Tuesday, November 17, 2015

தரணி  போற்றும்  தரப்பாக்கம் சோமநாத ஈஸ்வரர் 



























குன்றத்தூர்  வட்டம் ,  குன்றத்தூர்  பம்மல்  சாலையில்  உள்ளது  தரப்பாக்கம் .

இங்கு  பலகாலம்  வெட்டவெளியில்  கோயில் கொண்டிருந்த பெருமானை 
பக்தர்கள்  சீரமைத்து  அழகானதொரு  திருக்கோயிலை  அமைத்துள்ளார்கள்.

திருகோயில்  அமைதியான சூழ்நிலையில் , விஸ்தீரணமாக அமைந்துள்ளது .
தூய்மையாக பராமரிக்கப்படுகிறது .

தியானம்  செய்ய  ஏற்ற திருகோயில். பெருமானின் கம்பீர திருமேனி காண்பவர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் .

கொடுத்து வைத்தவர்கள் ,  சென்று  தரிசனம்  செய்யுங்கள் .
இங்கு  கைலாசநாதர்  திருகோயிலும்  உள்ளது. 

Sunday, November 15, 2015

வெள்ளலூர் தேனீஸ்வரர் திருகோயில் , கோவை

பகைவர்களை வெல்ல இங்கே வாங்க ..........



















கொங்கு நாட்டின் சூரியபூஜை நடைபெறும் பாஸ்கர ஷேத்ரம் இது. சித்திரை முதல் நாள் சூரிய கதிர்கள் இறைவன் திருமேனிமீது படர்ந்து ஜொலிப்பது கண்கொள்ளாகாட்சி.

அலாவுதீன் கில்ஜியின் படை தலைவன் மாலிக்காபூர் படையெடுப்பால் மிகவும் சிதைக்கப்பட்டு , சின்னபின்னமாக்கப்பட்டது இத்திருகோயில்.

ஒரு காலத்தில் ஐந்து பிரகாரங்களை கொண்ட, மிகபழமை வாய்ந்த இத்தலம் பின்னர் சீரமைக்கப்பட்டது.......

சத்ரு தோஷம், திருமண தடை , குழத்தை பேறின்மை , நாக தோஷம் , நீக்கும் தலம் இது .

கொங்கு நாட்டின் மிக பழமையான தலங்களுள் இத்தலம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது .

காந்தி புரத்திலிருந்தும், உக்கடத்திலிருந்தும் பேருந்து வசதி உண்டு . தூரம் 12 கிலோமீட்டர் .

Saturday, November 14, 2015

கடலூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம் 




கல்பாக்கம் அருகில் உள்ள கடலூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த சிவாலயம். சுவாமி ஸ்ரீ அக்னீஸ்வரர். அம்பாள் ஸ்ரீ சொக்கநாயகி. கற்கோயில். கோஷ்ட மூர்த்திகள், பிரகார விநாயகர், முருகன், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. நவகிரகம் கிடையாது. 


































ஒரு கால பூஜை நடைபெறுகிறது. அர்ச்சகர் திரு கணேச குருக்கள் 9894287813, தொடர்புக்கு திரு ரமேஷ் 95000 65319, திரு குமாரவேல் 9443658574. பேருந்து MATHURANTHAGAM- KADALOOR 100C, AND PRIVATE BUS MAHAVEER.

Thursday, November 12, 2015

எமையாளும்  ஈசா!!! ஏனிந்த நிலை !!!!!

அகரம், கடம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் வழி.


































மிக சிதிலமடைந்த சிவாலயத்தில் இறைவன்.
பக்கத்துணையாக பிள்ளை(யார்)கள் இருகிறார்கள்!!!!!!


அகரம் கிராமம் கடம்பூர் ரயில் நிறுத்தத்திலிருந்து, பேரம்பாக்கம் செல்லும்வழியில் இருக்கிறது,ஏராளமான ஷேர்ஆட்டோ வசதி உண்டு,கிராமத்தில் கேட்டால்சொல்வார்கள். சிறியகிராமம்தான்

Tuesday, November 10, 2015

பக்தர்களுக்கு அருளும் பழியஞ்சியநல்லூர்  

பெருமான் 



பழியஞ்சிய நல்லூர் பெருமான், திருநீலக்குடி வட்டம் , குடந்தை. 



தேவார பாடல் பெற்ற தலமான வைகல் மாட கோயில் செல்லும் வழியில் இத்திருகோயில் உள்ளது.குட்டக்கரை என்னும் இடத்தில் இறங்கி சிறிது தூரம் நடைபயணத்தில் இத்திருகோயில் உள்ளது .

