பழந்திருகோயில்களை பராமரிப்போம் !! போற்றுவோம்!!
Saturday, April 17, 2021
Monday, March 29, 2021
Saturday, March 27, 2021
Wednesday, March 24, 2021
தடைகளை தகர்த்தெறியும் தன்னிகரற்ற திருத்தலம் .....நாகதோஷம் போக்கும் நாகமலீஸ்வரர் .
இழந்த பதவியை மீட்டெடுக்க அருள்புரியும் அம்பிகை ......
வேறென்ன வேண்டும் அன்பர்களே ......
.வாருங்கள் நல்லதையெல்லாம் நலமுற அளிக்கும் நாலூருக்கு ...
அசுரர்களான ராகுவும் கேதுவும் தேவர்களைப்போன்று வேடமணிந்து நயவஞ்சகமாக அமிர்தம் உண்ட காரணத்தினால்,சபிக்கப்பட்டு பூலோகம் வந்து,அலைந்து திரிந்து பின் நாரதரின் ஆலோசனையின் படி பல இடங்களில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர் .
விமோச்சனம் பெற வழியின்றி களைத்த இருவரும் இறுதியாக இத்தலம் வந்து சேர்ந்தனர் .
என்ன அதிசயம் ........மிக அழகான ஒரு தாடகத்தையும் அதன் நடுவே ஸ்வர்ணமயமாக பூத்திருக்கும் மல்லிகை பூக்களையும் கண்டு அதிசயித்து , அதன் அருகே சென்றபோது ஆஹா ...இது நாம் தேடி வந்த அன்னை ஸ்வர்ணாபிகையே என்று உணர்ந்தனர் ....
அருகே சுயம்புவாக எழுந்தருளியுள்ள நாகமலீஸ்வரரையும் கண்டு மனம் கசிந்துருகி வணங்கி சாப விமோசனம் பெற்று தேவலோகம் திரும்பினர்.
இது வரலாறாகும் .
பின்னர் ஆட்சி செய்த மன்னர்களால் மிகப்பெரிய திருக்கோயில் கட்டப்பட்டு, விழாக்கள் பல கண்டது இத்தலம்
பெருமை வாய்ந்த இச்சிவாலயம் காலப்போக்கில் சிதிலமடைந்தது . பின் அன்பர்களின் பெருமுயற்சியால் சீரமைக்கப்பட்டு , அற்புத நாக தோஷ நிவாரண தலமாக திகழ்கிறது.
நாலூர் எனப்படும் இத்தலம் சென்னை-கும்மிடிபூண்டி மார்கத்தில் மீஞ்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 1km இல்அமைந்துள்ளது.
.கருவறையில் அற்புத லிங்கதிருமேனி கொண்டு எழிலுடன் அருட்காட்சி நல்குகிறார் நாகமலீஸ்வரர் ..
ஸ்வர்ணத்தினால் ஆன பூக்களில் தோன்றியமையால் அம்பிகை ஸ்வர்ணாம்பிகை என பெயருடன் விளங்குகிறாள்
.அன்பர்களே மிக சிறந்த நாகதோஷ பரிகார, இழந்த பதவியை திரும்பப்பெறும் பரிகார தலமான இத்தலத்தை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசியுங்கள்
பின் அதிசயங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்வதை நீங்கள் கண்கூடாக காணலாம் .
பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகிறது இத்தலத்தில் .
அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு மற்றைய நாட்களில் தரிசிக்கலாம் .
9444 320328
91769 67689
99407 68822
Friday, March 13, 2020
நீடித்த மாங்கல்ய பலத்திற்கும் , நிலையான திருமண நல்வாழ்விற்கும் மிகசிறந்த பரிகார தலம் நம் நாகை மாவட்டத்தில் உள்ளது .....
ஆம் அன்பர்களே திருமங்கலம் பூலோகநாயகி சமேத பூலோகநாதர் திருக்கோயில்தான் அது .
திருமங்கலம் என்ற பெயரில் ஏராளமான ஊர்கள் உள்ளன. இத்திருமங்கலம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் குத்தாலம் வட்டத்தில் புகழ் பெற்ற திருமணஞ்சேரி அருகில் உள்ளது .
எண்ணற்ற திருத்தலங்கள் சூழ இத்தலம் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது .திருவேள்விக்குடி, திருமணஞ்சேரி ,மேலை திருமணஞ்சேரி ,குத்தாலம் போன்ற தேவார பாடல் பெற்ற தலங்களும் இதில் அடங்கும் ....
அங்கெல்லாம் செல்லும் அன்பர்கள் திருமங்கலம் பூலோகநாதரையும் தரிசித்து அருள்பெருங்கள் .
