3 வினாடிகள் மட்டுமே தரிசனம் தரும் தேவார பாடல் பெற்ற சிவஸ்தலம் ....
திருமால் வாமன அவதாரம் எடுத்த பொது வணங்கிய தலம் ...இறைவன் திருநாமம் வாமன புரீஸ்வரர் .....இறைவி அஞ்சனாட்சி ......
இறைவனும் இறைவியும் இணைந்திருப்பதாக ஐதீகம் ....எனவே தான் எப்போதும் திரைசீலை இட்டே காணப்படுகிறது ....தீபாராதனையின் பொது 3 வினாடிகளே திறக்கப்படுகிறது ....
காவலுக்காக ஏகாதச ருத்ரர்கள் திரைசீலை வடிவில் இருப்பதாக நம்பப்படுகிறது ....எனவே திருசீலைக்கு தான் முதல் பூசை ....
இவ்வாலய சிவனை வழிபட குறுமுனி வந்தபோது திரையிடப்பட்டிருந்ததால் கோபமுற்ற அகத்தியர் எதிரில் உள்ள மலையடிவாரத்தில் (ஈசானமூலையில்) சிவனை லிங்கபிரதிஷ்டை செய்து வணங்கினார் .
தற்சமயம் ஆலமரத்தடியில் சிறு கூறையின் கீழ் உள்ளார்.அடியார்கள் அவசியம் காணவேண்டிய தலம்.
இருப்பிடம்: கடலூரிலிருந்து பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.
அன்பர்கள் இந்த இரு தலங்களையும் வழிபட்டு வாருங்கள்...
படத்தில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம்....