Thursday, September 8, 2016

மங்காத  புகழ் கொண்ட மதுபானிதிருக்கோயில் 

---பீஹார் 


பீகார் மாநிலத்தின் சரித்திர புகழ் வாய்ந்த மதுபானி மாவட்டத்தின் , மாங்க்ருணி (Mangrauni ) கிராமம்.இங்குள்ள ஏகாதச ருத்ர மகாதேவ ஆலயத்திற்கு 1997 ஆம் ஆண்டு பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி வருகை புரிந்தார்.
ஏகாதசம் என்றால் 11. இங்குள்ள 11 சிவலிங்க மூர்த்தங்களை கண்டு மிகுந்த ஆச்சர்யம் அடைந்த அவர் இது உலகிலேயே கான்பதற்கரிய திருத்தலம் என திருவாய் மலர்ந்தருளினார்.


சுற்றிலும்  10 லிங்கத்திருமேனிகள்   சூழ நடுவில்  மிகப்பெரிய  லிங்கத்திருமேனியுடன்  அற்புதமாக விளங்குகிறார்கள்  ஏகாதச ருத்திரர்கள் ..

இத்திருத்தலம் உலகமெங்கும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது
 



Tuesday, September 6, 2016

இல்லறம்  நல்லறமாக வாருங்கள்  கொடியலூர் 

பிரிந்திருந்த  கணவன் மனைவி  இத்தலத்தில் ஒன்று பட்டதால் கூடியலூர் என்பதே மருவி  கொடியலூர்  ஆயிற்று ......

எந்த  தம்பதியர் அவர்?   சூரியனும்  உஷா தேவியும்  தான்  அவர்கள்..விதிவசத்தால்  கணவன் மீது  கோபமுற்ற  
அவன் மனைவி  உஷா , பூலோகம் அடைந்து  பல  தலங்களில்  சிவபெருமானை  பூசித்து வந்தாள் ....

கொடியலூர் அகஸ்தீஸ்வரர்  அருளால்  சூரியன்  இத்தலத்தை  அடைய  இறைவன்  கருணையினால்  வாழ்க்கையில்  இணைந்த  இவ்விருவருக்கும்  சனி பகவான் ,  யமதர்மராஜன் ஆகிய  புத்திரர்கள் பிறந்தனர்...

சனி பகவான் பிறந்த  தலமான  இத்தலத்தை  அடைபவர்கள் , வணங்குபவர்கள் , ஏழரை  , அர்த்தாஷ்டம சனி 
கண்ட சனி எதுவாக இருப்பினும் ,  கவலை இன்றி  நிம்மதியாக  இருக்கலாம் .......

இது  இறைவன்  அகஸ்தீஸ்வரர்  வாக்காகும் .......

மேலும்  கணவன் மனைவி  பிணக்கு  பிரிவு  ,  சஞ்சலம்  எதுவாக இருந்தாலும்  இத்தலம்  வாருங்கள்  
அகஸ்தீஸ்வரரையும், ஆனந்த  வல்லி   அம்மையையும்  சனிபகவானையும்  ,  ஒரு கையில்  பாச கயிறு  ,
ஒரு கையில்  தண்டம் ஏந்தியிருக்கும்  எம தர்மராஜரையும்  வணங்கி பலன் பெறுங்கள் .....

எங்குள்ளது  என்பதையும் சொல்லிவிடுகிறேன் ....... 

நாகை  மாவட்டம்  பேரளம் அருகில்  திருமீயச்சூர் பாடல் பெற்ற  தலம் உள்ளது அல்லவா?
கொலுசுகள் அணிந்த  லலிதாம்பிகை  கோயில்  .......இங்கிருந்து  சுமார் 1 கிலோ மீட்டர்  தூரம் தான் ...

நடந்தே  கூட   சென்று  விடலாம் ....

குருக்களும்  திருமீயச்சூர்  கோயில்  வாசலிலேயே  வாசம்  செய்கிறார் ,  கையோடு அழைத்து சென்று தரிசனம் செய்யுங்கள் ....... அன்பர்களே....தவற  விடாதீர்கள்  ....கோடியில்  ஒரு  ஊர்  இது ......







