Thursday, September 29, 2016

மகாளய பட்சம் ஏன் அனுஷ்டிக்க வேண்டும் ....?


பிதுர்களின் ஆசீர்வாதம் என்பது வங்கியில் நாம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கை போன்றது ...
தக்க சமயத்தில் நமக்கு கைகொடுக்கும் ....ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் .....

அவர்களின் பூத உடல் இல்லை  என்றாலும் அவர்களின் ஆன்மா நம்மை பற்றி சிந்தித்து கொண்டே தான் இருக்கும் 
நம் சந்ததியினர் நம்மை பற்றி சிந்திக்கிறார்களா? என்பது அவர்களின் கவலைகளில் ஒன்று..

சந்ததியினரின் மன நிலை பாதிக்கப்படுவது , ஊனமுற்ற சந்ததியினர் , குடும்பத்தில் அடிக்கடி நிகழும் தற்கொலைகள் , மழலை பாக்கியமின்மை இவற்றிற்கு பிதுர்களின் கருணை இல்லாததே காரண மென்று கூறப்படுகிறது .......அன்பர்களே ...இதுவரை பிதுர் கடமைகளை சரிவர நிறைவேற்றாதவர்கள் கூட,
சில தலங்களுக்கு சென்று அதற்கான பரிகாரம் செய்து வரலாம் .....
 இதனால் அவர்களின் அருள் ஆசி கிடைக்கும் ....
திருவாரூர் மாவட்டம் , கங்களாஞ்சேரி வழியாக , நாகை செல்லும் பாதையில் உள்ளது சனி ப்ரீதி 
தலமான , சனீஸ்வர வாசல் எனப்படும் காரையூர் .....

இங்குள்ளது  சங்கர நாராயணி சமேத சங்கர நாராயணர் திருக்கோயில் .....
இங்கு எழுந்தருளியிருக்கும் சனி பகவான் அனுகிரக மூர்த்தியாக விளங்கி , அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கி அருள் புரிகிறார்......அது மட்டுமில்லாமல் இத்தலம் சிறந்த பிதுர் தோஷ நிவர்த்தி தலமாகவும் ......அருகில் ஓடும் விருத்த கங்கையில் நீராடி இங்கு பிதுர் கடன்களை முடித்து , அவர்களின் பரிபூரண ஆசியை அடையலாம் ......

இதனால்  ஏராளமான நன்மைகளை வாழ்வில் நீங்கள் அடையலாம் ......

சனி கிழமைகளில் விசேஷ யாகங்கள் நடத்தப்படுகிறது ....இதில் கலந்து கொண்டும் பலன் பெறலாம்...
குருக்கள்  அகம் இத்திருக்கோயிலுக்கு செல்லும் வழியிலேயே தான் உள்ளது ......

திருநள்ளாறுக்கும் , திருகொள்ளிக்காட்டிற்கும் நடுநாயக மாக இத்தலம் விளங்குகிறது என்பது குறிப்பிட தக்கது .





Tuesday, September 27, 2016

அன்பர்களே ...இன்று பிரதோஷம் ...திருக்கோயில் தரிசனம் செய்ய மறக்காதீர்கள் ...

தேவார பாடல் பெற்ற திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலை சுற்றியுள்ள அஷ்ட லிங்கங்களில் 

வருண பகவான் வழிபட்ட ஜம்புகேஸ்வரலிங்கம், மேட்டுப்பாளையம் கிராமம், பூந்தமல்லி வட்டம், பட்டாபிராம்--பூந்தமல்லி சாலை. 

இத்தலம் திருவேற்காடு சுற்றியுள்ள அஷ்டதிக் பாலகர்கள் வணங்கிய எட்டு தலங்களுள் இதுவும் ஒன்று.


பெருமான் பருத்த திருமேனியை உடைய பாண லிங்கமாக அருள்புரிகிறார் ....


