Saturday, May 28, 2016

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் 

இருக்கும் குன்றக்குடி.....சிவகங்கை மாவட்டத்திலுள்ள  மிக புகழ் வாய்ந்த ,திரளான பக்தர்களை ஈர்க்கும் , அதிக வருமானம் பெறுகின்ற திருகோயில்களுள் ஒன்று ...
பிள்ளையார்பட்டி மிக அருகில் உள்ளது ...அடிகளார் பிறந்த தலம் ....குடைவரை வகையை  சேர்ந்த தலம் ...

இவை  அனைவரும் அறிந்ததே ....அனால்  அன்பர்களே ...மனதை வருத்தும் செய்தி ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ...அது என்னவென்றால் ....குடைவரை கோயிலில் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் அம்மைஅப்பனாகிய நம் பெருமானை , நம் தந்தையாகிய இறைவனை, சிவபெருமானை திருகோயில் நிர்வாகமும் சரி பக்தர்களும் சரி வழிபடாமல் புறக்கணிப்பதே யாகும் ...

மிக  நேர்த்தியான பிரம்மாண்டமான மூலவர் ...மிகப்பெரிய பைரவர் சிலை...என இங்கே அதிசியக்க தக்க சிறப்பம்சங்களை அதிகம் பெற்றிருந்தாலும் ...ஒரு விளக்கேற்றவோ , ஒரு வஸ்திரம் அணிவிக்கவோ ...ஏன் ஒரு முழம் பூ அவர் திருமேனி மீது சாற்றவோ கூடவா ஒருவருக்கும் மனதில்லை?

அவர் இல்லாமல் ஏது ஆண்ட சராசரங்கள்?ஏது உலகம்? ஏது நீங்கள் ,நான்? யாரையும் குற்றம் சொல்லவேண்டும் என்பது என் எண்ணமல்ல..

படி ஏறி முருகனை வணங்க செல்லும் பக்தர்கள் முதலில் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் ஈசனை வழிபட்டு அல்லவா மேலே செல்ல வேண்டும் ? அது தானே மரபு? அது தானே முறை? திருகோயில் நிர்வாகம் இதனை செயல் படுத்தினால் என்ன ? ஒரு வழிகாட்டி பலகை வைக்கலாமே? அர்ச்சகர்களை பணியமர்த்தலாமே ?
என்ன குறைந்து விட போகிறது ?

கலை நயம் மிக்க ஒரு திருகோயில் கண்டுகொள்ள படாமல் விட படலாமா?
அன்பர்களே ,.... என் ஆதங்கத்தை கூறி விட்டேன் ....இனி உங்கள் விருப்பம் .......


No comments:

Post a Comment