இனியில்லை ...சனி பகவான் தொல்லை .....
சனி பகவான் என்றாலே அனைவரது அடிமனதிலும் ஒரு பயம் ஏற்படுகிறது ...அதற்கு காரணம் இல்லாமல் இல்லை ..
ஏனெனில் ஆயுள்காரகன் , மாங்கல்ய காரகன் ,சாதனை காரகன் என்னும் மாபெரும் பொறுப்புகளை சனி பகவான் ஏற்றிருப்பதே ஆகும் .....
ஒருவரது ஆயுளுக்கும் சரி, மாங்கல்ய பலத்திற்கும் சரி , செய்தொழிலில் மந்த நிலை நீங்கி ஒருவர் சாதனை புரிவதற்கும் சரி சனி பகவான் ஒருவரது ஜாதகத்தில் பலம் பொருந்தி ,நற் க்ரஹங்களுடன் சேர்ந்திருப்பது அவசியம் ....
குறிப்பாக ஒருவரை கோடீஸ்வரனாக மாற்றுவதற்கும் , தெரு கோடியில் விட்டு விடுவதற்கும் ..
சனி பவானின் நிலை நம் ஜாதகத்தில் எவ்விதம் சஞ்சரிக்கிறார் என்பதை பொறுத்தே அமையும் .....
அதனால் தான் நாம் திருநள்ளாறு சென்று சனிபகவானை வணங்குகிறோம் ....ஆனால் அன்பர்களே
திருநள்ளாறுக்கும் , திருகொள்ளிகாட்டிற்கும் இடையே சனீச்வர வாசல் என்றொரு அற்புத திருத்தலம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?
அங்கே உத்தர வாகினியாக காவேரி நதியின் கிளை நதியான , கங்கைக்கு ஒப்பான வெண்ணாறு நதி வடக்கு தெற்காக பாய்கிறது ...திருநள்ளாறு செல்லும் முன் சனி பகவான் இங்கு ஒரு இரவு தங்கி இங்கு உறையும் சங்கர நாராயண பெருமானையும் , நாராயணி அம்மையையும் வணங்கி பேரு பெற்றுள்ளார்..
மங்கள சனீச்வரராக, நேர் எதிரே அஷ்டாங்க யோக பைரவருடன் (காசியை போன்று) இங்கு விளங்குகிறார் ..
இவரை வணங்குவதால் நம் சோதனைகள் யாவும் சாதனைகளாக மாறும் .....ஆயுள் பலம் அதிகரிக்கும் ..மாங்கல்ய பலம் கிட்டும் ...இன்னும் கிடைக்ககூடிய நன்மைகள் ஏராளம்....ஏராளம்..
சற்றே தள்ளி இருப்பதாலும் , பிரசித்தி பெற்ற தலமாக இல்லாததாலும் இத்தகைய அரிய தலங்களை நாம் இழந்து விட கூடாது ....
எனவே தான் திரும்ப திரும்ப சொல்கிறேன் ....எங்கே உள்ளது என்பதையும் கூறி விடுகிறேன் ....
திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகை செல்லும் பேருந்துகள் காரையூர் எனப்படும் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன .....கங்களாஞ்சேரியிலிருந்து ஆட்டோ வசதி உண்டு ..இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் தான் . காரையூர் நிறுத்தத்தில் இறங்கினால் அரை கிலோமீட்டரில் திருகோயில் ..
காரி என்பது சனிபகவானின் பெயர்களுள் ஒன்று ...எனவே தான் காரியூர் என்பது தற்போது காரையூர் எனப்படுகிறது ..கோயில் இருக்குமிடம் ஈஸ்வர வாசல் என தற்போது வழங்கப்படுகிறது ...
அர்ச்சகர் கோயில் அருகிலேயே உள்ளார்..அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ....
தற்போது மெல்ல பிரபலமடைந்து வருகிறது இத்திருகோயில் ..சனி தோறும் ஹோமங்கள் நடைபெறுகிறது
அன்று கோயில் முழுதும் திறந்திருக்கும் ..
A.R. தியாகராஜா குருக்கள்
ஈஸ்வர வாசல் .கரையூர் அஞ்சல் ,கங்களாஞ்சேரி வழி
திருவாரூர் மாவட்டம் ..
