் சிதிலமடைந்து ஆகரமிப்பிற்கு உள்ளானது ....
தினசரி வழிபாடுகளும் நின்று போனது ...

சில ஆண்டுகளாக இவ்வாறு இருந்த இந்த திருகோயில் தற்போது ஆன்மீக அன்பர்களின் சீரிய முயற்சியால் 
தற்போது திருப்பணி ஆரம்பிக்கப்படுள்ளது .....இது மிகவும் மகிழ்ச்சி தர தக்க செய்தி ....


  இத்திருபணியில் பங்கு பெற விரும்பும் அன்பர்கள்  கீழ்கண்ட எண்ணை   தொடர்பு கொள்ளலாம் ..

தொடர்பு   எண் 9840083553



கடுமையான தோல் நோய்கள் நீங்க கருந்திட்டைக்குடி வாங்க...
தோல் நோய் தீர்க்கும் அதிசய திருக்குளம் .....
தற்போது கரந்தை என வழங்கப்படுகிறது ....
 கரிகால் சோழன் கருங்கல் திருப்பணி இத்திருகோயில் ...
இங்குள்ள திருக்குளத்தில் மூழ்கி இறைவன் வசிஷ்டேஸ்வரரை வணங்குவோருக்கு மிக கடுமையான தோல் நோய்களும் நீங்குகிறது ....
கரிகால் சோழனின் தோல் நோய் போக்கியவரும் இவரே..
2000  ஆண்டுகளுக்கு முற்பட்ட திருகோயில் ..
வருடத்திற்கு ஒரு முறை ஆதவனும் இறைவனை வழிபடுகிறான் .....

வசிஷ்டர் வணங்கியதால் இறைவன் வசிஷ்டேஸ்வரர் என படுகிறார்...
இக்காட்சி பிரகாரத்தில் புடைப்பு சிற்பமாக காணப்படுகிறது...
எங்குள்ளது?
தஞ்சை --குடந்தை பிரதான சாலையில் 2 கிலோ மீட்டரில் உள்ளது தற்போது கரந்தை என்று வழங்கப்படும் கருந்திட்டைக்குடி ..

தோல் நோய் உள்ளவர்கள் மட்டுமல்ல ....அனைவரும் வணங்கி அருள் பெறலாம் .....
வாருங்கள்...
இங்கு மற்றொரு சிவாலயமும் உள்ளது ....

(படத்தில்  பிரகாரத்தில் உள்ள லிங்கத்திருமேனிகள்)