பிறப்பு அறுக்கும் பிஞ்சகன்
பிறவி பெருங்கடலை இறைவன் அருளின்றி நீந்துவது அவ்வளவு எளிதானதல்ல .....மீண்டும் மீண்டும் ஒரு தாயின் கர்ப்பத்தில் உருவாகி
இப்பூவுலகத்தில் தோன்றி அல்லலுற விரும்பாதவர்கள் வழிபட வேண்டிய அற்புத திருத்தலம் கரு இலி .....கருவேலி என்று தற்போது அழைக்கப்படுகிறது..
அப்படியே பிறந்தாலும் இப்பிறவி பெருங்கடலை கடப்பதற்கு இறைவன் சர்குனேஸ்வர பெருமான் நமக்கு அருள்புரிகிறான் .....
இறைவி சர்வாங்க சுந்தரி சுமார் ஆறு அடி உயரத்தில் அற்புதமாக கட்சியருள்கிறாள் ....வைத்த கண் வாங்காமல் பார்க்கலாம்
அவ்வளவு பேரழகு ....
திருகோயில் நந்தவனத்துடன் கூடியது ...சிறப்பாக பராமரிக்கப்படுகிறது ...
அன்பர்களே இத்தகைய திருகோயில்களை திரளாக சென்று தரிசனம் செய்யவேண்டும் ....ஆனால் அந்தோ பரிதாபம் .......பக்தர்கள் கூட்டம் வெகு குறைவு...
குடந்தை ---பூந்தோட்டம் --எரவாஞ்சேரி சாலையில் கூந்தலூர் பேருந்து நிறுத்தம் உள்ளது... அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில்
உள்ளது கருவேலி... பிரதான சாலையில் வளைவு வைத்துள்ளார்கள் ....
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத திருகோயில் இது ....
நான் இறைவனை அடைந்ததை எப்படி அறிவது
ReplyDelete