போன் :04366-272555, 9790676748
திருகோயிலுக்கு செல்பவர்கள் இங்கே ஓடும் விருத்த கங்கையில் நீராடி(தற்போது நீர் இல்லை ) ,ஈஸ்வரனையும் , அன்னையையும் வணங்கி பின் சனி பகவானுக்கு அர்ச்சனைகள் செய்து , வழிபடலாம் ..
வசதி இருந்தால் ஹோமங்கள் செய்து பிரார்த்தனை செய்யலாம் ...எதுவாக இருந்தாலும் அர்ச்சகரை தொடர்பு கொண்டு பின் செல்லுங்கள் ..
அருகில் திரு விற்குடி , திருசெங்காட்டங்குடி , திருப்பள்ளிமுக்கூடல் போன்ற ஏராளமான தலங்கள் உள்ளன .. அவற்றையும் தரிசித்து வாருங்கள்.
அடியார் பெருமக்களின் சீரிய கவனத்திற்கு ....
இப்பெருமான் அமைந்திருப்பது பாக்கூர் கிராமத்தில் . ஊருக்கு வெளியில் குளக்கரையில் வெட்ட வெள்ளியில் பூமியில் பாதி புதைந்த நிலையில் தரிசனம் கொடுக்கிறார் .அகஸ்தீஸ்வரர் எம்பது திருநாமம் ..
நந்தியெம்பெருமானும் புதைந்த நிலையிலேயே உள்ளார்.
கிராம மக்களை தொடர்பு கொண்ட பொது இவர் பல நூற்றாண்டுகளாகவே இப்படி காட்சியளிப்பதாக கூறுகின்றனர்.
தற்போது சிறிய அளவில் பிரதோஷ பூசை நடைபெறுகிறது ...கிராம மக்கள் தங்கள் உழைப்பை தர சித்தமாக உள்ளனர் இத்திருகோயிலை சீரமைக்க ....
அவசர தேவையாக ஒரு மேற்கூரை தேவைப்படுகிறது ... பெருமான் வெயிலும் மழையிலும் நனைந்தபடி உள்ளார்.
ஆகவே அன்பு அடியார்பெருமக்களே அருமை ஆன்மீக நண்பர்களே உதவ, உழவாரப்பணி செய்ய விரும்புவோரும் , இறைபணி செய்ய ஆர்வமுள்ளோரும் கீழ்க்காணும் எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்...
தொடர்புக்கு திரு உதயகுமார்-8940648190, திரு பாண்டியன்-9751087258, திரு ராஜேந்திரன்-9894935094..
இக்கிராமம் செய்யூர்- மதுராந்தகம் சாலையில் 7 கி. மி. தொலைவில் உள்ளது. செய்யூரிலிருந்து ஷேர் ஆட்டோ போகிறது.
நற்றுணையாவது நமசிவாயவே !
இயற்கை எழில் கொஞ்சும் சந்நியாசி மலை ...
தன்னன் தனியாக வீற்றிருக்கும் இறைவன் ....சித்தர்கள் இன்றும்
வழிபடும் அற்புதம்....எங்கே உள்ளது? வாருங்கள் தரிசிக்கலாம் .....
சென்னை பாண்டி இடையே சரியாக நட்ட நடுவில் அதாவது
சென்னையிலிருந்து 76 கிலோமீட்டர், பாண்டியிலிருந்தும் 76
கிலோமீட்டர் கல்பாக்கம் புதுபட்டினம் தாண்டியதும் வரும் வாயலூர்
மதுராந்தகம் சாலையில் உள்ளது நெற்குணப்பட்டு கந்தசாமி
கோவில், சன்யாசி மலை ...
நெற்குணப்பட்டு கந்தசாமி கோவில் – தொண்டை மண்டலத்தில்
கடற்கரை நகரமாம் கல்பாக்கம் அருகே மலைகள் சூழ இருக்கும் எழில்
கொஞ்சும் திருத்தலம். சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூருக்கு
போவதற்கு முன், இத்தலத்து முருகனிடம் உத்தரவு பெற்றுச்
சென்றாராம். ஒரு பெரிய கல்வெட்டு ஒன்று வெட்டவெளியில்
கிடக்கிறது.இங்கு சன்யாசி மலை என்று ஒரு குன்று இருக்கிறது. இங்கு
ஒரு லிங்கம் மலையுச்சியில் உள்ளது. பௌர்ணமிக்கு மலை வலம்
வருதல் சிற்ப்பு. சித்த்ர்கள் வாழும் மலை.
கல்பாக்கம் – மதுராந்தகம் சாலையில் இத்தலம் உள்ளது. சுமாரான
கிராமத்து சாலை. பேருந்து உள்ளது...
