Tuesday, December 1, 2015

பலன்  தரும் பரிகார தலம் ---கொட்டாரம்































அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் அஞ்சல்- 609 603 நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.


சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக ஐதீகம்
அர்த்தமண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழமையான தேனடை உள்ளது. இறைவன் சன்னதியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை கேட்கலாம்.


சுகர்  மகரிஷி  தேனீக்கள்  வடிவமெடுத்து  இந்த இறைவனை  வணங்கியுள்ளார்.
தற்போதும்  தேனீக்கள்  வடிவமாக  அவர் வணங்கி  வருவதாக நம்பப்படுகிறது 



திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

Monday, November 30, 2015

நகுலன்  வழிபட்ட நகுலேஸ்வரர் --கீழ தஞ்சை  


மற்ற  பெருமான்கள் மிகபெரிய  பாண  லிங்கமாக எழுந்தருளியிருக்க , இவர் மட்டுமே ஆவுடையாருடன்  கூடிய அழகிய லிங்கத்திருமேனியராய் விளங்குகிறார்.

அன்பர்களே....சிவ  பக்தியில்  சிறந்த  கோச்செங்கண்ணாயனார் சிவசபையினரை ,

































அவர்களது  பெருமுயற்சியை எவ்வளவு பாரட்டினாலும் தகும் .

அவர்கள்  தான் மேற்கூறிய  பஞ்ச  லிங்கதிருமேனிகளுக்கும்  சிறந்த முறையில்  மேற்கூரை  அமைந்துள்ளனர் .அவர்களது  அலைபேசி  எண்களை தந்துள்ளேன் .

கோச்செங்கண்ணாயனார் சிவசபை

[9444352848 , 9677226260]

Sunday, November 29, 2015

சகாதேவன்  வழிபட்ட சகாதேவேஸ்வரர் -கீழத்தஞ்சை --நாகை 































பஞ்ச  பாண்டவர்கள்  எங்கு  தங்கியிருந்தாலும்,  சிவ பூஜை  செய்வதை வழக்கமாக  கொண்டிருந்தனர் .

சிவ  வழிபாடு  செய்வதை  ஒருபோதும்  மறவாத சகாதேவன்  வழிபட்ட திருமேனி தான்  சகாதேவேஸ்வரர்.

இவரும்  மிகப்பெரிய திருமேனி ...கொண்டு  எழில் உருவமாக காட்சி தருகிறார்.

கோயில்  அர்ச்சகர் திரு ..ஸ்ரீனிவாச  ஐயர் 

தொடர்புக்கு: 94424  22582



அர்ஜுனன்  வழிபட்ட  அர்ஜுனேஸ்வரர்--கீழ தஞ்சை --நாகை 





















அன்பர்களே , அர்ஜுனன்  வழிபட்ட  அர்ஜுனேஸ்வரர்  அழகான நீண்ட பாணத்துடன், தேஜோமயமாக  காட்சி நல்குகிறார்......

பலகாலமாக  மண்ணில்  புதைந்திருந்த  லிங்கத்திருமேனிகள் .....ஆனால்  நேற்று  சிற்பிகள்  வடித்தனரோ?  என்று  என்னும்  அளவிற்கு  பளபளப்பான 
வடிவம்  கொண்டு  விளங்குகின்றனர்...

அன்பர்களே!!காண்பதற்கு  யார் யாரெல்லாம்  கொடுத்து வைத்துள்ளீர்கள் ?

கோயில்  அர்ச்சகர் திரு ..ஸ்ரீனிவாச  ஐயர் 

தொடர்புக்கு: 94424  22582

Friday, November 27, 2015

பீமேஸ்வரர் ---கீழத்தஞ்சை ----நாகை 


அன்பர்களே.....கீழ தஞ்சை  தர்மேஸ்வர ரை  தரிசனம் செய்தோம்  அல்லவா?
இப்போது  பீமன் வழிபட்ட  அற்புத லிங்கத்திருமேனி  பீமேஸ்வரரை தரிசனம்  செய்ய வாருங்கள்....மிக  வழுவழுப்பான அற்புத லிங்கத்திருமேனி .....கண்கள்  செய்த  பாக்கியம் தான் என்னே!!!

என்ன  தவம்  செய்தார்கள்  இந்த  கிராமத்து  மக்கள்....
ஐந்து  பெருமான்களையும்  ஒரே இடத்தில்  காண  கொடுத்து வைத்துள்ளார்கள்  அல்லவா?


























உங்கள்  கவனத்திற்கு:

 இத்தலம்  தேவார  பாடல் பெற்ற  திருசெங்காட்டான்குடி திருகோயில்  அருகே இரண்டு  கிலோமீட்டரில்  உள்ளது. திருமருகல்  தலத்திற்கு ஐந்து  கிலோ மீட்டர்  தொலைவு .....

