Monday, May 29, 2017

மாதரசி வழிபட்ட மகாதேவன் 

கைலாசமுடையார் திருகோயில் , செம்பியன் மாதேவி , நாகை .மாவட்டம் .

செம்பியன் மாதேவி ,சோழ சாம்ராஜ்ஜியத்தின் பேரரசி, கண்டராதித்த சோழனின் மனைவி , ராஜ ராஜ சோழனின் அத்தை யாவார்.
இளம் வயதிலேயே விதவையான இவர் கலைகளை மிகவும் ரசிப்பவர். 

வாழ்நாளில் பெரும்பகுதியை திருகோயில் திருப்பணிகளுக்காக ஒதுக்கினார் . இவர் கட்டிய கைலாசமுடையார் திருகோயில் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது . 

கண்டராதித்த சோழன் நான்கே ஆண்டுகள் அரசாட்சி புரிந்தாலும் , ஈடு இணையற்ற சிவ பக்தி உடையவராக  திகழ்ந்தார். பல்வேறு திருக்கோயில்கள் இவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டன ...
அன்றைய காலத்தில் எவ்வளவு பெரிய மாமன்னராக  இருந்தாலும், இறைவனிடத்தே அளப்பரிய பக்தி கொண்டிருந்தனர். இறைபக்தியே, அவர்கள் தன்னலமற்ற அரசாட்சி  புரிவதற்கும் எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் காரணமாக இருந்தன. 

 மன்னர்கள் மட்டுமல்ல, அவர்களின் இல்லத்தரசிகளும்  ஏராளமான  திருக்கோயில்களை எழுப்பியும், புதுப்பித்தும் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். 

அவர்களுள்  மாதரசியான , செம்பியன் மாதேவி செய்துள்ள திருப்பணிகள் குறிப்பிட தகுந்தவை .....
செங்கற்களால் ஆனா பல திருகோயில்கள் அவரால் தான் கற்றளியாக மாற்றப்பட்டன ..

கோயிலை காட்டியதோடு நில்லாமல் ஏராளமான  மானியங்களையம்  பராமரிப்பிற்கென வழங்கியுள்ளார் 

திருவாரூர் அறநெறி, திருமுதுகுன்றம், திருநல்லம், திருமணஞ்சேரி, திருவக்கரை, திருச்சேலூர், திருத்துருத்தி, தென்குரங்காடுதுறை, திருக்கோடிக்கா, ஆனாங்கூர், திருத்துருத்தி, குத்தாலம் போன்ற தலங்களில் செங்கற்தளிகளாக இருந்த கோயில்களை கற்றளிகளாக எழுப்பி, திருப்பணிகள் செய்திருக்கிறார்.

இவரின் சிவபக்திக்கு சான்றாக இவர் கட்டிய பிரம்மாண்டமான கைலாசமுடையார் திருக்கோயில் இன்றும் நாகை மாவட்டத்தில் உள்ளது ...
வேத மந்திரங்களும் , திருவிழாக்களும் பூசைகளும்  சதா சர்வ காலமும் நிறைந்திருந்த இத்திருக்கோயில் பல்வேறு காரணங்களினால்  இன்று தன்  பொலிவை இழந்து , சீர்குலைய தொடங்கியது .....புதர்கள் மண்டி பார்க்கவே பரிதாபமாக விளங்கிய இத்திருக்கோயிலை கண்டு சகிக்காத கிராம மக்கள் திருப்பணியை தொடங்கியுள்ளனர் .


இந்து அறநிலைய துறை சார்பில் சில திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றாலும் பிரம்மாண்டமான இத்திருக்கோயிலுக்கு அது கண்டிப்பாக போதுமானதாக இல்லை ....

அன்பர்களே பிரம்மாண்டமான திருக்கோயில் ..
ஏழை கிராம மக்களால் என்ன செய்ய இயலும் ? 
ஒன்றிணைந்து மீட்டெடுப்போம் வாருங்கள் மகேசன் திருக்கோயிலை ....
சோழ பேரரசியின் ஆன்மாவை மனம் குளிர செய்வோம் ....

வங்கி கணக்கு விபரங்கள் இதோ உங்களுக்காக :


உங்கள் கவனத்துக்கு

தலம்:      
செம்பியன்மாதேவி

இறைவன்: 
 ஸ்ரீகயிலாசநாதர்

இறைவி:
    
ஸ்ரீபெரியநாயகி

தீர்த்தம்:  
   
நான்மறை புஷ்கரணி

தலவிருட்சம்: 
அரசமரம்

திருவிழாக்கள்: 
சித்திரைத் திருவிழா, ஆனித் திருமஞ்சனம், சித்திரை கேட்டை நட்சத்திரத்தில் செம்பியன்மாதேவி பிறந்த நாள் என்று பல விழாக்கள் நடைபெறுகின்றன.

எப்படிச் செல்வது:  நாகப்பட்டினத்தில் இருந்து பாலக்குறிச்சி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது செம்பியன்மாதேவி. செம்பியன்மாதேவி பிள்ளையார்கோயில் பஸ் நிறுத்தத்தில் இறங்கினால், அருகிலேயே கோயிலை தரிசிக்கலாம். நாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு.

வங்கிக் கணக்கு விவரம்:

Account Holder(s) Name:
 N. Gnanasabapathi / G. Thirumalaisamy Punjab National Bank SembianMahadeviBranch 

Account Number     : 2842002100001026

IFSC Code:
           PUNB0284200

தொடர்புக்கு: குருமூர்த்தி, 9047743903.




.

No comments:

Post a Comment