மண்ணிலிருந்து வெளிவந்த மகா சக்தி .....
மணஞ்சேரி குன்றத்தூர்.. இங்குகண்டெடுக்கப்பட்ட ஆறடி உயரமுள்ள லிங்கத் திருமேனி , கிராமத்து மக்கள் உதவியுடன் அடியார் பெருமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது......
அடியார்கள் பெருமளவில் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு பலன் பெற வேண்டுகிறேன்
இறையன்புடையீர் வணக்கம்,
ReplyDeleteகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். கிபி. 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்று அங்குள்ள கல்வேட்டின் மூலம் அறியப்படுகிறது.
1000 வருடம் பழமையான சிவாலயம் கேட்பாரற்று சிதைந்து சுற்று சுவர்கள் இடிந்து,பாழடைந்து கிடக்கிறது. பூசைகளும் நடைபெறுவதும் இல்லை.
தற்பொழுது கிராமத்தினரால் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பிரதோஷம், பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி மற்றும் முக்கிய நாட்களில் பூஜை நடைபெறுகிறது.
ஆலயத்தின் அமைப்பு.:
இறைவன்:சொக்கநாதர்
இறைவி: மீனாட்சி அம்மன்
பிறசன்னதிகள்: தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர், பிரம்மா , துர்க்கை, சண்டிகேஸ்வரர் , பைரவர்
தலமரம்: வில்வம்
கன்னிமூலை கணபதி மற்றும் சுப்பிரமணியர் சன்னதிகளில் உற்சவர் இல்லை.
கோவிலின் மேற்குப்பகுதி சுவர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்று வெள்ளத்தால் இடிந்துவிட்டது.
திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வரவேற்கிறோம்.
https://pungampadi.blogspot.com/
ReplyDelete