Thursday, November 26, 2015

ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் திருகோயில் 

சாக்கோட்டை , குடந்தை.


சாக்கோட்டை , பெரியார் நகரில் இத்தலம் அமைந்துள்ளது. அழகான திருகோயில் இப்பெருமானுக்கு கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

தேவாரபாடல்பெற்ற சாக்கோட்டை அமிர்தகலசநாதர் திருகோயிலோடு தொடர்புடையது இத்தலம். 

































குடந்தையிலிருந்து இரண்டு  கிலோமீட்டர்.

அன்பர்கள் தரிசிக்க வேண்டிய அற்புத தலம்.


பெரியார்  நகர்  ஆர்ச் --உள்ளே  சிறிது தொலைவு  நடந்து  சென்று  இத்தலத்தை  அடையலாம் ....

Wednesday, November 25, 2015

32  பட்டைகள் கொண்ட  அதி  அற்புத லிங்கத்திருமேனி --கீழ  தஞ்சை--நாகை 

தருமர்  வழிபட்ட  தர்மேஸ்வரர் 

பஞ்ச  பாண்டவர்கள் தங்கள்  வனவாசத்தின் போது  வணங்கிய  பஞ்ச லிங்கேஸ்வரர்கள்.


பாண்டவர்கள்  தஞ்சம்  அடைந்த  ஊர்  என்பதால் இப்பெயர் பெற்றது.தேவார பாடல் பெற்ற  திருசெங்காட்டாங்குடி திருத்தலத்திற்கு  இரண்டு  கிலோமீட்டர் தொலைவிலும் , திருமருகல்  தலத்திற்கு 5 கிலோமீட்டர்  தொலைவிலும்  உள்ளது.இதில்  தருமர் வழிபட்ட  தர்மேஸ்வர  பெருமான் வேறுங்கும் காண முடியாத வகையில்  32பட்டைகள்  கொண்டு  அற்புத சேவை சாதிக்கிறார்.தனித்தனியே  மேற்கூரை  அமைக்கப்பட்டுள்ளது ...மற்ற  பெருமான்களையும்  ஒவ்வொன்றாக  காண்போம்.....






Tuesday, November 24, 2015

காண  காண  திகட்டாத  கல்யாணபுரீஸ்வரர் --vasoor


எவ்வளவு முறை பார்த்தாலும் திகட்டாத பேரழகு பிரான் இவர்.
வசூர் கல்யானபுரீஸ்வரர் , போளூர்வட்டம் திருவண்ணாமலைமாவட்டம்.



இத்திருகோயில்  திருவண்ணாமலையிலிருந்து  சந்தவாசல்  செல்லும்  வழியில்  உள்ளது .




Monday, November 23, 2015

வழித்துணைக்கு  வருவார்  வழித்துணைபணீஸ்வரர் --ஆத்தூர்  



ஆத்தூர காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் செங்கல்பட்டு வழியில்உள்ளஒருசிற்றூர்.
பல அற்புத சிவாலயங்கள் இங்கு அமைந்துள்ளது்,
வழித்துணைபணீஸ்வரர் திருகோயில் அவற்றில்  ஒன்று.
பிறவிபெருங்கடலை நாம் கடப்பதற்கும் அவரே துணையாவார்.

ஆத்தூர்  முக்தீஸ்வரர்  திருகோயில் சோழ பேரரசர்களால்  கட்டப்பட்டது. 
மிக  புகழ் வாய்ந்தது ....
சப்த  சிவ  ஆலயங்கள்  இங்கு அமைந்துள்ளது .






Sunday, November 22, 2015

மருதம்பட்டினம்  அபிமுகேஸ்வரர்  திருகோயில்  

அதிகம்  அறியப்படாத அபூர்வ ஆலயம் 





















ஆழி  தேரோட்டத்திற்கு  பிள்ளையார் சுழி  போடப்படுவது  இங்கு தான்.

இங்குதான்  பஞ்ச பாண்டவர்கள்  பஞ்ச லிங்கங்களை  ஸ்தாபித்து  வழிபட்டனர் ..அகத்தியர்  வழிபட்டுள்ளார் ..

அவற்றில்  கிழக்கு  முகமாக  இரண்டு  லிங்கமும்  மேற்கு முகமாக  இரண்டு  லிங்கமும்  அமைந்துள்ளன ....

இது மிகவும்  விசேஷமான  அமைப்பு  என்று  கருதப்படுகிறது .

திருவாரூரை  ஒட்டி  அரை  கிலோமீட்டரில்  அமைந்துள்ளது  மருதம்பட்டினம் ..