Saturday, September 3, 2016

மழலை  பாக்கியம் அருளும் மகாதேவன் 

அன்பர்களே.....மழலை வரம் அருளும் மகாதேவன் வீற்றிருக்கும் (ஒருவராக அல்ல இருவராக ) திருக்கோயில் குறித்து பதிவு செய்திருந்தேன் .....பல்லவர் சோழர்களால் திருப்பணி செய்யப்பட்டு ,முகலாய அரசர்களால் 
நிர்மூலமாக்கப்பட்ட இத்தலம் தஞ்சை மாவட்டம் , கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் அருகில் சென்னியமங்கலம்  என்னும் கிராமத்தில்  உள்ளது ..இறங்குமிடம் : மாடாகுடி பாலம் 
வலங்கைமான் வழி  

இக்கிராமம் வேதியர்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட ஊர் ......வடக்கில் திருமலை ராஜன் ஆறும் , தெற்கில் முடிகொண்டான் ஆறும் ஓடுவது  இத்தலத்தின் சிறப்பு ....
 இங்கு இரு லிங்கத்திருமேனிகள்  கண்டெடுக்கப்பட்டன  சில ஆண்டுகள் முன்பு ...

ஸ்ரீ  அருணாச்சலேஸ்வரர்  ஸ்ரீ சொக்கநாதர் என இப்பெருமான்கள் பெயரிடப்பட்டுள்ளனர் ....
அருகில்  வசித்து  வரும்  அன்பர் திரு சங்கர் இப்பெருமான்களை பூசை செய்து  கவனித்து  வந்தார்..

சென்னையை சேர்ந்த  திருப்பணி செம்மல்  திருமதி  மஹாலக்ஷ்மி சுப்ரமணியன் அவர்களின் பெரும் பங்களிப்புடன் தற்போது , திருக்கோயில்  கட்டி முடிக்கப்பட்டு வரும்  ஐப்பசி  மாதம்  26 ஆம் தேதி 
(11--11--201`6)   வெள்ளிக்கிழமை  காலை  9.00 மணிக்கு மேல்  10.30  மணிக்குள் குடமுழுக்கு நடத்த சான்றோர்களால் உத்தேசிக்கப்பட்டுள்ளது .....

அனைவரும்  திரளாக  கலந்து  கொண்டு  பலனடைய வேண்டுகிறேன் ....

மற்றுமொரு  வேண்டுகோள் .... அன்பர்களே ....இன்னமும்  தரை பணி  நிறைவடையவில்லை .....குடமுழுக்கு 
செலவினங்களும் சேர்ந்து  3,00,000 ரூ  தேவைப்படுகிறது ....

நன்கொடைகள்  மூலமாகத்தான் இத்திருக்கோயில்  திருப்பணி நிறைவேற்றப்பட்டு வருகிறது ...
நீங்கள்  உதவ விரும்பினால் கீழ்கண்ட வங்கி  மூலம் பணம் செலுத்தலாம் .....
பொருள் உதவியாகவும்  அளிக்கலாம் ......அலைபேசி எண்கள்  அளித்துளேன் ...
அன்ன  தானமும்  உண்டு...

SRI  UNNAMULAI AMBIKA SAMETHA SRI ARUNACHALESWARA ALAYA  ARAKKATALAI,
AC NO : 500101010801777, IFSC CODE : CIUB0000022
CITY  UNION BANK , VANLANGAIMAN BRANCH 

Contact No....G. Shankar 
94430 86587 &  94429 29740







Wednesday, August 31, 2016

மகான்கள் வழிபட்ட மகத்தான திருக்கோயில் 

மகான்களாலும் , ரிஷிகளாலும் , மாபெரும் சித்த புருஷர்களாலும் வணங்கப்பெற்ற லிங்கத்திருமேனிகள் நமக்கு 
கிடைக்குமாயின் அதை விட நாம் பெரும்  பாக்கியம் வேறென்ன உள்ளது? 

அன்பர்களே, அப்படி வாராது வந்த மாமணி போல் நமக்கு  , நாம் உய்வதற்கு கிடைத்த பொக்கிஷமாக 
வந்தவர்தான் திருவாரூர் ----மன்னார்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள கமலாபுரம் என்னும் இடத்தில் 
கோயில் கொண்டருளும் தியான லிங்கேஸ்வர பெருமான் ....