ஆவடி பூந்தமல்லி வழியாக  மாநாடு பேருந்து நிறுத்திலிருந்தும் இந்த  இடத்திற்கு செல்லலாம் 


இவரைவழிபடுவதால்,,


⇒ வறுமை விலகும், வளம்பெருகும்
⇒ மகப்பேறுவாய்க்கும்
⇒ கடன் தொல்லைநீங்கும்.
⇒ அறியாமைநீங்கி, ஞானம் பிறக்கும்







Monday, September 26, 2016

மயூரத்தில்  ஒரு  ஐயாறு .....


⇒தன்  பரம பக்தன் ஒருவனுக்காக  பரமன் ஐயாறப்பராக  காட்சி யளித்த தலம் 

தஞ்சையில் வசித்தது வந்த சிவபக்தர்களான தம்பதியர் நாத சர்மா , அனவித்யய்
தினசரி திருவையாறு சென்று வணங்குவதை தன்  வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தனர்.

⇒இவர்களின் பவித்ரமான  பக்திக்கு இணங்க இறைவன் ,தனக்கு மயூரத்திலேயே கோயில் கொள்ள 
இசைந்து எழுந்தருளியுள்ள திருக்கோயில் தான்  மயிலாடுதுறை ஐயாறப்பர் திருக்கோயில் ஆகும்.

அன்னை  தர்மஸம்வர்த்தினி 

⇒இவர்கள்  லிங்க திருமேனியராக இன்றும் மயூரநாதர் திருக்கோயிலில் கோயில் கொண்டுள்ளனர் ...
⇒ அனவித்யய் எழுந்தருளியுள்ள லிங்க திருமேனிக்கு இன்றும் புடைவை சாற்றப்படும் வழக்கம்  உள்ளது.


தற்போது இத்திருக்கோயில்  திருப்பணி செய்யப்பட்டு மிக நேர்த்தியாக விளங்குகிறது ...

மயிலாடுதுறை  பெரிய கோயிலான மயூரநாதர் கோயில்  அருகிலேயே பிரதான சாலை ஓரமாகவே 
அமைந்துள்ள இத்திருக்கோயில் 3 நிலை ராஜகோபுரத்துடன் விளங்குகிறது .....

கோயில்  நுழைவாயிலில் காணப்படும் கைலாய காட்சி மிக அற்புதம்.

அடியார்கள் தரிசிக்க வேண்டிய அற்புத திருக்கோயில் இது ...


Friday, September 23, 2016

தீபாவளி  திருத்தலம் .....


காசியை போன்று  தீபாவளி அன்று தரிசிக்க வேண்டிய தலம் திருத்தங்கூர் 

மகாலட்சுமி இத்தலத்தில் தங்கி பூசித்ததால் 'திருத்தங்கூர்'. எனவே இத்தலத்தை தரிசிப்போருக்கு பொருள் சேர்க்கை ஏற்படும்.

நவக்கரகங்கள் அனைத்தும் தனித்தனியாக சிவலிங்க பிரதிஷ்டை செய்த இடம். இந்த லிங்கங்களை தரிசிபோருக்கு க்ரஹ தோஷம் நீங்கும்.

கங்கை தீர்த்தத்தை ஏற்படுத்தி இறைவனை வணங்கிய தலம் .கங்கைக்கு ஒப்பான தீர்த்தம்.
இதனை தரிசிப்போருக்கு காசிக்கு சென்று வந்த பலன் உண்டாகும்

அனைத்திற்கும் மேலாக தீபாவளி அன்று தரிசிக்க வேண்டிய தலம்.

