Monday, February 29, 2016

தனியே  தன்னந்தனியே .......கீரனூர் ,கூஹுர்...நாச்சியார்கோவில்



அன்பர்களே  சீறி பாயும் வாகனங்கள் இல்லை புகை இல்லை ஆளுயர கட்டடங்கள் இல்லை ....
எங்கும் அமைதி .....பறவைகளின் ரீங்காரம் .....பச்சை பசேல் வயல் வெளிகள் .....

அங்கு கொஞ்சி விளையாடும்  நம் குல பெண்கள் ...ஆண்கள் (விவசாய  பணியாளர்கள்)

இதமாக நம்மை  தாலாட்டும்  தென்றல்.....

ஆஹா ...இப்படியோரு  சூழலில்  ஒரு திருகோயில்  இருந்தால்  எப்படி இருக்கும்?

இதோ  உள்ளது  கீரனூர் ...
அங்கு  ஒரு சிறிய  திருகோயில்  ஒன்றில்  வீற்றிருக்கிறார்  அகஸ்தீஸ்வரர் ...

குடந்தை  நாச்சியார்கோயில் அருகே நன்னிலம்  சாலையில் ..
பிரதான சாலையிலிருந்து  நடந்து தன செல்ல வேண்டும் ....
அதனால்  என்ன? உடற்பயிற்சியுடன் கூடிய ஆலய தரிசனம் நல்லது தானே?

கொடுத்து  வைத்திருப்பவர்கள்  செல்லுங்கள் ....வணங்குங்கள் ....

Sunday, February 28, 2016

18 புதுக்குடி , குடந்தை , ஸ்வேதாரண்யேச்வர சுவாமி 

அன்பர்களே குடந்தை ---பூந்தோட்டம் சாலையில் உள்ள புராதன பெருமை , பழமை நிறைந்த திருகோயில் இது .....

ஆனால் அதிகம் அறியபடாமல் உள்ளது .......

பக்தர்கள்  இன்றி வெறிச்சோடி இருக்கிறது ....

பெரும்பாலும் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் திருகோயில்களையே  நாடுகிறார்கள் .....

கால் கடுக்க நின்று அதிக பொருட் செலவில்,  இறைவனை தரிசிப்பதை விட 
இம்மாதிரி பழமை  நிறைந்த  கிராமத்து திருகோயில்களை தரிசிப்பது மிகுந்த ஆத்ம திருப்தியை  அளிக்கும் .....

இதை அனுபவத்தில்  உணர , அன்பர்களே நம் கிராமத்தில்  இருக்கும் திருகோயில்களை  தரிசனம் செய்யுங்கள் ..

அந்த திருகோயில் களின் வளர்ச்சிக்கு  இதுவே முதல் படி ...



Saturday, February 27, 2016


மெய்ஞான மூர்த்தி திருகோயில் , முதல் கட்டளை 

கிராமம் .



கும்பகோணம் வட்டம் , அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை மெய்ஞான மூர்த்தி திருகோயில் , முதல் கட்டளை கிராமம் .

அன்பர்களே புராண வரலாறும் , வரலாற்று சிறப்பும் உடைய இத்திருகோயில், வியாச பகவானுக்கு, இறைவன் 
சிவனடியார் வேடத்தில் வந்து , அவர் அஞஞானத்தை அகற்றி மெய்ஞானத்தை, வேதத்தின் பொருளை உணர்த்திய இடம் இது..



அவர் இங்கு பலகாலம் தங்கி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கிய மூர்த்தியே , மெய்ஞானமூர்த்தி ஆவார் .

அச்சுதப்ப நாயக்கர் திருவிடைமருதூர் திருகோயிலுக்கு நிவந்தனமாக அளிக்கப்பட கிராமம் இது .
இது அருகில் உள்ள இலந்துரை திருகோவிலில் கல்வெட்டில் காணப்படுகிறது .நாயக்கர்களுக்குப்பின் வந்த
மராட்டிய மன்னர்களில் ஒருவரான துளஜா என்பவர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு தன்
மனக்குழப்பம் நீங்கப்பெற்றார் .பல திருப்பணிகளையும் இவர் செய்துள்ளார் .

கல்வியில் பின்தங்கியவர்களும் , பெரும் மன குழப்பத்தில் சிக்கியவர்களும் இங்கு வந்து இறைவனை வழிபட்டு , பலன் பெறுகின்றனர்.

நாளைடைவில் பெரிதும் சிதைவுற்ற இத்தலம் இன்று அன்பர்களால் புனரமைக்கப்பட்டு வருகிறது.
எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து , குடமுழுக்கு நடத்துவதற்கு தங்கள் மேலான ஆதரவு தேவைபடுகிறது .


