Tuesday, April 12, 2016

இடமணல்  ஓதவநேஸ்வரர் --சீர்காழி 

ஆலயம்  எழுப்ப  மணல் எடுத்த இடம் என்பதால் இப்பெயர் .....
சுந்தரர்  இங்கு பத்து  சிவாலயங்களை  கட்டினார் என்கிறது புராணம் ...
விநாயகரின்  ஆணைகிணங்க.......

சுந்தரரும்  அவர் சீடர்களும் காவேரியில் வடபால்  உள்ள ஆலயங்களை  தரிசித்துகொண்டு  வந்த பொது பசியால்  அவதிப்பட்டனர் .அப்போது  அந்தணர்  வேடத்தில் வந்த விநாயகர் அவர்களுக்கு  கட்டமுது அளித்தார்.

வந்தது  வினாயகர்  என்பதை  உணர்ந்த சுந்தரர் ,பெரிதும்  மகிழ்ந்து  இந்த உதவிக்கு  என்ன கைம்மாறு செய்வது? என வினவினார் ...

தன  தந்தைக்கு  இங்கு பத்து  சிவாலயங்கள்  அமைக்குமாறு பணித்தார் பிள்ளையார் ...அதன் படி பத்து  சிவாலயங்களை  அமைத்தார்  சுந்தரர்  அம்மையபனுக்கு ...

அதில்  ஒன்று தான் ஒதவநேஸ்வரர் திருகோயில் .....
மூலவர்  மிகப்பெரிய  சுயம்பு திருமேனி ...

நாளைடைவில்  திருகோயில் புதையுண்டு  போனது ......

தன  உறவினரை  பார்க்க வந்த  ஒரு வயதான தம்பதியர் மூலம் ஈசன் தன்னை, ஒரு  மிகப்பெரிய  அரச மரத்தின் அடியில் ,  வெளிப்படுத்தி கொண்டான் ....பிறகே  திருகோயில்  எழுப்பப்பட்டது .
இறைவி அன்னபூரணி ....

தினமும் ஒருகால பூசை நடைபெறும்  இந்த ஆலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் விமரிசையாக  கொண்டாடபடுகிறது...
இழந்த  பொருட்களை  மீட்க இங்கே  நேர்ந்து  கொள்ளலாம் .

சீர்காழி-திருமுல்லைவாசல்  வழித்தடத்தில் எட்டு கிலோ மீட்டரில்  உள்ளது எடமணல் கிராமம் ......



Monday, April 11, 2016

திருமேற்றளிகை  வேம்புநாத பெருமான் 

மேற்றளிகை  என்பது மேற்கு திசையில் அமைந்த  திருகோயில் என்பது  பொருள் ...பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருகோயில்(துர்க்கை கோயில்) மேற்கு திசையில் அமைந்துள்ளது  பிரம்மபுரீஸ்வரர் திருகோயில் ....இத்திருகோயில் சிதிலமடைந்து திருப்பணியை  எதிர்நோக்கியுள்ளது .....

அதன் அருகிலேயே ஒரு மைல் தூரத்தில் அடர்ந்த  வாழைமர  தோப்பினுள் ஆவுடையாருடன்  உயர்ந்த  ஒரு லிங்கத்திருமேனியும் , பாண  லிங்கமாக ஒரு திருமேனியும் வழிபாடற்ற  நிலையில் உள்ளார்கள் .....

அவ்வப்போது அடியார்கள் வந்து இப்பெருமானை வணங்கி செல்கின்றனர் ..

மற்றபடி இப்பெருமான் பூசை புனஸ்காரங்கள் ஏதுமின்றி வானமே  கூரையாக அருள்பாலித்து வருகிறார்...

இப்பெருமான்  எப்போது  கோயில்  காண்பார்? அந்த கைங்கர்யம் கிடைக்கப்போகும் பாக்கியசாலி யார்?  அந்த  இறைவன்  ஒருவரே அறிவார்.


Saturday, April 9, 2016

ஆயிரம்  மலர்களே  மலருங்கள் ...திருவீழிமிழலை 

மஹா விஷ்ணு  ஆயிரம்  மலர்களால்  அர்ச்சித்து தன்  பிரயோக  சக்கரத்தை அடைந்த இடம் .....
ஆயிரமாவது  மலராக தன்  கண் மலரையே பெயர்த்து அர்ச்சித்த இடம் ..
இறைவன்  காலடியில்  இன்றும்  அந்த கண் மலரை  காணலாம் .....

