Monday, November 9, 2015

அன்பர்களுக்கு  இதயம்  கனிந்த தீபாவளி  நல வாழ்த்துக்கள் 



கொக்காலடி உமாமகேஸ்வர பெருமானின் எழில் தோற்றம் .திருவாரூர் மாவட்டம் .
இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி யில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் இ.சி. ஆர் சாலையில் அமைந்துள்ளது



அன்பர்கள்  காண வேண்டிய  அற்புத திருத்தலம்  இது.






Sunday, November 8, 2015

நாலில்  ஒன்று,  கொரடாச்சேரி ,திருவாரூர் 



நாலில்ஒன்று, இது திருவாரூர் அருகில் கொரடாச்சேரி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய, நகரத்தின் சாயல் துளியும் இல்லாத கிராமம்.

கடைசியாக கண்டெடுக்கப்பட்ட திருவிடைவாசல் திருத்தலம் மிக அருகில் உள்ளது.

இங்கு ஒரு சிறிய குடிசையில் கம்பீரமாக கோயில் கொண்டுள்ளார் சுக்ரீஸ்வரர். பாண்டவர்கள் வழிபட்ட பரமன் இவர். அருகில் ஓடும் ஆறும் பாண்டவ ஆறு என்றே அழைக்கப்படுகிறது.

திருகோயில் கட்ட அருகில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கட்டப்படுவதற்கான அறிகுறிகள் தான் காணப்படவில்லை.


கொரடாச்சேரியி லிருந்து  இத்தலம்  இரண்டு கிலோ மீட்டரில்  உள்ளது .








Thursday, November 5, 2015


குடும்ப மகிழ்ச்சி கூட்டும் மாணிக்கேஸ்வரர், 

தாதாபுரம். திண்டிவனம் 








































திண்டிவனத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் வெள்ளிமேடு பேட்டை கூட்டு ரோட்டில் இறங்கி ஆட்டோ மூலம் இத்திருத்தலத்தை அடையலாம்.
ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரால், தஞ்சையை போன்ற அதே கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள திருகோயில் இது. கிராமத்து  மக்களால்  பொக்கிஷமாக  பாதுக்காகப்பட்டு  வருகிறது .தினமும்  ஒரு கால  பூசை  நடைபெறுகிறது .

Monday, November 2, 2015

இழந்ததை  மீண்டும் பெற அருள் புரியும்   திருத்தலம் 


































திருவாரூர்  மாவட்டம் நன்னிலம்  தாலூகா அச்சுதமங்கலம் என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதரை  வழிபட நாம் வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறலாம்.  
இழந்த  பொருள் மட்டுமல்லாது , இழந்த மன அமைதியையும் இங்கு வந்து வழிபட, நாம் மீட்டு கொள்ளலாம் .
 இன்றும் இந்த நம்பிக்கை நிலவுகிறது.

மிகப்பழமை வாய்ந்த இந்த திருகோயில்  புதுப்பிக்கப்பட்டு  நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது .

அர்ஜுனன்  தங்கியிருந்து  வழிபட்டமையால் அர்ஜுனன் மங்கலம் என்பதே 
தற்போது மருவி அச்சுதமங்கலம் என்று வழங்குகிறது.

ஆலய தொடர்புக்கு : R. மோகன் 9524348725
இத்திருகோயில்  புகழ் பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் தலத்திற்கு  அருகாமையில்  
அமைந்துள்ளது .

மேலும் இரு அற்புத   சிவாலயங்கள் இங்கு அமைந்துள்ளன .

Sunday, November 1, 2015

நயப்பாக்கம் - பூந்தமல்லிஅடுத்து அரக்கோணம் ரோட்டில் சென்று பீர்கம்பெனி ,பாபரம்பாக்கம் இடதுபுறத்தில் இருந்து 4 km இவ்வூர் உள்ளது இக்கோவில் திரிகல்லினால் கட்டயுள்ளனர் .முற்றிலும் சிதைந்துள்ளது .இறைவர் ஆகாயம் பார்த்த படி காட்சி ,மிகவும் வேதனையாக உள்ளது .

தொடர்புக்கு-9444352848


Saturday, October 31, 2015


































பெருவேலி----மதுராந்தகம்.


பெருவேலி -மதுராந்தகம் -சித்தாமூர் வழியாக இவ்வூரை அடையலாம் .சிவபெருமான் கருணையால் மேற்கூரைத் திருப்பணியும்,திருவேள்வியும் நடைபெற்றது .



கோச்செங்கன்னாயர்  சிவ சபையினரின் முயற்சியால்   இத்தொண்டு  நிறைவேற்றப்பட்டது .

