Thursday, February 11, 2016

சிகா முடிநாதர் ---சிவசைலம் --நெல்லை 


பரம கல்யாணி உடனுறை சிவசைல நாதர் திருகோயில் சிவசைலம்.திருநெல்வேலி மாவட்டம் , கள்ளகுறிச்சி வட்டம்.
கடனா நதிக்கரையில் அமைந்த அற்புத திருகோயில் இது. நந்திஎம்பெருமானின் அழகு வார்த்தையில் அடங்காது.மூலவர் சுயம்பு.
தீர்த்தம்: அக்னி தீர்த்தம்.

பெருமான் சிவசைல நாதர் தலையில் முடி போன்ற அமைப்புடன் காணப்படுகிறார் . வேறெங்கும் காண முடியாத விசேஷ 

அமைப்பு இது .





திருப்பணியை  எதிர்நோக்கும்  திருகோயில் 


உளுதமங்கலம் -அருள்மிகு கயிலாச வாசன் திருக்கோவில், செங்கல்பட்டு வட்டம் ( கருங்குழி ரயில்வே கேட் அடுத்து இடதுபுறம் 2 km ல் இவ்வூர் உள்ளது)சுவாமி பெரியபாணம் , மேல்தளம் கான்கிரிடில் போடப்பட்டுள்ளது .

தொடர்புக்கு - திருமதி.இராஜகுமாரி - 9092983596.




மாலவன்  வழிபட்ட மகேசன் --குடந்தை 


திருமால் வழிபட்ட திருமாலீச்வர பெருமான், குடந்தை .

வியாழன் வழிபட்ட வியாழ சோமேஸ்வரன் திருகோவிலில் இவர் சன்னதி தனி சன்னிதியாக அமைந்துள்ளது.
அம்பாள் ராஜேஸ்வரி நீண்டு நெடிதுயர்ந்த எழில் திருகோலம்.
இவர் சந்நிதியில் அமைந்துள்ள கல்யாண விநாயக பெருமானை மனமுருகி வழிபட திருமணம் தடை பட்டவர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுகிறது.

இத்தலம் குருஸ்தலமாகவும் போற்றப்படுகிறது.குடந்தை நகரின் மையப்பகுதிலேயே இத்திருகோயில் அமைந்துள்ளது .

உச்சரிப்பு பிறழ்ந்து வியாழ சோமேஸ்வரரை , ஏழை சோமேஸ்வரர் என பலர் அழைகின்றனர்.அதுதான் வருத்தமாக உள்ளது.




Wednesday, February 10, 2016

காமரசவல்லி  அரியலூர்  மாவட்டம் 

பாலாம்பிகை  உடனுறை  சௌந்தரேஸ்வரர்  திருகோயில் 


கார்கோடகன்  பூசித்ததால் இறைவன் திருநாமம்  கார்கோடேஸ்வரர் என்று  அழைக்கப்படுகிறார் ....
இறைவன் வாரி வாரி வழங்கும்  வள்ளல்  என்பதால் வள்ளலார்  கோயில்  என்றே அழைக்கப்படுகிறது ...
பிருங்கி  மகரிஷி  வணங்கிய தலம் 
கடக ராசிக்காரர்கள் வணங்க  வேண்டிய தலம்
ரதி  தேவிக்கு  மாங்கல்யம்  அளித்ததால்  மாங்கல்ய  தோஷம் நீக்கும் தலம்..
நாக தோஷம்  நீக்கும் தலம் ....
திருமண தடை , ஆண் வாரிசு இன்மை , தம்பதிகள்  பிரிவினை , குடும்பத்தில் அகால மரணம் , உத்தியோக தடை , கல்வி அறிவு பாதிக்கப்படுதல்
இவை அனைத்தும்  நீங்க  வணங்க வேண்டிய தலம் இது ....

குடந்தை  மகாமக  குளம் போல்  திருகுளத்திற்க்குள்  இங்கு  பல  தீர்த்தங்கள்  அமைந்துள்ளது ....நீராடுவது  மிக சிறப்பு..

ரதிதேவிக்கு  காமனை  உயிர்பித்து  தந்ததால்  இறைவிக்கு  காமராதிவல்லி  என்று பெயர்...
இன்றும்  ஒவ்வொரு  மாசி மாதம்  பௌர்ணமி  தினத்தன்று காமன்  பண்டிகை  நடத்தப்படுகிறது ..
இத்திருகோயிலில்  தினசரி  சேவை  செய்பவர்கள்  தீராத  வினை தீரும் ..
இது  கோவில்  கோபுர  முகப்பிலேயே  குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த  இறைவன் புரிந்த திருவிளையாடல்கள்  கணக்கற்றவை ...இன்றும் ...





