மெய்ஞான மூர்த்தி நற்பணி மன்றம் .
பி. கல்யாண சுந்தரம் (தலைவர்), முதல் கட்டளை எண் : 9489504915

ஆலய நிர்வாகி : ம. உப்பிலி , 9486406817, 9487031796



Friday, February 26, 2016

ஸ்ரீ பார்வதி அம்பாள் சமேத ஸ்ரீ கண்ணேஸ்வர சுவாமி திருகோயில் பெங்களூர் ......

BTM  layout , மடிவாலா அருகில் அமைந்துள்ள அற்புதமான ஒரு திருகோயில் .....
லிங்க வடிவில் அமைந்துள்ள இறைவன் பின்னால்  உருவத்துடனும் அம்மைஅப்பன் காட்சியளிக்கிறார் ....
அதுமட்டுமில்லாமல் கண்ணப்ப நாயனார் அருகில் வணங்கும் கோலத்தில் ...










































மதுரம்ம திருகோயில் வளாகத்தில் இத்திருகோயில் உள்ளது .....

பெங்களூர் திருகோயில்களில் நாம் முக்கியமாக காணும் சிறப்பு அம்சம் என்னவென்றால் ....
மிக சுத்தமாக பராமரிக்கப்படும் கோயில்கள் ......என்னை பிசுபிசுக்கு அறவே இல்லை ....
அங்கும் இங்கும் குங்குமம் விபூதி சிந்தப்படுவது கிடையாது .....
மிக அற்புதமாக அலங்காரம் மிக ஸ்ரத்தையாக செய்யப்படுகிறது ...

இவை என்னை மிகவும் கவர்ந்தது ......
நம் திருகோயில்களிலும் கடைபிடிக்கப்பட வேண்டும் .....


தில்லைக்கு  இணையான தலம் ......காசிக்கு 

இணையான தலம்,,,,,,கங்கை நதிக்கு 

இணையான  தீர்த்தம் 


சிதம்பரம் திருத்தலத்துக்கு இணையாக இந்த வடதில்லைத் தலமும் போற்றப்பட வேண்டும் எனும் நோக்கத்துடன், கோயிலுக்கு நிலங்களையும் நிவந்தங்களையும் வாரி வழங்கினான் மன்னன். நந்தியாறு எனும் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்த இந்தக் கோயில்- காசிக்கு நிகரான தலமாகவும், ஆரணி ஆறு-கங்கைக்கு இணையான தீர்த்தமாகவும் போற்றப்பட்டது. ஆற்றில் நீராடி, இறைவனைத் தொழுதால் , பாவங்கள் யாவும் தொலையும்; தோஷங்கள் அனைத்தும் கழியும் என்பது ஐதீகம் ! எனவே, இங்கேயுள்ள சிவலிங்கத் திருமேனிக்கு பாபஹரேஸ்வரர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர் மக்கள். மூலவருக்கு அருகிலேயே, கருவறையில் உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனாருக்குக் கிடைத்த லிங்கத் திருமேனியும் உள்ளது.

 மூலவரின் அருகிலேயே காசியில் கிடைத்த உள்ளங்கை அளவிலான பாணலிங்கம் இருப்பது சிறப்பு.


எங்கே உள்ளது?


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது வடதில்லை கிராமம். ஊத்துக்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும், சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது வடதில்லை (பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு) கோயம்பேட்டில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு. ஊத்துக்கோட்டையில் இருந்து மாம்பாக்கம் செல்லும் பேருந்தில் பயணித்தால், வடதில்லையை அடையலாம். ஊத்துக்கோட்டையில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது



Thursday, February 25, 2016


மறவாமல்  செல்லுங்க செல்லூர்



செல்லூர் கைலாசநாதர் திருகோயில் , குடவாசல் வட்டம் .கொரடாச்சேரி அருகில் 
தேவார பாடல் பெற்ற தலமான திருகொள்ளம்புதூர் செல்லும் வழியில் 
சாலை ஓரமாகவே இத்தலம் உள்ளது
திருப்பணி செய்யப்பட்டு திருகோயில் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது
அடியார் பெருமக்களே தவற விடாமல் தரிசியுங்கள்.





Tuesday, February 23, 2016

என்றும் குன்றாத இளமை பொலிவு  வேண்டுமா? 

.
 இங்கே வாங்க !!!!


அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர்-631 553. காஞ்சிபுரம் மாவட்டம்.

அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை.
 



கங்கைக்கு நிகரான தீர்த்தம் ...காசிக்கு நிகரான 

தலம் ......