அப்பரும்  சம்பந்தரும்  வாசி தீரவே காசு  நல்குவீர்  என்று  தேவார பாடல்களால் தினம் ஒரு பொற்காசு  பெற்று  மக்களின் பஞ்சம்  நீக்கிய தலம் ...

இறைவன்  காசி யாத்திரைக்கு  செல்லும் கோலத்தில்  காட்சியளிப்பதால் மாப்பிளை  சாமி  எனப்படுகிறார் ...
மகாமண்டபம்  திருமண  மண்டபம் போல் பந்தகாலுடன்  காட்சியளிப்பது  இங்கு மட்டுமே .....

கொடிமரம்  அருகில்  சிவலிங்கம்  அமைந்திருப்பதும்  இங்கே மட்டுமே.

மிகப்பெரிய  சிற்ப வேலைபாடுகள்  நிறைந்த  வௌவால் நெற்றி  மண்டபம் இங்குள்ள சிறப்பம்சம்  ஆகும் ...

கும்பகோணம் ---பூந்தோட்டம்  சாலையில்  பூந்தோட்டம்  அருகே உள்ள திருவீழிமிழலை திருகோயில்  தான்  இத்தகைய  சிறப்புகள்  ஒருங்கே  அமைந்த  மிகப்பெரிய  மாடகோயில் ஆகும் ....

இங்கு வந்து  வணங்குவதால் ஏழ்மை அகலும் ...பொருள்  வரவு , தன வரவு உண்டாகும் .... திருமணம் ஆகாதவர்களுக்கு  திருமணம் கைகூடும். ....




தேவர்களுக்கருளிய  தண்டந்தோட்டத்து  தாண்டவன் 

இறைவன்  தன அடியார்களுக்காகவும் தேவர்களுக்காகவும்  இங்கே  நடன காட்சி  நல்கியதால்  இவ்வூருக்கு  தாண்டவர் தோட்டம் என் பெயர் வழங் கலாயிற்று ...தற்போது  மருவி தண்டம்தோட்டம் எனப்படுகிறது ...
அம்மன்குடி  அருகே ...முருக்கன்குடி வட்டம் ....
அவ்வாறு  ஆடியபோது  அவர் கால் சலங்கை  மணிகள் சிதறியது....அதனை  விநாயக பெருமான் சேகரித்து மறுபடியும்  தன தந்தை  காலில்  கட்டி விடுகிறார்..
இதனால்  இங்குள்ள  விநாயகருக்கு மணிகட்டிய விநாயகர்  என்ற பெயர் ..தனி கோயில் கொண்டு அருளுகிறார் அவர்..
அன்பர்களே....பொதுவாக  விரித்த சடையுடன் காணப்படும்  நம் நடராஜ  பெருமான்   இங்கே  அள்ளி முடித்த  அழகிய  கோலத்துடன் காணப்படுகிறார்..
இது மிகவும் அரிய காட்சி ...

ஆனால்  அன்பர்களே, நாம் கொடுத்து வைக்கவில்லை ...ஆம் .....அந்த அற்புத சிலை  வெளி நாட்டிற்கு கடத்தப்பட்டு விட்டது ......
மேலும்  அகத்தியருக்கு  இங்கே இறைவன் காட்சி அளித்துள்ளார்..அவர் அகஸ்தீஸ்வரர்  என்ற பெயரில்  தனி கோயில்  ஒன்றில் அருள்கிறார் ..
இறைவன் நடன புரீஸ் வர் காண்போர்  மயங்கும்  அற்புத அழகிய  திருமேனி
சுமார் ஆறடி  உயரம்  கொண்டவர்....கண்  இமையாது  பார்க்கலாம் .....

அருகில்  நடார் , அம்மன்குடி , அய்யாவாடி  போன்ற  தன்னிகரற்ற தலங்கள் உள்ளன.  திருநாகேஸ்வரம் அருகில்  தான்  இத்தலமும்  உள்ளது ...