ஏனெனில் இத்தலத்தின் மகிமையும் புராதன பெருமையும் அளவிடற்கரியது .கிடைத்தறிய இத்தலத்தில் தான் குபேரன் திருமாங்கல்யத்திற்க்காக மஹாலஷ்மியிடமிருந்து பொன் பெற்றதாக ஐதீகம் ....அருகில் அமைந்துள்ள பொன்னுர் என்னும் கிராமம் இதனை உறுதி செய்கிறது .
வேள்வி நடந்த இடம் வேள்விக்குடி ...திருமணம் நடைபெற்றது திருமணஞ்சேரி என அருகருகில் அமைந்துள்ள அனைத்து திருக்கோயில்களுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை .
கடுமையான திருமண தோஷம் உடையவர்கள் இங்கு ஒரு சிவராத்திரி தினத்தன்று வந்து முதல் ஜாமத்தில் இப்பெருமானையும் இரண்டாம் ஜாமத்தில் மாங்குடி சிவலோகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் பொய்கைக்குடி நாகநாதரையும் வணங்கி பின் மறுபடியும் நான்காம் ஜாமத்தில் இப்பெருமானை வணங்கி நிறைவு செய்ய , உடன்
திருமணம் கைகூடும்
அதுமட்டுமல்ல அன்பர்களே, ஆயுள் விருத்தி தலமாகவும் இத்தலம் விளங்குகிறது ...இங்கு வசிஷ்டருக்கு இறைவன் காலசம்ஹார மூர்த்தியாக தரிசனம் அளித்து , இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுள் பலத்தையும் அளிக்கிறார்.எனவே இங்கு சஷ்டியப்த பூர்த்தி , சதாபிஷேக ஹோமங்களை செய்து கொள்வது மிகுந்த நன்மையை தரும்.
மற்றுமோர் சிறப்பம்சம் இங்குள்ளது ....வேறெங்கும் காணமுடியாத வகையில் இத்தலத்தில் முருகப்பெருமான் ப்ரம்ம சாஸ்தா வடிவத்தில் வீற்றிருக்கிறார் ...சிறந்த அறிவாற்றல், நல்ல கல்வி தகுதிக்காக இவரை நாம் வழிபடலாம் ...
வசிஷ்டர் தன் மனைவி அருந்ததியோடு தம்பதி சமேதராக மிருத்யுஞ்ச ஹோமம் புரிந்த தலம் ஆகையால் இங்கு வந்து வணங்கும் பெண்கள் மாங்கல்ய பலம் கூடும் ..
காண்பதற்கரிய இத்தலத்தை அன்பர்கள்தவற விடாமல் வாழ்வில் ஒரு முறையேனும் வணங்கி இறையருள் பெறுங்கள் .
ஆலய அர்ச்சகர் திரு மோகன் அவர்கள்
அலைபேசி எண் :9486181657
திருப்பணிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புடைபடங்கள்
Thursday, March 12, 2020
முத்தான இரு திருக்கோயில்கள் ....முத்தே சிவலிங்கங்களாக மாறிய திருக்கோயில்
அவ்வாறு தெறிக்க ஆடிய ஆலங்காடு தலத்துடன் தொடர்புடைய திருக்கோயில் ..
தூசு இல்லை ...காற்று மாசு இல்லை ....ஜன நெரிசல் இல்லை
மாஸ்க் அணியாமல் தைரியமாக சென்று வரலாம் வாருங்கள்,
அழைத்து செல்கிறேன் ....
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருவாலங்காடு திருத்தலம் நம்மில் பலரும் அறிந்ததே ....
இங்கு இறைவன் ஆடிய இரத்தின சபை பஞ்ச சபைகளில் முதன்மையானது ....ஆனால் பலரும் அறியாதது
இத்தலத்தை சுற்றிலும் ஏராளமான இத்தலத்துடன் தொடர்புடைய திருக்கோயில்கள் உள்ளன.
அவற்றையும் அன்பர்கள் தரிசித்து பலன் பெற வேண்டும் ...
ஒரே தலத்தையே தரிசித்திராமல் , பழமையும் புராதன பெருமையும் ஒருங்கே கொண்டுள்ள கிராமபுரங்களில் உள்ள இத்தகைய திருத்தலங்களை தரிசிக்கும்போது கிடைக்கும் மன நிறைவு ,ஆத்ம திருப்த்தி வேறெதிலும் கிடைப்பதில்லை
அன்பர்களே ....,
அத்தகைய ஒரு திருக்கோயில் தான் திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , மப்பேடு அடுத்த முதுகூர் என்னும் திருத்தலமாகும்
ஒன்றல்ல இரண்டு திருக்கோயில்கள் இத்தலத்தில் உள்ளன.