இத்தகைய பெருமைகள் அனைத்தும் திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி மார்க்கத்தில் இருக்கும் திருத்தங்கூர் தலத்திற்கு உண்டு.
புகழ் பெற்ற திருகொள்ளிகாடு , திருநெல்லிகாவல்,கச்சனம்  போன்ற தலங்கள் இத்தலத்தின் அருகிலேயே உள்ளன.
ஆனால் பக்தர்கள் வருகையோ மிகவும் குறைவு.
இந்நிலை மாறவேண்டும் , அன்பர்களே ஆயிரம் திருகோயில்ககளை கட்டுவதை விட , இத்தகைய புராதனமான திருகோயில்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

எதிர்வரும் நம் சந்ததியினருக்கு இதுவே நாம் செய்யபோகும் சிறந்த செயல் 


இத்தலம் புகழ் பெற்ற திருக்கொள்ளிக்காடு(பொங்கு சனி ஷேத்திரம் ) செல்லும்  வழியிலேயே உள்ளது ..


Wednesday, September 21, 2016

கட்டளைக் கல்லால் ஆன ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கத்திருமேனி !!!
உலகிலேயே கட்டளைக் கல்லால் ஆன ஒரே சிவலிங்கம் !!!
அருள்மிகு நீலகண்டர் திருக்கோயில்,கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) வளாகம்,உதயப்பூர், இராஜஸ்தான்.
முதற்கண் ,கட்டளைக் கல் என்றால் என்ன என்பதைப் பாப்போம் .பொன் உரசும் கல்தான் கட்டளைக்கல்.. சங்க இலக்கியங்களில்,திருக்குறள் உட்பட பல நூல்களில் இந்த சொல் பயின்று வருகிறது.தங்கத்தின் மாற்றை உரசிப் பார்த்து,தரத்தைக் காணும் கல்தான் கட்டளைக்கல்.[பொன் உரசும் கல்.]
இந்த கட்டளைக்கல்லால் ஆன ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கத்திருமேனி, கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) வளாகத்தில்,அருள்மிகு நீலகண்டர் திருக்கோயிலில் உள்ளது.சிவப்பரம்பொருளின் கருணையின் திரு வடிவமாக விளங்குகின்ற நஞ்சுண்ட அவரின் திருநீலகண்டத்தின் நிறம் போலவே ,அடர் நீலநிறக்கல்லால் அமைந்த சிவலிங்கத்திருமேனி இது. பீடம்,ஆவுடையார்,பாணம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரே கட்டளைக் கல்லால் அமைக்கப்பட்ட ஆறு அடி உயரத் திருமேனி இது.

வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆன்மிக தாகம் கொண்டோருக்கும் அற்புத அனுபவத்தைத் தரும் தலம் இந்த கோட்டை..
கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் மலைக்கோட்டைகளுள் ஒன்றாகும். 15 ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மேவார் மன்னர் கட்டிய இக்கோட்டை உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. உலகின் மிக நீளமான சுவர்களில் இரண்டாவதான இதனை உலக பாரம்பரியக் குழு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது..
கும்பல்கர் கோட்டை பதின்மூன்று சிகரங்களாலும், காவல் கோபுரங்களாலும், கொத்தளங்களாலும் சூழப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரவல்லி மலைத்தொடரில் முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் நீண்டு செல்கிறது.
பதினைந்து அடி தடிமன் கொண்ட கோட்டைச்சுவர். நாற்பதடி உயரம். அது முகப்பில் பிரம்மாண்டமான நீர்த்தாழிகளை வரிசையாக வைத்தது போல வளைவு வளைவாக நின்றது. கனத்த கருங்கற்களால் ஆன கோட்டை
இதன் நீளமும், வளைந்து செல்லும் சுவர்களின் கட்டிட பாணியும் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தக் கோட்டையின் சுவர், சீனப்பெருஞ்சுவருக்கு பிறகு உலகின் மிக நீளமான சுவராக கருதப்படுகிறது.
மேலும் இந்தக் கோட்டையில் மகாராண பதே சிங் எனும் மன்னரால் கவிகை மாடங்களுடன் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் உள்ளது.
ராணா பிரதாப் சிங் அங்குதான் பிறந்தார். ஆகவே அது ராஜபுத்திரர்களுக்கு ஒரு புனிதத் தலம்போல.
ராணா கும்பா அங்கே நூற்றியெட்டு சமணக் கோயில்களை மீண்டும் கட்டினார். சிவன் காளி விஷ்ணு கோயில்களையும் கட்டினார்.