அன்னாரின் சீரிய சிவத்தொண்டு பல்லாண்டு  தொடரட்டும் .

தொடர்புக்கு-திரு.பார்த்திபன் - 9787909427,திரு.பிரபு -9843669689.

Thursday, October 29, 2015

வைரபுரம் ----திண்டிவனம்  --விழுப்புரம்  

அருள்மிகு திருபுரசுந்தரி உடனாய ஸ்ரீ சோம சுந்தரேஸ்வர சுவாமி  திருகோயில் . வைரபுரம் .

திண்டிவனம் தாலூகா , விழுப்புரம்  மாவட்டத்தில், திண்டிவனத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது இத்திருகோயில் .

கருவறையில் மிக பிரம்மாணடமான திருஉருவம் கொண்டு விளங்குகிறார் 
சுந்தரேச்வர பெருமான்.
இப்பகுதில் விளங்கும் லிங்க மூர்த்தங்களில் இவரே மிகப்பெரியவர் .








Wednesday, October 28, 2015

காளிக்கு  திருமண  கோலம் காட்டிய தலம் ----

காளி ----குத்தாலம் -மயிலாடுதுறை 





அன்பர்களே இறைவன் அகத்தியருக்காக தன் திருமண காட்சி அளித்த அனேக தலங்கள் உள்ளன . ஆனால் இத்தலத்தில் காளிக்கு இறைவன் தன் திருமண காட்சி நல்கினார்.
எனவே இத்தலத்தின் பெயரே காளி என்றுஅழைக்கப்படுகிறது.
அபிராமி கோயில் பத்து என்றும் சொல்கிறார்கள்.
காளி திருத்தலம் குத்தாலம் வட்டத்தில் உள்ள ஒருசிறியகிராமம்
மயிலாடுதுறையிலிருந்து வசதியாக சென்றுவர பேருந்துகள் உள்ளன.
இறைவன் திருகாமேஸ்வரர். இறைவிஅபிராமி , சுற்றிலும் உள்ளகிராம மக்களுக்கு கண் கண்ட தெய்வமாக இருந்து வருகிறாள். அபிராமி கோயில் என்றால் தான் கோவிலுக்கு வழியே சொல்கிறார்கள்.
அத்தனை பிரசித்தம் . மிக சிதிலமடைந்த இக்கோவிலை மிக நேர்த்தியாக சீரமைத்துள்ளனர் கிராம மக்கள் .
கோபுராஜபுரம்,  பாபநாசம்  வட்டம் , தஞ்சை  மாவட்டம் .


அடியார் பெருமக்களின் அன்பு  கவனத்திற்கு ........

ஸ்ரீ  ஸ்வர்ணபுரீஸ்வரர் திருகோயில்  கோபுராஜபுரம் .  பாபநாசம்  ரயிலடி தாண்டியதும் அரை கிலோமீட்டர் தொலைவில்  உள்ள, மிக பழமை வாய்ந்த  இத்திருகோயில்,உடனடியாக திருப்பணியை துவக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .

இத்திருக்கோயிலின் குபேர மூலையில்  எழுந்தருளியுள்ள குபே ரல்லிங்கேஸ்வர ரை  வழிபட, தன  அபிவிருத்தி  ஏற்படும் . வறுமை விலகும் .
லக்ஷ்மி கடாட்ஷம் கிட்டும் .

அம்பாள்  சந்நிதி முழுதும் பழுதடைந்து விட்டது . சுவாமி சந்நிதி  இன்றோ என்றோ  என்று உள்ளது.

Friday, October 23, 2015

ராமலிங்கபுரம்  , திருவள்ளூர்  மாவட்டம் .

ராமலிங்கநாதர் திருகோயில் . கருவறையில் அற்புத அழகோடு விளங்கும் இப்பெருமானை காண  கண் இரண்டு போதாது .

மிகவும் தொன்மையான இந்த திருகோயிலில் வழிபாடுகள் முறையாக நடைபெறாதது மிகவும் வருந்த தக்கது . பிரதோஷ வழிபடு கூட நடைபெறவில்லை .

செல்லும் வழி : திருவள்ளூரிலிருந்து பென்னலூர்ப்பேட்டை செலும் பேருந்துகளில் பயணம் செய்தால் ராமலிங்கபுரம் நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம் . 

அருகில் திரு கோபால் என்பவர்  தரிசனம் செய்ய உதவுவார் .

தொடர்பு கொள்ள









 வேண்டிய அலைபேசி எண் : திரு துரை 9092391233