திருப்பணி செய்யப்பட்டு பேரழகுடன் விளங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் .மற்றும் முத்தீஸ்வரர் திருக்கோயில் இக்கிராமத்திற்கு அழகு சேர்க்கிறது .சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வேறெங்கும் காண முடியாத0 ஓர் அதிசயம் வைணவ புருஷர் ஸ்ரீமன் ராமானுஜருக்கு தனி சந்நிதி அமைந்திருப்பதே ...சைவ வைணவ ஓற்றுமைக்கு இது ஒரு உதாரணமாகும் மிகுந்த ஈர்ப்புடன் இவரது சிலா ரூபம் உள்ளது ..
இத்திருக்கோயிலிருந்து சற்று தள்ளி ஊருக்கு ஒதுக்குபுறமாக முத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது .அற்புதமான பெரிய திருமேனி காண்போரை பரவசப்படுத்தும் ...சிறிய இருக்கோயில் என்றாலும் , விஸ்தரிக்க முயற்சி மேற்கொடுள்ளனர் அன்பர்கள் ..
எங்குள்ளது ?
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையாகும் முதுகூர் ....
பூந்தமல்லியிலிருந்து தக்கோலம் செல்லும் பேருந்துகள் மப்பேடு செல்கின்றன .அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இக்கிராமம் ....
பேரம்பாக்கம் வழியாகவும் வரலாம் ...
முத்தீஸ்வரர் திருக்கோயில்
சுந்தரேச பெருமான் முன்பிருந்த நிலை
Monday, March 9, 2020
ஆலயம் தொழுவது சாலவும் நன்று .....
நம் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் திருக்கோயில்களை காப்பது நம் புனிதமான கடமைகளில் ஒன்று ....
அப்படி கஜா புயலின் காரணமாக 3 வருடத்திற்கு முன் நின்று போன திருப்பணி வேலைகளை மீண்டும் துவங்கியிருக்கும் ஓம்காரம் இறைபணி மன்றத்தினருக்கு உதவிட உங்களை அன்புடன் அழைக்கிறோம் ...
ஆப்பரக்குடி அமிர்தலிங்கேஸ்வர் திருக்கோயில்
திருவாரூர் மாவட்டம் , திருத்துறைப்பூண்டி வட்டம் , கச்சனம் அருகே உள்ளது இச்சிறிய கிராமம் .மிகவும் சிதைத்து போன இத்திருக்கோயிலைபுனரமைக்க தற்போது அன்பர்கள் பெரும்முயற்சியுடன் களமிறங்கி உள்ளனர் .
அன்பர்களே ...ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் .
செயற்கரிய இறைப்பணியில் ஈடுபடும் அன்பர்கள் டாடாவோ , பிர்லாவோ அல்லர் ....மிக சாமானியர்கள் தான் இத்தகைய பணியில் ஈடுபட முற்படுகின்றனர் ..அவர் கரங்களுக்கு வலு சேர்க்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும் ...
தற்போது சுவாமி விமான வேலைகளும் , அம்பாள் சன்னதி புதிதாக அமைக்கவும் மணல் , செங்கல் சிமென்ட் மற்றும் ஸ்தபதியார் சம்பளத்திற்கும் பொருளுதவி தேவைப்படுகிறது ....
ஒரு சிவாலயத்தை சீரமைப்பது என்பது ,பல ஜென்மங்களில் நாம் செய்த புண்ணிய பலன்களால் கிடைப்பது .இதனை நாம் இழந்துவிட கூடாது ...
அலைபேசி எண் தந்துள்ளேன் ...
Sunday, March 8, 2020
➲அகத்தியருக்கு திருமணகாட்சி கொடுத்த இடம் .
➲முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தன் திருநடன காட்சி அருளிய தலம்.
➲தன் தந்தையின் காலிலிருந்து கழண்ட மணியை கண்டெடுத்து, பின் காலில் கட்டிவிட்டு 'மணி கட்டிய 'பிள்ளயார் எழுந்தருளியிருக்கும் தலம்.
➲திருமண தடை அகற்றும் தலம்.
➲சஷ்டியப்த பூர்த்தி , ஆயுஷ் ஹோமம் , பீமரத சாந்தி ,சதாபிஷேகம் போன்றவை இங்கு இத்தலத்தில் செய்து கொள்வதால் ஆயுள் விருத்தி கூடும் ....
தாண்டவர் தோட்டம் எனப்படும் இத்தலம் மருவி 'தண்டம் தோட்டம் ' என அழைக்கபடுகிறது. நர்த்தனபுரி என்பது புராண பெயர் .தேவார வைப்பு தலமும் கூட .
அன்னை சிவகாம சுந்தரி
தீர்த்தம் : சூரிய தீர்த்தம் , அகத்திய தீர்த்தம்
தல விருட்ஷம் : வன்னி
எங்குள்ளது ?