Sunday, September 18, 2016

ஞான  மார்க்கத்திற்கான  நல்லதொரு  திருக்கோயில்
↝கனவிலும்  காண முடியாத அற்புத திருக்கோயில
↝மகா பெரியவா  ஆராதித்த மகத்தான தலம் .
↝ஒவ்வொரு  இன்ச்சிலும் மிக சுத்தமாக பராமரிக்கப்படும் ஆலயம்
↝இறை திருமேனிகள் மிக கம்பீரமாக ,தோற்றமளிக்கும் தலம்
↝அங்கங்கு போடப்படாமல் இறை வஸ்திரங்கள் அழகாக அடுக்கப்பட்டிருப்பதை இங்கு மட்டும்ணே காண முடியும்
↝இங்கு அன்னை மீனாட்சி க்கு செய்யப்படும் அலங்காரத்தை போன்று வேறெங்கும் காண முடியாது ..

அன்பர்களே....,  இத்தனைக்கும்  காரணகர்த்தா திரு குமார் அவர்கள் ...
இவர் இத்திருக்கோயிலின் அர்ச்சகரும் , பாதுகாவலரும் ஆவார்...கோயில் எதிரிலேயே இவர் கிரஹம் ..

சரி ......  எந்த திருக்கோயில்?   எங்குள்ளது ?

விடயபுரம் ஸ்ரீ சுந்தரேஸ்வர பெருமான் சமேத மீனாக்ஷி அம்மன்  திருக்கோயில்  தான் அது .....
திருவாரூர்  மாவட்டம், கொரடாச்சேரி வட்டம் , கொரடாச்சேரியிலிருந்து  5 கிலோ மீட்டரில்  , தேவார பாடல் பெற்ற  கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட  திருவிடைவாய் என்னும் தலத்திற்கு  மிக அருகில் அமைந்துள்ளது ..

தீர்த்தம்  : பாண்டவர்  ஆறு .....

ஆனால்  அன்பர்களே.....  கிடைத்தற்கரிய  இத்தகைய  அரிய  கலை  களஞ்சியத்தை கண்டு கொள்வோர் யாருமில்லை என்பது  வேதனை ........

கையில்  வெண்ணையை (இத்தகைய திருக்கோயில்கள் )  வைத்து கொண்டு  நாம் நெய்க்கு  (மன அமைதி )அலைகிறோம்....

மணிக்கணக்கில்  வரிசையில்  நின்று  அடித்து பிடித்து கொண்டு  எனோ தானோ வென்று  தரிசனம்  செய்து விட்டு  வருகிறோம் .....

இந்த  திருக்கோயிலுக்கு  வந்து  பாருங்கள்.... பின் நீங்களே  சொல்வீர்கள் ......
அருகிலேயே  அரை கிலோமீட்டரில்  கண் நோய்கள்  தீர்க்கும்  கண் கொடுத்த வணிதம் திருக்கோயிலும் உள்ளது ..

நவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது  இங்கு ...கொலுவும்  உண்டு ...

வரும் நவராத்திரிக்கு மீனாக்ஷிக்கு  அணிவிக்க  வஸ்திரங்கள்  தேவைப்படுகிறது ....மற்றும் விளக்கேற்றும்  எண்ணெய் .....சுண்டலுக்கான பொருட்கள்  தேவை ......

இவற்றை  அளிக்க  விருப்பமுள்ளவர்கள்  திரு குமார் ( 9865706651) அவர்களை  தொடர்பு  கொள்ளலாம் ....

