Saturday, December 19, 2015

ராமானுஜபுரம்  ,கபிஸ்தலம், குடந்தை

அன்பர்களே, ராமனுஜபுரம்  காசி  விஸ்வநாதர்  திருகோயில் பதிவு செய்திருந்தேன் (கண்  நோய்கள்  தீர்க்கும் பெருமான்)அல்லவா?

அங்கிருந்து  ஒரு கிலோமீட்டர் தொலைவில்  வயல்  வெளியில் நட்ட  நடு  காட்டின்  இடையே  இப்பெருமான்  வானமே  கூரையாக  கவனிப்பா ரின்றி    காணப்படுகிறார் .





















இப்பெருமானை  பார்க்க பார்க்க ஏற்படும் பரவசம் சொல்லி  மாளாது .
அத்தனை  அழகு திருமேனி ....கம்பீரம் மனதை கொள்ளை  கொள்கிறது ..

விஸ்தீரணமான  விஸ்வநாதர்  திரு கோயிலிலேயே  இப்பெருமானையும் பிரதிஷ்டை  செய்து  வணங்கலாம் அல்லவா?
ஏன்  செய்யவில்லை? யார் தடுக்கிறார்கள் ? 
ஈஸ்வரோ ரஷது ......

Sunday, December 13, 2015

அர்ஜுனன் மங்கலம் (அச்சுதமங்கலம்),நன்னிலம் ,  நாகை 


























பஞ்சபாண்டவர்களில் தர்மர் வழிபட்ட அச்சுதமங்கலம் தர்மேஸ்வரர் திருகோயில்..மிகவும் சிதைந்த நிலையில் உள்ள இந்த திருகோயிலை உள்ளே சென்றுவழிபடவும் மிக அச்சமாக இருந்தது . அந்த அளவிற்கு இடிபாடுகள்......
அச்சுதமங்கலம் புகழ்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்திற்கு அருகாமையில் உள்ளது. நன்னிலம் வட்டம். நாகை மாவட்டம்.
முத்தான மூன்று திருகோயில்கள் இங்கு உள்ளன..
பஞ்சபாண்டவர்கள் ஐவரும் வழிபட்ட ஐந்து திருகோயில்கள் ஒருகாலத்தில் இங்கு விளங்கியதாக தெரிவிக்கின்றனர்.
இன்று மூன்று திருகோயில்கள் இருக்கிறது. காசி விஸ்வநாதர் திருகோயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு கோயில்கள் திருப்பணி செய்யப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Thursday, December 10, 2015

மகாவிஷ்ணு  வழிபட்ட  விஷ்ணுபுரம் 

கைலாசநாதர் 






வியாச மகரிஷி வணங்கி வழிபட்ட, மகாவிஷ்ணு வழிபட்ட, புராதன பெருமை வாய்ந்த விஷ்ணுபுரம் கைலாசநாதர். எரவாஞ்சேரி. கும்பகோணம்--பூந்தோட்டம் வழி.

கருவறையில்  சுமார்  5  அடி  உயரத்தில்  அற்புத  சேவை சாதிக்கிறார் கைலாசநாதர் .

இங்கு இரு சிவஸ்தலங்கள் உள்ளது.சுற்றிலும் உள்ள கிராமங்களிலும் நிறைய திருகோயில்கள் உள்ளன.

அது  மட்டுமிலாது,  தேவார  பாடல் பெற்ற  திருவீழிமிழலை திருகோயில்  வெகு அருகில்  உள்ளது ..

விஷ்ணுபுரம்  பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறிது  தூரம்  நடைபயனத்திலேயே கோயில்  அமைந்துள்ளது .
அன்பர்கள் வழிபட வேண்டிய அற்புத திருகோயில் இது.


Wednesday, December 9, 2015

அஷ்ட  லிங்கங்கள் ----அஷ்ட ஐஸ்வர்யங்கள் 

திருவேற்காடு  வேதபுரீஸ்வரர்  திருகோயில்  தொண்டை  நாட்டின்  தேவார பாடல்பெற்ற தலங்களுள் முக்கியமானது .

இத்திருகோயிலை சுற்றி  அஷ்ட திக்  பாலகர்கள்  வணங்கிய  அஷ்ட  லிங்கதிருமேனிகள் கோயில் கொண்டுள்ளனர்.  பலருக்கும் அறியப்படாமல்  உள்ளது  இந்த  ஆலயங்கள்.

அவற்றுள் குபேரன் வணங்கி வழிபட்ட குபேரபுரீஸ்வரர் திருகோயில், சுந்தர சோழபுரம், பருத்திபட்டில் உள்ளது.


திருவேற்காடு செல்பவர்கள் அஷ்ட லிங்கங்களையும் வழிபடுவது மிகவும் சிறப்பு.
ஒரே நாளில்  அஷ்ட லிங்கங்களையும்   தரிசிப்போருக்கு ,  வாழ்வில்  வளமை, ஆயுள்  அபிவிருத்தி , சகல விதமான  செல்வங்களும்  கிடைக்கப்பெறுவர் .....என்பது  உறுதி .