கம்பீரமாக கோயில் கொண்டு நம் மனதை கொள்ளை கொள்கிறார் .....

இப்பெருமானுக்கு  மேற்கூரை வேயப்பட்டுள்ளது ......

அருகில் உள்ள அன்பர்களால் பிரதோஷ பூசையும் நடைபெறுகிறது ......

விரைவில் அவன் அருளாலே அவன் திருக்கோயில் அமைய வேண்டும் .....
என்பதே ஆன்மீக அன்பர்களின் எதிர்ப்பார்ப்பு ....

சிவாய நம .....


Sunday, August 28, 2016

அர்ஜுனன் மங்கலம் ----அச்சுதமங்கலம் 

தொலைந்த பொருட்களை மீட்க -----இழந்த செல்வங்களை திரும்ப  பெற ....

வழிபட வேண்டிய  விஸ்வநாதர் திருக்கோயில் ....


அச்சுதமங்கலம் கோயில்கள்
1.காசி விஸ்வநாதர் கோயில்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் காசி விஸ்வநாதரை வழிபட, வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
அர்ச்சுனன் தங்கி இருந்து வழிபட்டதால் "அர்ஜுன மங்கலம்" என்பது நாளடைவில் அச்சுதமங்கலம் என மருவி உள்ளது.


சென்று தரிசனம் செய்யுங்கள்.....பலன் பெறுங்கள்...

காண்டக்ட்: R .மோகன் 9524348725
 





Wednesday, August 24, 2016

எல்லாமே இரண்டு..........
 
அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர்- 600 019. திருவள்ளூர் மாவட்டம்.

திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது.

சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது.
 
ஊழி காலத்திலும் அழியாமல் இருக்கும் தலம்  இது ஒன்றேயாகும்......

தொண்டை மண்டல தலங்களில்  இங்கு மட்டுமே அதிகமான லிங்கத்திருமேனிகள் அமைந்துள்ளன.


நட்சத்திர லிங்கத்திருமேனிகள் :  27 நட்சத்திர காரர்களுக்கும் உரிய சிவலிங்க திருமேனிகள் இங்கு அமைந்துள்ளது ...அவரவர் நட்சத்திரம்  அன்று இங்கு வந்து அதற்குரிய லிங்கத்திருமேனிக்கு அர்ச்சனை செய்து கொள்கிறார்கள்.  


Sunday, August 21, 2016

வேதங்கள் வழிபட்ட வேத நாயகன்.....
மறைநூல் வல்லோர்கள்  போற்றும் திருமறைச்சேரி (மாறச்சேரி )

வேதங்கள் மட்டுமல்ல தேவாதி தேவர்கள்  வழிபட்ட தலம் .... குறிப்பாக சூரியன் வணங்கி பேரு பெற்ற தலம் ...
ராகு வணங்கிய தலம்  என்று ஏராளமான பெருமைகளை உடைய இத்தலம் இருக்குமிடம் ......நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள  மணலி என்னும் இடத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமறைச்சேரி என்னும் கிராமமாகும் ....
மணலியிலிருந்து ஆட்டோ வசதி உண்டு.....

வேத நாயகன், வேதியர் நாயகன் நாகநாதன் என்னும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளான் ...
அன்னை சுந்தர நாயகி ...பெயருக்கு ஏற்றாற்போல் கொள்ளை அழகு .......மனதை கொள்ளை கொள்ளும் அழகு ..

ஜாதக ரீதியாக சூரியன் பலம் குன்றி இருப்பவர்கள் இங்கு வந்து தோஷ பரிகாரம் செய்து  கொள்ளலாம் ....அது மட்டுமல்ல நாக தோஷம் நீக்கும் சிறந்த பரிகார தலமும் இதுவாகும்....
ஆனால் இத்திருக்கோயிலின் இன்றைய நிலை கண்ணில் நீரை வரவழைப்பதாக உள்ளது .....
இந்நிலை கண்டு பொறுக்காத கிராம மக்கள் , ஆன்மீக அன்பர்கள் இத்திருக்கோயிலை ஏற்பாடு பட்டாவது 
புனரைமைக்க முயற்சித்து வருகின்றனர் .....பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இத்திருக்கோயிலை பற்றி விரிவாக சக்தி விகடன் பத்திரிகையிலும் வந்துள்ளது ....

