Wednesday, September 21, 2016

கட்டளைக் கல்லால் ஆன ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கத்திருமேனி !!!
உலகிலேயே கட்டளைக் கல்லால் ஆன ஒரே சிவலிங்கம் !!!
அருள்மிகு நீலகண்டர் திருக்கோயில்,கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) வளாகம்,உதயப்பூர், இராஜஸ்தான்.
முதற்கண் ,கட்டளைக் கல் என்றால் என்ன என்பதைப் பாப்போம் .பொன் உரசும் கல்தான் கட்டளைக்கல்.. சங்க இலக்கியங்களில்,திருக்குறள் உட்பட பல நூல்களில் இந்த சொல் பயின்று வருகிறது.தங்கத்தின் மாற்றை உரசிப் பார்த்து,தரத்தைக் காணும் கல்தான் கட்டளைக்கல்.[பொன் உரசும் கல்.]
இந்த கட்டளைக்கல்லால் ஆன ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கத்திருமேனி, கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) வளாகத்தில்,அருள்மிகு நீலகண்டர் திருக்கோயிலில் உள்ளது.சிவப்பரம்பொருளின் கருணையின் திரு வடிவமாக விளங்குகின்ற நஞ்சுண்ட அவரின் திருநீலகண்டத்தின் நிறம் போலவே ,அடர் நீலநிறக்கல்லால் அமைந்த சிவலிங்கத்திருமேனி இது. பீடம்,ஆவுடையார்,பாணம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரே கட்டளைக் கல்லால் அமைக்கப்பட்ட ஆறு அடி உயரத் திருமேனி இது.

வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆன்மிக தாகம் கொண்டோருக்கும் அற்புத அனுபவத்தைத் தரும் தலம் இந்த கோட்டை..
கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் மலைக்கோட்டைகளுள் ஒன்றாகும். 15 ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மேவார் மன்னர் கட்டிய இக்கோட்டை உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. உலகின் மிக நீளமான சுவர்களில் இரண்டாவதான இதனை உலக பாரம்பரியக் குழு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது..
கும்பல்கர் கோட்டை பதின்மூன்று சிகரங்களாலும், காவல் கோபுரங்களாலும், கொத்தளங்களாலும் சூழப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரவல்லி மலைத்தொடரில் முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் நீண்டு செல்கிறது.
பதினைந்து அடி தடிமன் கொண்ட கோட்டைச்சுவர். நாற்பதடி உயரம். அது முகப்பில் பிரம்மாண்டமான நீர்த்தாழிகளை வரிசையாக வைத்தது போல வளைவு வளைவாக நின்றது. கனத்த கருங்கற்களால் ஆன கோட்டை
இதன் நீளமும், வளைந்து செல்லும் சுவர்களின் கட்டிட பாணியும் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தக் கோட்டையின் சுவர், சீனப்பெருஞ்சுவருக்கு பிறகு உலகின் மிக நீளமான சுவராக கருதப்படுகிறது.
மேலும் இந்தக் கோட்டையில் மகாராண பதே சிங் எனும் மன்னரால் கவிகை மாடங்களுடன் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் உள்ளது.
ராணா பிரதாப் சிங் அங்குதான் பிறந்தார். ஆகவே அது ராஜபுத்திரர்களுக்கு ஒரு புனிதத் தலம்போல.
ராணா கும்பா அங்கே நூற்றியெட்டு சமணக் கோயில்களை மீண்டும் கட்டினார். சிவன் காளி விஷ்ணு கோயில்களையும் கட்டினார்.



No comments:

Post a Comment