Sunday, January 31, 2016

வெங்கடாபுரம், அரக்கோணம்வட்டம், 

நெமிலிஒன்றியம்


காண்பதற்கு  அரிய  திருமேனி  கொண்ட  இப்பெருமானை , சென்னையை  சேர்ந்த  கோச்செங்கண்னாயர்  சிவ சபையினரால்  மேற்கூரை  வேயப்பட்டு  
பிரதிஷ்டை செய்யப்புள்ளார் ...

அன்னாரின்  சிவத்தொண்டு மிகவும் மெச்சத்தக்கது ...

அன்பர்களே  அவர்களுக்கு  உதவி கரம்  நீட்டுவது  நமது  கடமை ...

அவர்களது  அலைபேசி எண் :

.
[9444352848 , 9677226260]



Saturday, January 30, 2016

கரும்புச்சாறு  அபிஷேகம் காணும் கருணாமூர்த்தி 

குரங்கணில்  முட்டம் திரு வாலீஸ்வரர்  திருகோயில்,  தூசி , மாமண்டூர் ,காஞ்சிபுரம் .....

இவருக்கு  கரும்பு சாறு  அபிஷேகம்  செய்து  வழிபட்டால்  இனிமையான  வாழ்க்கை அமையும்  என நம்பப்படுகிறது ....
























வாலி(குரங்கு), அணில் முட்டம்  என்றால் காக்கை வழிபட்டதால்  இப்பெயர் பெற்றது....
மனிதர்கள்  தேவர்கள்  அசுரர்கள்  மட்டுமில்லாமல்  ஐந்து  அறிவு உடைய உயிரினங்களும்  இறைவனை  வழிபடுதலை  நெறியாக  கொண்டுள்ளன என்பதை இதன் மூலம்  அரிய முடிகிறது .....

தீர்த்தம் : காக்கை  மாடு தீர்த்தம் ....

காஞ்சி-வந்தவாசி சாலையில்  தூசி  என்னும் இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர்  தூரத்தில்  உள்ளது  இத்திருகோயில் ....

அனைவரும்  வழிபட வேண்டிய  அற்புத பரிகார தலம்  இது ....

Friday, January 29, 2016

ஏவல்  செய்வினைகள்  இனி இல்லை....


பொன்னூர், நாகை மாவட்டம் , மயிலாடுதுறை வட்டம்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னூர் என்ற தலம்.
இறைவன் ஆபத்சகாயேஸ்வர் , இறைவி பெரியநாயகியாக திருவருட்பாலிக்கிறாள். 


ஞான சம்பந்தர்  மற்றும்  நாவுகரசரால்  பாடல்  பெற்ற தலம் .....

பில்லி சூனியம் மற்றும் ஏவல் வினைகளை  நிவர்த்தி செய்யும்  தலம் ....
அனைத்து  விதமான க்ரஹ தோஷங்கள் ,மன குறைகள் இங்கு வந்து பிரார்த்தனை செய்வதன் மூலம்  உடனுக்குடன் நிவர்த்தி  ஆகும்..

இதை  அனுபவத்தில்  உணரலாம் ...

மயிலாடுதுறை  மணல்மேடு  சாலையில் ஆனந்தகுடி என்னும்  இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் ....



Tuesday, January 26, 2016


சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரிய தலம் --

ஊட்டத்தூர்

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில், ஊட்டத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் பஞ்சநதன நடராஜர் ஸ்தலம் ஸ்தல வரலாறு...... பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு. காயத்துடன் சிவலிங்கம்.......... ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது. அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார். அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது. இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்.......... ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு. ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோவில் அமைப்பு........... ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின்போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது. இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி நந்தி........... மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார். அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.
இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று.

















































அபூர்வ நடராஜர்...... இந்த கோவிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார். ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5