இவர்  ஸ்ரீ  மீனாட்சி  அம்மை  உடனாய  ஸ்ரீ சுந்தரேஸ்வரரின்  அருளை  பெற  உங்கள்  அனைவரையும்  அன்புடன்  அழைக்கிறார் .....


திரு  குமார்
அலைபேசி எண் 9865706651






Tuesday, September 13, 2016

இழந்த செல்வங்களை மீட்டுத்தரும் தர்மேஸ்வரர்!


சென்னை - புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கல்பாக்கம் அடுத்த காத்தான்கடை என்ற இடத்திலிருந்து மதுராந்தகம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் அணைக்கட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன் அறம் வளர்த்தீஸ்வரர் என்றும் தர்மேஸ்வரர் என்றும் திருநாமம் தாங்கி அருளுகின்றார்.

 நந்தியம்பெருமான் அளவில் மிகப் பெரிய வடிவத்தில் நெடிதுயர்ந்து அமர்ந்த கோலத்தில் உள்ளார். நந்தியம்பெருமானின் கழுத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ருத்திராட்சமாலை, சங்கிலி, சலங்கை, மணி போன்ற அணிகலன்கள் அழகூட்டுகின்றன.   
இதனருகில் சோழர்கால கல்வெட்டு பொறிக்கப்பட்ட கட்டடப்பகுதி காணப்படுகிறது. இத்திருக்கோயில் சோழர்கால கோயிலாக விளங்கி, பிற்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கவேண்டும் என ஊகிக்க முடிகிறது.
கருவறையில் மூலவர் ஸ்ரீ அறம்வளர்த்த ஈஸ்வரர் எனும் ஸ்ரீ தர்மேஸ்வரர் வட்டவடிவ ஆவுடையாருடன் அமையப்பெற்ற சிவலிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கின்றார்.
ஈஸ்வரன் சந்நிதிக்கு வலப்புறம் அம்பிகை "அறம்வளர்த்த நாயகி', "தர்மவர்த்தினி' என்ற திருநாமங்களைத் தாங்கி, தனது கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும் அடியவர்களின் துயரங்களை போக்கும் தன்மையில் சந்நிதி கொண்டு அருளுகின்றார்.
அம்பிகை சந்நிதிக்கும் இறைவன் சந்நிதிக்கும் நடுவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக சந்நிதிகொண்டிருக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம்.

இது தர்மபுத்திரர் ஆராதித்த தலமாகும். அதனால் ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீதர்மேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருளுகின்றனர். தர்மராஜா சூதாட்டத்தில் தான் இழந்த செல்வத்தை இவ்வாலய ஈசனை வழிபட்டு அவர் அருள் பெற்று மீட்டதாகத் தெரிகிறது. 
தர்மத்தைக் காக்கும் தர்மேஸ்வரரை வழிபடுவோரும், இவ்வாலய வளர்ச்சியில் பங்கு கொள்வோரும் வாழ்வில் தாங்கள் இழந்த அனைத்து செல்வங்களையும் மீட்பர் என்பது தெய்வப் பிரஷ்ணத்தின் மூலம் அறிய முடிகிறது.
திருமணத் தடை நீக்கி அருளும் ஸ்ரீ அறம் வளர்த்த ஈசனையும், ஸ்ரீ அறம் வளர்த்த நாயகியையும் கிராம தேவதையாக இருந்து அருள்புரியும் காவாத்தம்மனையும் கண்டு வழிபட்டு நலமடைவோம்.
தொடர்புக்கு : 97860 58325.


Sunday, September 11, 2016

கடுமையான திருமண தடை நீக்கும் இடையாறு 

பலனளிக்கும் பரிகார தலம் 


அருள்மிகு மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்)திருக்கோயில், டி. இடையாறு, திருக்கோயிலூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம்.

இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. 

நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில்திருமணம் நடக்கும்என்பது நம்பிக்கை.

சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்மன் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்களுக்கு "கல்யாண கோலத்தில் மாலை மாற்றும் அமைப்பு' என்பர்.