Tuesday, December 8, 2015


என்ன  மாதவம்  செய்தோம்? மாதவரம்  கைலாசநாதரை  காண?






சென்னை , மாதவரம் கைலாசநாதர் திருகோயில் மூலவர் கைலாசநாதர்.
மிகப்பெரிய,முழுவதும்  மரகத பச்சை கல்லினால் ஆன  திருமேனி  கொண்டவர் இவர் ,


பெருமாள் கோவிலுக்கு அருகிலேயே இத்திருகோயிலும் உள்ளது.
அனைத்து விசேஷங்களும் இங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது.
அடியார்கள் காண வேண்டிய அற்புத திருகோயில் இது.
அதிகம் அறியபடாத அபூர்வ ஆலயம்



 எடமச்சி கிராமம், .முக்தீஸ்வரர் திருகோயில் , செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

இந்த  கிராம\த்தை சேர்ந்த சத்யா  என்னும்  இளம்பெண்  இத்திருகோயிலை  தன  உயிரினும்  மேலாக  கவனித்து  வருகிறார்..






Friday, December 4, 2015

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்காஞ்சிபுரம் 




இந்தக் கோயிலை நிர்மாணித்தவன் ராஜசிம்மன்! போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமை கொண்டவன். அதனைச் சுட்டிக்காட்டும்படி, எங்கு பார்த்தாலும் சிம்மங்களே கோயிலைத் தாங்கி நிற்பது போலக் காட்சியளிக்கிறது.
இந்தக் கோயிலிலே நாம் காணும் ஒவ்வொரு சிற்பமும் சிவபராக்ரமத்தின் ஒரு கதையைக் கூறுவதாக உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் பார்க்க முடியாத அளவிற்கு அழகிய சிற்பங்கள் கொண்ட உள் சுற்று. சிவபெருமானின் தோற்றங்களை, அவனது பராக்கிரமங்களை நாயன்மார்கள் தங்கள் பாடல்களில் போற்றிப் பாடியுள்ள அத்தனை பாடல்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன,
இங்குள்ள சிற்பங்கள். ஒருபுறம் சம்கார மூர்த்தங்களாகவும் மறுபுறம் அனுக்ரக மூர்த்தங்களாகவும் அமைந்துள்ளதும், இதனை வடிவமைத்த சிற்பியின் கற்பனையையும், ஆன்மிக அறிவாற்றலையும் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. காப்பதும் அவனே! அழிப்பதும் அவனே! என்ற அற்புதத் தத்துவம்!

Thursday, December 3, 2015

அன்னப்பன்பேட்டை ----அக்னீஸ்வரர் ---

திருக்கடையூர் 







































திருக்கடையூர், அக்னீச்வரரின் எழில்தோற்றம்.
இத்தலம் தேவார வைப்புதலமாகும். பஞ்சாக்கை என்பது இதன் பெயர். தற்போதுஅன்னப்பன்பேட்டை என வழங்கப்படுகிறது.
திருகோயில் இன்றி பெருமான் ஓலை குடிசையில் உள்ளார்.
பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் திருக்கடையூர் திருகோயிலை சேர்ந்த அர்ச்சகர்கள் , இங்கு பூசை செய்கிறார்கள்.பிற  நாட்களில்  எந்த பூசையும் நடைபெறுவதில்லை .
பெருமான்திருகோயில் காணும் நாள் எந்நாளோ?

Wednesday, December 2, 2015



பறவைகள்  எச்சம் தான்  இவரது  பாலாபிஷேகமா?


























சித்தத்தை சிவன்பால் வைத்த அடியார்களுக்கு அன்பு வணக்கம் .
பாவூர் -காஞ்சிபுரம்-புதுபாளையம் கூட்டுரோடிலிருந்து 6 கிமீ ல் இவ்வூர் உள்ளது.
எம்பெருமானின் நிலையை பார்க்க பார்க்க கண்ணீர்தான் வருகிறது.
நந்தியம்பெருமான் முள் புதரில் உள்ளார்.
எத்தனை ஞானிகள், ரிஷிகள், முனிபுவங்கர்கள், சாதுக்கள், சித்தர்கள் வணங்கியிருப்பரோ?
நம் காலத்தில் பெருமானின் நிலை இவ்வாறு இருப்பது நமக்கு பெருமை சேர்க்கக்கூடியது அல்ல.

தொடர்புக்கு- திரு.நாகராஜ்-8489646093.

Tuesday, December 1, 2015

பலன்  தரும் பரிகார தலம் ---கொட்டாரம்































அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் அஞ்சல்- 609 603 நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.


சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக ஐதீகம்
அர்த்தமண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழமையான தேனடை உள்ளது. இறைவன் சன்னதியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை கேட்கலாம்.


சுகர்  மகரிஷி  தேனீக்கள்  வடிவமெடுத்து  இந்த இறைவனை  வணங்கியுள்ளார்.
தற்போதும்  தேனீக்கள்  வடிவமாக  அவர் வணங்கி  வருவதாக நம்பப்படுகிறது 



திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.