சொக்கனுக்கே சோதனையா...? (கூடலூர் )
அன்பர்களே...நெற்களஞ்சியமாக விளங்கும் ,தஞ்சை மாவட்டம் ஏராளமான பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய கலை களஞ்சியங்களாக விளங்கும் திருக்கோயில்களை கொண்டுள்ளது ...
அவற்றுள் பல நம் கவனத்திற்கு வருவதே இல்லை ...அநபாய சோழன் ஆட்சி காலத்தில் ஆயுள் விருத்தி மற்றும் ஐஸ்வர்ய விருத்திக்காகவும் இத்திருக்கோயில் கட்டப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது ..
இங்கு சஷ்டி அப்த பூர்த்தி , சதாபிஷேகம் செய்து கொண்டால் ஆயுள் விருத்தி மற்றும் ஐஸ்வர்ய விருத்தியும் கூடும்..
தஞ்சை அருகில் உள்ள கூடலூர் எனப்படும் திருத்தலம் தான் அது.. தஞ்சை குடந்தை நெடுஞ்சாலையில் பள்ளி அக்ரஹாரம் என்ற இடத்திலிருந்து பிரியும் சாலையில், வெண்ணாற்றங்கரை ஓரமாகவே 3 கிலோ மீட்டர் பயணித்தால் இந்த கிராமத்தை அடையலாம்.
இங்குள்ள மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தான் அந்த பிரசித்தி பெற்ற தலம் ....அன்னை மீனாக்ஷி பலரது வாழ்க்கையில் புரிந்துள்ள அற்புதங்கள் ஏராளம் .....
முருகப்பெருமானும் இங்கே வரப்ரசாதியாக விளங்குகிறார்... சரி ...கோயிலின் தற்போதைய நிலை என்ன?
அன்பர்களே....மின்சார கட்டணம் கூட கட்ட இயலாத வகையில்...புனரமைக்க வேண்டிய கட்டாயத்தில் திருக்கோயில் இன்று உள்ளது ..இவ்வளவு என்?....2002 முதல் இங்கு 4 தலைமுறைகளாக பணி புரிந்து வரும் சிவாச்சாரியார் குடும்பத்திற்கு சம்பள பாக்கி தரப்படவில்லை ...
பக்தர்கள் வருகையும் மிக குறைவு....என்றாலும் மனம் தளராமல் அவர்கள் இங்கே இறைபணி செய்து வருகின்றனர்...
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் இத்திருக்கோயில் இருக்கிறது...
விவசாயிகளுக்கும் , நெசவாளர்களுக்கு தருவது போல் நம் கிராம புறங்களில் உள்ள இத்தகைய திருக்கோயில்களுக்கு அரசு இலவச மின்சாரம் அளித்தால் என்ன?
இத்திருக்கோயிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன ..
ஆனால் அந்த வருமானமும் கோவிலுக்கு தரப்படவில்லை ...
அதனால் கோயில் மிகவும் பழுதடைந்து தன் சோபையை இழந்து காணப்படுகிறது ..
அரசு உடனடியாக தலையிட்டு இத்திருக்கோயிலை புனரமைப்பதுடன் , இத்திருக்கோயிலுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குத்தகை பாக்கியை பெற்று தர வேண்டும்...

No comments:
Post a Comment