சித்தத்தை சிவன் பால் வைத்த அடியார் பெருமக்களுக்கும் , உழவார பணி மன்றத்தினருக்கும் உடனடி கவன ஈர்ப்பு பதிவு இது
அன்பர்களே ....தாமிரபரணி புஷ்கரணி கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் புனித தீர்ததங்களை நாம் எவ்வாறு வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் .....நம் நாட்டில் உள்ள தீர்த்தங்களையும் , திருக்கோயில் குளங்களையும் முறையாக பராமரித்தாலே போதும் .....தண்ணீருக்காகஅண்டை அயல் மாநிலங்களை நாம் கெஞ்சி கொண்டிருக்க வேண்டியதில்லை.
நகரங்களில் புனிதமான காஞ்சி மாநகரில் நடுநாயகமாக அமைந்து பெருமை சேர்ப்பது சர்வ தீர்த்த குளம் .....இத்திருக்குளத்தின் பெருமை சொல்லில் அடங்காது ...சிவபெருமானின் ஆணைக்கிணங்க கங்கை காவேரி உள்ளிட்ட அனைத்து புனித நதிகளும் இத்திருக்குளத்தில் அடக்கம் ......அதோடு இந்த நதிகள் தீர்த்தேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி பூசித்து பேறு பெற்றதாக கஞ்சி புராணம் கூறுகிறது ...
இங்கு பிதுர் கடன்கள் நிறைவேற்றுவதால் , நம் முன்னோர்கள் மிகுந்த திருப்த்தி அடைகின்றனர் ..இன்றும் மக்களால் இங்கு பிதுர் கடன்கள் செய்யப்படுகிறது .
அதோடு இத்தீர்த்தகுளத்தின் 4 கரைகளிலும் ஏராளமான புராதன திருக்கோயில்கள் அமைந்து காஞ்சி நகருக்கு பெருமை சேர்க்கின்றன ...
மேற்கு கரையில் :
அருள்மிகு காசி விஸ்வநாதர்
அருள்மிகு காமேஸ்வரர்
அருள்மிகு இரண்யேஸ்வரர்
அருள்மிகு தீர்த்தேஸ்வரர்
வடக்கு கரையில்
அருள்மிகு லகு லீஸ்வரர் என்கிற தவளேஸ்வரர் திருக்கோயில்
கிழக்கு கரையில்
அருள்மிகு கங்காதேஸ்வரர்
அருள்மிகு அனுமந்தேஸ்வரர்
தெற்கு கரையில்
அருள்மிகு மல்லிகார்ஜுனர்
அருள்மிகு சீதேஸ்வரர்
அருள்மிகு லக்க்ஷுமனேஸ்வரர் திருக்கோயில்
தெற்கு குளக்கரை படிக்கட்டில்
அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோயில்
ஆகிய திருக்கோயில்கள் உள்ளன ..சரி விஷயத்திற்கு வருகிறேன் .....சில தினங்கள் முன்பு நான் சென்றிருந்தபோது கண் காட்சிகள் அதிர்ச்சிக்கு
உள்ளாக்கின ......
அன்பர்களே அங்கு சுற்றிலும் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளால் சொல்லொணா அசுத்தத்திற்கும் , ஆக்ரமிப்பிற்கும் ஆளாகியுள்ளது இத்திருக்குளம் ..மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை ..
துணி துவைப்பதிலிருந்து , காலை கடன்கள் கழிப்பது வரை அனைத்துமே இங்குதான் ....படித்துறையின் நிலையோ கேட்கவே வேண்டாம் .....புதர்கள் மண்டி ...நாற்றம் குடலை பிரட்டுகிறது ....
அன்பர்களே யாரிடம் சொல்வது ? எவரிடம் முறையிடுவது..?
ராமர் , சீதை , லக்க்ஷுமணன் மன்மதன் , இரணியன் பூசித்த லிங்கங்கள் தனித்தனி கோயிலாக அமைந்துள்ளன .ஆனால் பக்தர்கள் வருகை என்பது கிடையாது ..பிரதோஷத்திற்கு மட்டும் சில பக்தர்கள் வருவதாக தெரிவிக்கிறார்கள் ....
அன்பர்களே என் வேண்டுகோள் இரண்டு தான் ...
1. உடனடியாக இத்திருக்குளம் கழிவுகள் அகற்றப்பட்டு சீர் செய்யப்பட வேண்டும்.
இல்லையேல் இத்திருக்குளம் ஒரு மினி கூவமாக மாறிவிடும் அபாயம் உள்ளது .
2. காஞ்சி காமாக்ஷி , ஏகாம்பரேஸ்வரர் , வரதராஜ பெருமாள் திருக்கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் அற்புத புராதன பொக்கிஷங்களான மேற்சொன்ன திருக்கோயில்களையும் வணங்கி அருள் பெற வேண்டும்
படத்தில் மிக பிரம்மாண்டமான இரண்யேஸ்வரர் ........மன்மதன் வழிபட்ட காமேஸ்வரர்

சிவாயநம
ReplyDelete