முருக்கன்குடி  வட்டம் ....குடந்தையிலிருந்து  பேருந்து வசதி உண்டு ....

இத்தனை  பெருமைகள் இருந்தாலும் ...அன்பர்களே நம்மிடம் உள்ள குறை  என்னவென்றால்  நாம்  இருக்கும் இடத்தில் உள்ள ஆலயங்களை  நாம்  பொருட்படுத்துவதேயில்லை ....
அயலூருக்கு  சென்று  அதிக பொருட்செலவில்  வரிசையில்  வெகுநேரம்  நின்று கால் கடுக்க தரிசனம்  செய்வோம் .....
ஆனால் பெறற்கரிய  இத்தகைய  திருகோயில்கள்  நம் கண்ணிற்கு புலப்படவே படாது ...

அன்பர்களே  எதற்கும்  கொடுப்பினை  வேண்டும் ...கொடுத்து வைத்தவர்கள்
மட்டுமே  இத்திருகோயிலில் காலை  எடுத்து  வைக்க முடியும் .....

எனவே  அன்பர்களே  கொடுத்து  வைத்தவர்கள்  செல்லுங்கள் .......


Friday, April 8, 2016

சிறப்பு  மிக்க  சிவனாகரம்  திருகோயில் --வடமட்டம் 

அன்பர்களே , கிராமங்கள்  நம் நாட்டின்  கண்கள்  என்றால், அங்கு உள்ள திருகோயில்கள் ,உயிர்நாடியை போன்றது ......

அதனால்  தான்  கோயில்  இல்லை ஊரில்  குடியிருக்க வேண்டாம் ...என்றும் 
திருகோயில் இல்லாத ஊர்  சுடுகாட்டிற்கு  சமமானது என்றும்  ஆன்றோர்கள்  கூறியுள்ளனர் ...

எந்த  இடத்தில்  திருகோயில்கள்  பராமரிக்கப்படவில்லையோ, வழிபாடு இன்றி புறக்கணிக்கப்பட்ட  நிலையில் உள்ளதோ , அப்பகுதி கண்டிப்பாக  செழுமையான  நிலையில்  இருக்காது .

எனவே தான் நம்  நாட்டில்  ஆயிரக்கணக்கான  திருகோயில்கள்  ஆன்றோர்களால்  நிர்மாணிக்கப்பட்டது ..அவர்கள்  தினசரி  திருகோயில்களுக்கு  செல்வதை  தன்  கடமையாக கொண்டிருந்தனர் ..

அன்பர்களே  இதோ உங்களுக்காக   சிவனாகரம்  திருகோயில் பற்றி  தெரிவிக்கிறேன் .....எங்கிருக்கிறது இந்த கோயில் ?  வடமட்டம்  வட்டத்தில் 
உலக புகழ் பெற்ற  கோனேரி ராஜபுரம் அருகில்  உள்ளது சிவனாகரம் .

இவ்விடத்தை   குடந்தை  காரைக்கால்  மார்க்கமாக  அடையலாம் .....வடமட்டத்திற்கு குடந்தையிலிருந்து  பேருந்து  வசதியும் உண்டு ...

வடமட்டத்திலிருந்து  நடந்தே  சென்று  விடலாம் ....மிக பழமை வாய்ந்த ஆலயம் .. அருகிலேயே  களபாகரம் கைலாசநாதர் கோயில் உள்ளது .
கோனேரிராஜபுரம் திருகோயில் இங்கிருந்து வசதி யாக சென்று  வரலாம் ..

இன்னும்  என்ன யோசனை ? உடனே கிளம்புங்கள் ....கைலாசநாதர்  காத்திருக்கிறார் .....


Wednesday, April 6, 2016

கரவீரம் ----கரவீர நாதர் --திருவாரூர் 

சிவபெருமான்  தேவ  கன்னியரின்  வேண்டுகோளுகிணங்க இங்கு  தானே லிங்கம் அமைத்து  தந்தார் ....

அலரி  தல விருட்ஷம் .....கௌதம  முனிவர்  தான்   இங்கு  தல விருட்ஷமாக  விளங்க வேண்டும்  எண்டு இறைவனை  கேட்டு  பெற்றார் ....