Monday, January 25, 2016

பெட்டியில்  மிதந்து  வந்த  காளி ---கொரநாட்டு கருப்பூர் -குடந்தை 

























கொரநாட்டு கருப்பூர், குடந்தை.......
ஒருசமயம் காவேரியில் மிதந்து வந்த ஒரு பெட்டியை கிராம மக்கள் கண்டனர். திறந்து பார்த்தபொது மார்பளவே உள்ள ஒருஅம்மன் சிலையை கண்டு அதிசயித்தனர்.
பின்னர் காஞ்சி மகானின் ஆணைகிணங்க இங்குள்ள சுந்தரேஸ்வரர் திருகோயிலில் பெட்டிகாளி பிரதிஷ்டை செய்யப்பட்டாள். அன்று முதல் இப்பகுதியின் காவல் தெய்வமாக பிரசித்திபெற்று விளங்கிவருகிறாள்.
உக்கிரமாக காட்சிஅளித்தாலும் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவள்.
வருடத்திற்கு ஒருமுறைதான் அதுவும் பெட்டியோடுதான் இவள்
ஊர்வலம் காண்கிறாள். அப்போது மிகுந்த உக்கிரத்தோடு காணப்படுவதால் ஒரே ஓட்டமாக எங்கும் நிற்காமல் எடுத்து சென்று
சன்னதியை அடைந்த பின்னரே நிறுத்துகின்றனர்.
மூலவர் இறைவன் சுந்தரேஸ்வரர்.....அன்னை அபிராமி
மண்ணில் மறைந்து  நின்ற  மாமணிசோதியான்  

அன்னம்புத்தூர் திருநிதீஸ்வர பெருமான்  திருகோயில்  , திண்டிவனம்
திண்டிவனத்திலிருந்து  பாண்டி  செல்லும் சாலையில் வரகுபட்டு என்னும் கிராமத்தை  அடுத்த  சாலையில்  4 கிலோ மீட்டர்  பயணித்தால்  கோயிலை  அடையலாம் ....

தொல்லியல்  துறையினரால்  அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட 

இப்பெருமான் ..திறந்த  வெளியில்  வீற்றிருந்தார் .....

பின்னர்  அடியார்கள் மற்றும்  கிராம மக்கள்  உதவியுடன் திருகோயில்  அமைக்கப்பட்டது ....


குபேரனுக்கு  அருளிய  இப்பெருமான்  தன்னை  சரணடைந்தவர்களுக்கு 

பொருட்செல்வத்துடன்  அருட்செல்வத்தையும் வழங்குவதில்  வள்ளல் ...

எனவே  தவறாமல்  தரிசனம்  செய்யுங்கள் ....
நிதீஸ்வரரை  வணங்கி  அனைத்து  செல்வங்களையும்  அள்ளி செல்லுங்கள் ...



Friday, January 22, 2016

மழலை வரம் தரும் மகேசன் .....


ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத அருணாச்சலேஸ்வரர் திருகோயில், சென்னியமங்கலம் , திப்பிராஜபுரம், வலங்கைமான் வட்டம்.....ரெட்டை லிங்கேஸ்வரர் திருகோயில் என வழங்கப்படும் இத்திருக்கோயில் திருப்பணி நடைபெறுகிறது.
இத்திருகோயிலுக்கு உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்..
திருவண்ணாமலைக்கு நிகரான இத்தலம் புராதன பெருமையையும் பழமையும் வாய்ந்தது...
சோழர்கள் காலம் முதல் பல்லவர்கள் வரை மன்னர்கள் பலரால் திருப்பணி செய்யப்பட்டது













தங்கள் நன்கொடைகளை
SRI UNNAMALAI AMBIKA SAMETHA SRI ANUNACHALESWARAR ARAKATTALAI A/c No.500101010801777
IFSC CODE:CIUB0000022
CITY UNION BANK , VALAIGAIMAN BRANCH
என்ற வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்...
தொடர்புக்கு: G, சங்கர்  CELL :94430 86587
கண்  அமர்ந்த  நாயனார் ---பனையபுரம் 

பலன்  தரும்  பரிகார தலம் ....