பெறற்கரிய பொக்கிஷமான இத்திருக்கோயிலை நீங்கள் வந்து வணங்க வேண்டாமா? 

திருப்பணியில் உங்கள் பங்கும் இருக்க வேண்டாமா?

இத்திருக்கோயிலை நீங்கள் தரிசிக்க விரும்பினால் , திருப்பணியில் பங்கு பெற விரும்பினால் கீழ் கண்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் ..
7708240152 & 9840063124






Saturday, August 20, 2016

பாரிவாக்கம் பெருமானுக்கு வழி பிறக்குமா? 

நல்லதோர் வீணை செய்தே அதை நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ ?

இப்படித்தான் தோன்றியது பெருமான் புதர் மண்டிய  ம(மா)க்கள்  இயற்கை உபாதைகள் கழிக்கும் ஒரு இடத்தில் நான் பார்த்தபோது !!!!!

எண்ணில் பாவிகள் எந்தை ஈசனின் நண்ணல் அறியாமல் நழுவுகின்றார்களே !!!!!

இடம்: பாரிவாக்கம் ....திருவள்ளூர் மாவட்டம் ...பட்டாபிராம் ரயில் நிலையத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள ஓர் சிற்றூர்  பாரிவாக்கம் ....
இங்கு பிரதான சாலையின் ஓரம்  ஒரு டெலிபோன்  ஆண்டெனா பின்புறம் உள்ள வெட்ட வெளியில் வீற்றிருக்கிறார் இவர்....

இங்கு  ஒரு சிவஸ்தலமும் , மற்றும் சிறிது சிறிதாக நிறைய ஆலயங்களும் உள்ளன.....
ஆனால் இப்பெருமானை கவனிப்பதற்கு தான் ஆள் இல்லை .....

சென்னையை சேர்ந்த கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபையினர் மூலம் இவர் தன்னை வெளிப்படுத்தி கொண்டார்....

பல காலமாக இவர் நிலை இப்படித்தான் உள்ளது ....
பெருமான் நல்ல உயர்ந்த திருமேனியராய் சேவை சாதிக்கிறார்.

அருகில் உள்ள திருக்கோயில்களில் இவர் பிரதிஷ்டை செய்து வழிபாட்டிற்கு கொண்டு வர ஏன் நல்ல உள்ளங்கள் முயற்சி செய்ய கூடாது ?



Thursday, August 18, 2016

.குடமுழுக்கில் கலந்துகொள்ள திரளாக வாருங்கள் அன்பர்களே....

அரிய சக்தி வாய்ந்த அற்புத திருக்கோயில் ....


1. மண்ணியாற்றங்கரையில் சுயம்புவாய் வீற்றிருக்கும் பெருமான் .
2. பைரவர் ஆராதனை (தேய்பிறை அஷ்டமி ) இங்கு தான் முதன் முதலில் தோன்றியது ...
3. அன்னை பார்வதி மானுட பிறவி எடுத்து இறைவனை தேடி அலைந்த தலம்  இது...
அப்படி தேடும்போது பொன் நகைகளை அடையாளத்திற்காக விட்டு சென்று பின் அதனை பின்பற்றி போனதால் இத்தலம் பொன்பற்றி மருவி பொன்பேத்தி என்று அழைக்கப்படுகிறது இன்று.

4. புகழ் பெற்ற தேன்  உறிஞ்சும் விநாயகர் எழுந்தருளி அருள்பாலிக்கும் தேவார பாடல் பெற்ற திருபுறம்புயம் திருத்தலத்திற்கு வெகு அருகாமையில் 1 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது பொன்பேத்தி ஸ்ரீ அகிலாடேஸ்வரி சமேத பவானீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் ...

5. ஸ்வர்ண ஆரண்யம் , ஸ்வர்ண பூமி , ஸ்வர்ண காடு  என்றெல்லாம் சிறப்பு பெயரால் அழைக்கப்படும் இடம்..
பிதுர் தர்ப்பணம் செய்ய காசிக்கு இணையான தலம் இது ....