 திருப்பணி மிகவும் மந்த கதியில் நடை பெற்று வருகிறது.
பெருமானின்  அழகு  வார்த்தைகளால் வடிக்க இயலாது .




அருகில் உள்ள வைகல் திருகோவிலுக்கும் பக்தர்கள் வருகை மிக குறைவு . இது கோட்செங்கட்சோழன் கட்டிய மாட கோயில்களுள் ஒன்று.


Monday, November 9, 2015

அன்பர்களுக்கு  இதயம்  கனிந்த தீபாவளி  நல வாழ்த்துக்கள் 



கொக்காலடி உமாமகேஸ்வர பெருமானின் எழில் தோற்றம் .திருவாரூர் மாவட்டம் .
இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி யில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் இ.சி. ஆர் சாலையில் அமைந்துள்ளது



அன்பர்கள்  காண வேண்டிய  அற்புத திருத்தலம்  இது.






Sunday, November 8, 2015

நாலில்  ஒன்று,  கொரடாச்சேரி ,திருவாரூர் 



நாலில்ஒன்று, இது திருவாரூர் அருகில் கொரடாச்சேரி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய, நகரத்தின் சாயல் துளியும் இல்லாத கிராமம்.

கடைசியாக கண்டெடுக்கப்பட்ட திருவிடைவாசல் திருத்தலம் மிக அருகில் உள்ளது.

இங்கு ஒரு சிறிய குடிசையில் கம்பீரமாக கோயில் கொண்டுள்ளார் சுக்ரீஸ்வரர். பாண்டவர்கள் வழிபட்ட பரமன் இவர். அருகில் ஓடும் ஆறும் பாண்டவ ஆறு என்றே அழைக்கப்படுகிறது.

திருகோயில் கட்ட அருகில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கட்டப்படுவதற்கான அறிகுறிகள் தான் காணப்படவில்லை.


கொரடாச்சேரியி லிருந்து  இத்தலம்  இரண்டு கிலோ மீட்டரில்  உள்ளது .








Thursday, November 5, 2015


குடும்ப மகிழ்ச்சி கூட்டும் மாணிக்கேஸ்வரர், 

தாதாபுரம். திண்டிவனம் 








































திண்டிவனத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் வெள்ளிமேடு பேட்டை கூட்டு ரோட்டில் இறங்கி ஆட்டோ மூலம் இத்திருத்தலத்தை அடையலாம்.
ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரால், தஞ்சையை போன்ற அதே கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள திருகோயில் இது. கிராமத்து  மக்களால்  பொக்கிஷமாக  பாதுக்காகப்பட்டு  வருகிறது .தினமும்  ஒரு கால  பூசை  நடைபெறுகிறது .

Monday, November 2, 2015

இழந்ததை  மீண்டும் பெற அருள் புரியும்   திருத்தலம் 


































திருவாரூர்  மாவட்டம் நன்னிலம்  தாலூகா அச்சுதமங்கலம் என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதரை  வழிபட நாம் வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறலாம்.  
இழந்த  பொருள் மட்டுமல்லாது , இழந்த மன அமைதியையும் இங்கு வந்து வழிபட, நாம் மீட்டு கொள்ளலாம் .
 இன்றும் இந்த நம்பிக்கை நிலவுகிறது.

மிகப்பழமை வாய்ந்த இந்த திருகோயில்  புதுப்பிக்கப்பட்டு  நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது .

அர்ஜுனன்  தங்கியிருந்து  வழிபட்டமையால் அர்ஜுனன் மங்கலம் என்பதே 
தற்போது மருவி அச்சுதமங்கலம் என்று வழங்குகிறது.

ஆலய தொடர்புக்கு : R. மோகன் 9524348725
இத்திருகோயில்  புகழ் பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் தலத்திற்கு  அருகாமையில்  
அமைந்துள்ளது .

மேலும் இரு அற்புத   சிவாலயங்கள் இங்கு அமைந்துள்ளன .

Sunday, November 1, 2015

நயப்பாக்கம் - பூந்தமல்லிஅடுத்து அரக்கோணம் ரோட்டில் சென்று பீர்கம்பெனி ,பாபரம்பாக்கம் இடதுபுறத்தில் இருந்து 4 km இவ்வூர் உள்ளது இக்கோவில் திரிகல்லினால் கட்டயுள்ளனர் .முற்றிலும் சிதைந்துள்ளது .இறைவர் ஆகாயம் பார்த்த படி காட்சி ,மிகவும் வேதனையாக உள்ளது .

தொடர்புக்கு-9444352848