Tuesday, January 12, 2016

சனி தோஷம் நீங்க இங்கே வாங்க!!!




































அன்பர்களே சனிபகவான் தன் குறை நீங்க இங்கே இறைவனை வழிபட்டு அருள் பெற்றார்.
➨மயானத்திற்கு எதிரே அமைந்த தலம் மிக அரிது.எனவே இத்தலம் ஸ்ரீவாஞ்சியத்திற்கு நிகரான தலம் .
➨உடல் ஊனமுற்றோர் வணங்க வேண்டிய பரிகார தலம்.
➨இத்திருகோயிலில் எழுந்தருளியுள்ள விமல லிங்கம் மிக சக்தி வாய்ந்தது. 8 வகையான தைல காப்புகளால் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
➨இவரை வணங்க அனைத்து வியாதிகளும் பகலவனை கண்ட பனி போல் மறையும் . இது அனுபவ ரீதியான
உண்மையாகும்.
அத்தலமே பிரமராம்பிகை உடனுறை அங்குரேஸ்வரர் உறையும் ஆதிகுடி தலமாகும் .இது திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், அன்பில் செல்லும் மார்க்கத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .
மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண் : 97884---02327

Monday, January 11, 2016

நால்வர் நயந்த  நாவலூர்  திருத்தலம் --திருநாவலூர் 






























சென்னை --திருச்சி  தேசிய  நெடுஞ்சாலையில் மடப்பட்டு  தாண்டியதும் இரண்டு  கிலோமீட்டரில்  இத்தலம்  உள்ளது . தேவார பாடல் பெற்றது ...
வன் தொண்டராகிய  சுந்தரரை  ஈன்ற  பூமி ....
விழுப்புரம்  மாவட்டம் ....உளுந்தூர்பேட்டை வட்டம் ...

மிகபழமையான  இத்தலம் , இந்திரன் , மகாவிஷ்ணு , கருடன் ,பார்வதி,சூரியன் சுக்கிரன்  சண்டிகேஸ்வரர் , அஷ்ட திக் பாலகர்கள்  ஆகிய  பலராலும் வழிபட பெற்றது ....

இங்கு வந்து வழிபட மனதிற்கு  நிம்மதியும் , வாக்கு வன்மையும் , கல்வி கேள்விகளில்  முதன்மை யும் சித்திக்கும் ....

Sunday, January 10, 2016

மிரட்டும்  நோய்க்கு  மாமருந்து ----கச்சூர் 



இரந்திட்ட ஈஸ்வரன்.....விருந்திட்ட ஈஸ்வரன்..........மருந்திட்ட ஈஸ்வரன்........
திருகச்சூர் மருந்தீஸ்வரர். சிறிய மலை மீது கோயில் கொண்டுள்ளார். தேவாரபாடல் பெற்ற தலம் கீழே அமைந்துள்ளது.இறைவன் திருமால் வழிபட்ட கச்சபேஸ்வரர்..
விருந்திட்ட ஈச்வரன் சன்னதி தனியே பிரகாரத்தில் அமைந்துள்ளது.
இங்கு மேலும் இரந்திட்ட ஈஸ்வரன் திருகோயிலும் உள்ளது.
அதையும் தரிசிக்கதவறாதீர்கள்.
திருக்கச்சூர் சிங்கபெருமாள் கோ
யிலில் இருந்து மூன்று கிலோமீட்டரில் உள்ளது.







Saturday, January 9, 2016

மலைபட்டு ....சோமங்கலம் ......ஸ்ரீ பெரும்புதூர் 


பறவைகள் எச்சம் தான் இவரது நெற்றிதிலகமா? மலைப்பட்டு கிராமம் சோமங்கலம் வட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் காஞ்சிபுரம் மாவட்டம். வயல் வெளியில் இவர்உள்ளார்.




Tuesday, January 5, 2016

மண்ணிலிருந்து வெளிவந்த  மகா சக்தி .....


மணஞ்சேரி குன்றத்தூர்.. இங்குகண்டெடுக்கப்பட்ட ஆறடி உயரமுள்ள லிங்கத் திருமேனி , கிராமத்து மக்கள் உதவியுடன் அடியார் பெருமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது......

அடியார்கள்  பெருமளவில் பிரதோஷ  விழாவில்  கலந்து கொண்டு பலன் பெற வேண்டுகிறேன்

Monday, January 4, 2016


சித்தர்காடு , மயிலாடுதுறை 

திருசிற்றம்பல நாடி அடிகள் சித்தர் பீடம் 



சித்தர்காடு சித்தர் பீடம் , பிரகாரத்திலுள்ள சப்த லிங்கங்களின் அணிவரிசை , மயிலாடுதுறை....

கும்பகோணம்--மயிலாடுதுறை பேருந்து பாதையில் உள்ளது....
சிவாலயத்துடன் கூடிய இத்தலம் பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது 


அடியார்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புத தியான பீடம் .....