தற்போது மேற்கூரை அமைத்துள்ளார்கள்.
மக்கள் நடமாற்றம் அற்ற பகுதி என்பதால் ....கவனத்துடன் ஒரு குழுவாக சென்று வருதல் நல்லது ..
திருகோகர்ணம் --புதுகோட்டை
காணாமல் போனதை மீட்டு தரும் அன்னை அரைகாசு அம்மன் (ப்ரஹதாம்பாள் )
பல்லவர் காலத்திய குடைவரை கோயில் ...விநாயக பெருமானும் ,குரு தஷிணா மூர்த்தியும் ஒரே கருவறையில் அருள்பாலிக்கும் திருத்தலம் .
மூலவர் கோகர்ணேஸ்வரர் கருவறையில் அற்புத மிக பெரிய திருமேனி கொண்டு சேவை சாதிக்கிறார் .
காமதேனு தன காதுகளில் அபிஷேக நீரை கொண்டு வந்து இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வித்த பெருமையை உடைய ஒரே தலம் ...அதனால் கோகர்ணம் என்று வழங்கப்படுகிறது ...கோ என்றால் பசு காமதேனுவை குறிக்கும் ..கர்ணம் என்றால் காது ...
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு நாணயம் தயாரிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அவர் தனது இஷ்ட தெய்வமான ப்ரஹதாம்பாள் உருவம் பதித்த அரையணா விற்கு சமமான காசுகளை வெளியிட்டார் .
அதனாலேயே அந்த அம்மனுக்கு அரைகாசு அம்மன் என்று பெயர் ஏற்பட்டது ...
அந்த செப்பு காசை வீட்டில் வைத்து வேண்டிகொண்டால் களவு போன பொருள்கள் திரும்பவும் கிடைக்கும் .
நினைத்து நடக்கும் ...செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது ...
பலரது வாழ்க்கையில் அது உண்மையாக நிறைவேயும் உள்ளது ..
இங்கு நவக்ரகங்கள் சன்னதி கிடையாது ...சூரிய சந்திரர்கள் மட்டுமே அருள்பாலிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
சித்தத்தை சிவன் பால் வைத்த அடியார் பெருமக்களே !!!!!
நாகை மாவட்டம் , திருத்துறைபூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான சிவலிங்க திருமேனிகள் நித்திய வழிபாடின்றி , வானமே கூரையாக ,உள்ளன .....
இறையன்பர்களால் , அங்குள்ள அடியார் பெருமக்களால் ,அப்பெருமான்களுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டும் , திருப்பணி நிறைவேற்றப்பட்டும் வருகின்றன ....மக்கள் சேவையிலும் அவர்கள் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர் ...
அத்தகைய ஒரு திருகோயில் தான் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா திருத்துறைபூண்டி உம்பளச்சேரி சாலையில் உள்ள சாக்கை கிராமத்தில் சுந்தரரால் பாடல் பெற்ற
முற்றிலும் சிதலமடைந்த சாக்கை சிவன் கோவில் ஆகும் ...
திருப்பணி வேலைகள் விரைவில் முடிந்து இறைவன் கும்பாபிஷேகம் காண, உங்கள் ஒத்துழைப்பும் ,பங்களிப்பும் தேவை ..
கீழ்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உங்கள் ஒத்துழைப்பை நல்கலாம் ...
சிவபீடம் 9443390589
சிவ ரமேஷ் 8508876533
சிவ சந்திரசேகரன் 9047219372
http://sivapeedam.org/என்ற வலைத்தளத்திலும் நீங்கள் இவர்களது சேவை குறித்து தெரிந்து கொள்ளலாம்
மெய்யன்பர்களே ......
ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் ஒரு மிக பழமை வாய்ந்த, நம் கிராமங்களில் அமைந்துள்ள ,அதிகம் அறியப்படாத திருகோயில்களுக்கு செல்வதை நானும் என் கணவரும் வழக்கமாக வைத்துள்ளோம் ...
அந்த வகையில் சென்ற பிரதோஷத்தின் போது நாங்கள் சென்ற திருத்தலம் குடவாசல் வட்டத்தில் ,
குடவாசல் நன்னிலம் சாலையில் அமைந்துள்ள வடவேர் என்னும் கிராமம் .....இங்கு புராதனமான இரண்டு சிவஸ்தலங்கள் உள்ளன...
1. மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருகோயில் .....
