பரவையுண் மண்டலி என்கிற துர்வாசர் கோயில்
சீர்மிகு செல்வத் திருவாரூரில் பூங்கோயில், அறநெறி என்னும் அசலேசம், பரவையுண் மண்டலி ஆகிய மூன்று தேவாரத் தலங்கள் உள்ளன. இவற்றுள் பூங்கோயிலும் அறநெறியும் தியாகராஜர் திருக்கோயிலினுள்ளேயே அமைந்துள்ளன.
பரவையுண் மண்டலி என்கிற துர்வாசர் கோயில், தியாகராஜர் திருக்கோயிலுக்கு வெளியே, கோயிலை ஒட்டிய கீழ வீதியில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் திருப்பெயர் தூவாயர், இறைவியின் திருப்பெயர் பஞ்சின் மெல்லடியாள். துர்வாசர் வழிபட்ட பெருமான் என்பதால் இத்தலத்து இறைவனை துர்வாச நாயனார் என்று அழைக்கின்றனர்.
ஆனால், தூவாயர் என்றே பெயரே புராணங்களில் காணப்படுகிறது. இக்கோயில் பிராகாரத்தில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் விநாயகருக்கு அருகே துர்வாசரின் சிலை உள்ளது

No comments:
Post a Comment