Saturday, October 31, 2015


































பெருவேலி----மதுராந்தகம்.


பெருவேலி -மதுராந்தகம் -சித்தாமூர் வழியாக இவ்வூரை அடையலாம் .சிவபெருமான் கருணையால் மேற்கூரைத் திருப்பணியும்,திருவேள்வியும் நடைபெற்றது .



கோச்செங்கன்னாயர்  சிவ சபையினரின் முயற்சியால்   இத்தொண்டு  நிறைவேற்றப்பட்டது .

அன்னாரின் சீரிய சிவத்தொண்டு பல்லாண்டு  தொடரட்டும் .

தொடர்புக்கு-திரு.பார்த்திபன் - 9787909427,திரு.பிரபு -9843669689.

Thursday, October 29, 2015

வைரபுரம் ----திண்டிவனம்  --விழுப்புரம்  

அருள்மிகு திருபுரசுந்தரி உடனாய ஸ்ரீ சோம சுந்தரேஸ்வர சுவாமி  திருகோயில் . வைரபுரம் .

திண்டிவனம் தாலூகா , விழுப்புரம்  மாவட்டத்தில், திண்டிவனத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது இத்திருகோயில் .

கருவறையில் மிக பிரம்மாணடமான திருஉருவம் கொண்டு விளங்குகிறார் 
சுந்தரேச்வர பெருமான்.
இப்பகுதில் விளங்கும் லிங்க மூர்த்தங்களில் இவரே மிகப்பெரியவர் .








Wednesday, October 28, 2015

காளிக்கு  திருமண  கோலம் காட்டிய தலம் ----

காளி ----குத்தாலம் -மயிலாடுதுறை 





அன்பர்களே இறைவன் அகத்தியருக்காக தன் திருமண காட்சி அளித்த அனேக தலங்கள் உள்ளன . ஆனால் இத்தலத்தில் காளிக்கு இறைவன் தன் திருமண காட்சி நல்கினார்.
எனவே இத்தலத்தின் பெயரே காளி என்றுஅழைக்கப்படுகிறது.
அபிராமி கோயில் பத்து என்றும் சொல்கிறார்கள்.
காளி திருத்தலம் குத்தாலம் வட்டத்தில் உள்ள ஒருசிறியகிராமம்
மயிலாடுதுறையிலிருந்து வசதியாக சென்றுவர பேருந்துகள் உள்ளன.
இறைவன் திருகாமேஸ்வரர். இறைவிஅபிராமி , சுற்றிலும் உள்ளகிராம மக்களுக்கு கண் கண்ட தெய்வமாக இருந்து வருகிறாள். அபிராமி கோயில் என்றால் தான் கோவிலுக்கு வழியே சொல்கிறார்கள்.
அத்தனை பிரசித்தம் . மிக சிதிலமடைந்த இக்கோவிலை மிக நேர்த்தியாக சீரமைத்துள்ளனர் கிராம மக்கள் .
கோபுராஜபுரம்,  பாபநாசம்  வட்டம் , தஞ்சை  மாவட்டம் .


அடியார் பெருமக்களின் அன்பு  கவனத்திற்கு ........

ஸ்ரீ  ஸ்வர்ணபுரீஸ்வரர் திருகோயில்  கோபுராஜபுரம் .  பாபநாசம்  ரயிலடி தாண்டியதும் அரை கிலோமீட்டர் தொலைவில்  உள்ள, மிக பழமை வாய்ந்த  இத்திருகோயில்,உடனடியாக திருப்பணியை துவக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .

இத்திருக்கோயிலின் குபேர மூலையில்  எழுந்தருளியுள்ள குபே ரல்லிங்கேஸ்வர ரை  வழிபட, தன  அபிவிருத்தி  ஏற்படும் . வறுமை விலகும் .
லக்ஷ்மி கடாட்ஷம் கிட்டும் .

அம்பாள்  சந்நிதி முழுதும் பழுதடைந்து விட்டது . சுவாமி சந்நிதி  இன்றோ என்றோ  என்று உள்ளது.

Friday, October 23, 2015

ராமலிங்கபுரம்  , திருவள்ளூர்  மாவட்டம் .