2.ஞானாம்பிகா சமேத ஞான சுந்தரேஸ்வரர் திருகோயில் ....
இந்த இரண்டு சிவஸ்தலங்களும் நேர் எதிர் எதிரே பிரதான சாலைக்கு இருபுறமும் அமைந்துள்ளது .
முதலாவது திருகோயில் செப்பனிடப்பட்டு மிக தூய்மையாக பராமரிக்கப்படுகிறது .....
இரண்டாவது மிக பழமை வாய்ந்தது .....திருப்பணி செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது ...
சுற்றிலும் சேங்காலிபுரம் , அருவிழிமங்கலம் , தடுத்தாட்கொண்டபுரம் போன்ற கிராமங்கள் உள்ளன ...
இங்கெல்லாமும் புராதனமான திருகோயில்கள் காணப்படுகின்றன ...
சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் இந்த சிற்றூரில் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டது வெறும் 3 பேர்தான் ..
அம்மன் கோயில் , ஐயனார் கோயில்களும் உள்ளன ....இங்கெல்லாம் விழாக்கள் என்றால் சில நூறு பேராவது
கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள் ....
ஆனால் பிரதோஷ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்ய ஏன் வருவதில்லை?
என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி ......
பதில் தான் இல்லை ......
அர்ச்சகர் அலைபேசி எண் : 9150189365
சுரேஷ் குருக்கள் ...
இவர் அருகில் உள்ள அருவிழிமங்கலம் என்ற கிராமத்திலிருந்து வருகிறார்,
சோழபுரம் திருகோயில்கள் .....
சென்னை குடந்தை மார்க்கத்தில் உள்ள சோழபுரம் சோழ மாமன்னர்களால் கட்டப்பட்ட முத்தான 3 திருகோயில்களை கொண்டது ......
↔ பைரவேஸ்வரர் திருகோயில்
↔ கைலாசநாதர் திருகோயில்
↔ காசி விஸ்வநாதர் திருகோயில்
இவற்றுள் காசி விஸ்வநாதர் மிகவும் சிதிலமடைந்து ஆகரமிப்பிற்கு உள்ளானது ....
தினசரி வழிபாடுகளும் நின்று போனது ...
சில ஆண்டுகளாக இவ்வாறு இருந்த இந்த திருகோயில் தற்போது ஆன்மீக அன்பர்களின் சீரிய முயற்சியால்
தற்போது திருப்பணி ஆரம்பிக்கப்படுள்ளது .....இது மிகவும் மகிழ்ச்சி தர தக்க செய்தி ....
இத்திருபணியில் பங்கு பெற விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் ..
தொடர்பு எண் 9840083553
கடுமையான தோல் நோய்கள் நீங்க கருந்திட்டைக்குடி வாங்க...
தோல் நோய் தீர்க்கும் அதிசய திருக்குளம் .....
தற்போது கரந்தை என வழங்கப்படுகிறது ....
கரிகால் சோழன் கருங்கல் திருப்பணி இத்திருகோயில் ...
இங்குள்ள திருக்குளத்தில் மூழ்கி இறைவன் வசிஷ்டேஸ்வரரை வணங்குவோருக்கு மிக கடுமையான தோல் நோய்களும் நீங்குகிறது ....
கரிகால் சோழனின் தோல் நோய் போக்கியவரும் இவரே..
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருகோயில் ..
வருடத்திற்கு ஒரு முறை ஆதவனும் இறைவனை வழிபடுகிறான் .....
வசிஷ்டர் வணங்கியதால் இறைவன் வசிஷ்டேஸ்வரர் என படுகிறார்...
இக்காட்சி பிரகாரத்தில் புடைப்பு சிற்பமாக காணப்படுகிறது...
எங்குள்ளது?
தஞ்சை --குடந்தை பிரதான சாலையில் 2 கிலோ மீட்டரில் உள்ளது தற்போது கரந்தை என்று வழங்கப்படும் கருந்திட்டைக்குடி ..
தோல் நோய் உள்ளவர்கள் மட்டுமல்ல ....அனைவரும் வணங்கி அருள் பெறலாம் .....
வாருங்கள்...
இங்கு மற்றொரு சிவாலயமும் உள்ளது ....
(படத்தில் பிரகாரத்தில் உள்ள லிங்கத்திருமேனிகள்)
திருத்தியமலை ஏகபுஷ்ப ப்ரியநாதர் திருகோயில் .......
