தில்லைக்கு இணையான தலம் ......காசிக்கு
இணையான தலம்,,,,,,கங்கை நதிக்கு
இணையான தீர்த்தம்
சிதம்பரம் திருத்தலத்துக்கு இணையாக இந்த வடதில்லைத் தலமும் போற்றப்பட வேண்டும் எனும் நோக்கத்துடன், கோயிலுக்கு நிலங்களையும் நிவந்தங்களையும் வாரி வழங்கினான் மன்னன். நந்தியாறு எனும் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்த இந்தக் கோயில்- காசிக்கு நிகரான தலமாகவும், ஆரணி ஆறு-கங்கைக்கு இணையான தீர்த்தமாகவும் போற்றப்பட்டது. ஆற்றில் நீராடி, இறைவனைத் தொழுதால் , பாவங்கள் யாவும் தொலையும்; தோஷங்கள் அனைத்தும் கழியும் என்பது ஐதீகம் ! எனவே, இங்கேயுள்ள சிவலிங்கத் திருமேனிக்கு பாபஹரேஸ்வரர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர் மக்கள். மூலவருக்கு அருகிலேயே, கருவறையில் உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனாருக்குக் கிடைத்த லிங்கத் திருமேனியும் உள்ளது.
மூலவரின் அருகிலேயே காசியில் கிடைத்த உள்ளங்கை அளவிலான பாணலிங்கம் இருப்பது சிறப்பு.
எங்கே உள்ளது?
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது வடதில்லை கிராமம். ஊத்துக்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும், சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது வடதில்லை (பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு) கோயம்பேட்டில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு. ஊத்துக்கோட்டையில் இருந்து மாம்பாக்கம் செல்லும் பேருந்தில் பயணித்தால், வடதில்லையை அடையலாம். ஊத்துக்கோட்டையில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது
No comments:
Post a Comment