ராமலிங்கநாதர் திருகோயில் . கருவறையில் அற்புத அழகோடு விளங்கும் இப்பெருமானை காண  கண் இரண்டு போதாது .

மிகவும் தொன்மையான இந்த திருகோயிலில் வழிபாடுகள் முறையாக நடைபெறாதது மிகவும் வருந்த தக்கது . பிரதோஷ வழிபடு கூட நடைபெறவில்லை .

செல்லும் வழி : திருவள்ளூரிலிருந்து பென்னலூர்ப்பேட்டை செலும் பேருந்துகளில் பயணம் செய்தால் ராமலிங்கபுரம் நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம் . 

அருகில் திரு கோபால் என்பவர்  தரிசனம் செய்ய உதவுவார் .

தொடர்பு கொள்ள









 வேண்டிய அலைபேசி எண் : திரு துரை 9092391233

Thursday, October 22, 2015

பலன் தரும் பரிகார தலங்கள் ----ஆவணியாபுரம் 

மக  நட்சத்திர காரர்கள் வணங்க வேண்டிய  மகத்தான திருத்தலம் 


ஆவணியாபுரம் சிம்மபுரீஸ்வரர் திருகோயில் , திருவண்ணாமலை மாவட்டம்.
சிம்ம ராசிக்காரர்கள் , மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள்  வாழ்வு  சிறக்க வணங்க வேண்டிய மகத்தான திருகோயில்.
மிக பழமையான பச்சை நிற மரகத திருமேனி கொண்ட இத்தலத்து இறைவன் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் .
பிரசித்தி பெற்ற நரசிம்ஹர் கோயில் கொண்டுள்ள மலை அடிவாரத்தில் 
இத்திருகோயில் அமைந்துள்ளது.


அன்பர்கள்  வணங்க வேண்டிய அரிய திருத்தலம்  இது.







Wednesday, October 21, 2015


சோழன்மாளிகை கைலாசநாதர், பட்டீஸ்வரம் 


































தேவார வைப்பு தலமான அரிச்சந்திரபுரம் சந்திரமௌலீஸ்வரரை காண சென்ற எனக்கு அதிர்ஷ்டவசமாக இவரின் தரிசனம் கிடைத்தது.
கூரை கொட்டகையில் தான் இறைவன் தரிசனம் தருகிறார்
கோயில் அருகில் மிகுந்த இடிபாடுகளுடன் சில கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகிறது.பட்டீஸ்வரம்  மிக அருகில்  உள்ளது.


கூரையில் வீற்றிருந்தாலும் இறைவன் மிகுந்த வனப்புடன் காணப்படுகிறார். பட்டீஸ்வரம் அருகில் உள்ளது இத்தலம்.
அன்பர்களே, அடியார் பெருமக்களே, காண தவறாதீர்கள்!!!!!.


Tuesday, October 20, 2015

திருப்பணியை  எதிர்நோக்கி  காத்திருக்கும் 

 திருமேற்றளிகை திருகோயில் 































பிரம்மபுரீஸ்வர பெருமான், திருமேற்றளி, பட்டீஸ்வரம் , குடந்தை.

இத்திருகோயில் துர்க்கை கோயிலுக்கு மிக அருகிலேயே உள்ளது.திருகோயில் மிகவும் நலிவடைந்துள்ளது.
பட்டீஸ்வரம் ஞானசம்பந்தப்பெருமான் முத்துப்பந்தல் வழங்கும் நிகழ்ச்சியின் பொது மட்டுமே இவர் அபிஷேகம் காண்கிறார். ஊர் மக்கள் தற்போது பிரதோஷ விழா நடத்துகிறார்கள்.

எம்பெருமானின்  அழகு, கம்பீரம்  பார்க்க பார்க்க திகட்டாது. கலை அழகு மிக்க நந்தி எம்பெருமான் பாதுகாப்பு கருதி தஞ்சை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளார் .

பிரம்மன் வழிபட்ட தலம். நான்கு அடி உயரமுள்ள பிரம்மன் சிலை, கடத்தப்பட்டு தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது .

அன்பர்களே, இத்திருகோயில் பெருமானை கண்டு வணங்குங்கள் . பிறவி பயனை பெறுவீர்கள்.