Sunday, January 3, 2016

பிரம்மதேசம் -----காஞ்சிபுரம் ---புறக்கணிக்கப்பட்ட 

தலம் 


இராசேந்திர சோழன்னின் பள்ளி படை மிக அருமையான ஒர் பிரம்மாண்ட ஸ்தலம்,பல வெற்றிகள் குவித்து சரித்திரங்கள் படைத்து இருதியில் ஈசன்னடி சேர்ந்த இடம் காஞ்சிபுரம் அருகில் பிரம்மதேசம் கிராமத்தில்!!!!! 

ஆனால்  யாராலும் அறியப்படாமல் , இன்னமும் வெளிச்சத்திற்கு வராமல் உள்ளது தான் சோகம்...

பிரமாண்டமான கற்றளியான இத்தலம் இன்று அழிவின் பிடியில் சிக்கியுள்ளது ...
இத்திருகோயிலின்  அருகில் ஒரு மரத்தின் அடியில் பலகாலமாக வீற்றிருக்கும் 
அற்புதமான லிங்கத்திருமேனி இது .....

தொடர்புக்கு : திரு ..நந்த குமார் 
அலைபேசி எண் :9994270700



பரவையுண் மண்டலி என்கிற துர்வாசர் கோயில்

சீர்மிகு செல்வத் திருவாரூரில் பூங்கோயில், அறநெறி என்னும் அசலேசம், பரவையுண் மண்டலி ஆகிய மூன்று தேவாரத் தலங்கள் உள்ளன. இவற்றுள் பூங்கோயிலும் அறநெறியும் தியாகராஜர் திருக்கோயிலினுள்ளேயே அமைந்துள்ளன.




























பரவையுண் மண்டலி என்கிற துர்வாசர் கோயில், தியாகராஜர் திருக்கோயிலுக்கு வெளியே, கோயிலை ஒட்டிய கீழ வீதியில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் திருப்பெயர் தூவாயர், இறைவியின் திருப்பெயர் பஞ்சின் மெல்லடியாள். துர்வாசர் வழிபட்ட பெருமான் என்பதால் இத்தலத்து இறைவனை துர்வாச நாயனார் என்று அழைக்கின்றனர்.

ஆனால், தூவாயர் என்றே பெயரே புராணங்களில் காணப்படுகிறது. இக்கோயில் பிராகாரத்தில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் விநாயகருக்கு அருகே துர்வாசரின் சிலை உள்ளது

Saturday, January 2, 2016

தண்டந்தோட்டத்து  தயாபரன் 


காண காண  திகட்டாத  நடனபுரீஸ்வரரின் எழில் தோற்றம் ....


தண்டந்தோட்டம் , நடனபுரீஸ்வர பெருமானின் கார்த்திகை சோமவார தரிசனம். அம்மன்குடி வட்டம், முருங்கங்குடி அருகில்.
திருநாகேஸ்வரம் வழி. குடந்தை .


இங்குள்ள  நடராஜர்  திருமேனி  மிக்க எழில்  வாய்ந்தது .....
பொதுவாக விரித்த சடையுடன்  காணப்படும்  நடராஜ பெருமான் இங்கு அள்ளி முடித்த சடையுடன்  காணப்படுகிறார்....
ஆனால்  அவரை காணத்தான் நமக்கு கொடுத்து வைக்கவில்லை.
இப்பெருமானின்  பஞ்ச லோக விக்ரகம்  திருடப்பட்டு விட்டது ....

தற்போது  வரையப்பட்ட ஒரு சித்திரத்தையே  அங்கு நடராஜருக்கு பதில் வைத்துள்ளார்கள் .....

இது திருக்குற்றாலம் சித்திர சபையை உணர்த்துவதாக உள்ளது .











பலன் தரும்  பரிகார  தலம் ---

திருவெண்ணெய்நல்லூர்


அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோயில், திருவெண்ணெய்நல்லூர்-607 203. விழுப்புரம் மாவட்டம்.
இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த ஈசன் லிங்கமாக ஐக்கியமாகும் முன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்னமும் இத்தலத்தில் உள்ளது.
சுந்தரருக்கும், கிழவனாக வந்த ஈசனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபமும் உள்ளது.
இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.


தர்மதேவதையே நந்தி வடிவில் இங்கு இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள் தாங்களும் மாலை போட்டு நந்திக்கும் மாலை போட்டு சுற்றினால் திருமண வரம் கண்டிப்பாக ஈடேறும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
உடல் ஆரோக்கியம் ,தொழில் ஆகியவற்றுக்காக ஜப்பான் நாட்டிலிருந்தெல்லாம் இங்கு வந்து பக்தர்கள் யாகம் நடத்துகிறார்கள். பூர்வ ஜென்ம பாவம் விலக யாகம் செய்கிறார்கள். நவகிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது
மேலும் ஒரு விசேஷம்.