6. இங்கு அஷ்டமி அன்று பைரவ தரிசனம் செய்ய நம்மை சூழ்ந்திருக்கும்  அனைத்து ஆபத்துகளும் நீங்கும் ....
இவரிடம் சமர்ப்பித்து அன்பர்கள் பொன் வெள்ளி அல்லது தாமிரத்தினால் ஆன நாய்க்காசுகளை கயிற்றில் கோர்த்து கையிலோ இடுப்பிலோ ஆண் , பெண் இருபாலாரும் அணிந்து கொள்ள, மகத்தான காப்பு சக்தியாக விளங்கி காப்பாற்றும் ....

இத்தலத்தை பற்றியும் அன்பர் திரு குருமூர்த்தி அவர்களை  பற்றியும் அன்பர்களே ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன் ...
அத்தகைய கிடைத்தற்கரிய  இந்த திருக்கோயிலை இவர்  கிராம மக்கள் மற்றும் திருப்பணி செம்மல் சென்னை திரு மஹாலக்ஷ்மி சுப்ரமணியன் அவர்களின் பேருதவியோடு செப்பனிட்டு வரும் ஆவணி திங்கள் 19 ஆம் நாள் அதாவது 4/09/2016 ஞாயிறு அன்று மஹா  கும்பாபிஷேகம் நடத்த உள்ளார் ....

அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்... மற்றும் குடமுழுக்கு மற்றும் எஞ்சிய திருப்பணிகளை முடிக்க 4 லட்சம் வரை உதவி தேவைப்படுகிறது ,,,,,,

அன்பர்கள்  நன்கொடை வரவேற்கப்படுகிறது .....

தொடர்பு எண்கள் : 97900 76726, 9585152811
வழித்தடம் : குடந்தை ---திருப்புறம்பியம் பேருந்து எண்  6,18,65,69







காசிக்கு வீசம் அதிகமான கங்கை வராக நதீஸ்வ்ரர் திருக்கோயில் , திருக்காஞ்சி , புதுச்சேரி 

அன்பர்களே, வேத விற்பன்னரான அந்தணர் ஒருவர் தன் தந்தையின் அஸ்தியினை கரைப்பதற்காக சீடன் ஒருவனுடன் காசியை நோக்கி பயணப்பட்டார் .....வழியில் இத்தலத்தை அடைந்தபோது , சீடனிடம் அஸ்தி அடங்கிய கலசத்தை கொடுத்து விட்டு நித்யானுஷ்டானங்களை அனுஷ்டிக்க சென்றார் ...

கலசத்தினுள் என்ன உள்ளது என்று அறிந்து கொள்ள முற்பட்ட சீடன் அதனை திறந்து பார்க்க கலசத்தில் பூக்கள் இருப்பதை பார்த்தான்....

பூக்களை எடுத்துக்கொண்டு  ஏன் அவ்வளவு தூரம் பயணிக்கிறார் குருநாதர் ? அதை அவரிடமே கேட்க அதிர்ச்சியடைந்த அவர் கலசத்தை திறந்து பார்த்தார்....பூக்களே நிரம்பியிருந்தன ....

அதிசயித்த அவர் இத்திருத்தலத்தின் பெருமையை உணர்ந்து அங்கேயே தன் தந்தையின் கடன்களை முடித்து கொண்டு திரும்பினர்....

வரலாற்று பெருமையும் , புராதன சிறப்பும் ஒருங்கே வாய்ந்த இத்தகைய அரிய தலம் தான் , புதுச்சேரி மாநிலத்தின் புகழ் மிக்க தலங்களுள் ஒன்றான கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோயில் ஆகும்.....

மூலவர் மிகப்பெரிய 16 பட்டைகள் கொண்ட ஷோடச லிங்கம் ஆகும்.....

பல்வேறு காலா கட்டங்களில் பல்வேறு மன்னர்களால் திருப்பணி  செய்யப்பட்ட இத்திருக்கோயில் காலமாற்றங்களினால் சீர்குலைந்தது .....

தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது இத்திருக்கோயில் ....

நீத்தார் கடன் புரிவதற்கு காசிக்கு நிகரான ஒப்பற்ற தலமாகும் திருக்காஞ்சி ......
புதுச்சேரியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்காஞ்சி 
கொடுத்து வைத்தவர்கள் தரிசனம் செய்ய தயாராகுங்கள் ......