Monday, October 19, 2015

அனக்குடி  அரன் ----அரியலூர்  மாவட்டம்  

அனக்குடி அரியலூர் மாவட்டம், குடந்தை-- ஜெயம்கொண்டம் சாலையில் மதனத்தூர் என்னும் ஊரிலிருந்து 4 கிலோ மீட்டர் .
மிகவும் சிதைவுற்ற இத்திருகோயிலிலிருந்து இறைவுருவங்களை பத்திரமாக மீட்டு, ஜோதிமலை இறைபணி மன்றத்தினரால்(கும்பகோணம்) வழிபாடு இனிதே துவங்கிவைக்கப்பட்டது


திருகோயில் திருப்பணி துவங்கப்படவேண்டும் அவன் அருளால் 





Saturday, October 17, 2015

வாருங்கள்  வயலனல்லூர்  கிராமத்திற்கு --பட்டாபிராம் அருகில் 


பட்டாபிராம் அருகே  உள்ள சிறிய கிராமம் வயலநல்லூர் .  பட்டாபிராம் புகைவண்டி  நிலையத்திலிருந்து  பேருந்து வசதி மற்றும் ஷேர்  ஆட்டோ  வசதி உண்டு.

இங்கு உறையும் முருகப்பெருமான்  சுமார் 7  அடி உயரத்தில் வல்லக்கோட்டை  முருகப்பெருமானை விட உயரத்தில் பெரியவராக  சேவை சாதிக்கும்  அழகை காண கண் கோடி  வேண்டும் அன்பர்களே...

மற்றும் இங்கு பெருமாள்  கோயில்  அருகே பெரிய குளத்தின் அருகில் பலகாலமாக  கோயில்  கொண்டுள்ள சுயம்பு மூர்த்தி  இவர்.
இரு கைகளாலும்  அணைக்க முடியாத  மிக ப்பருத்த  திருமேனி உடையவர்.

திரு நாமம் சக்தி  முற்றேஸ்வரர்  என்பதாகும் .தற்போது திருகோயில்  அமைக்கப்பட்டு  வருகிறது .





Friday, October 16, 2015

பலன் தரும் பரிகார  தலங்கள் 

மன சஞ்சலம்  நீக்கும்  மனத்துணை நாதர் --வலிவலம் 


அருள்மிகு மனத்துணை நாதர் / இருதய கமலநாதேஸ்வரர் திருக்கோயில் வலிவலம் , திருக்குவளை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.
இருதயம் சம்பந்தப்பட்ட நோய், மனக்கலக்கம், புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், மன சஞ்சலம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறந்தது.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலில் இதுவும் ஒன்று.
இத்தல இறைவனை சூரியன், வலியன், காரணமாமுனிவர், பாண்டவர்கள், கோச்செங்கட்சோழன், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.


குடிப்பவர்களை நெறிப்படுத்தும் நெறிபுரீச்வர பெருமான் 
 பார்வதி  விளையாட்டாக  இறைவனது  கண்களை  பொத்தியதால் பூவுலகம் செயல் இழந்தது . இதனால்  கோபம் கொண்ட இறைவன் பூலோகத்தில் 1008  தலங்களில் தன்னை  வழிபட பணித்தார் .

துணைக்கு தன தனையனான அச்சுதனுடன் பூலோகம் வந்த பார்வதி பல தலங்களை வணங்கிய பின் காவேரியின் கிளை நதியான முடிகொண்டான் ஆற்றின் வடகரையில் உள்ள இத்தலத்திற்கு வந்து இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, இறைவனை மீண்டும் அடைந்தாள் .

அச்சுதன் பேட்டை என்று வழங்கப்படும் இத்தலம் , குடந்தை --நாகை சாலையில் சன்னாநல்லூர் அருகே உள்ளது.

அன்பர்களே குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்கள் குடும்பத்துடன் விரதமிருந்து இங்கு வந்து ஸ்ரீ தர்மாம்பிகை சமேத நெரிபுரீஸ்வரரை  உள்ளன்புடன் வழிபட அப்பழக்கத்திலிருந்து பூரணமாக விடுபடுவர்.  