அருள்மிகு பிரகன் நாயகி உடனுறை தென்கங்காபுரிஸ்வரர் திருக்கோயில், சின்ன நரிமேடு, எடையார்குப்பம் பண்ருட்டி தாலுக்கா திருவஹீந்திரபுரம் அருகில், கடலூர்.
ஒரு காலத்தில் மிகப்பெரும் கோயிலாக இருந்திருக்கூடிய கோயில் இன்று ஒற்றை சன்னிதியுடன் பாழடைந்து கிடக்கிறது. 
தென் கங்கை என நாவுக்கரசரால்போற்றப்பட்ட இப்பகுதியில் பாயும் கெடில நதியோ இன்று நீரின்றி வறண்டு முட்புதராக காட்சியளிக்கிறது .
கருவறைக்குள் மிக பிரம்மாண்டமான ஈசன். எளிய அலங்காரத்தில், அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளார்.
பவுர்ணமி தோறும் நிலவொளி மூலவரின் மீது படுவது சிறப்பு.
அருகேஉள்ளதிருவதிகையில் முப்புரம் எரித்த இறைவனார் இங்கு
கெடில நதியில் மூழ்கி தன வெப்பத்தை தனித்துகொண்டு, பூந்தோட்ட வனமாக திகழ்ந்த இத்தலத்தில், ஓய்வெடுத்ததாக தலபுராணம். எனவே இத்தலத்து இறைவன உடலில் உள்ள வெப்பநோயை போக்கும் வைத்தீஸ்வரராகவும், மருந்தீஸ்வரராகவும் இருந்து அருள்புரிகிறார்.





Sunday, February 21, 2016

ஜம்மு -காஷ்மீர்  பாரமுலா  மாவட்டம் ...இங்குள்ள தேசிய பூங்கா ஒன்றில் உள்ள மிகப்பெரிய சுயம்பு லிங்கம் 


மகாமக குள தீர்த்தங்களின் பலன்கள்:
மகாமகக் குளத்தில் இருக்கும் ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு பலன் தர வல்லது.
1. இந்திர தீர்த்தம் - மோட்சம் அளிக்கும்.
2. அக்னி தீர்த்தம்- பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
3. யமதீர்த்தம் - மரண பயம் போக்கும்.
4. நிருதி தீர்த்தம் - பேய், பூதம் போன்ற தேவையற்ற பயங்கள் நீங்கும்.
5. வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. வாயு தீர்த்தம் - நோய்கள் அகலும்.
7. குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்.
8. ஈசான தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்.
9. பிரம்ம தீர்த்தம் - இறந்த முன்னோரைச் சாந்தப்படுத்தும்.
10. கங்கை தீர்த்தம் - கயிலைப் பதவி அளிக்கும்.
11. யமுனை தீர்த்தம் - பொருள் சேர்க்கை உண்டாகும்.
12. கோதாவரி தீர்த்தம் - எண்ணியது நடக்கும்.
13. நர்மதை தீர்த்தம் - உடல் வலிமை உண்டாகும்.
14. சரஸ்வதி தீர்த்தம் - ஞானம் உண்டாகும்.
15. காவிரி தீர்த்தம் - புத்தியை மேம்படுத்தும்.
16. குமரி தீர்த்தம் - வளர்ப்புப் பிராணிகளுக்குப் பலன்களைக் கொடுக்கும்.
17. பயோஷ்னி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்.
18. சரயு தீர்த்தம் - மனக் கவலை தீர்க்கும்.
19. அறுபத்தாறு கோடி தீர்த்தம் - துன்பம் நீங்கி இன்பம் கூடும்.
20. தேவ தீர்த்தம் - சகல பாவங்களும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.




Saturday, February 20, 2016

பஞ்ச  பாண்டவர்கள்  வழிபட்ட  பரமன் 

திருகோயிலின் பரிதாப நிலை 

பஞ்சபாண்டவர்களில் தர்மர் வழிபட்ட அச்சுதமங்கலம் தர்மேஸ்வரர் திருகோயில்..மிகவும் சிதைந்த நிலையில் உள்ள இந்த திருகோயிலை உள்ளே சென்றுவழிபடவும் மிக அச்சமாக இருந்தது . அந்த அளவிற்கு இடிபாடுகள்......
அச்சுதமங்கலம் புகழ்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்திற்கு அருகாமையில் உள்ளது. நன்னிலம் வட்டம். நாகை மாவட்டம்.


முத்தான மூன்று திருகோயில்கள் இங்கு உள்ளன..
பஞ்சபாண்டவர்கள் ஐவரும் வழிபட்ட ஐந்து திருகோயில்கள் ஒருகாலத்தில் இங்கு விளங்கியதாக தெரிவிக்கின்றனர்.


இன்று மூன்று திருகோயில்கள் இருக்கிறது. காசி விஸ்வநாதர் திருகோயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு கோயில்கள் திருப்பணி செய்யப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மற்ற  கோயில்கள்  சோமேஸ் வரர்  திருகோயில் , காசி விஸ்வநாதர் திருகோயில்