இத்தகைய  சிறப்பு  வாய்ந்த இந்த திருக்கோயில்  நாளடைவில்  நலிவுற்றது ...

தற்போது  பெரிய அளவில்  திருப்பணி  மேற்கொள்ளப்பட்டு திருகோயில் குடமுழுக்கு  செய்யப்பட்டுள்ளது ....

தொடர்புக்கு :  திரு  M. Kamaraj
cell:9787353895

Tuesday, February 9, 2016


இயற்கையின்  பேரதிசயங்களில்  ஒன்று ---லக 

மண்டல் ---உத்தரகண்ட் 
























லட்சகணக்கான  ஆலயங்களின்  அணிவரிசை  என்பது  லக  மண்டலின்  பொருள் .....

டேராடூன் மாநிலத்தில்  அமைந்துள்ள  புராதன  பெருமையையும் பழமையும்  உடைய  திருகோயில்கள் ...மறைந்திருக்கும்  அதிசயங்கள்..

பாண்டவர்கள்  மறைந்து  இருந்து  வாழ்ந்த போது , அவர்கள் தங்கியிருந்த  அரக்கு  மாளிகையில் , துரியோதனன்  அவர்களை பூண்டோடு கொல்ல  முயற்சித்தான்  அல்லவா?

அந்த  நிகழ்வு  இங்கு தான் நடந்தது ...

இங்குள்ள ஆயிரகணக்கான  லிங்க திருமேனிகள் , வழுவழுப்பான பளிங்கு  கல்லினால்  செய்யப்பட்டுள்ளது ...

கண்ணாடி போன்று  நம் உருவம் தெரியும் விதத்தில் அமைந்துள்ள அந்த லிங்க திருமேனிகளை  பார்க்க பார்க்க  பரவசமூட்டும்..

சாக்ரதாவிலிருந்து முசௌவ்ரி செல்லும்  சாலையில்  100 கிலோ மீட்டரில்  உள்ளது லக  மண்டல் ..

ரயில்  நிலையம் டேராடூன்  ரயில்  நிலையம் 
விமான  பயணம்  என்றால் ஜாலி க்ரான்ட்  விமான  நிலையம் 
விண்மீன்கள்  வழிபட்ட வேத நாயகன் 


செர்பணன்சேரி , காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜா வட்டம் ,
தாம்பரம் ---வாலாஜா  பேருந்து பாதையில் ஓரகடம்  அடுத்து உள்ளது

இங்குள்ளது  விண்மீன்கள் வழிபட்ட வீமீஸ்வரர்  திருகோயில்..
மிகவும் சிதைவுற்று  இருந்தது ..... கற்றளியான இத்திருகோயில் ......
கஜப்ரிஷ்ட அமைப்பு ....
தற்போது  இதன்  நிலை  தெரியவில்லை ......

அன்பர்கள்  யாரேனும்  அறிந்தால்  தெரிவியுங்கள் .....

பெருமான்  மிக  அற்புதமான  திருமேனி  கொண்டவர் ......
மறக்க முடியாத  திருவுருவம் ...

Friday, February 5, 2016

அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில் நீடூர் , மயிலாடுதுறை தாலுகா. நாகப்பட்டினம் மாவட்டம்.

சனி  பிரதோஷம்  நாளை...மறந்துவிடாதீர்கள் 



















நீடூர் ...மயிலாடுதுறை 
இத்திருகோயிலில் இறைவன் சுயம்புலிங்கமாக, இரு தள விமானத்தின் கீழ் அருள்புரிகிறார்.
மகாவிஷ்ணு வழிபட்டுள்ளார்.

நண்டு துளைத்த வடு இறைவன்மீது காணப்படுகிறது.

ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 21 வது தேவாரத்தலம் ஆகும்.

திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

தேவாரபாடல் பெற்ற தலமாக இருந்தாலும் பக்தர்கள் கூட்டம்
அறவே இல்லாததால் ஆலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
மனதிற்கு இது மிகவேதனையாக உள்ளது.

(படத்தில் பிரகாரத்தில் உள்ள கைலாசநாதர்)

Thursday, February 4, 2016

திருவிடைக்கழி, திருக்கடையூர் ,மயிலாடுதுறை 

இப்பூவுலகில் முருகப்பெருமான் பாதம் பதிந்தஇடம்இரண்டு....
ஒன்று வள்ளிமலை...மற்றொன்று திருவிடைக்கழி எனப்படும்
திருக்கடையூர் அருகில் உள்ள திருத்தலம்....
இத்தலத்திற்கு பல்வேறு சிறப்புகள்உள்ளது.....
இங்குள்ள குராமரத்தடியில் குகன் சிவபெருமானை வணங்கினார்....
