இன்றும் பலர் வழிபட்டு பலன் பெறுகிறார்கள் .
தற்போது இத்திருகோயில்  புனருத்தாரண வேலைகள் நடைபெற்று வருகிறது .  தாங்கள் பங்கு பெற விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் :9585160710








Thursday, October 15, 2015

ஒட்டியம்பாக்கம் ஸ்ரீ  ஒட்டீஸ்வரர் திருகோயில் --காஞ்சிபுரம் மாவட்டம் 


























காஞ்சிபுரம்  மாவட்டத்திலேயே மிக பெரிய திருமேனி கொண்டு இவர் விளங்குகிறார்.  தல புராணம் என்று இதுவரை அறியப்படவில்லை . செவி வழி செய்திகளே உள்ளன.

கிழக்கு தாம்பரம் மேடவாக்கம் வழியாக அரசு பேருந்துகள் ஒட்டியம்பாக்கம் கிராமத்திற்கு இயக்கப்படுகின்றன .

பிரதோஷம் உட்பட அனைத்து விசேஷங்களும் விமரிசையாக நடத்தப்படுகிறது .

அன்பர்கள் காண வேண்டிய அற்புத திருகோயில் இது .

Tuesday, October 13, 2015

சீதை  தங்கிய  சீதக்கமங்கலம்--நன்னிலம் --நாகை 

































➣புற்று நோய் போன்ற கொடிய நோய்களை தீர்க்கும் அரிய தலம்.
➣ஜனக மகாராஜா சீதா தேவியை பூமியில் கண்டெடுத்த தலம் .
➣வாஸ்து கோளாறுகளான திருமண தடை, உத்தியோக தடை, மகப்பேரின்மை போன்றவைகளை நீக்கும் தலம்
➣மூல மற்றும் ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பிரத்யேக பரிகார தலம்.
➣எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ரீ ஆகிய மகாலட்சுமி இங்கு நிரந்தர வாசம் செய்வதால் ஸ்ரீ தங்கிய மங்களம் 
வழக்கில் சீதக்கமங்கலம் என பெயர் பெற்ற தலம்.
அன்பர்களே , இத்தகைய பெருமைகள் கொண்ட இத்தலம், நாளடைவில் சிதைவுற்றது. ஆன்மீக அன்பர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த ஸ்ரீமதி மகாலட்சுமி அவர்களின் சீரிய முயற்சியால் கோயில் எழும்பி வந்தாலும், எஞ்சிய பணிகளை வரைந்து முடிவுற்று, எம்பெருமான் திருமூலநாதர் , அன்னை அபயாம்பிகையுடன் இனிதே குடமுழுக்கு காண, அன்பர்களாகிய உங்கள் பங்களிப்பும் தேவைபடுகிறது .
கும்பகோணம் --நன்னிலம் சாலையில் உள்ள இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பள்ளி கொண்ட ரங்கநாதரும் அருள்கிறார்.
இங்கே இறைதிருமேனிகள் அனைத்தும் அற்புத அழகோடு திகழ்கின்றன . குறிப்பாக முருகபெருமானின்
அழகு காண்போர் மனதை கொள்ளை கொள்ளும்.

 கும்பகோணம்-நன்னிலம் சாலையில் சீதக்கமங்கலம் உள்ளது.பேருந்து நிறுத்தத்திலிருந்து 1km ல் ஆலயம் அமைந்துள்ளது .ஆட்டோ வசதி உண்டு.
தொடர்புக்கு: ஆலய திருப்பணி குழுவினர், சீதக்கமங்கலம்
9942682262,9715303042,7373306704,9442397742
மேலும் விபரங்களுக்கு :
திருமதி மகாலட்சுமி , செல் :98400 532289
திரு கிருஷ்ணமூர்த்தி செல் :94440 30517

Monday, October 12, 2015

புதுபாளையம் உறையும் பேரழகு பிரான் 










99,புதுப்பாளையம் ,திருவண்ணாமலை -வேலூர் சாலையில் உள்ள சிறிய ஊர். 
இங்கு சாலையோரமாக ஒரு நீர்தேக்க தொட்டியின் கீழ் வீற்றிருக்கிறார் பேரழகு மிக்க இப்பெருமான் . அருகில் பல சிலா ரூபங்களும் சிதறுண்டு கிடக்கின்றன .