இத்தலம் அத்தகைய அமைப்பில் உள்ளது.


Thursday, September 8, 2016

மங்காத  புகழ் கொண்ட மதுபானிதிருக்கோயில் 

---பீஹார் 


பீகார் மாநிலத்தின் சரித்திர புகழ் வாய்ந்த மதுபானி மாவட்டத்தின் , மாங்க்ருணி (Mangrauni ) கிராமம்.இங்குள்ள ஏகாதச ருத்ர மகாதேவ ஆலயத்திற்கு 1997 ஆம் ஆண்டு பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி வருகை புரிந்தார்.
ஏகாதசம் என்றால் 11. இங்குள்ள 11 சிவலிங்க மூர்த்தங்களை கண்டு மிகுந்த ஆச்சர்யம் அடைந்த அவர் இது உலகிலேயே கான்பதற்கரிய திருத்தலம் என திருவாய் மலர்ந்தருளினார்.


சுற்றிலும்  10 லிங்கத்திருமேனிகள்   சூழ நடுவில்  மிகப்பெரிய  லிங்கத்திருமேனியுடன்  அற்புதமாக விளங்குகிறார்கள்  ஏகாதச ருத்திரர்கள் ..

இத்திருத்தலம் உலகமெங்கும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது
 



Tuesday, September 6, 2016

இல்லறம்  நல்லறமாக வாருங்கள்  கொடியலூர் 

பிரிந்திருந்த  கணவன் மனைவி  இத்தலத்தில் ஒன்று பட்டதால் கூடியலூர் என்பதே மருவி  கொடியலூர்  ஆயிற்று ......

எந்த  தம்பதியர் அவர்?   சூரியனும்  உஷா தேவியும்  தான்  அவர்கள்..விதிவசத்தால்  கணவன் மீது  கோபமுற்ற  
அவன் மனைவி  உஷா , பூலோகம் அடைந்து  பல  தலங்களில்  சிவபெருமானை  பூசித்து வந்தாள் ....

கொடியலூர் அகஸ்தீஸ்வரர்  அருளால்  சூரியன்  இத்தலத்தை  அடைய  இறைவன்  கருணையினால்  வாழ்க்கையில்  இணைந்த  இவ்விருவருக்கும்  சனி பகவான் ,  யமதர்மராஜன் ஆகிய  புத்திரர்கள் பிறந்தனர்...

சனி பகவான் பிறந்த  தலமான  இத்தலத்தை  அடைபவர்கள் , வணங்குபவர்கள் , ஏழரை  , அர்த்தாஷ்டம சனி 
கண்ட சனி எதுவாக இருப்பினும் ,  கவலை இன்றி  நிம்மதியாக  இருக்கலாம் .......

இது  இறைவன்  அகஸ்தீஸ்வரர்  வாக்காகும் .......

மேலும்  கணவன் மனைவி  பிணக்கு  பிரிவு  ,  சஞ்சலம்  எதுவாக இருந்தாலும்  இத்தலம்  வாருங்கள்  
அகஸ்தீஸ்வரரையும், ஆனந்த  வல்லி   அம்மையையும்  சனிபகவானையும்  ,  ஒரு கையில்  பாச கயிறு  ,
ஒரு கையில்  தண்டம் ஏந்தியிருக்கும்  எம தர்மராஜரையும்  வணங்கி பலன் பெறுங்கள் .....

எங்குள்ளது  என்பதையும் சொல்லிவிடுகிறேன் ....... 

நாகை  மாவட்டம்  பேரளம் அருகில்  திருமீயச்சூர் பாடல் பெற்ற  தலம் உள்ளது அல்லவா?
கொலுசுகள் அணிந்த  லலிதாம்பிகை  கோயில்  .......இங்கிருந்து  சுமார் 1 கிலோ மீட்டர்  தூரம் தான் ...

