அன்பர்களே ....நீங்கள் கோவிலுக்கு செல்ல எண்ணினால் இத்தகைய திருக்கோயில்களுக்கு செல்லுங்கள் .
நீங்கள் செலுத்தும் காணிக்கை எத்துனை சிறிதாயினும் இத்தகைய திருக்கோயிலுக்கு தட்டில் செலுத்துங்கள் ..
அவை உண்மையில் இறைவனை சென்றடையும் ...
ஆம் !.அன்பர்களே...
நம் சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டம் எண்ணிலடங்கா வெளிஉலகிற்கு தெரியவராத அதிசயங்களையும் அற்புதங்களையும் தன்னுள் அடக்கிய திருக்கோயில்களை தன்னகத்தே கொண்டுள்ளது .
சுற்றிலும் வயல் வரப்புகளும் , சிலு சிலுவென்ற காற்றும் நெஞ்சை அள்ள , அமைதியும் ஏகாந்தமும் கொண்டு ஈடில்லா ஆன்மீக அனுபவத்தை அள்ளித்தர காத்திருக்கின்றன அத்திருக்கோயில்கள் ....
வருவதற்கு நீங்கள் தயாரா?
அப்படியெனில் வாருங்கள் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் , கடம்பத்தூர் பேரம்பாக்கம் வழியில் உள்ள கண்டிகை கிராமத்திற்கு ....
அங்கு பச்சைப்பசேல் வயல்களினூடே கோயில் கொண்டுள்ளார் மரகத லிங்கத்திருமேனி கொண்ட மரகத லிங்கேஸ்வரர் ...பச்சை மரகத கல்லினால் ஆனவர் ...அன்னை மரகத வள்ளி .
மிகப்பெரிய இத்தகைய மரகத திருமேனிகள் மிக அரிது ....பளபள வென்ற அவர் திருமேனியில் நாம் முகம் பார்க்கலாம் ...
அன்பர்களே இத்திருக்கோயில் திருப்பணியில் உள்ளது .இறைவன் மட்டுமே கருவறையில் குடிபுகுந்துள்ளார் இறைவி இன்னமும் மழையிலும் வெயிலிலும் காய்ந்தபடி தான் உள்ளார் .
இங்கு வர கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் ...ஸ்ரீராம் நகர் என்றும் சொல்கிறார்கள் பிரதான சாலையிலிருந்தே நீங்கள் கோவிலை காணலாம் .ஆயினும் சற்றே வயல் வரப்பில் நடந்து தான் வர வேண்டும் .சாலை வசதி இன்னமும் இத்திருக்கோயிலுக்கு ஏற்படுத்தி தரவில்லை ...
கண்டிகை என்ற பெயரில் அநேகம் ஊர்கள் உள்ளது . எனவே புதுமாவிலங்கை கண்டிகை என்று கேட்டு இறங்குங்கள் .புதுமாவிலங்கையிலும் புராதனமான திருக்கோயில் ஒன்று உள்ளது .
நான் சென்றபோது ஒருவரும் இல்லாத நிலையிலும், ஜடா முடி தரித்த சாது ஒருவர் இப்பெருமானை கடமையே கண்ணாக , அபிடேகம் செய்து பூசித்து கொண்டிருந்தார்.
பக்தர்கள் வருகை இல்லாத நிலையிலும் அவர் ஒருவரையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை ..தான் உண்டு ....எம்பெருமான் உண்டு ......
அன்பர்களே அதனால் தான் சொல்கிறேன் ....கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு கொரானாவை வலிய வரவழைத்துக்கொள்ளாதீர்கள் ..
கிராமத்து கோயில்களுக்கு விஜயம் செய்யுங்கள் ..இறைவன் தங்கள் குறைகளை களைவதற்கு அங்குதான் விஸ்ராந்தியாக காத்துள்ளார் ..
மன ஆரோக்கியம் ..உடல் ஆரோக்கியம் இரண்டுக்கும் உத்திரவாதம் கிராமங்களில் தான் .
No comments:
Post a Comment