துவாரபாலகரின் கம்பீரம் ,வராகியின் புன்னகை மகேஸ்வரியின் சாந்த முகம் ,மகாவிஷ்ணுவின் குறுஞ்சிரிப்பும் மனதை கொள்ளை கொள்கின்றன .ஒரு பெரிய கற்றளி இருந்து கவனிக்கப்படாது அழிந்திருக்க வேண்டும் . 

இன்று கோவில் இருந்த இடத்தில் ஊராட்சி அலுவலகமும் ,நீர்தொட்டியும் இருக்கின்றன .இந்த பகுதியில் மிகபெரிய பாணம் உள்ள சிவலிங்கம் இதுவாகவே இருக்க முடியும்

Saturday, October 10, 2015

சிறுவங்குணம் , (செய்யூர் தாலூகா )   ஓலை  குடிசையில்  எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வர பெருமான் .






























அகஸ்திய மகரிஷி பூசித்துள்ளார் .மிகவும் தொன்மையான இத்தலம்  கால வெள்ளத்தில் சிதைந்தது.ஊர் மக்கள் ஒரு கொட்டகையில் இப் பெருமானை வைத்து வணங்கி வருகிறார்கள்.
ஆங்காங்கே  இறைவுருவங்கள் சிதறி கிடக்கின்றன .ஒரு காலத்தில் மிகப்பெரிய கோயிலாக இருந்திருக்க வேண்டும்.
புடைப்பு சிற்பமான சோமஸ்கந்தர் சிற்பம் மிக அழகு .
தலவிருட்சம் எட்டிமரம். இரண்டு வேளை பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு ஏழுமலை -9626340515, திரு சிவராஜ் 7094644387, திரு ராமமூர்த்தி -9585741371. பேருந்து மதுராந்தகம்- செய்யூர் 100 மற்றும் ஷேர் ஆட்டோ  செய்யூரிலிருந்து. இங்கு வருகிறது. 

Thursday, October 8, 2015

நாளை  சனி மஹா பிரதோஷம். சிவ தரிசனம் செய்ய  மறக்காதீர்கள் 

அன்பர்களே,  எவ்வொரு  பிரதோஷத்தின் போதும், அருகிலிருக்கும், கிராமங்களுக்கு  சென்று  அங்கே  எழுந்தருளியுள்ள, பழமை வாய்ந்த 
பழுபட்டிருக்கும்  திருகோயிலாக இருந்தாலும், அல்லது தனித்து விடப்பட்டு வானமே கூரையாக இருந்தாலும்,  இறைவனை நம்மால் முடிந்த அளவிற்கு அவருக்கு திருமஞ்சனம்  செய்வித்து, பிரதோஷ 
வழிபாடு செய்து அத்திருகோயில் வளர்ச்சி பெற உங்களாலான சிறு  முயற்சி செய்யுங்கள்.

அன்பர்களே, இதனால் நம் சந்ததினர்  அளவிடற்கரிய நன்மைகளை அடைவார்கள்


இது  மலைப்பட்டு கிராமம்  - சோமங்கலத்தின் அருகில் இவ்வூர் உள்ளது . சுவாமியும் ,நந்தியும் மிக அழகாக அருள்பாலிக்கின்றனர் . தொடர்புக்கு -திரு.பத்மநாபன் -9445411940 , திரு.ராஜேந்திரன் -8148617456. திரு .வீரா -9176495761












Wednesday, October 7, 2015

வீராபுரம்  வீரஜோதீஸ்வரர் திருகோயில் ---ஆவடி --திருவள்ளூர் மாவட்டம் .