திருநாகேஸ்வரம் அருகில் அம்மன்குடி ,முருக்கன்குடி தாண்டியதும் இத்தலம் உள்ளது.
ஒரு வைகாசி விசாக நட்சத்திர நன்நாளில் அகத்தியருக்கு ஸ்ரீ காத்யாயினி சமேத கல்யாண சுந்தர மூர்த்தியாக காட்சியளித்த தலம் .அந்நாளில் இங்கு வந்து தரிசிப்போருக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம் .
விசாக நட்சத்தன்று வழிபட வேண்டிய பரிகார தலம்
மிகப்புராதனமான அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் ஒன்று இங்கு வழிபாடற்று உள்ளது
இத்திருக்கோயில் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும் திறந்திருக்கும்
திருநாகேஸ்வரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு ...108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாச்சியார்கோயிலிருந்தும் இங்கு செல்ல சாலை வசதி உள்ளது ..
தண்டந்தோட்டத்திற்கு அருகில் உப்பிலியப்பன் கோயில் , ஐய்யாவாடி பிரத்யங்கரா தேவி திருக்கோயில் , திருநாகேஸ்வரம் அம்மன்குடி நடார் ஆகிய திருக்கோயில்கள் தரிசிக்க தக்கவை
ஆலய தொடர்பிற்கு :
திரு நடராஜ குருக்கள்
0435 2446019
09443070051
Monday, November 11, 2019
சட்டநாதர் கோயில் என்று அழைக்கப்படும் இத்திருக்கோயிலை கண்டால் கதறி விடுவீர்கள் ........
மிகச்சிறந்ததொரு பரிகார தலம் மிகவும் சிதிலமடைந்து புதர்கள் மண்டி , ஒரு நல்ல ஓவியத்தை கண்ணா பின்னா வென்று கசக்கி போட்டதுபோல் உள்ளது அதன் இன்றைய நிலை .
இன்று இத்தீர்த்தம் சுருங்கி ஒரு கிணறு மட்டுமே காட்சியளிக்கிறது ......
கருவறையில் இறைவன் ஆபத்தாருண சுவாமி , நம் ஆபத்துகளை களையும் விதமாக தேஜோமயமாக விளங்குகிறார் ......பார்த்த மாத்திரத்தில் நம் கண்கள் பணிக்கிறது ....
திருகோயில் மெய்காப்பாளர் திரு மோகன் அவர்கள் கோயில் அருகிலேயே உள்ளார். தரிசனம் செய்ய உதவுகிறார்.
இத்தகைய அரிய திருகோயில்களை நாம் இழந்துவிட கூடாது.
அன்பர்களே குறைந்த பட்ஷம் சென்று தரிசனமாவது செய்வோம் .
Thursday, November 7, 2019
தொலைந்து போன அடையாளங்கள் ....
முன்பு இருந்தது போல் அன்று சென்னை மாநகரில் ஆளுயர கட்டடங்கள் இல்லை ... பேருந்து வாகன நெரிசல்கள் இல்லை ....தொழில் நுட்ப வசதிகள் இல்லை
ஆனால்
வானுயர திருக்கோயில்கள் இருந்தன ...
தேரோடும் வீதிகள் இருந்தன ....
ஆன்மீக ஈடுபாடு இருந்தது ......
அசுர வளர்ச்சியாலும் அந்நியர்கள் படையெடுப்பு , மற்றும் மாற்று மதத்தினர் காழ்ப்பு உணர்ச்சியாலும் நம் சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த திருக்கோயில்களின் மூலவர்கள் சிலவற்றின் நிலைமையை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம் வாருங்கள்...
அமைஞ்சிக்கரை , சேத்துப்பட்டு பகுதி
அமைந்தகரை அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
அகத்தியர் வழிபட்ட ஒரு காலத்தில் மிகப்பெரிய திருக்கோயிலாக கோலோச்சி கொண்டிருந்த ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் இன்று ஆனந்தவல்லி தெரு முனையில் ஒரு மரத்தடியில் உள்ள மிகச்சிறிய அம்மன் கோயில் ஒன்றில் பாணம் உயரம் குறைக்கப்பட நிலையில் உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆனால் அது தான் உண்மை.
கிட்டத்தட்ட தூக்கி வீசப்பட்ட இவரது பிரம்மாண்டமான திருக்கோயில் இருந்த இடத்தில் தற்போது தேவாலயம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது ...
இருப்பிடம் ...அய்யாவு நாயுடு காலனி , விஜயேஸ்வரி தெரு .....சர்ச் அருகில் ..
சேத்துப்பட்டு சிவன் 1
சேட்பட் சிவன் 2
இருக்கும் திருக்கோயில்களையாவது காப்பாற்ற வேண்டும் அல்லவா?