Wednesday, December 30, 2015

நாகதோஷம்  நீக்கும்  நாககுடி  கைலாசநாதர் 

நாகங்கள் வழிபட்ட  நாககுடி 
சுவாமிமலை  திருகோயிலுக்கு  மிக அருகில்  இரண்டு  கிலோமீட்டரில் உள்ள 
அதிகம் அறியபடாத, நாகதோஷம் , சர்ப்ப தோஷம் , அதனால்  ஏற்படும் திருமண தடை நீக்கும் அற்புத பரிகார தலம் இது .

திருகோயில் அடியோடு சீர்குலைந்து விட , ஆன்மீக அடியார்கள் இத்திருகோயிலை  புனரமைக்க  முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் ...

மிகுந்த வரப்ரசாதியான இப்பெருமானை அன்பர்கள் வாழ்வில்  ஒருமுறையேனும் தரிசித்து  பலன் பெற வேண்டும்...

இத்திருப்பணியில்  பங்கு  பெற விருப்பமுள்ளவர்கள்  கீழ்காணும்  அலைபேசி எண்களை  தொடர்பு  கொள்ளலாம்...

9790168280,  9443525509




வேலூர்  மாவட்டத்தின்  காளஹஸ்தி



"கொரட்டி[குறட்டி]ஞானபிரசன்னாம்பிகை, பாலா சக்தி மனோன்மணி உடனமர் காளத்திநாதர் திருக்கோயில்"....திருப்பத்தூரை சுற்றி
பழமையான 10 சிவன் கோவில்கள் உள்ளன.எனவேதான் அந்த ஊருக்கு திருப்"பத்தூர்"என்று பெயர்..அவைகளில் ஒன்று கொரட்டி...வேலூர் அருகில் உள்ள திருப்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் கொரட்டி.... இந்த கோயிலையும்
காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலையும் ஒரே சமயத்தில் தான் அமைத்தார்கள் என்கிறார்கள்.

இதிலிருந்தே இத்தலத்தின்  பழமையையும் பெருமையையும் உணர்ந்து கொள்ளலாம் ...




Monday, December 28, 2015

திருநிதீஸ்வரர்--திண்டிவனம் 


திண்டிவனம் ---பாண்டி சாலையில்  வரகுபட்டு அடுத்து  உள்ளது அன்னம்புத்தூர் கிராமம்.

இங்கு  பலகாலமாக  வானமே கூரையாக வீற்றிருந்த, கம்பீரமான , குபேரன் வழிபட்ட  இப்பெருமானை , ஆனமீக அன்பர்கள் , கிராமம் மக்கள் துணையுடன் அழகிய திருகோயில் அமைந்தது வழிபாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள் ......

இப்பெருமானை  வழிபடுவோருக்கு பொருள்  பற்றாகுறைஅறவே  வராது.
திருமகள் கடைக்கண் பார்வை கிடைக்கும் .....
இப்பெருமானின் அருள்பெற வாருங்கள் அன்னம்புத்தூர் .....





மேற்கூரை  அமைக்க  உதவுங்கள்........

































தஞ்சை மாவட்டம், குடந்தை, ஆவூர் ---அம்மாபேட்டை சாலையில் உள்ளது சேரி என்னும் சிறிய கிராமம்.
இங்கு வானமே கூரையாக எழுந்தருளியுளார் இப்பெருமான்.
அன்பர்களே இப்பெருமானுக்கு மேற்கூரை அமைக்க விருப்பமுள்ளவர்கள் உதவலாம்..... 
தொடர்புக்கு: 9500516105, 9443193120

Saturday, December 26, 2015

எத்தனை  காலம்  காத்திருப்பார்  இனாம்கிளியூர்  பெருமான்?

எங்கே உள்ளது  இனாம்கிளியூர்?

குடந்தை ---  மன்னார்குடி  சாலையில்  வலங்கைமான்  வட்டம்.
வலங்கைமான் -பாபநாசம்  சாலையில்  உள்ள சிற்றூர்  இனாம்கிளியூர் ..
சுற்றிலும்  வயல் வெளிகள்  சூழ்ந்த நகரத்தின்  சாயல் படாத கிராமம் .

இங்கு  பலகாலம்  வெட்ட வெளியில்  அருள்பாலித்து  வருகிறார் கம்பீரமான திருமேனி கொண்ட  பெயர்  அறியப்படாத  இப்பெருமான் ....

மிக  எளிமையான வாழ்க்கை  நடத்தி வரும் தம்பதியர் , ஒருவர்  இப்பெருமானை  தினசரி  வழிபாடுகள் ,  பிரதோஷ  வழிபாடுகள் நடத்தி
வருகின்றனர் ...
திருகோயில்  அமைக்க  முடிவு  செய்யப்பட்டுள்ளது ...