குடந்தை -- சென்னை  சாலையில் விக்கிரவாண்டி  டோல்கேட் முன்பாக 
பிரதான சாலையிலே  அமைந்துள்ளது  இத்தலம் 

கண்  பார்வை குறைபாடுகளுக்கு  சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது 

பனைமரம் தல  விருட்ஷம் ..
பணங்காட்டீஸ்வரர்  எனவும்  அழைக்கப்படுகிறார்...
சிபி  சக்ரவர்த்தியோடு  தொடர்பு  உடைய தலம் .....

இறைவன் கிழக்கு முகமாக சுயம்பு மூர்த்தியாக  வீற்றிருந்து  அருள்பாலிக்கிறார் ...
நெடுஞ்சாலை  விரிவாக்கத்திற்காக இடிக்கப்படவிருந்த  இத்திருகோயில் பின்  பக்தர்களின்  எதிர்பால்  கைவிடப்பட்டது ....
சிவாய நம ....



Wednesday, January 20, 2016

ஆத்தூரில்  அரிய கலை பொக்கிஷங்கள் --காஞ்சி 

செங்கல்பட்டு --காஞ்சி  சாலையில்  உள்ள  சிற்றூர்  ஆத்தூர் .
இங்கு  பிரதானமாக விளங்கும்  திருகோயில்  சோழர்களால்  கட்டப்பட்ட  முக்தீஸ்வரர்  திருகோயில்  ஆகும் ....

இங்கும் இதை சுற்றியுள்ள்  பகுதிகளிலும்  ஏழு  சிவலிங்க மூர்த்தங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன ....

ஒரு காலத்தில் அவை மிகப் பெரிய திருகோயில்களாக  விளங்கி வந்தது ..
இன்றோ மிகச்சிறிய  திருகோயிலில்  அருள்பாலிக்கின்றனர் பெருமான்கள் ...

அவற்றுள் ஒன்று  ஆத்தூர்  ஜலகண்டேஸ்வர பெருமான் திருகோயில் ..

இதோ  உங்கள் பார்வைக்கு  பெருமானின்  அருபுத காட்சி ....




Tuesday, January 19, 2016


பிறப்பு  அறுக்கும் பிஞ்சகன்




பிறவி பெருங்கடலை இறைவன் அருளின்றி  நீந்துவது  அவ்வளவு எளிதானதல்ல .....மீண்டும் மீண்டும்  ஒரு தாயின் கர்ப்பத்தில்  உருவாகி 
இப்பூவுலகத்தில்  தோன்றி  அல்லலுற விரும்பாதவர்கள் வழிபட வேண்டிய அற்புத திருத்தலம் கரு இலி .....கருவேலி  என்று  தற்போது  அழைக்கப்படுகிறது..

அப்படியே பிறந்தாலும்  இப்பிறவி பெருங்கடலை  கடப்பதற்கு இறைவன் சர்குனேஸ்வர பெருமான் நமக்கு அருள்புரிகிறான் .....

இறைவி  சர்வாங்க சுந்தரி  சுமார்  ஆறு  அடி உயரத்தில்  அற்புதமாக கட்சியருள்கிறாள் ....வைத்த  கண் வாங்காமல்  பார்க்கலாம் 

அவ்வளவு  பேரழகு ....

திருகோயில்  நந்தவனத்துடன் கூடியது ...சிறப்பாக பராமரிக்கப்படுகிறது ...

அன்பர்களே இத்தகைய  திருகோயில்களை திரளாக சென்று தரிசனம் செய்யவேண்டும் ....ஆனால்  அந்தோ பரிதாபம் .......பக்தர்கள் கூட்டம்  வெகு  குறைவு...