எனவே இங்கு அமாவாசை தினத்தன்று பெண்கள்  இங்குள்ள கௌதம மகரிஷி  ஜீவ சமாதியில் உள்ள தல விருட்ஷத்திற்கு  தண்ணீர்  ஊற்றி  வணங்கிய  பின்னரே , இறைவனை  வழிபடுகின்றனர் .....

அவ்வாறு செய்தால்  அடுத்த அமாவாசைக்குள்  திருமணம்  நிச்சயமாகிவிடும் என்ற நம்பிக்கை  நிலவுகிறது ...

இங்கு  ஒரு இரவு தங்கி   மறுநாள்  இறைவனை  வணங்கினால் , சகல விதமான க்ரஹ தோஷங்களில்  இருந்து  விடுதலை  பெறலாம் ...

பிரம்மபுரீஸ்வரர்  என்றும் இப்பெருமான் அழைக்கப்படுகிறார் ....

மிக  பிரமாண்டமான  வடிவத்தில்  இங்கு  இறைவன்  அருள்கிறார் ....
அன்பர்களே.... தவற விடாதீர்கள் இத்தலத்தை  தரிசிக்க ....
எப்படி செல்வது?

குடந்தை  --திருவாரூர்  மார்க்கத்தில் உள்ளது  கரவீரம்  பேருந்து நிறுத்தம் .
பிரதான  சாலையிலேயே  திருகோயில்  அமைந்துள்ளது .



Tuesday, April 5, 2016

இலவனசூர்கோட்டை குடிகொண்ட இறைவன் 
லிங்கதிருமேனியில் அர்த்தநாரீஸ்வரன் 

அன்பர்களே , பெயருக்கு  ஏற்றாற்போல் மிக பெரிய  அரண்மனை போல் அமைந்துள்ளது  இத்திருகோயில் ...

மிக பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் இத்தலத்தில் அனைத்து  தெய்வ திருமேனிகளுக்கும்  தனி தனியே சன்னதி  அமைந்துள்ளது .....

கோட்டை  கதவுகளை திறந்து  மூடுவதற்கே பிரம்ம  பிரயத்தனம் தேவைப்படும் ....

எங்கே உள்ளது?

விழுப்புரம்  மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகே, சேலம் மாவட்டம் ஆத்தூர்  செல்லும்  சாலையில் இத்திருகோயில் அமைந்துள்ளது ....

கருவறையில்  அர்த்தநாரீஸ்வரர் மிகப்பெரிய  லிங்க திருமேனி கொண்டு சேவை சாதிக்கிறார் ....
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை  போன்று  அல்லாமல்  இவர் லிங்கத்திருமேனி  கொண்டு  விளங்குவது  குறிப்பிட தக்கது ...

இப்பெருமானை  ஏராளமான  ரிஷிகள் , சித்தர்கள் , முனிவர்கள் வணங்கியுள்ளனர் ....

தங்கள்  தவ வலிமையை பெருக்கி கொண்டுள்ளனர்....

அன்பர்களே  வாழ்வில்  ஒருமுறையாவது இங்கு உறையும்  பெருமானை 
வணங்குவது  நம் பிறவி  பயன் ......மறந்துவிடாதீர்கள்.....குடும்பததுடன் செல்லுங்கள் ...குதூகலத்துடன் உங்களை  வாழ வைப்பது  அவன் பொறுப்பு ..


Monday, April 4, 2016

துயர்  தீர்க்கும் திருபுடைமருதூர் 
துன்பங்கள் யாவும்  தவிடு பொடியாகும் பரிகார தலம் ...

தலை  மருது, இடைமருது, கடைமருது  என்பார்கள்
அவை முறையே  ஸ்ரீசைலம் , தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் 
திருநெல்வேலி மாவட்டம்  திருபுடைமருதூர் ஆகும் .....

கருவூர் சித்தருக்காக இறைவன்  தலை சாய்த்து இங்கே அருள்கிறார் ...
அவர்  தரிசனம் செய்ய வந்தபோது தாமிரபரணி  ஆற்றில்  வெள்ளம்  ஏற்பட்டது ..
திகைத்து நின்ற அவர்  அக்கரையிலிருந்தே  நாரும்பூநாதா......என்று  அழைக்க 
இறைவன் தன தலை சாய்த்து செவிமடுத்தான் ...அவன் அருளால்  தாமிரபரணி  ஆறு  வழிவிட  கருவூரார் இறைவனை  தரிசனம்  செய்தார் ..