.அவர்களது  சிவ பக்தி  வியக்க வைக்கிறது ....

தொடர்புக்கு :சந்திரவாணன் 7639508993
சிவராஸ் :8754643816




Friday, December 25, 2015

போகர்  வடிவமைத்த பெருமான்...பொன்பரப்பி 































அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி-606 201, விழுப்புரம் மாவட்டம்.
நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்கு சான்று.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் அம்மையகரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து மேற்கே ஒரு கி.மீ. தூரத்தில் சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது.


Wednesday, December 23, 2015

மேலவலம்பேட்டை  தியான ஆத்தீஸ்வரர் --காஞ்சி 



அறங்காத்த நாயகி உடனமர் தியான ஆத்தீஸ்வரர் திருகோயில் , மேலவலம்பேட்டை, கருங்குழி வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்..
ஆத்தீச்வர பெருமானுக்கு புனித நெய்யினால் செய்யப்பட்ட
அபிஷேகம்....காண கண்கள் என்னமாதவம்செய்ததோ?..





Tuesday, December 22, 2015

பலன்  தரும்  பரிகார தலங்கள் -----கடவூர் 

மெய்ஞானம் 

திருக்கடவூர் மயானம் , (மெய்ஞானம்)
பிரம்மனுக்கு உபதேசம் செய்தமையால் இங்கு உறையும் பெருமான் பிரம்மபுரீஸ்வரர் எனபடுகிறார்.
திருக்கடையூர் சென்று பிரார்த்தனை செய்பவர்கள், பின்னர் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் தான் பிரார்த்தனை முழுமை அடையும்.
வேறெங்கும் காணமுடியாத வகையில் இங்கு முருகப்பெருமான் போருக்கு புறப்படும் கோலத்தில் கைகளில் வில்லேந்தி, பாதங்களில் குறடு(காலணி) அணிந்த கோலத்தில் உள்ளார்.
பெருத்த வயிறுடன் காணப்படும் வினாயக பெருமான் இங்கு ஒட்டிய வயிறுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
இறைவன் சுயம்புமூர்த்தி.
திருமணதடை, குழத்தை பாக்கியம் , கல்விகேள்விகளில் முதன்மை பெறஇங்கு வழிபாடு செய்வது சிறந்தது.




Monday, December 21, 2015

புதுக்குடி  ஸ்வேதாரண்யேச்வர  பெருமான் திருகோயில்

ன்பர்களே , பரிகாரம் செய்வதற்கு மட்டுமே கோயில்களை பலர் நாடுகின்றனர். திருகோயில் வழிபாடு செய்வது நம் அன்றாட கடமைகளில் ஒன்று. அதனாலேயே நம் நாட்டில் இத்தனை திருகோயில்கள் மன்னர்களாலும், நம் முன்னோர்களாலும் கட்டப்பட்டது.



கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ளது புதுக்குடி கிராமம். பல புதுக்குடிகள் இருப்பதால் இது 18 புதுக்குடி என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள சுவேதாரண்யேஸ்வரர் திருகோயில் மிகவும் பழமை வாய்ந்தது. குமுழுக்கு செய்யப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது.


பிரகாரத்தில்  பஞ்ச  லிங்கங்கள்  சந்நிதி உள்ளது .
ஆனால் பக்தர்கள் வருகை தான் மிக குறைவு.
மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது..


அருகில்  கூந்தலூர் , கருவேலி , திருவீழிமிழலை  போன்ற  பல  பழமை வாய்ந்த தலங்கள்  உள்ளன .....


Sunday, December 20, 2015

வைகல்  மாட கோயில்  ---பிரம்மபுரீஸ்வரர் --வைகல் 


குடந்தை  காரைக்கால்  வழித்தடத்தில்  பழியஞ்சிய நல்லூர்  குட்டக்கரை  என்னும் இடத்தில் இறங்கி  இத்தலத்தை  அடையலாம்.

அன்பர்களே , இங்குள்ள தேவார பாடல் பெற்ற தலமான  வைகல்  நாதர் திருகோயில் அருகிலேயே முக்கண்  அமைப்பில்  அமைந்துள்ள  மூன்று



























தலங்களில்  இத்தலம்  வலக்கண் அமைப்பாக விளங்குகிறது.

இடக்கண்  விஸ்வநாதர்  திருகோயில் ...
நாடு நாயகமாக நெற்றி கண் அமைப்பில் உள்ளது  தான்  வைகல் நாதர் திருகோயில் ..

இவ்வாறு  முக்கண் அமைப்பில் அமைந்த  வேறு தலம் கிடையாது .
ஆனால்  பக்தர்கள்  வருகை  மிகவும் குறைவு ..

அன்பர்களே  வைகல் சென்று  முத்தான  இந்த மூன்று  திருகோயில்களையும் 
தரிசித்து  வாருங்கள்.