மேலும் மேலும் பல புதிய கோவில்களை கட்டுவதை விட இருக்கின்ற புராதனமான, மகான்களாலும் சாதுக்களாலும், ரிஷிகள் முனிவர்களால் 
வழிபடப்பெற்ற, திருகோயில்களை, புனர்நிர்மாணம் செய்து போற்றி பாதுகாப்பதே சால சிறந்தது.
ஆவடி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், வேல் டெக் கல்லூரி அடுத்து உள்ளது வீராபுரம் கிராமம். இங்குள்ள வீரஜ்யோதீஸ்வரர் திருகோயிலை தரிசித்தால் காலத்தின் கோலத்தாலும், நம் அறியாமையாலும் திருகோயில்கள் எப்படியெல்லாம் சீரழிகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.
அங்கு வாழும் மக்களோ இதை பற்றி சிறிதும் சிந்தனை இல்லாதவர்களாக உள்ளார்கள்.
அவன் அருளால் தான் அவன் திருகோயில் எழும்பவேண்டும்!!!!






மனக்கவலை  நீக்கும்  மகேசன் 

தொழுதூர் மதுராந்தக சோளிஸ்வரமுடையார் திருகோயில்.


சென்னை --திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில், திட்டக்குடி  வட்டம் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தொழுதூர் . அதை கட்டிய  மன்னன் பெயராலேயே அழைக்கப்படுகிறது .

பெரம்பலூரிலிருந்து 25 கிலோ மீட்டர்.

திருகோயில் திறந்திருக்கு நேரம் :

காலை  :  7   to  11  a.m
மாலை  :5    to     7 


தொழுதூர்  பேருந்து நிறுத்தத்திலிருந்து  ஒரு கிலோ மீட்டரில்  ஆலயம் அமைந்துள்ளது.

குருக்கள்  இல்லம் அருகிலேயே உள்ளது .

Monday, October 5, 2015

சித்தர்கள்  விரும்பி உறைந்த சித்தர்காடு  திருத்தலம்- மயிலாடுதுறை 


அடியார்கள் காண வேண்டிய திருத்தலம் .

சித்தர்காடு, மயிலாடுதுறை-குடந்தை மார்க்கம் , திருச்சிற்றம்பல நாடி 
அடிகள் என்னும் தவ ஸ்ரேஷ்டர் ஐக்கியமான இத்தலம் இன்று பிரபல சிவாலயமாகவும் திகழ்கிறது .

மயிலாடுதுறையிலிருந்து 3 கிலோ மீட்டர் .

அருகில் சம்பந்தர் குளம் என்றழைக்கப்படும் பிரம்மபுரீஸ்வரர் திருகோயில் உள்ளது.



பிரகாரத்திலுள்ள இறைவன் திருமேனிகள்  .







புளியன்தோப்பிற்குள்  அருள்புரியும் பெருமான்-குத்தாலம் 


குத்தாலம் வட்டம், அஞ்சலாறு , மயிலாடுதுறை  மாவட்டம் (அஞ்சார்வார்தலைப்பு )

புளியன் தோப்புக்குள் வீற்றிருக்கும் ஆவுடையார் சிதைந்த நிலையில்
மற்றொரு திருமேனி இவர்தான்.

மிக  அழகான திருமேனி . விட்டு வர மனதே வரவில்லை அன்பர்களே, 




































கிராம பஞ்சாயத்து தலைவர்களிடையே இருக்கும் ஒற்றுமை குறைவு
ஈகோ பிரச்சினை காரணமாக, இத்திருமேனிகள் வழிபாடின்றி காணப்படுகின்றன.

பெருமானை காண இவர்கள் உதவியை நாடியபோது உதவி செய்ய கூட இவர்கள் மறுத்துவிட்டனர்.

கிராம மக்கள் உதவியுடன் தான் தரிசனம் செய்தேன். இப்படி இருந்தால் எப்படி திருப்பணி நடைபெறும்?
நடப்பது நடேசன் செயல்!!!!

Saturday, October 3, 2015

நம்மை காண விரும்பி எழுந்தருளிய இறைவன் ..


