நாறும் பூநாதா.....நாறும் பூநாதா ......
திருமணத்தடை, புத்திரதோஷம், தீராத பிணிகள், குடும்ப கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கிடவும், குடும்ப ஐஸ்வர்யம் பெறவும், கல்வி, கேள்விகளில் சிறக்கவும், வியாபாரம் விருத்தியடையவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம்
திருபுடைமருதூர் .......திருநெல்வேலி மாவட்டம் , அம்பாசமுத்திரம் அருகில் திருமுக்கூடல் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த அற்புத திருகோயில் ....
தரிசித்தாலும் ,மனத்தால் நினைத்தாலும் நம் துன்பங்கள் உடற்பிணிகள் மனபிணிகள், அனைத்தையும் நொடியில் தீர்த்து வைப்பார் நாரும்பூநாதர் ....
இங்கு சிவன் சாய்வான சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருள்புரியும் சிவபெருமான், தலையில் வெட்டுப்பட்ட கோடரியின் தடம், மார்பில், மானின் மீது பாய்ந்த அம்பு பட்ட தடத்துடன் காட்சி தருகிறார்.
அன்பர்களே இங்கு ஒருமுறை சென்று தரிசித்தால் பலமுறை செல்ல ஆவல் மேலிடுகிறது ......
அத்தனை அற்புதமான கற்றளி ....பிரம்மாண்டமான திருகோயில் ..
குளுகுளு தாமிரபரணி .......அற்புதம் ....
No comments:
Post a Comment