Saturday, December 19, 2015

ராமானுஜபுரம்  ,கபிஸ்தலம், குடந்தை

அன்பர்களே, ராமனுஜபுரம்  காசி  விஸ்வநாதர்  திருகோயில் பதிவு செய்திருந்தேன் (கண்  நோய்கள்  தீர்க்கும் பெருமான்)அல்லவா?

அங்கிருந்து  ஒரு கிலோமீட்டர் தொலைவில்  வயல்  வெளியில் நட்ட  நடு  காட்டின்  இடையே  இப்பெருமான்  வானமே  கூரையாக  கவனிப்பா ரின்றி    காணப்படுகிறார் .





















இப்பெருமானை  பார்க்க பார்க்க ஏற்படும் பரவசம் சொல்லி  மாளாது .
அத்தனை  அழகு திருமேனி ....கம்பீரம் மனதை கொள்ளை  கொள்கிறது ..

விஸ்தீரணமான  விஸ்வநாதர்  திரு கோயிலிலேயே  இப்பெருமானையும் பிரதிஷ்டை  செய்து  வணங்கலாம் அல்லவா?
ஏன்  செய்யவில்லை? யார் தடுக்கிறார்கள் ? 
ஈஸ்வரோ ரஷது ......

Sunday, December 13, 2015

அர்ஜுனன் மங்கலம் (அச்சுதமங்கலம்),நன்னிலம் ,  நாகை 


























பஞ்சபாண்டவர்களில் தர்மர் வழிபட்ட அச்சுதமங்கலம் தர்மேஸ்வரர் திருகோயில்..மிகவும் சிதைந்த நிலையில் உள்ள இந்த திருகோயிலை உள்ளே சென்றுவழிபடவும் மிக அச்சமாக இருந்தது . அந்த அளவிற்கு இடிபாடுகள்......
அச்சுதமங்கலம் புகழ்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்திற்கு அருகாமையில் உள்ளது. நன்னிலம் வட்டம். நாகை மாவட்டம்.
முத்தான மூன்று திருகோயில்கள் இங்கு உள்ளன..
பஞ்சபாண்டவர்கள் ஐவரும் வழிபட்ட ஐந்து திருகோயில்கள் ஒருகாலத்தில் இங்கு விளங்கியதாக தெரிவிக்கின்றனர்.
இன்று மூன்று திருகோயில்கள் இருக்கிறது. காசி விஸ்வநாதர் திருகோயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு கோயில்கள் திருப்பணி செய்யப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Thursday, December 10, 2015

மகாவிஷ்ணு  வழிபட்ட  விஷ்ணுபுரம் 

கைலாசநாதர் 






வியாச மகரிஷி வணங்கி வழிபட்ட, மகாவிஷ்ணு வழிபட்ட, புராதன பெருமை வாய்ந்த விஷ்ணுபுரம் கைலாசநாதர். எரவாஞ்சேரி. கும்பகோணம்--பூந்தோட்டம் வழி.

கருவறையில்  சுமார்  5  அடி  உயரத்தில்  அற்புத  சேவை சாதிக்கிறார் கைலாசநாதர் .

இங்கு இரு சிவஸ்தலங்கள் உள்ளது.சுற்றிலும் உள்ள கிராமங்களிலும் நிறைய திருகோயில்கள் உள்ளன.

அது  மட்டுமிலாது,  தேவார  பாடல் பெற்ற  திருவீழிமிழலை திருகோயில்  வெகு அருகில்  உள்ளது ..

விஷ்ணுபுரம்  பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறிது  தூரம்  நடைபயனத்திலேயே கோயில்  அமைந்துள்ளது .
அன்பர்கள் வழிபட வேண்டிய அற்புத திருகோயில் இது.


Wednesday, December 9, 2015

அஷ்ட  லிங்கங்கள் ----அஷ்ட ஐஸ்வர்யங்கள் 

திருவேற்காடு  வேதபுரீஸ்வரர்  திருகோயில்  தொண்டை  நாட்டின்  தேவார பாடல்பெற்ற தலங்களுள் முக்கியமானது .

இத்திருகோயிலை சுற்றி  அஷ்ட திக்  பாலகர்கள்  வணங்கிய  அஷ்ட  லிங்கதிருமேனிகள் கோயில் கொண்டுள்ளனர்.  பலருக்கும் அறியப்படாமல்  உள்ளது  இந்த  ஆலயங்கள்.

அவற்றுள் குபேரன் வணங்கி வழிபட்ட குபேரபுரீஸ்வரர் திருகோயில், சுந்தர சோழபுரம், பருத்திபட்டில் உள்ளது.


