அண்டியவர் துயர் தீர்க்கும் அச்சுதமங்கலம் திருக்கோயில்கள்
(இழந்ததை மீண்டும் பெரும் பரிகார தலம் )
பஞ்ச பாண்டவர்கள் தனித்தனியே ஸ்தாபித்த ஐந்து திருக்கோயில்கள்
அவற்றுள் மூன்று மட்டுமே இன்று காண கிடைக்கிறது
அவையும் தற்போது எவ்வாறு உள்ளது ?
இத்திருக்கோயில்களின் பெருமை என்ன?
வாருங்கள் ....தெரிந்து கொள்வோம் பெறற்கரிய இத்திருக்கோயில்களின் நிலை பற்றி ...
புகழ்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே , 2 கிலோமீட்டர் தூரத்தில் குடந்தை நன்னிலம் சாலையில் உள்ளது அச்சுதமங்கலம் எனும் ஊர் ...
பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இத்தலத்தில் தங்கி இங்கு ஐவரும் சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்பது வரலாறாகும் ..
பின்னர் ஆட்சி செய்த சோழ மன்னர்களால் பிரம்மாண்டமாக திருக்கோயில்கள் அமைக்கப்பட்டன எனினும் அர்ச்சுனனை பிரதானமாக கொண்டு இவ்வூரை அர்ச்சுனன்மங்கலம் என்று அழைக்கப்பட்டது .
இன்று அச்சுதமங்கலம் என்று வழக்கில் உள்ளது .
மற்ற இரு திருக்கோயில்கள் காலப்போக்கில் முற்றிலும் அழிவுற்றதால், இக் கிராமத்தி வெவ்வேறு இடத்தில்கிடைக்கப்பெற்ற இரு லிங்கத்திருமேனிகள் சகாதேவனாலும் , நகுலனா லும் வழிபட பெற்றவை என நம்பப்படுகிறது ..
இவை சோமநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .
அச்சுதமங்கலம் கோயில்கள் 1.சோமநாதர் ஆலயம்
அளவிலும் பரப்பிலும் பெரிய கோயில் இது .பெரிய கோயில் என்றே அழைக்கிறார்கள்.
மூற்றாம் குலோத்துங்கன் கட்டிய கோயில். மூலவர் சோமநாதர் . அம்பாள்:சௌந்தர்ய நாயகி.
வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி சிற்பங்கள் எங்கும் காண முடியாதவை.
ஆனால்அழிவின் பிடியில் இருந்து இந்த கோவிலும் தப்பவில்லை
பக்தர்கள் வருகை குறைவு, வருமானம் இன்மையால் அரசின் பார்வை இன்னமும் அச்சுதமங்கலம்கோயில்கள் மீது படவில்லை.
அன்பர்களே ஸ்ரீவாஞ்சியம் செல்பவர்கள் அச்சுதமங்கலம் சென்று இக்கோயில்களையும் தரிசனம் செய்துவாருங்கள்.
அச்சுதமங்கலம் கோயில்கள் 2.
தர்மேஸ்வரர் திருக்கோயில்
அம்பாள் : தர்மேச்வரி
அன்பர்களே திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்கலம் கிராமம், யம பயம் நீக்கும் பரிகார தலமான ஸ்ரீ வாஞ்சியத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஷேத்திரமாகும்.
பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பெருமையை உடையது. 3 சிவஸ்தலங்களையும் 1 பெருமாள் கோயில் உட்படபல திருகோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.
அவற்றில் ஒன்று தருமர் வழிபட்ட தர்மேஸ்வரர் கோயில். மிகவும் சிதிலமைந்து உள்ளே செல்லவும் அச்சமாக உள்ளது, எங்கே இடிந்து விழுந்து விடுமோ என்று.
அம்பாளின் திருவுருவம் இன்றெல்லாம் காணலாம். அவ்வளவு அழகு
அச்சுதமங்கலம் கோயில்கள் 3.
காசி விஸ்வநாதர் கோயில்
இத்திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது .
பெரிய கோவில் அருகிலேயே இத்திருக்கோயில் உள்ளது .
விசாரித்து எளிதில் அடையலாம் ..
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் காசி விஸ்வநாதரை வழிபட, வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
காண்டக்ட்: R .மோகன் 9524348725 —
அன்பர்களே பொருளை இழந்துவிட்டால் மீண்டும் பெற்று விடலாம் ..
பெறற்கரிய இத்திருக்கோயில்களை இழந்து விட்டால் ?
மீண்டும் பெற இயலாது ....
எனவே சென்று தரிசனம் செய்யுங்கள்.
இயன்றதை செய்யுங்கள் இல்லாத திருக்கோயில்களுக்கு ...

சிறப்பான பதிவு. நன்றி.
ReplyDeleteFor more details about Somanadhar temple visit
ReplyDeletehttp://shivaatempless.blogspot.com/2017/09/achudhamangalam.html?m=1
For more details about achudhamangalam shiva temples visit
ReplyDeletehttp://shivatempless.blogspot.com/2017/08/achudhamangalam.html?m=1