Tuesday, September 6, 2016

இல்லறம்  நல்லறமாக வாருங்கள்  கொடியலூர் 

பிரிந்திருந்த  கணவன் மனைவி  இத்தலத்தில் ஒன்று பட்டதால் கூடியலூர் என்பதே மருவி  கொடியலூர்  ஆயிற்று ......

எந்த  தம்பதியர் அவர்?   சூரியனும்  உஷா தேவியும்  தான்  அவர்கள்..விதிவசத்தால்  கணவன் மீது  கோபமுற்ற  
அவன் மனைவி  உஷா , பூலோகம் அடைந்து  பல  தலங்களில்  சிவபெருமானை  பூசித்து வந்தாள் ....

கொடியலூர் அகஸ்தீஸ்வரர்  அருளால்  சூரியன்  இத்தலத்தை  அடைய  இறைவன்  கருணையினால்  வாழ்க்கையில்  இணைந்த  இவ்விருவருக்கும்  சனி பகவான் ,  யமதர்மராஜன் ஆகிய  புத்திரர்கள் பிறந்தனர்...

சனி பகவான் பிறந்த  தலமான  இத்தலத்தை  அடைபவர்கள் , வணங்குபவர்கள் , ஏழரை  , அர்த்தாஷ்டம சனி 
கண்ட சனி எதுவாக இருப்பினும் ,  கவலை இன்றி  நிம்மதியாக  இருக்கலாம் .......

இது  இறைவன்  அகஸ்தீஸ்வரர்  வாக்காகும் .......

மேலும்  கணவன் மனைவி  பிணக்கு  பிரிவு  ,  சஞ்சலம்  எதுவாக இருந்தாலும்  இத்தலம்  வாருங்கள்  
அகஸ்தீஸ்வரரையும், ஆனந்த  வல்லி   அம்மையையும்  சனிபகவானையும்  ,  ஒரு கையில்  பாச கயிறு  ,
ஒரு கையில்  தண்டம் ஏந்தியிருக்கும்  எம தர்மராஜரையும்  வணங்கி பலன் பெறுங்கள் .....

எங்குள்ளது  என்பதையும் சொல்லிவிடுகிறேன் ....... 

நாகை  மாவட்டம்  பேரளம் அருகில்  திருமீயச்சூர் பாடல் பெற்ற  தலம் உள்ளது அல்லவா?
கொலுசுகள் அணிந்த  லலிதாம்பிகை  கோயில்  .......இங்கிருந்து  சுமார் 1 கிலோ மீட்டர்  தூரம் தான் ...

நடந்தே  கூட   சென்று  விடலாம் ....

குருக்களும்  திருமீயச்சூர்  கோயில்  வாசலிலேயே  வாசம்  செய்கிறார் ,  கையோடு அழைத்து சென்று தரிசனம் செய்யுங்கள் ....... அன்பர்களே....தவற  விடாதீர்கள்  ....கோடியில்  ஒரு  ஊர்  இது ......







No comments:

Post a Comment