திருவேற்காடு செல்பவர்கள் அஷ்ட லிங்கங்களையும் வழிபடுவது மிகவும் சிறப்பு.
ஒரே நாளில்  அஷ்ட லிங்கங்களையும்   தரிசிப்போருக்கு ,  வாழ்வில்  வளமை, ஆயுள்  அபிவிருத்தி , சகல விதமான  செல்வங்களும்  கிடைக்கப்பெறுவர் .....என்பது  உறுதி .

Tuesday, December 8, 2015


என்ன  மாதவம்  செய்தோம்? மாதவரம்  கைலாசநாதரை  காண?






சென்னை , மாதவரம் கைலாசநாதர் திருகோயில் மூலவர் கைலாசநாதர்.
மிகப்பெரிய,முழுவதும்  மரகத பச்சை கல்லினால் ஆன  திருமேனி  கொண்டவர் இவர் ,


பெருமாள் கோவிலுக்கு அருகிலேயே இத்திருகோயிலும் உள்ளது.
அனைத்து விசேஷங்களும் இங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது.
அடியார்கள் காண வேண்டிய அற்புத திருகோயில் இது.
அதிகம் அறியபடாத அபூர்வ ஆலயம்



 எடமச்சி கிராமம், .முக்தீஸ்வரர் திருகோயில் , செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

இந்த  கிராம\த்தை சேர்ந்த சத்யா  என்னும்  இளம்பெண்  இத்திருகோயிலை  தன  உயிரினும்  மேலாக  கவனித்து  வருகிறார்..






Friday, December 4, 2015

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்காஞ்சிபுரம் 




இந்தக் கோயிலை நிர்மாணித்தவன் ராஜசிம்மன்! போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமை கொண்டவன். அதனைச் சுட்டிக்காட்டும்படி, எங்கு பார்த்தாலும் சிம்மங்களே கோயிலைத் தாங்கி நிற்பது போலக் காட்சியளிக்கிறது.
இந்தக் கோயிலிலே நாம் காணும் ஒவ்வொரு சிற்பமும் சிவபராக்ரமத்தின் ஒரு கதையைக் கூறுவதாக உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் பார்க்க முடியாத அளவிற்கு அழகிய சிற்பங்கள் கொண்ட உள் சுற்று. சிவபெருமானின் தோற்றங்களை, அவனது பராக்கிரமங்களை நாயன்மார்கள் தங்கள் பாடல்களில் போற்றிப் பாடியுள்ள அத்தனை பாடல்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன,
இங்குள்ள சிற்பங்கள். ஒருபுறம் சம்கார மூர்த்தங்களாகவும் மறுபுறம் அனுக்ரக மூர்த்தங்களாகவும் அமைந்துள்ளதும், இதனை வடிவமைத்த சிற்பியின் கற்பனையையும், ஆன்மிக அறிவாற்றலையும் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. காப்பதும் அவனே! அழிப்பதும் அவனே! என்ற அற்புதத் தத்துவம்!

Thursday, December 3, 2015

அன்னப்பன்பேட்டை ----அக்னீஸ்வரர் ---

திருக்கடையூர் 







































திருக்கடையூர், அக்னீச்வரரின் எழில்தோற்றம்.
இத்தலம் தேவார வைப்புதலமாகும். பஞ்சாக்கை என்பது இதன் பெயர். தற்போதுஅன்னப்பன்பேட்டை என வழங்கப்படுகிறது.
திருகோயில் இன்றி பெருமான் ஓலை குடிசையில் உள்ளார்.
பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் திருக்கடையூர் திருகோயிலை சேர்ந்த அர்ச்சகர்கள் , இங்கு பூசை செய்கிறார்கள்.பிற  நாட்களில்  எந்த பூசையும் நடைபெறுவதில்லை .
பெருமான்திருகோயில் காணும் நாள் எந்நாளோ?

Wednesday, December 2, 2015



பறவைகள்  எச்சம் தான்  இவரது  பாலாபிஷேகமா?


























சித்தத்தை சிவன்பால் வைத்த அடியார்களுக்கு அன்பு வணக்கம் .
பாவூர் -காஞ்சிபுரம்-புதுபாளையம் கூட்டுரோடிலிருந்து 6 கிமீ ல் இவ்வூர் உள்ளது.
எம்பெருமானின் நிலையை பார்க்க பார்க்க கண்ணீர்தான் வருகிறது.
நந்தியம்பெருமான் முள் புதரில் உள்ளார்.
எத்தனை ஞானிகள், ரிஷிகள், முனிபுவங்கர்கள், சாதுக்கள், சித்தர்கள் வணங்கியிருப்பரோ?
நம் காலத்தில் பெருமானின் நிலை இவ்வாறு இருப்பது நமக்கு பெருமை சேர்க்கக்கூடியது அல்ல.

தொடர்புக்கு- திரு.நாகராஜ்-8489646093.