அடியார் பெருமக்களுக்கு அன்பு விண்ணப்பம்.
சில தினங்கள் முன்பு குடந்தை வலங்கைமான், திப்பிராஜபுரம், சென்னியமங்கலம் ரெட்டை லிங்கேஸ்வரரை 
பதிவு செய்திருந்தேன்.
பல்லவர் காலம் தொட்டு சோழர் காலம் வரை இப்பகுதியும் சுற்றியுள்ள பகுதிகளும் மிகசிறப்பு பெற்று விளங்கி வந்தது..
இரண்டாம் புலிகேசி மற்றும் மாலிக்காபூர் படைஎடுப்பினால்
இப்பகுதியும் இங்குள்ள திருகோயில்களும் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டது.
ஆயினும் நம்மைகாண விரும்பிய இறைவன் நமக்கு அருள்புரிவதற்காக , ஒருவராகஅல்ல, இருவராக இங்கு எழுந்தருளியுள்ளான். இங்குள்ளஇரட்டை லிங்கேஸ்வரர்களை வழிபட்டால், சந்தானப்ராப்தி கிட்டும். மாங்கல்ய தோஷம் நிவர்த்திஆகும். கடன் நிவர்த்தியாகும்.
அண்ட சராசரங்களையும் , இப்பூவுலகையும் நமக்காக படைதருளிய இறைவனுக்கு திருகோயில் ஒன்றைஅமைப்பது
நமதுகடமையல்லவா?
இதனை உயிர் மூச்சாக கொண்டு இந்த கிராமத்தை சேர்ந்த அன்பர்
திரு G. சங்கர்( மழலை செல்வம் இல்லாது வருந்திய இந்த அன்பருக்கு திருப்பணி ஆரம்பித்தவுடன்மழலை பாக்கியம் தந்தருளியுள்ளார் இப்பெருமான்) இப்பெருமானுக்கு எப்பாடுபட்டாவது திருகோயில் ஒன்றை எழுப்பிவிட வேண்டும் என்று சமய சான்றோர்களின் வழிகாட்டுதலின் பேரில் , சென்னையை சேர்ந்த திருப்பணிசெம்மல் திருமதி மகாலட்சுமி அவர்களின் பேருதவியோடு திருப்பணியை ஆரம்பித்துள்ளார்.
பேரன்பு கொண்ட பெரியோர்களே,
நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளபடியால் தங்களது மேலான ஆதரவை நாடுகிறார். தங்களது ஆதரவை:
SRI UNNAMALAI AMBIKA SAMETHA SRI ARUNACHALESWARA ALAYA ARAKATTALAI
A/C No. 500101010801777
IFSC CODE:CIUB0000022
CITY UNION BANK, VALANGAIMAN BRANCH
என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம்.
தொடர்புக்கு:
G.SANKAR, பொருளாளர் (94430 86587)
பஸ்ரூட்: குடந்தை--மன்னார்குடி திப்பிராஜபுரம்(மாடாகுடி) பஸ் ஸ்டாப்.இங்கிருந்து அரை கிலோமீட்டரில் சென்னியமங்கலம் உள்ளது.





Friday, October 2, 2015



புராதனமான  பூந்தோட்டம் திருகோயில்--

திருவாரூர்  மாவட்டம்


























பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் திருகோயில்.திருப்பணியை மட்டுமல்ல 
பக்தர்களையும் எதிர்நோக்கியிருக்கும் ஆலயம் இது.

அன்பர்களே இவ்வழியே தான் நாங்கள் திருநள்ளாறு சென்றோம் .அங்கே கட்டுகடங்காத பக்தர்கள் வெள்ளத்தில் திருகோயில் நிர்வாகம் திணறுகிறது .

ஆனால் அகஸ்தீஸ்வரர் திருகோயிலிலோ விளக்கேற்றவும் ஆளில்லை. இது அற்புதமான குரு பரிகார தலம். இங்கே குரு பகவான்
12 ராசிகளின் மீதமர்ந்து கம்பீரமாக காட்சி தருகிறார். இவரை வழிபட
கல்வி கேள்விகளில் முதன்மை பெறலாம், திருமண தடை நீங்குவதோடு, மணமானவர்களுக்கு மழலை பாக்கியம் தந்தருள்கிறார் இவர்.

மேலும் இவரை வழிபட தொழில் ஏற்படும் மந்த நிலை நீங்கும்.அருளுடன் பொருள் வரவும் உண்டு.

இத்தகைய அற்புதமான திருகோயில்களை நாம் நிராகரித்தால்
அன்பர்களே, நஷ்டம் நமக்குத்தான்.சிந்தியுங்கள்