Tuesday, May 29, 2018

உங்கள் கனவு இல்லம் நனவாக ......இங்கே வாங்க ...
அன்பர்களே .........

கட்டிய வீட்டை முடிக்க இயலாமல் வருந்துகிறீர்களா?
வாஸ்து குறைபாடுகளால் அல்லல் தொடர்கின்றனவா?
தேவ லோக சிற்பிகளான மயன் ,தேவ தச்சன் வணங்கி வழிபட்ட கொழுமணிவாக்கம் பாலீஸ்வர பெருமானை உளமார வணங்குங்கள் .....
சிறிய கோயிலிலே குடியிருந்து சிறப்பான பலன்களை வழங்க வல்லவர் பாலீஸ்வரர் ..
வாஸ்து குறைபாடுகளை நீக்கி அருள்பவர் ...

இத்திருக்கோயில் மாங்காடு அடுத்து குன்றத்தூர் செல்லும் சாலையில் கொழுமணிவாக்கம் பேருந்து 
நிறுத்தத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .....

 இங்கு இரு சிவாலயங்கள் உள்ளன ....
முதலில் வருவது மேற்கு நோக்கிய அரிய  சிவக்கொழுந்தீவரர் திருக்கோயில்.....இவரை முதலில் 
வணங்கி பின் சற்று தூரம் நடந்தால் பாலீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம் .....

கருவறையில் மிக கம்பீரமாக காண்போர் மனதை கவரும் வண்ணம் இறைவன் பாலீஸ்வரர் 
அருள் புரிகிறார் ...தெற்கு நோக்கி அன்னை அருள்கிறாள் ....இவளும் பேரழுகு பொருந்தியவள் .
உங்கள் மனக்கவலை மாற்ற வல்லவள் .....
கோயில் பூட்டியிருந்தால் எதிரில் உள்ள அன்பர் கோவிலை திறந்து தரிசனம் செய்ய உதவுவார் .

ஆனால் அன்பர்களே என் ஆதங்கம் என்னவெனில் மாங்காடு வரும் திரளான பக்தர்கள் 
இத்தகைய அரிய பொக்கிஷங்களை தரிசிக்காமலேயே திரும்பிவிடுகின்றனர் ....

இந்நிலை மாறவேண்டும் ....
அனைவரும் சிவக்கொழுந்தீஸ்வரர் , பாலீஸ்வரர் திருவருளை பெற வேண்டும் ....

இதுவே என் விருப்பம் ......






Friday, May 25, 2018

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
திருமயம் - 622 507, புதுக்கோட்டை மாவட்டம்

பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும், இதற்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக விளங்குகிறது. இந்த சத்தியகிரீஸ்வரர் ஆலயத்தை தனியே சுற்றி வரமுடியாது. மூலவர் சன்னதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பு.


மேலும் , வழக்கத்திற்கு மாறாக , இறைவன் சன்னதிக்கு பின்புறம் அமைந்திருக்கும் லிங்கோத்பவர் சன்னதி
இங்கு மூலவருக்கு நேர் எதிரே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மிக பிரம்மாண்டமான லிங்கோத்பவர் உலகிலேயே இங்கு மட்டுமே அமைந்துள்ளது . 
பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் தழைத்தோங்கியதற்கு எடுத்துக்காட்டாக இத்திருக்கோயில் விளங்கிகிறது .....
1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது இத்தலம் .....
சத்திய மகரிஷி தவம் புரிந்த தலம் ..
மதுரையை போன்று இறைவனும் இறைவியும் கிழக்கு திசை நோக்கி உள்ளனர் ...

இறைவி வேணுவனேஸ்வரி ....


ஒருகாலத்தில் வேணு (மூங்கில்)வனமாக இத்தலம் விளங்கியது .....


எனவே அன்னை வேணுவனேஸ்வரி என்ற பெயரில் வணங்கப்படுகிறாள் ....மழலை பாக்கியம் இன்றி வருந்துவோர் இங்கு வந்து அன்னைக்கு தொட்டில் கட்டி நேர்ந்து கொள்கின்றனர் .....அவ்வாறு செய்வதால் விரைவில் மழலை பாக்கியம் கிட்டுகிறது ....




Sunday, May 20, 2018

கலியுக துயரங்கள் தீர்க்கும் கருணாமூர்த்தி .....

திருவள்ளூர் மாவட்டம் இருளஞ்சேரி கிராமத்தில் அருள்புரியும் தாயினும் நல்லாள் சமேத கலிங்கநாதேஸ்வரர் திருக்கோயில் சுமார் 1200  ஆண்டுகள் பழமை வாய்ந்தது 
 கலியஞ்சிஸ்வரர் என்பதே மருவி கலிங்கநாதேஸ்வரர் என வழங்கப்படுகிறார் ..

தெரிந்தோ தெரியாமலோ இக்கலியுகத்தில் நாம் செய்கின்ற அனைத்து பாவங்கள் , அதனால் நாம் அனுபவிக்கும் 
துயரங்கள் , அச்சங்கள் நீக்கி அருள் புரிவதால் இப்பெயர் பெற்றார் பெருமான் .....

பெற்ற தாயினும் தயை புரியும் அன்னைக்கும் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் தாயினும் நல்லாள் எனும் திருநாமம்.
இறைவன் பச்சை நிற கல்லினால் ஆனவர்.....பச்சை பசேல் என விளங்கும் வயல்களுக்கு நடுவில்சிறிய திருக்கோயில் ஒன்றில்  வீற்றிருக்கிறார் ..

எதிரே மிக பிரம்மாண்டமாக சங்கு தீர்த்தம் அமைந்துள்ளது ....கால வெள்ளத்தில் சிதைவுற்று குறுகியுள்ளது 
இத்திருக்குளத்தை மீட்டெடுக்க வேண்டியது நம் கடமை ....
தினம் ஒரு கால பூசை மட்டுமே நடைபெறும் இத்திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் குறைவு.
பிரதோஷ நேரத்தில் மட்டுமே கிராம மக்கள் வழிபட வருகின்றனர் ....

சிறந்த பரிகாரத்தலமான இத்திருக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது ....
கல்வெட்டுகள் மூலம் இத்தகவல் நமக்கு தெரியவருகிறது 
மக்களால் அறியப்படாத மாபெரும் பொக்கிஷமான இத்திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டம் 
பேரம்பாக்கம் என்னும் இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் 
அமைந்துள்ளது ...பூந்தமல்லி யிலிருந்தும் , ரயில் மார்க்கமாக கடம்பத்தூரிலிருந்தும் வசதியாக சென்று வரலாம் .
இத்திருக்கோயிலுக்கு மிக அருகிலேயே தேவார பாடல் பெற்ற தீண்டா திருமேனியரான கூவம் திரிபுராந்தக ஈஸ்வரர் திருக்கோயில் .....புகழ் பெற்ற  நரசிங்கபுரம் நரசிம்மர் திருக்கோயில் மற்றும் நரம்பு 
சம்பந்த பட்ட நோய்கள் நீக்கும் பேரம்பாக்கம் சோழீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் அமைந்துள்ளன 

திருக்கோயில் அர்ச்சகர் திரு கோபிநாத் 

அலைபேசி எண்: 7094936627
அன்பர்களே.....கலியுகத்தில் நாம் அனுபவிக்கும் துயர்கள் நீங்கி மன அமைதி பெற அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இருளஞ்சேரி என்றால் அது மிகையல்ல .....

குறிப்பு:   அர்ச்சகரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பின் தரிசனம் செய்யலாம்.