பூர்வ ஜென்ம வினைகள் நீக்கும் திருத்தலம்
திருச்சி டோல்கேட் --துறையூர் சாலையில் பெரமங்கலம் கடைதெரு நிறுத்தத்திலிருந்து 5 கிலோமீட்டரில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது .....மிக பழமை வாய்ந்த பிருங்கி மகரிஷி , அகத்தியர் ஆகியோர் வழிபட்ட இந்த திருகோயில் ...
அன்னை தாயினும் நல்லாள் சமேத ஏக புஷ்ப பிரிய நாதர் ....
தேவலோக மலரான தேவ அர்க்ய வல்லி என்ற மலர் பல காலம் தவம் இருந்து இத்தலத்தில் இறைவன் மீது நிரந்தர வாசம் செய்யும் வரத்தை அடைந்தது ....என்பது தல புராணம் ...அதனால் தான் இறைவன் இப்பெயர் பெற்றார் ......
சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம்.....இறைவன் சுயம்பு .....
அன்பர்களே பேருந்து வசதி மிக குறைவு என்பதால் ..சொந்த வாகனங்களில் செல்வது உசிதம் .....
ஆட்டோ வசதி உண்டு .....
திருமண தடை நீக்கும் தலம் ...மற்றும் பிரம்மஹத்தி தோஷம் உட்ப சகல வித தோஷங்களும் இங்கு வந்து இந்த இறைவனை உள்ளன்போடு பிரார்த்தனை செய்ய அறவே நீங்கும் என்பது திண்ணம் ...
11 திங்கட்கிழமை இங்கு வந்து இறைவனுக்கு வில்வத்தால் எவர் ஒருவர் அர்ச்சனை செய்கிறார்களோ அவர்கள் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் அனைத்தையும் உடனுக்குடன் இப்பெருமான் நீங்கி அருள் புரிகிறார்...
இந்த அரிய வாய்ப்பை தவற விடலாமா? பயன்படுத்தி கொள்ள வேண்டாமா?
1) Caretaker Ganesan: He has the temple key, and resides opposite to the temple. You can call him and visit the temple. He is very kind and helpful. Ph. no. 90472-61838.
2) Gurukkal Hari Subramaniam: Very young and friendly. You can contact him also.
Ph. No. 98655-27538
கதறி அழுதுவிடுவோம் கருவி திருகோயில் நிலை கண்டால் ......
இன்று பிரதோஷம் அன்பர்களே....திருகோயில் தரிசனம் செய்ய மறந்து விடாதீர்கள்...
அதுவும் இதுபோன்று நலிவுற்ற திருகோயில்கள் தரிசனம் பெரிதும் நன்மை பயக்கும்...
கருவிழுந்த நாதபுரம் என்பதே இன்று கருவி என்று வழங்கப்படுகிறது ....
ஒரு பிரளய காலத்தின் முடிவில் உயிர்கள் தோன்றுவதற்குரிய பீஜங்கள் , கரு, சிதறி விழுந்த இடம் என்பதால் இப்பெயர் .....
எங்கு உள்ளது?
மயிலாடுதுறை --பூம்புகார் சாலையில் கருவி என்ற இடத்திற்கு முன் வரும் சாவடி கூட் ரோடு என்று கேட்டு இறங்க வேண்டும்..எதிரில் தென்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி வழியாக செல்லும் ஒரு சிறிய சந்தின் வழியே செல்ல 5 நிமிடத்தில் இத்திருகோயில் தென்படுகிறது .....
ஒரு நல்ல ஓவியத்தை கன்னாபின்னா வென்று கிழித்து போட்டது போல் உள்ளது இன்றைய கோயிலின் நிலை.
தல புராணம் என்று எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை .....உதவ ஒருவரும் இல்லை....கோயில் திருமேனிகள் அனைத்தையும் ஒரே shed இல் வைத்துள்ளார்கள்....ஒரே அழகிய திருமேனி கோவில் வெளியே காணப்படுகிறது ...அருகில் உள்ள கிடாரன் கொண்டான் என்னும் இடத்திலிருந்து அர்ச்சகர் ஒருவர் அவ்வப்போது வந்து பூசை செய்துவிட்டு செல்வதாக கூறுகிறார்கள் ....
எது எப்படியோ ....இத்திருகோயிலை சீரமைக்க செப்பனிட நல்ல உள்ளங்கள் வரும் வரை இறைவன் காத்திருக்க வேண்டியது தான் ....