சுவாமி  மீது  வெட்டுபட்ட தடம் , மற்றும்  மான் மீது  எய்த  அம்பு பட்ட தடம் உள்ளது ....

புடார்ஜுநேஸ்வரர் என்பது இத்தல இறைவன் நாமம் .....

மருத  மரம்  தல விருட்ஷம் ..

தீராத  குடும்ப  கஷ்டங்கள் நீங்க ,  திருமண தடை புத்திர  தோஷம்  நீங்க இங்கே  வந்து  பிரார்த்தனை  செய்து  கொள்ளலாம். அதுமட்டுமல்ல அன்பர்களே...

காசிக்கு  நிகரான  தலம் என்று இறைவன் தன்  திருவாக்கினாலே உணர்த்திய தலம் இது ஒன்று தான் ..

வாருங்கள்...உங்கள் துன்பம் பறந்தோடுவதை  அனுபவத்தில்  உணர்வீர்கள் ..


Sunday, April 3, 2016

அண்டியவர்களுக்கு  உணவளித்த  ஆண்டார்பந்தி கிராமம் 

 திருவீழி மிழலையின் வரலாறோடு  தொடர்புடையது  ஆண்டார்பந்தி வரலாறு. 
அப்பர் பெருமான்  திருவீழிமிழலை வந்த  அடியார்களுக்கு இங்கே  விருந்து அளித்ததால் இப்பெயர்  பெற்றது ...

சமையல்  செய்பவர்கள்  நிறைந்த ஊர் ....

இங்குள்ள இறைவன் உலா திருமேனி கையில் தராசும், அம்பிகை கையில் படியும் கொண்டு விளங்குகிறது. தற்போது பழம் பெருமைகள் மட்டுமே எஞ்சி நிற்க, கோயில் நடமாட்டமே இல்லாமல் புறாக்களின் உரையாடல்களை  மட்டும் கேட்ட வண்ணம் அமர்ந்திருக்கின்றார் இறைவன்.
பக்தர்கள்  வருகை  அறவே இல்லை ..
இறைவன்-கைலாசநாதர் 
இறைவி- காமாட்சி 


எங்கே  உள்ளது ?

திருவாரூர் மாவட்டம் , நன்னிலம்  வட்டம்......பூந்தோட்டம்  செல்லும்  சாலையில்  உள்ளது  ஆண்டார்பந்தி .....பிரதான  சாலையிலிருந்து இடது புரம் ஒரு  கிலோ  மீட்டர் 
பயணிக்க  வேண்டும் ...

அருகே உள்ள ஒரு  வீட்டில்  கோவில்  சாவி  உள்ளது .....தரிசனம் செய்ய  உதவுவார்கள் ..


மலைக்க  வைக்கும் மலையம்பாக்கம் 

அன்பர்களே  மாங்காட்டிற்கு வெகு அருகில் இருக்கும் இடம் மலையம்பாக்கம் 
மாங்காடு --குன்றத்தூர்  சாலையில் உள்ளது சிக்கராயபுரம் 
இங்கிருந்து வலது கை பக்கம் திரும்பி பயணித்தால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மலையம்பாக்கம் ...
ஜல்லிக்காக மலையை  குடைந்து குடைந்து பாதை மிக குறுகலாக  உள்ளதால் கவனத்துடன்  செல்வது  அவசியம்.

இங்கு பலகாலம் பூசைகள் இன்றி வெட்ட வெளியில் வீற்றிருந்த  பெருமானை அன்பர்கள், சிவநேய செல்வர்கள்  பொதுமக்கள்  உதவியுடன் அழகானதொரு திருகோயில் அமைத்து, தற்போது பிரதோஷம் உட்பட அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது ...
பெருமான் மிக அழகிய கம்பீரமான தோற்றம் உடையவர் ....பருத்த திருமேனி ...அன்பர்கள்  வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிக்க வேண்டும் ..அத்தனை அழகு பிரான் ... படத்தில் நீங்கள் காண்பது  சிவராத்திரி  வழிபாடு ....