கருவறைக்குள் கருவறை என்னும் சிறப்புஉடையது
ஒரேகருவறையில் தந்தையுடன் தனயன் அருள்புரிகிறார்..
நவக்ரகங்கள் சன்னதி கிடையாது....
பிரதோஷ தினத்தன்று முருகனே திருஉலா காண்கிறார்...
இறைவன் பாப விநாசர் என்ற பெயர்கொண்டு விளங்குகிறார்..
முருகப்பெருமானே இத்திருகோயிலில் பிரதான இடம் பெற்றுள்ளார்...
இத்திருகோயில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே ஆறு கிலோமீட்டரில் உள்ளது...



அன்பர்களே மேலும் இத்திருத்தலத்தில் அனேக அதிசயங்கள் உள்ளன .

இங்கு அம்பாள் சந்நிதி கிடையாது .
நவகிரங்கங்கள் கிடையாது .
இரண்யாசுரன் மகனான சூரபன்மனை கொன்ற பாபம் நீங்குவதற்காக , இங்கு முருகப்பெருமான் குரா
மரத்தடியில் இறைவனை ஸ்தாபித்து வழிபட்டார் .

திருவிசைப்பா பெற்ற தலங்களுள் ஒன்று.

நந்திஎம்பெருமானுடன் , முருகனுக்குரிய யானை வாகனமும் காணப்படுகிறது .
இத்திருகோயில் திருகடையூரிலிருந்து 6 கிலோ மீட்டரில் உள்ளது
.

Wednesday, February 3, 2016

அருள்மிகு பரசுநாதசுவாமி திருக்கோயில், 

முழையூர் ,குடந்தை, தஞ்சாவூர்-மாவட்டம்.
குடந்தை--பட்டீஸ்வரம்  சாலையில் இத்தலம் உள்ளது .




















தந்தையின் உத்தரவுப்படி தனது தாயை வெட்டிய பரசுராமர், பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபூஜை செய்தார். அவர் முழையூர் திருத்தலத்திற்கு வந்தார். ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார். அவருடைய தோஷம் நீங்கியது. இதன் காரணமாக சுவாமிக்கு "பரசுநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது.
அம்பாள் ஞானாம்பிகையுடன், பரசுநாதர் கோயில் கொண்டுள்ள இந்த தலம் பாழ்பட்டு கிடந்தது. உள்ளூர் பக்தர் களின் முயற்சியால் ராஜகோபுரம் சீரமைக்கப் பட்டு, கோயிலுக்குள் உழவாரப்பணி நடந்துவருகிறது.
இங்கே ஒரு காலத்தில் மகாமகம் போல மிகப்பெரிய அளவில் திரிதியை விழா நடந்திருக்கிறது. வட மாநில பக்தர்களும் வந்தார்கள். அப்போது தங்கக்காசுகளால் சுவாமிக்கு காப்பிடப்படும். பிறகு இது படிப்படியாக குறைந்து விட்டது. சமீப காலமாக இந்தத்தலம் மீண்டும் புகழ் பெற்று வருகிறது.

Monday, February 1, 2016

சிங்கபுரீஸ்வரர்  , கோயில்பதாகை, ஆவடி 

திருமேனி  அழகர் என்றும்  இவர் அழைக்கப்படுகிறார் .....
அவ்வளவு  அழகு  பொருந்திய  திருமேனி .. பார்க்க பார்க்க பரவசம் ஏற்படுத்தும் .....


























அன்பர்களே .....இப்பெருமான்  காலம் , மற்றும்  புராண வரலாறுகள்  அறியப்படவில்லை ....
எனினும் திருமாலின்  நரசிம்ம   அவதாரத்தொடு  தொடர்புடைய  திருகோயில்  என்று  சொல்கிறார்கள் ...

ஆவடிக்கு  வெகு அருகில்  உள்ளது இத்திருகோயில்  எனினும்  அதிகம் அறியப்படாமல்  உள்ளது .....அதுதான் வேதனை ....
அருகிலேயே  கைலாசநாதர்  திருகோயில்  உள்ளது ...

இத்திருகோயில்களை  அடையும்  முன்  பிரதான சாலையில்  பிரசித்தி  பெற்ற  பெருமாள் ஆலயமும்  உள்ளது ....

அன்பர்களே  வரும் சனி பிரதோஷத்திற்கு அனைவரும் திரளாக கலந்து  கொள்ளுங்கள் ..
இத்திருகோயில் கள்  வளர்ச்சி  பெற உதவுங்கள் .....