நடந்தே  கூட   சென்று  விடலாம் ....

குருக்களும்  திருமீயச்சூர்  கோயில்  வாசலிலேயே  வாசம்  செய்கிறார் ,  கையோடு அழைத்து சென்று தரிசனம் செய்யுங்கள் ....... அன்பர்களே....தவற  விடாதீர்கள்  ....கோடியில்  ஒரு  ஊர்  இது ......







Saturday, September 3, 2016

மழலை  பாக்கியம் அருளும் மகாதேவன் 

அன்பர்களே.....மழலை வரம் அருளும் மகாதேவன் வீற்றிருக்கும் (ஒருவராக அல்ல இருவராக ) திருக்கோயில் குறித்து பதிவு செய்திருந்தேன் .....பல்லவர் சோழர்களால் திருப்பணி செய்யப்பட்டு ,முகலாய அரசர்களால் 
நிர்மூலமாக்கப்பட்ட இத்தலம் தஞ்சை மாவட்டம் , கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் அருகில் சென்னியமங்கலம்  என்னும் கிராமத்தில்  உள்ளது ..இறங்குமிடம் : மாடாகுடி பாலம் 
வலங்கைமான் வழி  

இக்கிராமம் வேதியர்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட ஊர் ......வடக்கில் திருமலை ராஜன் ஆறும் , தெற்கில் முடிகொண்டான் ஆறும் ஓடுவது  இத்தலத்தின் சிறப்பு ....
 இங்கு இரு லிங்கத்திருமேனிகள்  கண்டெடுக்கப்பட்டன  சில ஆண்டுகள் முன்பு ...

ஸ்ரீ  அருணாச்சலேஸ்வரர்  ஸ்ரீ சொக்கநாதர் என இப்பெருமான்கள் பெயரிடப்பட்டுள்ளனர் ....
அருகில்  வசித்து  வரும்  அன்பர் திரு சங்கர் இப்பெருமான்களை பூசை செய்து  கவனித்து  வந்தார்..

சென்னையை சேர்ந்த  திருப்பணி செம்மல்  திருமதி  மஹாலக்ஷ்மி சுப்ரமணியன் அவர்களின் பெரும் பங்களிப்புடன் தற்போது , திருக்கோயில்  கட்டி முடிக்கப்பட்டு வரும்  ஐப்பசி  மாதம்  26 ஆம் தேதி 
(11--11--201`6)   வெள்ளிக்கிழமை  காலை  9.00 மணிக்கு மேல்  10.30  மணிக்குள் குடமுழுக்கு நடத்த சான்றோர்களால் உத்தேசிக்கப்பட்டுள்ளது .....

அனைவரும்  திரளாக  கலந்து  கொண்டு  பலனடைய வேண்டுகிறேன் ....

மற்றுமொரு  வேண்டுகோள் .... அன்பர்களே ....இன்னமும்  தரை பணி  நிறைவடையவில்லை .....குடமுழுக்கு 
செலவினங்களும் சேர்ந்து  3,00,000 ரூ  தேவைப்படுகிறது ....

நன்கொடைகள்  மூலமாகத்தான் இத்திருக்கோயில்  திருப்பணி நிறைவேற்றப்பட்டு வருகிறது ...
நீங்கள்  உதவ விரும்பினால் கீழ்கண்ட வங்கி  மூலம் பணம் செலுத்தலாம் .....
பொருள் உதவியாகவும்  அளிக்கலாம் ......அலைபேசி எண்கள்  அளித்துளேன் ...
அன்ன  தானமும்  உண்டு...

SRI  UNNAMULAI AMBIKA SAMETHA SRI ARUNACHALESWARA ALAYA  ARAKKATALAI,
AC NO : 500101010801777, IFSC CODE : CIUB0000022
CITY  UNION BANK , VANLANGAIMAN BRANCH 

Contact No....G. Shankar 
94430 86587 &  94429 29740