குடந்தை ---பூந்தோட்டம் --எரவாஞ்சேரி சாலையில் கூந்தலூர்  பேருந்து  நிறுத்தம் உள்ளது... அங்கிருந்து  சுமார் ஒன்றரை  கிலோமீட்டர்  தூரத்தில் 
உள்ளது கருவேலி... பிரதான சாலையில்  வளைவு  வைத்துள்ளார்கள் ....

எத்தனை  முறை பார்த்தாலும்  அலுக்காத  திருகோயில்  இது ....



Monday, January 18, 2016

அழிவின் பிடியில் அகஸ்தீஸ்வரர் ஆலயம்.

திருவாரூர் குடந்தை சாலையில் 2 km இல் இருக்கும் கிராமம் பெரும்புகளூர்.
இங்கு ஒருகாலத்தில் பெரும் புகழோடு இருந்த ஆலயம் அபிராமி அம்மை உடனாய அகஸ்தீஸ்வரர் ஆலயம்.

இன்றோ ஒரு சில செங்கற்களே எஞ்சியுள்ள நிலையில் இறை வடிவங்கள் ஒரு சிறிய அஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட கூரையில் அருள்பாலிகின்றனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பூசை அறவே நின்று போன இந்த ஆலயத்தில் அன்பர் மாரிமுத்து அவர்கள் தினமும் தற்போது 12 ஆண்டுகளாக ஒரு கால பூசை செய்து வருகிறார்.

கோயிலுகென்று ஏராளாமான நிலங்கள் இருந்தபோதிலும் அவைகள் எல்லாம் தற்போது ஆக்ரமிப்பின்
பிடியில் சிக்கியுள்ளன.

அரசின் உதவி மற்றும் சிவனேய செல்வர்களின் வழிகாட்டுதலை எதிர்பார்த்து கிராம மக்கள் காத்திருக்கிறார்கள்.
contact: Mari Muthu :99431 30863





Sunday, January 17, 2016

கேடுகளை  களைவார்  கேடிலியப்பர் 

























அன்பர்களே..... 
கோட்செங்கட்சோழன் கட்டிய மாடகோயில்களில் மிக அழகானதொரு சிற்பகலை களஞ்சியமாக விளங்குகிறது கீவளூர் திருகோயில்
குடமுழுக்கு செய்யப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்படுகிறது.
திருவாரூர் -நாகை சாலையில் உள்ளது. மூலவர் கேடிலியப்பர்.
இங்குகுடிகொண்டுள்ள அஞ்சு வட்டதம்மன் மிகபிரசித்தம்.
அடியார்கள் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டிய அற்புத திருகோயில்இது.

Saturday, January 16, 2016

ஜோதிமலை  இறைபணி  மன்றம்  குடந்தை 

அன்பர்களே ,,


அண்ட சராசரங்களையும், பிரபஞ்சத்தையும் படைத்து அருளிய ஸ்ரீ சிவபெருமானுக்கு , இப்பூவுலகில் திருகோயில்கள் பல்லாயிரக்கணக்கில் இருந்தாலும், இன்றும் பல திருகோயில்கள் , வெளிச்சத்திற்கு வராமலும், அந்நியர்களின் ஆதிக்கத்தினால் சீர்குலைந்தும் , பராமரிப்பின்றி பாழ்பட்டும், காண கிடைக்கின்றன. அத்தகைய திருகோயில்களையும் , தனித்து விடப்பட்ட இறை திருமேனிகளையும் அடையாளம் கண்டு , அவற்றை வெளிச்சத்திற்கு,வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள என்னுடைய http://shivabelievers.blogspot.in/என்ற blog ஐ பார்வையிட்டு ,இத்தகைய திருகோயில்களையும் நிராகரிக்காமல் தரிசனம் செய்து இறையருள் பெற வேண்டும்.தங்களது மேலான கருத்துக்களையும் பதிவிட வேண்டுகிறேன்.

