காசிக்கு நிகரான காலபைரவ ஷேத்திரம் ......
காசிக்கு நிகரான தலங்கள் , காசிக்கு வீசம் அதிகமான தலங்கள் என பல தலங்கள் அறியப்பட்டதுண்டு .....
காசியில் இறப்பவர்க்கு எம வாதனை கிடையாது ....ஆனால் பைரவ தண்டனை உண்டு ...
ஆனால் இங்கு வந்து சப்த ரிஷிகள் வழிபட்ட ஞானாம்பிகை சமேத ரிஷீஸ்வரரை வணங்கினால் , இங்கு உறையும் பைரவரை வழிபாடு செய்தால் இவை இரண்டுமே கிடையாது ....
இதன் மூலம் இத்தலத்தின் பெருமையை அறியலாம்....
அத்தலம் தான் குடந்தை அருகில் மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ள அம்மாசத்திரம் ஆகும் ....
அருகிலேயே திருபுவனம் , .திருவிடைமருதூர் போன்ற புகழ் மிக்க தலங்கள் சூழ அமைந்துள்ளது .....
இங்கு கம்பீரமாக வீற்றிருக்கும் கால பைரவ பெருமானுக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் 11 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது .....அவ்வமையம் திரளான மக்கள் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள் ....
காசியை போலவே கும்பகோணத்திலும் 8 திக்குகளிலும் 8 விதமான பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர் ....
சப்த ரிஷிகளும் சிவபெருமானுக்கு திருமணம் செய்வித்த தலம் என்பதால் , இது திருமண தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது ....
அன்பர்களே , பிதுர் கடன்களை முறையாக செய்ய தவறியவர்கள் இங்கு வந்து வணங்குவதன் மூலம் அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம் ...
இத்தலத்தின் பெருமை பவிஷ்ய புராணத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது ...
மிகவும் சுத்தமாகவும் , நேர்த்தியாகவும் பராமரிக்கப்படும் திருக்கோயில்களில் அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும்..
இத்திருக்கோவிலில் உள்ள காலபைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பது வேறு எங்கும் இல்லாத விசேஷ அம்சமாகும்
திருக்கோவிலின் சிறப்புமிக்க அம்சங்கள்:
• சப்தரிஷிகள் சிவபெருமானுக்கு திருமணம் பேசி முடித்த திருத்தலம்.
• பஞ்சலிங்கங்கள் மற்றும் பஞ்சசக்திகள் அருள்பாலிக்கும் திருத்தலம்
• நவகிரஹ இயந்திர மண்டலம் விளங்குவது ஆகியவை ஒரே கோவிலில் அமைந்திருப்பது என்பது இத்திருத்தலத்தின் சிறப்பு.
இங்கு இறைவன் அஷ்ட பைரவ ரூபியாக இருந்து கும்பகோணத்தை காவல் காப்பதாக சம்பிரதாயம் உண்டு.
குடந்தையிலிருந்து 7 கிலோமீட்டரில் உள்ளது இத்தலம்
இத்தகைய பெறற்கரிய இத்தலத்தை குடந்தை செல்லும் அன்பர்கள் தவறாமல் தரிசனம் செய்து பலன் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு ..

No comments:
Post a Comment