அத்தகைய  ஒரு  திருமேனி தான் இப்பெருமான் .இவர்  எழுந்தருளியிருப்பது 
 ஆத்திகுளம் , குடந்தை  --திருவாரூர்  நெடுஞ்சாலை ..வண்டுவாஞ்சேரி  பேருந்து நிறுத்தம் 

பூசிப்பது  ஜோதிமலை  இறைப்பணி  மன்ற  நிறுவனர்,  கலியுக  அப்பர்  பெருமானாகிய  திருவடில்குடில்  சுவாமிகள் , குடந்தை 
தொடர்புக்கு : 0435------2481372



Friday, January 15, 2016

அறியபடாத அபூர்வ ஆலயம் ------கூறைநாடு -

மயிலாடுதுறை 


கூறைநாடு , செம்பொநீஸ்வரர் திருகோயில், மயிலாடுதுறை ....
தானிய சாலி தெரு....ராமர் மடம் என்று தற்போது அழைக்கிறார்கள்..புனுகீஸ்வரர் திருகோயில் அருகிலேயே இத்திருகோயில் உள்ளது.


பெயருக்கு  தகுந்தாற்போல்  பொன்னைபோன்று  தேஜோமயமாக  காட்சியளிக்கிறார் இறைவன்.

திருகோயில்  சொத்துக்கள்  மிகுந்த  ஆக்கிரமிப்பில்  உள்ளது ....





































கருகாவூரில்  கண்டெடுக்கப்பட்ட  பெருமான் 




திருகருகாவூர், பிரம்மகுண்டம் வழி , கரம்பத்தூர் கிராமம்.....





















மேற்கூரையின்றி வானம்பார்த்து ஸ்வாமி அருள்பாலிக்கிறார்..
தொடர்புக்கு: கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை
செயலாளர் சிவ.த. தேன்ராஜ் என்ற சிவ.வெங்கடேசன்,
No.60,சேணி அம்மன் கோவில் தெரு,
தண்டையார்பேட்டை ,சென்னை-600081 .
[9444352848 , 9677226260]
 

Wednesday, January 13, 2016

மாநிலம் போற்றும் மகிமாலீஸ்வரர்---ஈரோடு

ராவணனின்  மூதாதையர்களான மகி , மாலி  என்னும் அசுரர்களால் (ஆனாலும்  சிறந்த சிவ பக்தர்கள்) பூசிக்கப்பட்ட மகிமைகள்  நிறைந்த 
மகிமாலீஸ்வரர் திருகோயில் ....
ஈரோடு  மாவட்டத்தின்  பெருமை  மிகு திருகோயில்களுள் மிக சிறந்ததாக கருதப்படுகிறது ....

அடியார்கள்  தவறாமல்  தரிசிக்கவும்....

கருவறையில்  சுமார் ஐந்தரை  அடி உயரத்தில் சேவை  சாதிக்கும் இறைவன் மகிமாலீஸ்வரர் 




Tuesday, January 12, 2016

சனி தோஷம் நீங்க இங்கே வாங்க!!!




































அன்பர்களே சனிபகவான் தன் குறை நீங்க இங்கே இறைவனை வழிபட்டு அருள் பெற்றார்.
➨மயானத்திற்கு எதிரே அமைந்த தலம் மிக அரிது.எனவே இத்தலம் ஸ்ரீவாஞ்சியத்திற்கு நிகரான தலம் .
➨உடல் ஊனமுற்றோர் வணங்க வேண்டிய பரிகார தலம்.
➨இத்திருகோயிலில் எழுந்தருளியுள்ள விமல லிங்கம் மிக சக்தி வாய்ந்தது. 8 வகையான தைல காப்புகளால் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
➨இவரை வணங்க அனைத்து வியாதிகளும் பகலவனை கண்ட பனி போல் மறையும் . இது அனுபவ ரீதியான
உண்மையாகும்.
அத்தலமே பிரமராம்பிகை உடனுறை அங்குரேஸ்வரர் உறையும் ஆதிகுடி தலமாகும் .இது திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், அன்பில் செல்லும் மார்க்கத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .
மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண் : 97884---02327